Saturday, February 15, 2014

சீமான் புராணங்கள்: 1 முதல் 5 வரை -டான் அசோக்

சீமான் புராணம் 1 : கிமு இரண்டாம் நூற்றாண்டில், விடுதலைப் புலிகள் தளபதி பால்ராஜ் ஒரு மலையகத் தமிழர் என புலிகளின் தமிழக மொத்தவிலை ஏஜன்ட்டான சீமான் புதிய தலைமுறையில் தெரிவித்தார். ஆனால் பால்ராஜோ பரிசுத்த ஈழத்தமிழர்! இதை நான் கேள்வி எழுப்பிய போது, இங்கே இருக்கும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணைய ஒருங்கிணைப்பாளர் ஒருவர், “பால்ராஜ் மலையகத் தமிழர் தான் என்பதை நிரூபிக்கிறேன். நிரூபித்தால் என்ன வேண்டுமானாலும் செய்வாயா?,” என முழங்கினார். நானும் ஒப்புக்கொண்டேன். அவரும் தன் சைக்கிளில் ஒலிபெருக்கியைக் கட்டிக் கொண்டு சுவர் சுவராகச் சுற்றி “அண்ணே ராமசாமி அண்ணே... பால்ராஜ் மலையகமா, ஈழமாண்ணே?” என வருவோர் போவோரிடமெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். எல்லோரும், ”பாக்க போராளி மாதிரி இருக்க... என்னப்பா இப்படிக் கேட்டுட்ட...  பால்ராஜ் ஈழத்தமிழர் தான்பா!” என மானக்கேடாக கேள்வி கேட்டுவிட்டதால் பின் அடங்கிவிட்டார். இது முதல் வரலாறு.

சீமான் புராணம் 2: கிமு மூன்றாம் நூற்றாண்டில் “எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்றபோது அந்த விழாவில் பெரியார் சக்கரநாற்காலியில் வந்து கலந்து கொண்டார்.” எனச் சொல்லி ஒரு வரலாற்றுப் புனைவைப் புனைந்தார். எம்.ஜி.ஆர் பதவியேற்றது 1977ல், பெரியாரோ 1973லேயே இறந்துவிட்டார் என்ற உண்மையை சுபவீ சொன்னதும் சீமான் தரப்பில் இருந்தோ, நாம் தமிழர் புலிப்பாண்டிகள் தரப்பில் இருந்தோ இதுவரை எந்த உறுமலும் இல்லை.

சீமான் புராணம் 3: விஜய் படவாய்ப்பு கிடைப்பதைப் போல, கிமு ஒன்றாம் நூற்றாண்டில் சீமானுக்கு ஒரு பிரம்மை ஏற்பட்டிருக்கிறது. உடனே, தேசியத் தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த நடிகர் விஜய் தான் என்றும், அதை பிரபாகரனே தன்னிடம் சொன்னார் என்றும் மேடையிலேயே கதை எழுதினார். ஆனால் எப்படியோ விஜய் உஷாராகி பகலவனில் இருந்து தப்பித்துவிட்டார்.

சீமான் புராணம் 4: யாரையும் காதலிக்கவும், கைப்பிடிக்கவும் யாருக்கும் உரிமயுண்டு. ஏன் சிங்களப்பெண்ணை திருமணம் செய்தால் கூட அது தமிழர் விரோதமெல்லாம் ஆகாது. சிங்களர்களிலும் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கிறார்கள். காதல் யார்மீதும் வரும். ஆனால் தான் காதலில் விழுந்தாலோ, திருமணம் செய்தாலோ அதற்கும் கூட ஈழப்போராட்டம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் இயங்குபவர் அண்ணன் சீமான். அந்த வகையில் காளிமுத்துவையும் ஈழப்போராளிகள் லிஸ்டில் சேர்க்க வேண்டிய அத்தியாவசியக் கடமை சீமானுக்கு ஏற்பட்டது. அதனால், “பிரபாகரனைத் தூக்கிலிடவேண்டும் என ஜெ தீர்மானம் இயற்றியபோது சபாநாயகராக கண்ணியத்துடன் அமர்ந்து வேடிக்கை பார்த்த காளிமுத்துவையும் ஈழப்போராளிகள் லிஸ்டில் சேர்த்தார். பற்றாக்குறைக்கு ஆனையிரவு போரின் போது புலிகள் காளிமுத்துவிடம் தான் அறிவுரை கேட்டார்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டையும் சேர்த்துப் போட்டு ஒருவழியாக தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

