Tuesday, April 29, 2014

திமுகவினர் ஈழத்தமிழர்களின், புலிகளின் அரசியலை கடுமையாக விமர்சிப்பது குறித்து... -டான் அசோக்1) தமிழ்நாட்டு அரசியல் வேறு ஈழ அரசியல் வேறு என்பதை பல புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

2) இனப்படுகொலைக்கு ஈழத்தமிழர்களும், நாமும் வருந்துவதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் அதற்கு முழு காரணமாக தமிழக அரசியலையும், குறிப்பாக கலைஞரையும் மட்டும் அவர்கள் குற்றம் சாட்டிவிட்டு அதன்மூலம் விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் பெருந்தவறுகளையெல்லாம் மறைக்கப்பார்ப்பது மிகக் கடுமையாக, வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. அதைவிடக் கொடுமை, தமிழகத்தில் இருந்தபடியே ஈழத்தின் படுதோல்விக்காக களமாடி வெற்றிகண்ட ஜெவுக்கு அவர்கள் பரிந்துபேசுவது, அவர்களுக்கு அவர்களே சுய-துரோகிகள் என்பதைத்தான் காட்டுகிறது!

3) கலைஞரை மட்டும் சீண்டிக்கொண்டிருந்தவர்கள் இன்று ஒன்றுக்கும் பயன்படாத, பஞ்சத்திற்கு ’களமாடக்’ கிளம்பியிருக்கும் தமிழ்நாஜிக்களின் வழிகாட்டுதலில் பெரியார், திராவிட இயக்கம் என தமிழக அரசியலின் வேரில் கைவைக்கத் துவங்கியிருக்கிறார்கள். தமிழக அரசியல் வெற்றி அரசியல். திராவிட இயக்கம் வெற்றிகரமாக தனது அரசியல்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலந்தொட்டே தமிழ்நாஜிக்களின் துரோகங்களால் அது அவ்வப்போது பின்னடைவுகளைச் சந்தித்தாலும், ஈழ அரசியலோடு ஒப்பிடும்போது தமிழக அரசியல், தமிழகத் தமிழர்களுக்கான போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அணிவிக்கப்பட்டிருந்த ’மூளைவேலியை’ அறுத்தெறிந்திருக்கிறது. இதையெல்லாம் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். திராவிட இயக்கத்தின் அரசியலில் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியதுதான் நிறைய இருக்கிறதே தவிர, அதைத் தூற்றும் வரலாற்றிவோ, அரசியல் தெளிவோ அவர்களுக்கு இருக்கிறதா என்பதை அவர்களே மறுபரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.

4) ஈழத்தமிழர்கள் திமுகவை தூற்றும்போது தமிழ்நாஜிக்கள், பாஜகவினர், அதிமுகவினர் என அனைவரும் கூட சேர்ந்து கம்பு சுத்த வருவார்கள். ஆனால் திமுகவினர் புலிகளின் மீதான தங்கள் விமர்சனங்களை வைக்கும் போது யாருமே வரமாட்டார்கள். அப்போதுதான் உண்மையாகவே இத்தனை நாள் ஈழத்தமிழர்களுக்கு யார் தார்மீக ஆதரவு அளித்தது என்பது அவர்களுக்குப் புரியும்.

5) எல்லாவற்றுக்கும் மேல் தமிழகத்திலேயே திமுகவில் தான் மிக அதிகமான ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இத்தனை நாள் கலைஞர் மீதான புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அவதூறுகளை பல்லைக் கடித்துக்கொண்டு ‘defence game’ மட்டும் ஆடியதற்கு அந்த ஈழப்பற்று தான் காரணம். ஆனால் எந்தப் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? வரலாறும் தெரியாமல், அரசியலும் தெரியாமல் தமிழ்நாஜிக்களாலும், சில ஈழத்தமிழர்களாலும் இவ்வளவு பேச முடிகிறதென்றால் இரண்டிலும் பழம் தின்று கொட்டை போட்ட திமுககாரர்கள் சும்மாவா இருப்பார்கள்? தமிழ் நாஜிக்கள் புலிகளை 2009 யில் இருந்து பார்த்தவர்கள் என்றால், திமுகவினர் 80களில் இருந்து பார்த்தவர்கள். ஈழ விசயத்தில் , தமிழ் நாஜிக்கள் பஞ்சத்திற்கு களமாடுகின்றனர் என்றால், திமுகவினர் பரம்பரை பரம்பரையாக உணர்வுரீதியாக களமாடுபவர்கள். அதனால் ஆதரவும் தீர்க்கமாக இருக்கும், தங்கள் உணர்வின்மேல் பழிவிழுந்தால் தாக்குதலும் மூர்க்கமாக இருக்கும்.

