Monday, March 4, 2013

ஒழுங்காக காதலிப்பது எப்படி? -டான் அசோக்

நமது தமிழக ஆண் சமூகத்தின் 'லட்சணம்' முகநூலைப் பார்த்தாலே தெரியும். ஃபிகர் (அது போலி ஃபுரபைலாதான் 90% இருக்கும்) ஃபோட்டோக்கு கீழ போய் "ஹாய் யூ லுக் லைக் ஏஞ்சல்'னு போடுறது, 'ப்ளீஸ் ஆட் மீ ஏஸ் யுவர் ஃபிரண்ட்'னு போடுறது, 'ஹேய். வீ வில் பி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். வாட் யூ சே'னு எழுதறது. "எங்க பப்பி இன்னைக்கு பாத்ரூம் போகல"னு போட்டா கூட பதறி துடிச்சு லைக்கும் கமண்ட்டும் போடுறது! இப்படிலாம் பசங்களை பசங்களே அசிங்கப்படுத்துனா அப்புறம் ஃபிகருங்க எப்படி பசங்கள மதிக்கும்? சோ.. ஒரு ஃபிகரை கரக்ட் பண்ண என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது? அந்த காதல காப்பாத்த என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது போன்ற சில முக்கியமான பாயிண்ட்ஸ் மட்டும் சொல்றேன்... உனக்கேன் இந்த அக்கறை? யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். ஆனால் இதை படித்துமுடித்தவுடன் "நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்" என்பது உங்களுக்குப் புரியும்! சோ.. தொடர்ந்து படிங்க!

1) "நம்ம முகரைக்கெல்லாம் சுமாரான ஃபிகரு தான் கிடைக்கும்"னு நமக்கு நம்மளே முடிவு பண்ணிட்டு டைரக்டா சுமாரான ஃபிகருக்கு ட்ரை பண்ணக் கூடாது. ஆக்சுவலா எல்லா பசங்களும் இப்படி நினைக்கிறதுனால செம ஃபிகரைவிட தமிழ்நாட்டுல சுமாரான ஃபிகர்களுக்குதான் போட்டி அதிகம். இது நாட்டுக்கே ரொம்ப கேடான விசயம். போட்டி அதிகம்ன்றதால ஒரு சுமாரான ஃபிகர் தன்னத்தானே செம ஃபிகர்னு நினைச்சுக்கக் கூடிய கொடூரமான உயிர்க்கொல்லி அபாயங்கள் இதுல இருக்கு! அப்புறம் அந்த கொடுமையையும் நீங்கதான் அனுபவிக்கனும். எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு எடுத்தவுடனேயே செம ஃபிகரையே ட்ரை பண்ணுங்க. இது அழகை வைத்து காதலிப்போர்க்கு மட்டும் தான்! குணம்-மனம் எல்லாம் பார்ப்பவர்களுக்கு சுமாரான ஃபிகரும் 'ஹேலி பெர்ரி' தான்!

2) ஆரம்பத்துலேயே ரொம்ப அலைஞ்சு அலைஞ்சு உங்க ஃபிகருக்கு திமிரு ஏத்திவுட்றக் கூடாது. ஒருநாள் பாக்கனும், ஒருநாள் பாக்கக் கூடாது. முக்கியமா முதல்தடவ பேசுறப்ப அந்த பொண்ணுக்கு நீங்க செம திமிரு புடிச்சவன், ஈகோ புடிச்சவன்னு தோணனும். அப்பதான் நீங்க அடுத்தடுத்த தடவ பேசுறப்ப 'இவ்ளோ ஈகோ புடிச்சவனா இருந்தும் நம்மகிட்ட பேசுறானே'னு அதை நினைச்சு அதுவே பெருமை பட்டுக்கும்! போகப் போக ஈகோவ குறைச்சு லவ்வை ஏத்தனும்! முதல் தடவயே வான்டட்டா போய் போய் வழிஞ்சீங்கன்னா "சனியன் இப்படி வழியுதே"னு மனசுக்குள்ள முடிவுபண்ணி மொக்க லிஸ்ட்ல சேத்துருவாய்ங்க! அப்புறம் லவ் ஊத்திக்கும்!