சீமான் புராணம் 5:   இது நேற்று நடந்த ஒரு சீமான் வகையறா வரலாற்றுச் சம்பவம். பாலுமகேந்திரா நல்ல இயக்குனர்தான். அருமையான படைப்பாளி. ஆனால் அவருக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டுமென்றால் கூட அவரையும் ஈழப்போராளிகள் லிஸ்டில் சேர்க்க வேண்டும் என்ற சீமானின் கடமையுணர்ச்சிதான் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. காசி அனந்தன் சைக்கிளை மிதித்துக்கொண்டு சிங்கள வீதிகளிலே விரைவாகப் போவாராம். பின்சீட்டில் அமர்ந்திருக்கும் பாலுமகேந்திரா கையெறி குண்டுகளை வீசியபடியே வருவாராம்! பாலுமகேந்திரா இலங்கையில் இருந்த காலத்தில் அங்கு ஆயுதப்போராட்டமே துவங்கவில்லை என்பதுதான் உண்மை. இறந்தவரைப் பற்றி பொய்சொல்லித்தான் பாராட்டவேண்டுமா? இதைவிட ஒரு அசிங்கம் இறந்தவருக்கு இருக்க முடியுமா?

தன்னுடன் ஒண்ணாங்கிளாஸ் படித்தவர்களில் இருந்து, தனக்கு கார் ஓட்டும் டிரைவரில் இருந்து, தான் இரங்கல் தெரிவிக்கும் இறந்தவர்கள் வரை அனைவருமே கண்டிப்பாக ஈழப்போராளிகளாக இருக்க வேண்டும் என்பதுதான் அண்ணனின் வாழ்நாள் இலக்கு. இல்லையென்றால் அவரே ஒரு கதையை உருவாக்கி, காட்சியமைத்து ‘ஈழபோராளி’யாக பதவியுயர்வு கொடுத்துவிடுவார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் தெரிந்தோ தெரியாமலோ ஈழப்போராட்டத்தையே இழிவு செய்யும் செயல்களைத் தான் சீமான் தொடர்ந்து செய்வருகிறார். இவரைப் போன்றவர்களைக் கண்டிக்கவாக வேணும் ஈழத்தமிழர்களிலிருந்து ஒரு இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். உருவானால் அவர்கள் இலக்கு யாராக இருக்கும் என்பதை படிப்போரின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். 

7 comments:

Anonymous said...

பால்ராஜ் வடக்கை சேர்ந்த ஈழத்தமிழர்தான் . சீமான் ஆர்வக்கோளாறால் சிலவற்றை கற்பனையாக திரித்து கூறிவிட்டார்.

தமிழ்நாட்டிலிருந்து , இந்தியாவிலிருந்து , புலிகளை ஆதரிப்பவர்கள் மட்டும் டவறானா தகவல்கள் தரவில்லை.

அங்கிருந்து புலிகளை திட்டி தீர்க்கும் ஊடகர்கள் , வலைப்பதிவாளர்களும் கூட புலிகள் பற்றி வேண்டுமென்றே கதைகள் புனைந்து கொச்சைப்படுத்துவார்கள் .
அவர்களுள் டான் அசோக்கும் அடக்கம்

மாசிலா said...

புஸ்வானம் ஆகிவிட்ட சீமானின் புராணம். ஆணாகப்பட்ட பெரியாரையே அவமதிக்கும் இவனெல்லாம் செருப்பால் அடிக்கனும்.

nanban said...

Sir,

During Balu Mahendra's anjali Kavingar Kaasi Anandan also said that Balu was his neighbor and they grew up together in mattakalappu. Kavingar arranged Balu sir's marriage with amma.

In his condolence speech, Kavingar said him and Balu sir bombed govt college as they did not support their students strike in support of tamil eelam. They rode a bicycle and threw that bomb inside the college.

Here is the video link of Kavingar's condolence speech: http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hvoeMuopcyI#t=1487
I am not a fan of Seeman but I love Balu Sir. I just want to keep the facts straight and not involve Balu Sir's in their cheap tricks.

Thanks.

Anonymous said...

இன்னும் பல பொய்களை கூறிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இலங்கைத் தமிழர் கோண்டாவனக் காலம் தொட்டே டைனோசோர்களோடு டூயட் பாடி வருகின்றார்கள் எனவும், இராவணன் ( அப்படி ஒரு ஆசாமி இருந்தாரே தெரியாது ) ஒரு இலங்கைத் தமிழன் எனவும், ஏன் சோழ வம்சமே இலங்கையில் தோன்றியது என்பது போலவும் தான் பலரும் பத்து விதமாக கூறிக்கொண்டு திரிகின்றார்கள்.

