Tuesday, April 29, 2014

திமுகவினர், தமிழ்நாஜிக்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு...

இணையத்தில் தமிழ் நாஜிக்கள் (போலித்தமிழ்தேசியவாதிகள்) கலைஞரைப் பற்றி தரக்குறைவாக பதிவிடுவதால் பதிலுக்கு சில திமுகவினர் பிரபாகரனை தரக்குறைவாகத் திட்டுகிறார்கள். இருவருமே புரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

1)ஈழத்தில் நடந்த விஷயங்களுக்கும், எழுவர் விடுதலை இன்று ஜெ அரசின் அவசரத்தனத்தால் அல்லது சதியால் தள்ளிப்போயிருப்பதற்கும் கலைஞரைத் திட்டுவதென்பது முற்றிலும் லாஜிக் இல்லாத விஷயம் என்பது தெரிந்தும் அதையே செய்துகொண்டிருக்கும் தமிழ் நாஜிகக்ள் பச்சையான அதிமுக ஆதரவாளர்கள்.  ஆக, அவர்களுக்கு ஈழப்பிரச்சினையிலும் சரி, எழுவர் விடுதலையிலும் சரி உண்மையான உணர்வெல்லாம் கிடையாது.  கலைஞரை தூற்றுவதன் மூலம் அவர்களின் தற்போதைய முதலாளி ஜெவுக்கு ஆதரவு திரட்டுவது மட்டுமே அவர்களின் இலக்கு. எனவே இந்தச் சூழ்நிலையில் திமுகவினருக்கு எப்படி கலைஞரோ, அப்படித்தான் போலித் தமிழ்தேசியவாதிகளுக்கு பிரபாகரன் என திமுகவினர் நினைத்தார்களேயானால் அது பெருந்தவறு.  பிரபாகரனைத் திட்டினால்தான் தமிழ் நாஜிக்களுக்கு வலிக்கும் என்ற கணக்கே அடிப்படையில் தவறு. அவர்களுக்கு வலிக்காது! பிரபாகரன் உயிரோடிந்தவரை அவர் சாவுக்காக களமாடிய ஜெவுக்காக இன்று வெட்கமே இல்லாமல் களமாடும்  தமிழ்நாஜிக்களுக்கு பிரபாகரனை யாரேனும் திட்டினால் சுகமாகத்தான் இருக்கும்.

2) கலைஞரைத் தரக்குறைவாக திட்டுவதன் மூலம் திமுகவினரின் கோபத்தைத் தூண்டி பிரபாகரனை திட்ட வைத்து, “பார்த்தீர்களா பார்த்தீர்களா... இதுதான் உபிக்களின் லட்சணம்” என பார்வையாளர்களிடம் ஒப்பாரி வைப்பதுதான் இணைய தமிழ்நாஜிக்களின் திட்டம்.  அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.  திமுகவினரும் அதற்கு இடமளிப்பது வருந்தத்தக்கது.

3) ஈழம் என்பது வேறு தமிழகம் என்பது வேறு. வாழ்வியல் முறை, சாதிய நடைமுறைகள், பிரதானப் பிரச்சினைகள், எதிரிகளின் இயங்குதளம் என பல்வேறு பரிமாணங்களில் இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஈழத்தில் ஆயுதத்தளத்தில் இயங்க வேண்டிய தேவை இருக்கிறதென்றால், தமிழகத்தில் அறிவுத்தளத்திலும், அதிகாரதளத்திலும் இயங்க வேண்டிய தேவை இருக்கிறது.  இதை ஈழத்தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.  உங்களுக்கு உங்கள் அரசியல் எவ்வளவு முக்கியமோ அதேபோல இங்கேயுள்ள தமிழர்களுக்கு தமிழக அரசியல் முக்கியம்.  உங்களுக்கு தந்தை செல்வாவும், பிரபாகரனும் எப்படியோ அப்படித்தான் இங்கே இருப்பவர்களுக்கு பெரியாரும், அண்ணாவும், கலைஞரும்.  இதை உணர்ந்துகொண்டு கொஞ்சமாவது பொறுப்புடன் பதிவிட வேண்டும்.  ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழகத்தால் குறைந்தபட்ச தார்மீக ஆதரவுதான் அளிக்கமுடியுமேயொழிய எந்தக் காலத்திலும் அதற்கு மேல் உதவ முடியாது.  யார் முதல்வராக ஆனாலும் இதுதான் நிலைமை.  இதெல்லாம் வைகோ, நெடுமாறன், சீமான் மற்றும் இணையத்தில் இயங்கும் போலித் தமிழ்தேசியவாதிகள் அனைவருக்குமே தெரியும்.  ஆனால் சொல்லமாட்டார்கள்.  சொல்லிவிட்டால் அவர்களின் பிழைப்பு போய்விடும். புலம்பெயர் தமிழர்களின் பணம்தானே அவர்களின் வாழ்வாதாரம்.

