Tuesday, December 31, 2013

’பெரியப்பாவின் காது’ புத்தகமும், சிறுகுறிப்பும்


பத்திரிக்கைகளில்
எழுத்தை வரவைக்க சாம தான பேத தண்டங்களையும் செய்ய வேண்டியிருந்த காலம் அதுஅம்மா கடலை மிட்டாய் வாங்கத் தரும் காசில் ஆபீஸ் கவரும், ஸ்டாம்புகளும் வாங்கி ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என ஒன்றுவிடாமல் கதைகளையும், கவிதைகளையும் அனுப்பிவிட்டுக் காத்திருப்பது அப்போது என் வாராந்திரப் பழக்கங்களுள் முக்கியமானதாகிப் போயிருந்தது. நான் அனுப்புகிறவற்றை அவர்கள் தொடுகிறார்களா என்பது கூடத் தெரியாதெனினும்ஒரே கதையை ஒரே வாரத்தில் ஆனந்தவிகடனுக்கும், குங்குமத்திற்கும் அனுப்பிவிட்டுஅய்யோ.. இரண்டிலும் பிரசுரமாகிவிட்டால் என்ன செய்வது? அவர்களுக்குள் பிரச்சினை வருமே!! பின் நம் எழுத்தைச் சீண்ட மாட்டார்களே!!”, என்றெல்லாம் பயப்படும் உச்சக்கட்ட கற்பனையும், அபாரமான நம்பிக்கையும் கலந்த மூளை எனக்கு வாய்த்திருந்தது. அப்படி உறுதியோடிருந்த பிஞ்சு மனம் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் எழுதுவதையே விட்டுவிட்டது. சில வருடங்கள் கழித்து கல்லூரி படிக்கும்போது ஆர்குட் என்ற சமூக வலைதளம் பிரபலமாகி வந்தது. மீண்டும் எழுதத் தொடங்கியது அப்போதுதான். பத்திரிக்கைகள் எதையும் நம்ப வேண்டியதில்லை, சிறிய வாசகர் வட்டம் என்றாலும் நமக்கான வட்டத்தை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற உத்வேகமும், நம்பிக்கையும் கொடுத்தது - இணையம் அளித்த கட்டற்ற சுதந்திரமும், வெளியும் தான்.  
                                 
உலக எழுத்து மற்றும் கருத்துச் சூழல்களில் ஏற்பட்ட மிகப்பெரும் புரட்சி இணையத்தின் உலகமயமாக்கல். அதன் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன், அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டவன் என்ற வகையில் எப்போதும் எனக்குப் பெருமை உண்டு. எல்லாவற்றையும் சுற்றி வளைத்து எழுதினால் தான் எழுத்தாளன் என்ற கொள்கை கொண்ட பல ஸ்டீரியோடைப் எழுத்தாளர்களிடமிருந்து சாமானிய வாசகர்களையும், எழுத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தின் மூலம் வளர்ந்த எழுத்தாளர்கள் பலர். யூனிகோட் வந்தபின் இணையமெங்கும்தமிழ் எழுத்துக்களால்எழுதப்பட்ட  தமிழ் கொட்டிக் கிடக்கிறது. தமிழ் எழுத்துலகின் எதிர்காலம் வர்கள் தான். இந்நிலையில் முழு கருத்து சுதந்திரமும், எந்தக் காத்திருப்பும் இல்லாத சுய வெளியீட்டின் (self publishing) அவசியத்தையும் நாம் கவனிக்க வேண்டும். எல்லாத் துறைகளையும் போல இதிலும் வலுவானதே வெற்றி பெறும் (survival of the fittest) என்றாலும் வலுவை நிரூபிக்க சுய வெளியீடு என்பது ஒரு பாரபட்சமற்ற மைதானம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. நீட்டி முழக்கி எழுதும் பழமைவாத தமிழ் எழுத்தாளர்கள் கூட இணையப்பக்கம் துவக்காமல் பிழைப்பு நடத்த முடியாது என்ற நிலையை தமிழ் இணையதளப் பயனாளர்களின் எண்ணிக்கை உருவாக்கியுள்ளது

புத்தகங்களைக் கையில் தொட்டு வாசிக்கும் அனுபவத்தை மின்-புத்தகங்களால் தரமுடியாது எனினும் மின்-புத்தகங்கள் பெற்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும், டேப்ளட் போன்ற கைக் கணிணிகள் மின்-புத்தக உபயோகத்தில் ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு சிறிய டேப்ளட்டின் எடைக்குள் 1000 பெரிய புத்தகங்களை அடக்கிப் படிக்க முடியும் என்ற பெரும் வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆக அச்சடிக்கப்பட்ட புத்தகங்களுக்கான வரவேற்பு அடுத்த தலைமுறையில் எப்படி இருக்கும் என்பதையும் காலத்திடமே விட்டுவிடுவோம்.

புத்தகம் வெளியிட பல வாய்ப்புகள் இருந்தும், சில கட்டுரைத் தொகுப்புகளிலே கட்டுரைகள் இடம் பெற்றிருந்தாலும் இணையத் தமிழைப் பயன்படுத்தி வளர்ந்து சோறுண்பவன் என்ற முறையில் என் முதல் தனிப் புத்தகம்  சுய வெளியீட்டுப் புத்தகமாக இருக்கவேண்டும் என்ற ஆசையும், நன்றியுணர்ச்சியும் எப்போதும் எனக்குண்டு.  2014ல் சினிமா குறித்த நூல் ஒன்றும், நாவல் ஒன்றும், கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் பதிப்பு நிறுவனங்களின் மூலம் வெளிவர இருப்பதால் என் சிறுகதைகளைத் தாங்கிய முதல் புத்தகமாக மின் மற்றும் தேவைக்கேற்ப அச்சிட முடிந்த (Print on demand hard copy) சுயவெளியீடாக இந்த பெரியப்பாவின் காதுபுத்தகம் வெளிவந்திருக்கிறது. என் முதல் புத்தகம் ஒரு சுய வெளியீட்டுப் புத்தகம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு, இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ரூபாயில் வாங்கும் இந்திய வாழ் வாசகர்கள் புத்தகத்தின் hard copyயை இங்கே வாங்கலாம்.

http://goo.gl/dsvQQa

டாலரின் வாங்க விரும்பும் வெளிநாட்டுவாழ் வாசகர்கள் இங்கே வாங்கலாம் 

- டான் அசோக்2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் புத்தக சுய வெளியீட்டுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

நேரம் இருந்தால் எனது நண்பரின் பதிவையும் வாசிக்கவும்... (http://deviyar-illam.blogspot.in/2013/12/blog-post_30.html)

வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...