அதனால்தான், ராஜபக்சே ஆட்சிக்கு வர உதவி செய்தது, ராஜீவைக் கொன்றது, எந்த நாட்டுடனும் பண்ணுறவான்மை பழகாதது, தமிழக முக்கியத் தலைவர்களையெல்லாம் கிள்ளுக்கீரைகளாக நினைத்துவிட்டு வைகோ, நெடுமாறன் போன்ற உதிரிகளை நம்பியது என புலிகளின் தவறுகளையெல்லாம் எடுத்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் தோல்விக்கு அடுத்தவனை கைகாட்டி தப்பிக்காதீர்கள், உங்கள் தோல்விக்கு நீங்கள் தான் காரணம் என ஆதரங்களோடு சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞர் மீது தேவையில்லாமல் அவர்கள் சுமத்தும் பழிகளுக்கு பதில் அளிக்க, புலிகள் மற்றும் ஈழ அரசியலின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதொன்றுதானே வழி! அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மை கடுமையாக, கசப்பாகத்தான் இருக்கும். வேறு வழி இல்லை. தாங்கித்தான் ஆகவேண்டும். அதுதான் தமிழக அரசியலுக்கு நல்லது. சில உடன்பிறப்புகள் கொஞ்சம் எல்லைமீறி போவதுபோல பதிவிட்டாலும், திமுகவினர் சரியான வழிமுறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! வேறு வழியும் இல்லை! எத்தனை நாட்கள் தான் பொய்களைச் சகித்துக் கொள்வது! 8 comments:

வேகநரி said...

சரியாக சொல்லியுள்ளீர்கள்.எத்தனை நாட்களுக்கு தான் தமிழ் பேசும் வெளிநாட்டுகாரர்களின் இமயத்தை விட பெரிதான பொய்களையும் புரட்டுகளையும் சகித்துக் கொள்வது!
இலங்கை தமிழர்களின் விருப்பமான ரணிலை இலங்கை தலைவருக்கான தேர்தலில் தெரிவு செய்துவிடுவாவாங்க என்பதிற்காக தமிழர்களை தங்க வழமையான பாணியலே பயமுறுத்தி தேர்தலில் வாக்களிக்காம தடுத்து ராஜபக்சேயை வெற்றி பெற வைத்த இந்த கூட்டம்,இப்போ ஜெயலலிதாவுக்கு பாத பூஜை செய்வது வியப்பானதல்ல.
tamils for Obama என்று ஒரு செம்பு தூக்கும் அமைப்பை இந்த காமெடி கூட்டம் வெளிநாட்டில் வைத்திருக்கிறது.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Anonymous said...

மிகச் சிறந்த பதிவு. இலங்கைத் தமிழ் அரசியல் மிதவாதிகளின் கைகளில் இருந்து தீவிரவாதிகளிடம் போன போதும், பின்னர் அது அதி தீவிரவாத மேற்குலக துணையோடு இயங்கிய புலிகளின் கைகளில் போன பின் சிதைந்துவிட்டது.

ஆரம்பம் முதலே புலிகள் தமிழர்களின் அழிவுக்கு தான் பாடுபட்டுள்ளனர். முதலில் திம்பு ஒப்பந்தத்தை மதிக்காமல் சகோதர தமிழ் இயக்கங்களையும், தலைவர்களையும், தமிழ் அப்பாவிகளையும் கொன்றொழித்தனர். இதனால் பலர் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து கொண்டனர். இது தமிழர் போராட்டத்தை பாதித்தது.

இரண்டாவது இந்தியாவோடு பகைத்துக் கொண்டு அமெரிக்காவின் தூண்டுதலால், சிங்கள அரசோடு இணைந்து வடகிழக்கில் அமைந்த மாகாண அரசை நீக்கவும், இந்திய படைகளை துரத்தவும் செய்தனர்.

வடகிழக்கில் தமிழீழத்தை வரதராஜ பெருமாள் பிரகடனம் செய்திருந்தார், ஒருவேளை அப்போது இந்திய ராணுவத்தை பகைக்காமல் இருந்திருந்தால் இந்று கிரிமியா வாக்கெடுப்பு போலவே அன்றே வடகிழக்கில் வாக்கெடுப்பு நடத்தி இருக்கலாம்.