4) தயவு செய்து தமிழகத் தமிழர்களை உங்கள் அரசியலுக்காக நம்பாதீர்கள்.  பெரியார் சொல்லியதைப் போல ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது.  இங்கே எங்கள் மீனவர்களைக் காப்பாற்றவே துப்பில்லாதவர்கள் நாங்கள்.  எங்கள் ஆதரவோடு ஒரு தனிநாடு அமைக்க முடியும் என எந்த நம்பிக்கையில் நினைக்கிறீர்கள்? தயவுசெய்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தமிழக அரசியல்வாதிகளையும், தமிழக போலிப்போராளிகளையும் நம்பாதீர்கள்.  கல்லூரிக்கு விடுமுறை விட்டாலே போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும் வீராதிவீரர்கள் தான் எங்கள் ஊர் போலித் தமிழ்தேசியப் போராளிகள்.  இவர்களால் ஒரு நரை மயிரைக் கூட பிடுங்கமுடியாது. இவர்களை நம்பி நீங்கள் தமிழகத் தலைவர்களை இணையத்தில் தூற்றுவது ஈழத்திற்கு தார்மீக ஆதரவளிக்கும் உண்மையான உணர்வாளர்களை சோர்வடையச் செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் தமிழகக் கட்சிகளில் பெரும்பான்மையான ஈழ ஆதரவாளர்கள் நிறைந்த கட்சி திமுக மட்டுமே.  அவர்களையெல்லாம் உங்கள் பொறுப்பற்ற பதிவுகளும், அரைவேக்காட்டுத்தனமான எதிர்பார்ப்புகளும் எரிச்சலடையச் செய்கின்றன.  எங்களால் உங்களுக்கோ, உங்களால் எங்களுக்கோ உதவ முடியாது.  தார்மீக ஆதரவு மட்டுமே அளிக்கமுடியும். தமிழக அரசியல் பிரச்சினைக்கு பிரபாகரன் உதவவில்லை என அவரை தமிழகத் தமிழர்கள் திட்டினால் ஏற்பீர்களா?  தேர்தலைப் புறக்கணித்து ராஜபக்சே ஆட்சிக்கு வர வழிசெய்தது,  இறுதிவரை முக்கியத்தலைவர்கள் யாருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாமல் நெடுமாறன், வைகோ போன்ற குட்டித்தலைவர்களை நம்பியது, சர்வதேச சக்திகளின் வாக்குறுதிகளை நம்பி ராஜீவைக் கொன்றது, இறுதிவரை பண்ணுறவான்மை அரசியலை வளர்த்துக்கொள்ளாதது என புலி அரசியலில் ஏராளமான வரலாற்றுப்பிழைகள் இருக்க, தமிழகத் தலைவர்களை நீங்கள் எந்த நியாயத்தை வைத்து குற்றம் சாட்டுகிறீர்கள்?

5) ஆக இந்த தரக்குறைவான சண்டை இரு அரசியல்களுக்குமே நல்லதல்ல. இதனால் தமிழர்களுக்கும் சரி, ஈழத்தமிழர்களுக்கும் சரி எந்த நன்மையும் விளையாது.  நன்மையடைகிறவர்கள் தமிழ்நாஜிக்கள் மட்டும்தான்.    

