Friday, March 15, 2013

தமிழர்களின் ஸ்பெஷல் குணம்! எ தினமலர் ஸ்டோரி!
தடை செய்யப்பட்டதை தேடிப் போவதென்பது பொதுவான மனித குணம். சர்க்கரை வியாதி இருப்போர்க்கு இனிப்புகள் பிடிப்பதைப் போல. தமிழர்களுக்கு இந்த குணம் மிக அதிகமாகவே இருக்கிறது. ஒருவேளை இந்த குறிப்பிட்ட 'குணத்தை' அளக்க ஏதேனும் அளவுகோல் கண்டுபிடித்தார்களாயின் தமிழர்கள் அதில் உலக அளவில் முதலிடம் பெறுவார்கள் என்பதை சந்தேகமின்றி இப்போதே கூறலாம்.

விசயத்திற்கு வருவோம். தினமலர் என்ற பத்திரிக்கை ஒன்று இருக்கிறது. இது மிகவும் தேசபக்தி கொண்ட இதழ். இந்தியாவுக்கு ஏதாவதொரு அவமானமென்றால் அதன் ரத்தநாளங்கள் எல்லாம் 100டிகிரி வெப்பத்தில் கொதிக்கும். யாரேனும் தவறான இடத்தில் பைக்கை பார்க் செய்துவிட்டால் "திருந்துவார்களா இந்த ஜென்மங்கள்?" என எழுதும். துணைவேந்தர்கள் ஏதேனும் மீட்டிங்கில் இடைவேளை நேரத்தில் தூங்கினால் கூட "தூங்குமூஞ்சி துணைவேந்தர்கள்" என முதல் பக்கத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு பரப்பும். வெயிலுக்கு அஞ்சி முகத்தில் துணி மூடியபடி இஸ்லாமியப் பெண்களைப் போல யாரேனும் சென்றால் "தீவிரவாதிகளாக மாறிய நம்மூர்ப் பெண்கள்" என எழுதும் பெருமையுடைத்து. அந்துமணி என்ற உலகமகா காவாளிப்பயல் தான் தினமலர் ஆசிரியர் என்றாலும் ஒழுக்கத்திலும், தேசபக்தியிலும், அளவுக்குமீறிய (வக்கிர) நகைச்சுவையுணர்விலும் தினமலரை யாராலும் மிஞ்ச முடியாது.

தினமலரைப் புறக்கணிப்போம் என பலமுறை நாம் சத்தமிட்டிருக்கிறோம், ஓலமிட்டிருக்கிறோம். புறக்கணித்திருக்கிறார்களா? இல்லை. தென்மாவட்டங்களில் தினத்தந்தியை விட இரண்டு மடங்கு அதிகமான சர்குலேஷனில் சக்கை போடு போடுகிறது. தினமலரின் டெக்னிக் மிகவும் புதியது. ஒரு போதை மருந்தை போல மனிதனின் வக்கிரத்திற்கு தீனி போட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு டவுட் தனபால் என்ற கேரக்டர்! 'பெரிய புடுங்கி' என்பார்களே அதற்கு சரியான உதாரணம் அதுதான். எல்லோரையும் திமிர்த்தனமாக கிண்டல் செய்வது, பெரிய உலகம் தெரிஞ்ச ஞானி போல நக்கல் செய்வது என ஒரு பக்கா சாடிச குணம் கொண்டது இந்த காரக்டர். ஒரே நாளில் வெளிவந்த 'டவுட் தனபால்' பகுதியை கீழே கவனியுங்கள். மோடி, "நன்றாக ஆட்சி செய்தால் மக்கள் மன்னித்துவிடுவார்கள்" என சொல்லியிருப்பதற்கு, தனபால், "அதான் உங்களை நிரபராதி என நீதிமன்றமும் சொல்லிருச்சு. மக்களும் சொல்லிட்டாங்க. பின்பு ஏன் இப்படிலாம் பேசுறீங்க?" என கேட்கிறான். அதே நேரம் "வெயில் காலம் வந்துவிட்டது. அதீத மின்தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுறுவார்கள். அரசு தண்ணீர்ப்பந்தல்களாவது அமைக்க வேண்டும்" என விஜயகாந்த் சொல்லியிருப்பதற்கு, தனபால், "ஏன் மூளை குழம்புன மாதிரி உளறீங்க? வெயிலுக்கும் மின்தட்டுப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?" என சொல்கிறான். தன் தவறை சொல்லும் மோடியை அய்யயோ என பதறி காப்பாற்றுகிற அதே தனபாலுக்கு, வெயில் காலத்தில் மின்விசிறி இல்லாமல் மக்கள் அவதிப்படுவார்களே என விஜயகாந்த் சொல்வது புரியவில்லையாம்!! சரி. அதைக் கூட விடுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எதிர்கட்சித் தலைவரை "மூளை குழம்பிருச்சு" என்றெல்லாம் எப்படி சொல்கிறான்? இது என்ன ரகமான ஊடக சுதந்திரம்? தினமலர் ரமேஷை 'ராபீஸ் தாக்கிய நாய்' என எவனாவது திட்டினால் சும்மா இருப்பானா இந்த 'தனபால்'??

