Monday, August 26, 2013

கேப்டன் வாழ்த்து- கோணாண்டிச் சித்தர்


மேடையிலே முழங்கினாலும்,
நடை'மேடை'யிலே சீறினாலும்,
பிரான்ஸ், சைபீரியா, கொட்டாம்பட்டி நாடுகளின்
புரட்சிச் சரித்திரம் பற்றி  பக்கம் பக்கமாய்
பலவாறு முழங்கினாலும்,
அம்மாவுக்குப் பிடிக்காததால்
வாழ்நாள் சாதனையாம்
சேது சமுத்திரமே வேண்டாம் எனக்கூறும்
புரட்சிப்புயல்களுக்கு மத்தியில்,
தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு
ராஜபக்சேவுக்கு சவால் விட்டாலும்,
கலைஞர் என்றால் கத்தியும்,
அம்மா என்றால் அமுக்கியும் வாசிக்கும்
செந்தமிழர்களுக்கு மத்தியில்,
பதுங்குக் குழியில் பதுங்கி எழுதும்
டைம்பாஸ் ஊடகங்களுக்கு மத்தியில்,
தைரியமாக சட்டசபையில்
நேருக்கு நேராய் எதிர்த்து நின்ற
உண்மையான புரட்சிக்கலைஞரே!
துணிச்சலின் தொழிற்சாலையே!
எங்கள் ஒப்பில்லா கேப்டரே!
"முடிஞ்சா அந்தம்மாகிட்ட கேளுங்கடா"என
பத்திரிக்கை பயந்தாங்கொள்ளிகளை
துகிலுரித்து விரட்டியவரே..  
எதிர்கட்சி ஹெலிகாப்டரே...
எங்கள் திராணியாரே...
வாழ்க நீ வாழ்க நீ...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  -தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாததால் தற்சமயம் ஆஃப்கனிஸ்தானில் வாழும் புலவர் கோணாண்டிச் சித்தர்.

3 comments:

M.Kumaran said...

/// எதிர்கட்சி ஹெலிகாப்டரே....
என்ன ஒரு வர்ணனை.... எங்கேயோ போயிட்டீங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

புலவர்....!!!!

Bagawanjee KA said...

கேப்டன்இங்கிருக்க கோனாண்டிசித்தர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாமா ?
தைரியமா வாங்க .நிச்சயமா கஞ்சா கேஸ் இருக்கு !

Related Posts Plugin for WordPress, Blogger...