3) "மச்சி இந்த ஃபிகர் எனக்கு செட் ஆகுமாடா?"னு வர்றவன் போறவன்கிட்டெல்லாம் அட்வைஸ் கேக்க கூடாது. செட் ஆகும்ன்ற நம்பிக்கையும், மன உறுதியும் இல்லேனா கடைசி வரைக்கும் முரளி மாதிரியே அலைய வேண்டியதான். இன்ஸ்பிரேஷன் வேணும்னா ஒரு பத்து நிமிசம் எக்ஸ்பிரஸ் அவென்யூல போய் நில்லுங்க. அட்டு பிகர்களுக்கு நல்ல பசங்களும், நல்ல பொண்ணுங்களுக்கு அட்டு பசங்களும் கிடைப்பதுதான் நம் ஊர் நியதிம்குறது புரிஞ்சிரும்! அதுனாலதான் சொல்றேன், முகரை சரி இல்லேனாலும் முயற்சி முக்கியம்!

4) பெண்களுக்கு என்ன வேணும்ன்ற கேள்விக்கு அந்தக்கால 'ஆதாம்'மில் இருந்து இந்தக்கால ஆதம்பாக்கம் நாராயணன் வரை பதில் தேடி அலையிறாய்ங்க. ஆனா இதோட பதில் ரொம்ப ஈசி! பெண்களுக்கு எல்லாமே வேணும். ஆனா அப்பப்போ அது அது வேணும். இந்த ஃபார்முலாவை மெயிண்டைன் பண்றதுல தான் ஆண்களுக்குப் பிரச்சினை. காதல் தேவைப்படுறப்ப காமத்தையும், காமம் தேவைப்படும்போது காதலையும், அன்பு தேவைப்படும்போது கோபத்தையும், டெட்டி பியர் தேவைப்படும்போது ஸ்பைடர் மேனையும் மாத்தி மாத்தி கொடுத்தா லவ் புட்டுக்கும்!

5) லவ் செட்டாகுற வரைக்கும் நம்ம ஐ.சி.யூலயே அட்மிட் ஆயிருந்தாலும் அவ கால் பண்ணா ஃபோனை எடுத்து உருக உருக பேசுவோம். செட் ஆயிருச்சுன்னா நிலைமை மாறிரும். நம்ம எதாவது உயிர் போற வேலைல பிசியா இருப்போம். அப்ப ஃபோன் பண்ணி ரொமான்ட்டிக்கா பேசுனு உயிரை எடுப்பாங்க. நமக்கு எரிச்சலும் கடுப்பும் மிக்ஸ் ஆகி வரும். ஆனா உள்ள எவ்ளோ எரிஞ்சாலும் வெளிய காட்டிக்காம ஒரு அஞ்சு நிமிசம் பொறுமையா கொஞ்சிட்டு ஃபோனை வச்சிரனும். இதை செய்யாம, "உனக்கு அறிவில்லையா? அது இது"னு கத்துனீங்கன்னா லவ்வுல விரிசல் விழுந்துரும்! காதல் பிஞ்சுட்டிருக்க கேப்ல பெண்கள் ரொம்ப வீக்! அப்புறம் இதுக்குன்னே உங்க ஃபிகரோட ஃபிரண்ட் எவனாவது காத்துக்கிட்டிருப்பான். கிடைச்ச கேப்புல 'ஆறுதல்' சொல்றேன் பேர்வழினு சொற்பொழிவு ஆத்தி ஆத்தியே உசார் பண்ணிருவாய்ங்க!  பல காதல்கள் இப்படிதான் காலி ஆகுது!

6) உங்க ஃபிகரோட ஃப்ரண்டுங்ககிட்ட (பெண் நண்பர்கள்) ரொம்ப கவனமா இருக்கனும். இந்த பசங்க என்னதான் உள்ளுக்குள்ள பொறுமுனாலும் அடுத்தவன் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவாய்ங்க! ஆனா இந்த பொண்ணுங்க செத்தாலும் அவங்க ஃபிரண்டு லவ்வுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க. குறிப்பா பையன் அழகா, காமடியா பேசுறவனா இருந்தா அவ்வளவுதான். எப்படா பிரிச்சு விடுறதுனு இருப்பாங்க. அதுனால அதுங்ககிட்ட வாயை அளவோட விடனும்! நீங்க பேசுற எதுவும் உங்களுக்கு எதிராவே நாளை திருப்பப்படலாம்! ஏன்னா வழக்கை அழகாக 'ட்விஸ்ட்' பண்றதுல ஒவ்வொரு ஃபிகரும் ஒரு ராம்ஜெத்மலானி தான்!