சொல்லப் போனால் சுற்றி சுற்றி ஒவ்வொரு அரசியல் ஆசாமிகளும் எதாவது ஒரு பொய்யை எடுத்து விட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அது சிங்கள அரசியல்வாதிகளோ, இலங்கைத் தமிழ் இயக்கங்களோ, திராவிடக் கட்சிகளோ, காங்கிரசோ, இந்துத்துவா வாதிகளோ, முஸ்லிம் கட்சிகளோ, அனைத்தும் இந்த உபகண்டத்தில் பொய்களையும் பித்தலாட்டங்களையும் பிராதிப்பித்து தான் அரசியல் நடத்துகின்றார்கள். சீமான் மட்டும் உங்கள் கண்ணுக்கு உறுத்துதா...!

பிரபாகரன் கூட தான் போராளிகள் கலியாணம் கட்ட கூடாது என்றார் அப்புறம் அவருக்கு கலியாணம் ஆனது கலியாணம் கட்டிக்கலாம் என்றார். எல்லாம் அப்படி இப்படித்தாங்க. அவங்க அவங்க வசதிக்கு அரசியல் பண்ணித்தான் வண்டி ஓடும்.

ஒரு சில அரசியல் வாதிகள் மட்டுமே கொஞ்சம் நேர்மை நியாயமா இருந்தாங்க, உதாரணம் பகத் சிங்க, சுக் தேவ், நேதாஜி, அம்பேத்கார் என விரல் விட்ட எண்ணிவிடக் கூடியவர்கள்.

மற்றவன் எல்லாம் பக்கா பிராடு பயல்கள் தான்.

வேகநரி said...

//ஈழத்தமிழர்களிலிருந்து ஒரு இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். உருவானால் அவர்கள் இலக்கு யாராக இருக்கும் என்பதை படிப்போரின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.//
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழ் புலி ஆதரவாளர்களுக்கு சீமான் ஒரு ஹீரோ.

சகோ இக்பால் செல்வன், தமிழக பயலுகளுக்கு யாராம் தமிழ் கற்று கொடுத்தது என்று நீங்க நினைச்சு கொண்டிருக்கிறீர்கள்:)

வேகநரி said...

//பிரபாகரன் கூட தான் போராளிகள் கலியாணம் கட்ட கூடாது என்றார் அப்புறம் அவருக்கு கலியாணம் ஆனது கலியாணம் கட்டிக்கலாம் என்றார். எல்லாம் அப்படி இப்படித்தாங்க. அவங்க அவங்க வசதிக்கு அரசியல் பண்ணித்தான் வண்டி ஓடும்.//

மிகவும் உண்மை.இந்த உண்மையை தமிழகத்திலே யாவரும் அத்தியாவசியமா புரிந்து கொள்ள வேண்டும்.இவரை தமிழகத்திற்கும் சேர்த்து தானை தலைவனாக்க சிலர் முயற்ச்சிக்கிறார்கள்.புலம்பெயர் இலங்கை புலி தமிழர்களின் கனவு அது. எல்ரீரீஈ இயக்கத்திலே யாருமே காதலிக்க கூடாது திருமணம் செய்ய கூடாது என்று பிரபாகரன் சட்டம் போட்டிருந்தார்.காதலித்த புலிகளை கொன்றுமிருக்கார் என்று பல இலங்கை தமிழர்கள் தெரிவிக்கிறார்கள்.
இலங்கை அரசுடன் பிரச்சனைகாரணமாக அப்போ தமிழ்மாணவங்க சிலர் இலங்கையில் உண்ணாவிரதம் சாகும் வரை இருந்தனர். அவங்களிலே பெண் மாணவிகளும் இருந்தாங்க. பிரபாகரனுக்கு ஒரு மாணவி மீது காதல் வந்திடுச்சு. அதனாலே இறக்கும் வரை உண்ணா விரதம் இருந்தா இவங்களை எல்லாம் இலங்கை அரசு செத்து போகவிட்டிடும் இதை அனுமதிக் முடியாது என்று பொய் காரணம் சொல்லி உண்ணாவிரமிருந்த மாணவங்க அத்தனை பேரையும் தூக்கி கொண்டு இந்தியா வரும்படி பிரபாகரன் உத்தரவிட்டார். தான் விருப்பபட்ட பெண்ணுக்காக மாணவர்களின் உண்ணா போராட்டத்த நசுக்கினார். அதன் பின்பு இந்தியாவில் வைத்து அவருக்கு பிடித்த மாணவியை இந்து முறைபடி திருமணம் செய்து கொண்டார். அதன் காரணமாக புலி இயக்கத்திலே மற்றவங்களும் காதலிக்கலாம் திருமணம் செய்யலாம் என்று புலி சட்டத்தை தனக்காக மாற்றி அமைத்தார் பிரபாகரன்.

Sanjay Gandhi said...

மிகவும் அருமை... அந்த வேடதாரியையின் உண்மை முகத்தை அடையாளப்படுத்த வேண்டும்... இத்தனைநாள் இதை படிக்காமல் விட்டதற்காக வருந்துகிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...