இன்னொரு முக்கியமான விசயம். இலங்கை ராணுவம் தினசரி சராசரியாக இரண்டு தமிழக மீனவர்களையாவது சுட்டு கொல்கிறது. இதுவரை எப்போதாவது அதை தலைப்புச் செய்தி ஆக்கியிருப்பானா இந்த தினமலர்? ஆனால் கேரள மீனவர்களைச் சுட்ட இத்தாலியர்களை அந்நாடு காப்பாறுவதைப் பற்றி "இந்தியாவுக்கு குட்டிநாடான இத்தாலி சவால்" என முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி போடுகிறான்! மக்களே.. இதெல்லாம் எவ்ளோ பெரிய கொடுமை? வயிறு எரிகிறது.
இலங்கை மட்டும் என்ன சீனா போல பெரிய நாடா? தேசபக்தி என்பது இந்த தினமலர் ஜந்துவிற்க்கு தமிழகம் தவிர்த்த இந்தியா மீதுமட்டும் பொத்துக்கொண்டு வரும். ஆனால் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் தமிழன் மட்டும் கிள்ளுக்கீரை!

புறக்கணி புறக்கணி என கத்திக் கத்தி ஓய்ந்தாகிவிட்டது! எவனுமே புறக்கணிப்பதைப் போல தெரியவில்லை. மலத்தை புறக்கணி எனச் சொன்னால் தமிழ்நாட்டில் மலம் வியாபாரம் கூட கொடிகட்டு பறக்க வாய்ப்புள்ளது! தமிழர்களின் குணம் அத்தகையது! விளம்பரம் வருது என சிலர் படிக்கிறார்கள். இதில் விளம்பரம் கொடுப்பதால் படிக்கிறார்களா இல்லை படிப்பதால்தான் நிறைய விளம்பரம் வருகிறதா எனத் தெரியவில்லை. எவனிடம் போய் முதலில் புறக்கணிக்கச் சொல்வது என்றும் தெரியவில்லை.
 
ஆக இப்போதைக்கு எவனும் தமிழனுக்குச் சமாதிகட்ட நினைக்கும் எதையும் புறக்கணிக்க ஆயத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா-சீனா-இலங்கை கூட்டணி தமிழகத்தில் பாதி ஜனத்தொகையை அழிச்சாதான் அறிவு வரும் போல! ஆனால் அப்போதும் கூட நம்மை அழித்தது சரிதான் என துக்ளக்கும், தினமலரும் எழுதுவார்கள். அதை நம்பவும் நாலு பேரு இருப்பான். அட இப்படிப்பட்ட கேவலமான முண்டங்களான நாமெல்லாம் இருந்து என்ன பண்ணப் போறோம்? மீனவனா மாறி மீன்பிடிக்கப் போயி இலங்கையால் சுடப்பட்டு தற்கொலை பண்ணிக்கலாம் வாங்க!

11 comments:

Jayadev Das said...

இந்த அந்துமணி, 15 வருஷத்துக்கு முன்னாடி எழுதிய கட்டுரையை திரும்ப ரி-சைக்கிள் பண்ணி ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் நடந்தது சொல்லி எழுதுவான்.

பழனி. கந்தசாமி said...