7) உங்க ஆளு அவங்க ஃபிரண்ட் (பசங்க)கிட்ட எவ்ளோ பேசுனாலும் கண்டுக்காதீங்க. ஏன்னா லவ் பண்ணிட்டிருக்கப்ப பொதுவா பொண்ணுங்க தப்பு பண்ண மாட்டாங்க. அவங்க லிமிட்ல கரக்டா இருப்பாங்க. அதுனால சும்மா, "அவன்ட்ட பேசாத இவன்ட்ட பேசாத"னு மொக்க போட்டீங்கன்னா அப்புறம் அவங்க ஃபிரண்ட் கூட பேசுறப்ப, "சே... இவன் எவ்ளோ அப்பாவியா இருக்கான். இவன்கூட நம்மளை சேத்து சந்தேகப்பட்டுட்டானே"னு உங்க மேல கோபமும், ஃபிரண்டு மேல சிம்பதியும் வந்து தொலைச்சுரும்! அப்புறம் காலப்போக்குல அது முத்திப் போயி காதலா கூட மாற வாய்ப்பிருக்கு! அதுபோக அந்த காதலுக்கு விதை நீங்க போட்ட மாதிரியும் ஆயிரும்! இந்த அவமானம் நமக்கு தேவையா? அதுனால சந்தேகப்படுறவன் காதலிக்க கூடாது. காதலிக்கிறவன் சந்தேகப்படக் கூடாதுங்குறதை கரக்டா ஃபாலோ பண்ணனும்.

7.2) அதுக்காக, "நீ எவன்கூட வேணாலும் எவ்ளோ நேரம் வேணாலும் பேசுடா செல்லம்... நான் எழவு காத்துட்டு உக்காந்திருக்கேன்"னு இருந்தீங்கன்னா, "என்ன இவன்? நம்மமேல பொசசிவ்நெஸ்சே இல்லாம இருக்கான். நம்மளை இவன் உண்மையா லவ் பண்ணலையோ"னு தோண ஆரம்பிச்சிரும். அப்புறம் அதுவும் பிரச்சினை. அதுனால உண்மைலயே உங்களுக்கு சூடு, சொரணை எதுவுமே வரலேனா கூட கொஞ்சமா கோபப்பட்டுக்கனும். லிமிட் ரொம்ப முக்கியம்!!

8) உங்களை லவ் பண்ற பாவத்துக்காக உங்க ஆளுக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இருக்க கூடாது, எங்க போனாலும் உங்க கூடதான் போகனும், எப்ப பாத்தாலும் உங்க கூடதான் இருக்கனும்னு 'அடம்' புடிக்கக் கூடாது. அவங்க ஃபிரண்ட்சோட, கூட வேலை பாக்குறவங்களோட வெளிய போறது, சினிமாக்கு போறதையெல்லாம் புடிக்கலேனாலும் புரிஞ்சுதான் ஆகனும். அதைவிட முக்கியம் வெளிய அவங்க ஊர் சுத்திட்டு வந்தோன அந்த கதையெல்லாம் சொல்றேன் பேர்வழினு ஒரு கொடூர மொக்கை போடுவாங்க. அதை காது கொடுத்து கேக்குற பெருந்தன்மையும் இருக்கனும். நல்லா தெரிஞ்சுக்கங்க... பெண்களுக்கு பேசுறவனைவிட, கேக்குறவனை ரொம்ப புடிக்கும்! ஏன்னா பெண்களுக்கு பேச ரொம்ப புடிக்கும்!

9) உங்க ஆளோட அண்ணன் ஒரு 'டொக்கு டோங்கிரி'யா இருப்பான். அப்பன் ஒரு காமடி பீஸா இருப்பாரு. ரெண்டு பேருமே, உங்க ஆளு எந்த காலேஜ்ல படிக்குதுனு கூட தெரியாத, என்ன ஆனாலும் கண்டுக்கவே கண்டுக்காத மன்மோகன்சிங்கா இருப்பாய்ங்க. ஆனா, "எங்கப்பா அபியும் நானும் பிரகாஷ்ராஜ் மாதிரி" , "எங்கண்ணன் தங்கைக்கோர் கீதம் டி.ஆர் மாதிரி"னு அப்பப்ப உங்க ஆளு அடிச்சு விடும். உண்மை உங்களுக்கு தெரிஞ்சாலும் மனசுக்குள்ளயே புதைச்சிக்கிட்டு, "எனக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கலையே. எனக்கு இப்படி ஒரு அப்பத்தா கிடைக்கலையே"னு ஃபீல் பண்ற மாதிரி அடிச்சு விடனும். ஏன்னா முக்கால்வாசி ஃபிகருங்க வீட்டை ஏமாத்துறோமேனு ஒரு குற்ற உணர்ச்சியோடயேதான் லவ் பண்ணும்ங்க. அதை சரிகட்டதான் அப்பப்ப அப்பாவையும், அண்ணனையும் புகழ்றது! இது தெரியாம நீங்க "உங்கப்பன் கிடக்கான் தண்டம். உங்கண்ணன் கிடக்கான் முண்டம்'னு உண்மைய பேசுனீங்கன்னா காதல் காலி ஆயிரும்!