6 comments:

Anonymous said...

EXCELLENT BOSS WHAT YOUR ARE SAYING IS ABSOLUTELY TRUE

Anonymous said...

உங்க கருத்து போலி தமிழ் தேசியவாதிகள் ஏற்றுகொண்டாலும் கூட உங்க கட்சியை சார்ந்தவர்கள் ஏற்றுகொள்ளபோவதில்லை . குறிப்பாக அன்சாரி முகம்மது , இன்னொரு திமுக பெண் தொண்டர் பெயர் இப்போ நினைவுக்கு வரவில்லை (டெல்லியில் இருப்பவர் )

நான் கிஷோர் கே சாமிதான் இணையத்தில் கேவலமாக பேசக்கூடியவர் என்று நினைத்தேன் . ஆனால் அன்சாரி ஒரு படி மேல் இருக்கின்றார்

satheesh prabhu said...

Sir you are 100 percent correct .this is the ground reality

ilyas said...

சரியான பதிவு, எங்கு என்ன நடக்கின்றது என்று தெரியாமல், ஒன்றிண்டு பேர் தங்கள் பொழைப்பை கொண்டு செல்வதற்கு கொஞ்சம் கூட நடைமுறையில் சாத்தியம் இல்லாத விடயங்ககளை முன்வைத்து இந்த மக்களை பிழையாக வழி
நடத்துகிறார்கள்

viyasan said...

சிறிய மாநிலமான கேரளாவுக்குள்ள செல்வாக்குக் கூட, இந்திய மத்திய அரசில் தமிழ்நாட்டுக்குக் கிடையாது என்பது உலகத் தமிழர்களுக்குத் தெரியும், இதற்கு தமிழ்நாட்டின் அரசியலும், பொருளாதாரமும் தமிழரல்லாதவர்களின் கைகளில் இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதனால், தமிழ்நாட்டு மீனவர்களையே காப்பாற்ற முடியாத, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என்று எந்த ஈழத் தமிழனும் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் நீங்கள் கூறுவது போல் தார்மீக ஆதரவைக் காட்டவும் கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தவறி விட்டார்கள்.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வை, அடையாள எதிர்ப்பை உலகுக்குக் காட்டவாவது, மத்திய அரசிலிருந்து கருணாநிதி விலகியிருக்கலாம், ஆனால் ஒன்பது வருடங்கள் அரசியல் ஒட்டிக் கொண்டு, குடும்ப அரசியலை வளர்த்து, அனுபவித்து விட்டு, கடைசி நேரத்தில் விலகி ஒரு நாடகம் போட்டார், என்கிறார்களே அந்தக் கேள்விக்கு உங்களின் பதில் என்ன?

வேகநரி said...

//viyasan said...
இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வை, அடையாள எதிர்ப்பை உலகுக்குக் காட்டவாவது, மத்திய அரசிலிருந்து கருணாநிதி விலகியிருக்கலாம்,//

இலங்கையில் தமிழர்கள் யுத்தத்தால் கொல்லபடுறாங்க என்று நீங்க உண்மையில் கவலை கொண்டா! பெரியண்ணர் ஓபாமா கேட்டாரே
அதை உடனே நிறைவேற்ற மிக கடுமையா முயற்ச்சி செய்திருக்கணும்
Obama asked that the Tigers lay down their arms and surrender to the Sri Lankan government,
பயங்கரவாத இயக்கமான எல்டிடிஈயிடம் உடனடியா ஆயுதங்களை கைவிட்டு இலங்கை தமிழர்களை நிம்மாதியா வாழ ஜனநாயக முறையில் வாழ அனுமதிக்கும் படி கடுமையா போரடியிருக்கணும். அதைவிட்டு உங்க மோசமான தவறுகளுக்கு கலைஞரை போட்டு தாக்குவது தான் ராசதந்திமோ?

Related Posts Plugin for WordPress, Blogger...