//மலத்தை புறக்கணி எனச் சொன்னால் தமிழ்நாட்டில் மலம் வியாபாரம் கூட கொடிகட்டி பறக்க வாய்ப்புள்ளது!//

மலம் நல்ல இயற்கை உரம். அதைக் கேவலப்படுத்தாதீர்கள். அது பல காலமாக வியாபாரம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு அமோக கிராக்கி.

PRINCENRSAMA said...

//ஆக இப்போதைக்கு எவனும் தமிழனுக்குச் சமாதிகட்ட நினைக்கும் எதையும் புறக்கணிக்க ஆயத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா-சீனா-இலங்கை கூட்டணி தமிழகத்தில் பாதி ஜனத்தொகையை அழிச்சாதான் அறிவு வரும் போல! ஆனால் அப்போதும் கூட நம்மை அழித்தது சரிதான் என துக்ளக்கும், தினமலரும் எழுதுவார்கள். அதை நம்பவும் நாலு பேரு இருப்பான். அட இப்படிப்பட்ட கேவலமான முண்டங்களான நாமெல்லாம் இருந்து என்ன பண்ணப் போறோம்? மீனவனா மாறி மீன்பிடிக்கப் போயி இலங்கையால் சுடப்பட்டு தற்கொலை பண்ணிக்கலாம் வாங்க!// அப்போதும் இவன்கள் ஏன் போனார்ன்கள் என்றுதினமல எழுதும். நம்மவர்களும் படித்துவிட்டு ஆமாமா ... இவன் எதுக்குப் போனான்னு கேட்பாய்ங்க... பார்ப்பான் காலில் சுவையைத் தேடும் கூட்டமாகவே இருப்பதில் சுகம் போலும்!

Anbalagan said...

அன்பு சகோதரா! தினமலர் பற்றி, என்னை போன்றவர்களின் உள்ள குமுறல்களை படம் பிடித்து காட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். தேச பக்ஹ்தி என்பதை விட பார்பனியத்தை தூக்கி பிடிக்கும் ஒரு சாடிஸ்ட்.

rajesh said...

என்ன அசோக் சார் , டெய்லி காலைல தினமலர் பேப்பர்அ ஒரு வரி விடாம படிச்சிட்டு வந்து status போட்ட மாதிரி தெரியுது . அப்படி ஒன்னும் நீங்க கஷ்ட பட்டு படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. இதுக்கு பேசாம முரசொலி இல்லன ரைசிங் சன் படிக்கலாமே

Sketch Sahul said...

google il sendru Dinamalam endru search seithaal "did you mean Dinamalar" endru varum...
antha alavukku intha paper naari irukkirathu

Amudhavan said...

தமிழ் ஊடகங்களை சரியான முறையில் நல்ல தைரியத்துடன் விமர்சிக்கிறீர்கள்.

Elangovan T said...

தினமலர், தினமணி, குமுதம் என ஒவ்வொன்றாக நிறுத்தி இதோ இந்த வாரம் நான் வாங்கியதே கடைசி ஆனந்த விகடனாக இருக்கும். தலையங்கம் முதற்கொண்டா அவதூறு பரப்புவது? தமிழ்நாட்டில் அதிகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தி.மு.க.-வினர்தான். அதை தெரிந்துகொண்டே இதுபோன்ற பத்திரிக்கைகள் தொடர்ந்து தி.மு.க.-வைப் பற்றியே எழுதிவருகின்றன. அதனை விமர்சித்து அவற்றிக்கு பப்ளிசிட்டி ஏற்படுத்தவேண்டாமே! அவற்றை கண்டுகொள்ளாமல் முற்றிலும் புறக்கணிப்போம். மேற்படி பத்திரிக்கைகளுக்கு இருக்கும் இன்னுமோர் தைரியம் அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க.வைப் போல் பழிவாங்காமல், இவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் என்பதுதான்!


முல்லை மயூரன் said...

What about tv channels , y have to omit sun, jeya, kolaignar tv , can u omit watching these channels then request to omit thinamalam

முல்லை மயூரன் said...
This comment has been removed by the author.
anbu said...

தினமலரைத் தொடாதே தீட்டு
தமிழர் இனம் கொல்லும் ஏடு
படிக்காதே அதை நிப்பாட்டு!

Related Posts Plugin for WordPress, Blogger...