மற்றது தமிழர்களை முஸ்லிம், இந்திய மலையகத் தமிழர், வடகிழக்கு தமிழர் என பிரிந்துவிடாமல் ஒன்றாக்க தந்தை செல்வா முயற்சித்தார். ஆனால் புலிகள் முஸ்லிம் மக்களை விரட்டி கிழக்கு மாகாணத்தில் பலவீனப்பட்டது.

முஸ்லிம் மக்கள் மீது கைவைத்திராவிட்டால் இறுதி யுத்தத்தில் இஸ்லாமிய நாடுகள் இலங்கை அரசை ஆதரித்திருக்காது.

அத்தோடு மலையக தமிழர்களை அந்நியப்படுத்தியது.

இந்தியாவில் ராஜிவையும், இலங்கையில் பிரமே தாசாவையும் கொன்று பயங்கரவாதிகள் என்ற அவப்பெயரை வாங்கியதோடு, இந்தியாவில் தமிழகத்தில் புலிகள் மீதான ஒட்டு மொத்த ஆரவையும் இழந்தார்கள்.

அதன் பின் தமிழகத் தமிழர்கள் இலங்கை அரசியலில் நேரடி உதவிகள் செய்வதை நிறுத்திக் கொண்டனர்.

ராஜிவை கொன்றதால் அழியும் நிலையில் இருந்த ஜெயாவின் அதிமுகவை அரசேறச் செய்தனர்.

அது போக இலங்கையில் தமிழர்களின் தொகை மிக முக்கியம். ஆனால் தமிழர்கள் வாழ்விடத்தில் ஏற்பட்ட தொடர் யுத்தம் மக்களை பொருளாதார, உளவியல் ரீதியில் பலவீனமடையச் செய்தது.

பணக்கார, ஆதிக்கச் சாதி வடகிழக்கு தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். மீதி கொழும்புக்கு போனார்கள். இதனால் வடகிழக்கில் ஆள்படையணியில் தாழ்த்தப்பட்ட ஏழைகளே அதிகம் உள்வாங்கப்பட்டனர்.

இது அவர்களின் வாழ்வியலை நசுக்கியது எனலாம். அது போக 13-ம் தீர்வுத் திட்டம், சந்திரிக்காவின் திட்டம், நோர்வேயின் தீர்வு திட்டம் அனைத்தையும் உதாசீனம் செய்ததோடு, சுயாட்சி பெறுவதற்கான பல வாய்ப்புக்களை நழுவவிட்டனர்.

இறுதியாக ரணிலுக்கு தமிழர்கள் வாக்களிக்கத் தடை விதித்தமையால், வெற்றி பெறும் வாய்ப்பற்ற நிலையில் இருந்த ராஜபக்சே அதிபராக வழி வகுத்ததும் புலிகளே.

சாதிய, பிரதேச பாகுபாட்டால் வட இலங்கைத் தமிழர்கள் கிழக்கு இலங்கைத் தமிழர்களோடு பிணங்கியதால் கருணா உட்பட பலரும் அரசோடு இணையச் செய்ததும் புலிகளின் தோல்வியே.

கடைசியாக சுனாமி உட்பட அனைத்து விடயங்களால் பலவீனமாகிவிட்ட நிலையிலும் தம்மை பலமானவர்கள் என காட்டிக் கொள்ள விமான தாக்குதல் போன்றவைகளை செய்து தோல்வி கண்டதோடு, கிளிநொச்சி வீழ்ந்ததும், ஆனந்தபுரத்தில் பல தலைவர்கள் கொல்லப்பட்டதும், மக்களை விடுவிக்காமல் கேடயமாக்கி முள்ளிவாய்க்காலில் அரசின் தாக்குதல்களுக்கு பலியாக்கியமை, மக்களின் தொகையை குறைத்ததோடு, புலிகள் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையையும் தாயகத்தில் இழந்துவிட்டு, விவேகமற்ற முறையில் மரணித்தார்கள்.

நட்டாற்றில் ஈழத்தமிழர்களை ஒரு மாற்று தலைமையில்லாமல் அதோகதியாக விட்டுச் சென்றதன் விளைவு ஒரு இனமே, ஏன் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழ் பேசும் இனங்களே பேராபத்தான நிலையில் இருக்கின்றது.