10) சாம தான பேத தண்டம் முறைகளை எல்லாம் கடைபுடிச்சும் அந்தக் காதல் புட்டுக்குச்சுனு வைங்க. "செத்துருவேன், கைய வெட்டிக்குவேன், நாக்க புடுங்கிக்குவேன்"னு அடம்புடிக்கப்படாது. காதலை 'break up' செய்ய அவங்களுக்கு எல்லா உரிமையும் (தவறான காரணமாக இருந்தால் கூட) இருக்குன்றதை புரிஞ்சு நாகரீகமா சமாதானப் படுத்த ட்ரை பண்ணா திருப்பி அதே காதல் கிடைக்க வாய்ப்பு இருக்கு. நம்மளே நாளைக்கு நம்ம காதல் தோல்விய நினைச்சுப் பாக்குறப்ப 'காதலி'யை குற்றம் சொல்ற மாதிரி இருக்கனுமேயொழிய நம்மளை நினைச்சு நம்மளே கேவலப்படுற மாதிரி இருக்கக் கூடாது. ஏன்னா நல்ல காதலனா இருக்கோமான்றதை விட நல்ல மனுசனா இருக்கோமான்றதுதான் முக்கியம்!

என்ன செஞ்சும் உடைஞ்ச லவ்வை ஒட்ட வைக்க முடியலைனா காதலை நியாபகப்படுத்தும் எல்லா விசயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கனும், தூக்கி எறிஞ்சிரனும். ஒரு விலை உயர்ந்த காரை நம்மளால வாங்க முடியலேனா தினமும் அந்த கார் கடைக்கு போய் அது அங்க நிக்குதா? எவன் வாங்குனான்? நல்லா வச்சிருக்கானா?னு பாக்குறது நமக்குதான் மேலும் மேலும் பிரச்சினை. கார் அதுபாட்டுக்கு கிளம்பி போயிரும். நமக்குதான் வலியும் வேதனையும். அதுனால கிடைக்கலேனா அந்தப் பக்கமே போகக் கூடாது!! "காதல்னா பூ மாதிரி. உதிர்ந்தா ஒட்ட வைக்க முடியாது"னு மொக்க டயலாக் பேசாம நமக்கான காதல், காதலி இது இல்லப்பானு அடுத்த காதலுக்காக காத்திருக்க ஆரம்பிச்சிரனும். வாழ்க்கையின் எதார்த்தம் அதான். அப்படி வாழ்க்கையை எதார்த்தமா வாழ்றவன் காதல்ல மட்டுமில்ல எல்லாத்துலயுமே ஜெயிப்பான்! ஆல் தி பெஸ்ட்! :-)32 comments:

தமிழன் said...

super nanba. rasithen.

H wasim said...

super na..!

H wasim said...

super na

இளவரசன் said...

சூப்பரப்பு.... நம்ம பசங்களுக்கு ரொம்ப தேவையான விஷயம்....

இளவரசன் said...

சூப்பரப்பு.... நம்ம பசங்களுக்கு ரொம்ப தேவையான விஷயம்....

இளவரசன் said...

சூப்பரப்பு.... நம்ம பசங்களுக்கு ரொம்ப தேவையான விஷயம்....

PRINCENRSAMA said...

நீ கலக்கு டான்!

மலரின் நினைவுகள் said...

மெய்யாலுமே ரொம்ப நக்கல் புடிச்ச கட்டுரை
I have shared this in FB wall

புரட்சி தமிழன் said...

இது தான் தானே தன் உடம்புல மசாலாவை தடவிட்டு தந்தூரி அடுப்புக்கு போகிற வழி பாத்துகுங்கப்பா.

புரட்சி தமிழன் said...

அரசியல்வாதி பொதுமக்களுக்கு தேர்தலின்போது கொடுக்கும் வாக்குறுதியைகூட நம்பலாம் ஆனால் காதலர்கள் காதலிக்கும்போது கொடுக்கிற வாக்குறுதிகளெல்லாம் கல்யாணத்துப்பின்னர் காப்பாத்துவாங்கன்னு கனவுலகூட நினைக்க கூடாது.

Jayadev Das said...