தமது தோல்விகளை திசைதிருப்பி வெளிநாட்டில் அரசியல் செய்ய சில புலி அபிமானிகள் திமுகவை இகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு மாநில அரசாக என்ன செய்ய இயலுமோ அதைத் தான் திமுக செய்தது. சொல்லப் போனால் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, குடியிருப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டம், ரேசன் கார்டுகள் அனைத்தையும் கொடுத்தது திமுக.

அதிமுக அரசு இலங்கைத் தமிழ் பிள்ளைகளை பள்ளியில் கூடச் சேர்க்கத் தடுத்ததோடு, அவர்களுக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ததை வெளிநாட்டில் உள்ள ஆதிக்கச் சாதி இலங்கைத் தமிழர்கள் அறிய மாட்டார்கள்.

viyasan said...

// முதலில் திம்பு ஒப்பந்தத்தை மதிக்காமல்///

திம்பு ஒப்பந்தம் வெறும் கண்துடைப்பு, இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எதையாவது நடைமுறைப்படுத்துமாறு இந்தியா இலங்கையிடம் கேட்டதுண்டா?

//இரண்டாவது இந்தியாவோடு பகைத்துக் கொண்டு அமெரிக்காவின் தூண்டுதலால்,///

இந்தியா ஈழத்தமிழர் பிரச்சனையை தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள, இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உபயோகித்ததே தவிர, ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக அல்ல என்பது இலங்கையில் குழந்தைகளுக்குத் கூடத் தெரியும் ஆனால் இக்குபாலு புதுக்கதை விடுகிறார்.

// சிங்கள அரசோடு இணைந்து வடகிழக்கில் அமைந்த மாகாண அரசை நீக்கவும், இந்திய படைகளை துரத்தவும் செய்தனர்.///

இந்தியப் பொம்மை அரசை நடத்திய வடமாகாண முதலமைச்சர், வரதராஜப் பெருமாளே வடமாகாண சபை என்பது எந்த அதிகாரமும் கிடையாத வெறும் வெற்றுவேட்டு என்பதை உணர்ந்து சலித்துப் போய், இந்தியாவுக்கு தப்பியோட முன்பு தமிழீழப் பிரகடனம் செய்தாராமே, அதை இக்குபால் கேள்விப்பட்டதில்லை போல் தெரிகிறது.

// ஒருவேளை அப்போது இந்திய ராணுவத்தை பகைக்காமல் இருந்திருந்தால் இந்று கிரிமியா வாக்கெடுப்பு போலவே அன்றே வடகிழக்கில் வாக்கெடுப்பு நடத்தி இருக்கலாம்.///

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் போய் சொல்ல இக்குபால் செல்வத்துக்கு நிகர் இக்குபால் செல்வன் தான். இலங்கையில் தனித் தமிழ்நாட்டை உருவாக்குவது என்பது ஒரு போதுமே இந்தியாவின் கொள்கை அல்ல, அதை இந்தியா எப்பொழுதுமே அனுமதிக்காது. அதைத் தடுக்க இந்தியா எதையும் செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பது இக்குபாலுக்கும் தெரியும்.

// ஆனால் புலிகள் முஸ்லிம் மக்களை விரட்டி கிழக்கு மாகாணத்தில் பலவீனப்பட்டது. ///

அதற்கு முதல் காரணம் முஸ்லீம்கள் தமிழர் மத்தியில் வாழ்ந்து கொண்டு, சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்தது தான்,அதனால் பல போராளிகள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்க எடுத்த தீவிர முடிவு தான் அது. ஆனால் அந்த முடிவை தமிழர்கள் ஆதரித்ததில்லை. ஆனால் அதற்குப் பழி வாங்க, கிழக்கில் பல கிராமங்களிலிருந்து தமிழரகளை முஸ்லீம்கள் வெளியேற்றி விட்டார்கள்.

//முஸ்லிம் மக்கள் மீது கைவைத்திராவிட்டால் இறுதி யுத்தத்தில் இஸ்லாமிய நாடுகள் இலங்கை அரசை ஆதரித்திருக்காது. //
அப்படிச் சொல்ல முடியாது. அக்கால கட்டத்தில் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகள் சதாம், கடாபி போன்ற சர்வாதிகாரிகளால், அல்லது மன்னர்களால் ஆளப்பட்டவை/படுபவை, அவர்கள் தமது நாட்டில் ஜனநாயக உரிமை கேட்பவரகளையே பயங்கரவாதிகள் என்று அடக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் இலங்கைக்கு உதவினர். முஸ்லீம்கள்மீது புலிகள் கைவைத்ததால் தான் இலங்கையை ஆதரித்தன என்றால், இன்று சிங்கள இனவாதிகள் முஸ்லீம்களின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள், அதனால் முஸ்லீம் நாடுகள் இலங்கைகெதிராக மாறுமா என்று பார்ப்போம்.

//அத்தோடு மலையக தமிழர்களை அந்நியப்படுத்தியது. ///

யார் அந்நியப்படுத்தினார்கள். மலையகத் தமிழர்களுக்கும் வடக்கு, கிழக்கில் நடைபெற்ற யுத்தத்துக்கும் தொடர்பு கிடையாது, ஆனால் வடக்கு கிழக்கு யுத்தத்தால், பயனடைந்தவர்கள் மலையகத் தமிழர்கள்.

viyasan said...

//அது போக 13-ம் தீர்வுத் திட்டம், சந்திரிக்காவின் திட்டம், நோர்வேயின் தீர்வு திட்டம் அனைத்தையும் உதாசீனம் செய்ததோடு, சுயாட்சி பெறுவதற்கான பல வாய்ப்புக்களை நழுவவிட்டனர்.///

எல்லாமே ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நலிவடையச் செய்ய, நசுக்க, திட்டமிட்டுப் பின்னப்பட்ட வலைகள். இன்று 13-ம் திருத்தச் சட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அதை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த மறுக்கிறது. வட மாகாண சபை தெரிவு செய்யப்பட்டும் கூட , வடமாகாண சபை முதலமைச்சருக்கு ஒரு துப்புரவுத்தொழிலாளியை ஐ நியமிக்கும் அதிகாரம் கூட இல்லாமல் இருக்கிறார். அதுவா, இந்தியாவின் தீர்வுத் திட்டம். இலங்கை-இந்திய சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அந்த குறைந்த பட்ச திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தச் செய்யக் கூட இந்தியாவால் முடியவில்லையே, அப்படியிருக்க இந்தியாவை எதிர்க்காதிருந்தால், தம்ழீழத்துக்குகு “இந்று கிரிமியா வாக்கெடுப்பு போலவே அன்றே வடகிழக்கில் வாக்கெடுப்பு நடத்தி” இருப்பார்கள் என்று அளக்கிறார் அண்ணன் இக்குபால் .

//ஒரு மாநில அரசாக என்ன செய்ய இயலுமோ அதைத் தான் திமுக செய்தது. ///

இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வை, அடையாள எதிர்ப்பை உலகுக்குக் காட்டவாவது, மத்திய அரசிலிருந்து கருணாநிதி விலகியிருக்கலாம், ஆனால் ஒன்பது வருடங்கள் அரசியல் ஒட்டிக் கொண்டு, குடும்ப அரசியலை வளர்த்து, அனுபவித்து விட்டு, கடைசி நேரத்தில் விலகி ஒரு நாடகம் போட்டார், என்கிறார்களே அந்தக் கேள்விக்கென்ன பதில்? அண்மையில் கூட தெலங்கானா பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைக் காட்ட தமது பதவியை ராஜினாமா செய்தார்களே. எப்படித் தான் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கினாலும், தமிழ், தமிழர் என்று தமிழின் பெயரால் பிழைப்பு நடத்திய கருணாநிதி இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் நடத்திய நாடகங்கள், உண்ணாவிரதங்கள் பற்றி எல்லாம், உலகத் தமிழர்களுக்குத் தெரியும்.

M.Seetharaman M.Seetharaman said...

விடுதலைப் புலிகளின் ஆகச் சிறந்த ஆதரவாளர்கள் தி.மு.க. காரர்களைத் தவிர யாரும் இந்த நாட்டில் இருக்க முடியாது.

ஆனாலும் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கலைஞரா!! பிரபாகரனா என்றால் எங்களுக்குக் கலைஞர் தான் முக்கியம். கலைஞருக்காகத் தான் தி.மு.க வினர் பல நாட்களாக பிரபாகரன் மீதான குற்றங்களை வெளிக்கொணராமல் இருந்தனர்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டென்பதால், பொங்கி எழடா!! தம்பி என தி.மு.க வினர் கிளம்பிவிட்டனர்.

பிரபாகரன் என்ற பிம்பத்தை உடைக்காதவரை, கலைஞரை வசைபாடிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதால் பிரபாகரனின் பிம்பத்தை உடைக்கத் துவங்கியிருக்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...