\\நான் எழவு காத்துட்டு உக்காந்திருக்கேன்"\\ஐயா இது "எழவு" இல்லை "இலவு". இலவம் காய்கள் பெரிதாக இருப்பதைப் பார்த்து அவை பழுக்கும் உண்டு பசியாறலாம் என கிளி காத்துக் கொண்டிருக்க, அது வெடித்து பஞ்சாகப் போக ஏமாந்து போனதாம்.

உங்க யோசனைகளை அத்தனையும் அருமை. ஆனாலும், இன்னொருத்தர்கிட்ட யோசனை கேட்டுத்தான் ஃபிகரை கரெக்ட் பண்ணனும் என்ற நிலையில் இருப்பவன் பிரயோஜனப் படுவான் என்று தோன்றவில்லை. ஒரு புலி இருக்குன்னா அது மானை எப்படி வேட்டையாடுவது என்று யாருகிட்டேயும் போய் ஆலோசனை கேட்பதில்லை, அப்படி கேட்குமானால் அந்த புலிக்கே அது அவமானம். எப்பூடி.............

டான் அசோக் said...

ஐயா இது "எழவு" இல்லை "இலவு". //

நன்றி தோழர்!!

நானும் அதைதான் சொல்லிருக்கேன். ஆலோசனை கேக்காதீங்கன்னு. ஆனா இதெல்லம் அடிப்படை காதல் தத்துவங்கள். உதாரணத்திற்கு நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆவது உங்கள் திறமை. ஆனால் பேச முதலில் மொழியைக் கற்க வேண்டுமல்லவா? அதுதான் இது! :-)

Prathap J said...

Super BOSS

Prathap J said...

Super boss

Vijay Kumar said...

//பெண்களுக்கு பேசுறவனைவிட, கேக்குறவனை ரொம்ப புடிக்கும்! ஏன்னா பெண்களுக்கு பேச ரொம்ப புடிக்கும்!//

super

Tamil Blog said...

nice write

அமுதா கிருஷ்ணா said...

super...innaiku enna nadakutho athai appadiye solli irrukeenga..

selvam said...

வாழ்க்கையை எதார்த்தமா வாழ்றவன் காதல்ல மட்டும் இல்ல எல்லா விஷயத்துலயும் ஜெயிப்பான்!

மிக அருமை!

guru nathan said...

குணம்-மனம் எல்லாம் பார்ப்பவர்களுக்கு சுமாரான ஃபிகரும் 'ஹேலி பெர்ரி' தான்!

அழகாக 'ட்விஸ்ட்' பண்றதுல ஒவ்வொரு ஃபிகரும் ஒரு ராம்ஜெத்மலானி தான்!

சூடு, சொரணை எதுவுமே வரலேனா கூட கொஞ்சமா கோபப்பட்டுக்கனும். லிமிட் ரொம்ப முக்கியம்!!

//சூப்பருப்பா!!!
பத்து பாயிண்ட் கொடுத்து இருக்கிறீர்கள்.
எப்படியும் பதினைத்து காதலச்சும் போயிருக்கும்னு நம்புகிறேன். இன்னும் பண்ண வாழ்த்துகள். மருத்துவர் ஜாக்கிரதை!!

rameez said...

Nice

என் ராஜபாட்டை : ராஜா said...

இனி டான் அசோக் (புள்ளி) மான் அசோக் என அழைக்கபடுவார்.

என் ராஜபாட்டை : ராஜா said...

தலைப்பு இதான் ஆனால் மேட்டர் வேற. . . www.kingraja.co.nr இல்.தேடி பாருங்கள். . .

Nanda Kr B said...

நான் இந்த சம்பவம் எல்லாம் எனக்கு மட்டும் தான் நடக்குதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. எல்லாருக்குமே அப்படிதானா ... கொஞ்சம் சந்தோசமா இருக்கு

sathish chennai said...

Very Nice said

THILIBAN said...

good.

THILIBAN said...

super matter.

Kanmani Rajan said...

:P :) :D :D நீங்க சொன்ன எல்லாமே உண்மை! விழுந்து விழுந்து சிரிச்சேன்! :)

முரளிகண்ணன் said...

செமயா இருக்கு பாஸ். கலக்கல்.

Prabhakaran Muthukumar said...

Pozhudhannaikkum ukkandhu yosichurupaaru pola... Irundhalum payanulla adhilum kurippaka naattukku nalla vishayathai sonna engal aaruyir annanukku nanri...

Sankar Alex said...

very nice nanba,Nalla comediana pechu,Romba useful and rasithen.thank u for ur efforts.

siva dhanush said...

nanba na en love pannathalam ippadi nerla pathathu mathiri puttu puttu vakiringa

Anonymous said...

10000000000000000000 likes

Related Posts Plugin for WordPress, Blogger...