Thursday, March 14, 2013

ஆட்சியாளர்கள் (யாராய் இருந்தாலும்) காலை நக்கிப் பிழைப்போம். -தமிழக ஊடகங்கள்
வளவள என பேசாலம் சுருக்கமாக விசயத்திற்கு வருகிறேன். 2011க்குப் பின் ஆவி, ஜூவி, குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகள் கலைஞரின் கடந்த ஆட்சியைப் பற்றியும், அவர் குடும்பத்தினர் பற்றியும் மட்டுமே பெரும்பாலும் எழுதி வருகின்றன. இதெல்லாம் இவைகளுக்கு இப்போதுதான் தெரிகிறதா? கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவரை வானளாவப் புகழுவதையே இவைகள் முழுநேரத் தொழிலாக செய்யவில்லையா? இப்போது ஏன் பல்ட்டி? அதுதான் ஊடகங்களின் புதிய ட்ரெண்ட். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது கலைஞரைப் புகழ்வார்கள், புகழ்வார்கள், புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்(ஆனால் ஜெவின் முந்தைய ஆட்சியைப் பற்றி திட்டி எழுத மாட்டார்கள். அமைதி மட்டுமே காப்பார்கள். அது வேற டாபிக் என்பதால் அது இப்போது வேண்டாம்.)
தினமலர் ராமசுப்பையரின் ஸ்டாம்ப் வெளியீட்டிற்கு கலைஞரைக் கூப்பிடுவார்கள். அவரும் போவார், வெளியிடுவார். பின் தினமலரில் கலைஞர் புகழாரங்கள் களைகட்டும். விகடன் குழுமம் அதன் என்ஸைக்ளோபீடியாவை வெளியிட கலைஞரைக் கூப்பிடுவார்கள். இவரும் போனார். வெளியிட்டார். வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அங்கேயே அப்போதே அரசு நூலகங்கள் அனைத்திலும் விகடன் என்ஸைக்ளோபீடியாவை வாங்கவேண்டும் என உத்தரவு போட்டார். விகடனில் கலைஞர் புகழாரம் கொடிகட்டியது! குமுதம் ஆசிரியர் தன் குடும்ப குழப்பங்களாலேயே அடித்து விரட்டப்பட்டபோது கலைஞரின் காலில் தஞ்சமடைந்தார். கலைஞரும் அந்த விசப்பாம்பை காப்பாற்றினார். பின் குமுதத்திலும் கலைஞர் புகழாரம்!

2011ல் ஆட்சி மாறியது!! மாறியவுடன் ஜெவைப் புகழ்கிறார்கள், புகழ்கிறார்கள் புகழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்... ஜெ ஆட்சியில் எதாவது அவலம் மக்களுக்குத் தெரியவரும்போதெல்லாம் கலைஞரைத் திட்டுவார்கள். கடந்த பத்து மாதங்களில் 99% அட்டைப் படங்கள் கலைஞரையும், கலைஞர் குடும்பத்தினரையும் தாங்கித்தான் வெளிவந்தது!!  கலைஞர் வாழ்க்கையில் அவர் செய்த தப்புக்கள் எல்லாம் இவர்களுக்கு ஜெ ஆட்சியில் இருக்கும்போதுதான் கண்ணுக்குத் தெரியும். கலைஞரின் கக்கூசில் ஒளிந்திருந்து பார்த்ததைப் போல அவர் மூத்திரத்தின் நிறத்தைக் கூட எழுதுவார்கள். ஆட்சியாளர்களை திருப்திப் படுத்துவதில் அவ்வளவு கடமையுணர்ச்சி. ஜெயலலிதா அரசைப் பற்றி கேட்க வேண்டாம். ஒரு லட்ச ரூபாய் திட்டத்தை விளம்பரப்படுத்த ஒரு கோடி ரூபாய் செலவழிக்கும் புரட்சிகர அரசு! சும்மாவே ஆடும் இவர்களுக்கு வாயில் வாழைப்பழத்தை வைத்தால் சும்மாவே இருப்பார்கள்? சும்மா இருந்த நாயை சொரிந்துவிட்டதைப் போல திமுகவின் மேல் கொலைவெறி கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.  உதாரணத்திற்கு லயோலா போராட்டத்தை ஜெ அரசு 'மொக்கை'யாக்கிதைப் பற்றி யாரும் பேசிவிடக் கூடாதாம். அதனால் அவசர அவசரமாக ஆ.வியில் கலைஞரையும் ஈழத்தையும் பற்றி ஒரு வயிற்றெரிச்சல் கட்டுரை. 2009ல் தானே அதெல்லாம் நடந்தது? அப்போது என்ன '*******'க் கொண்டிருந்தார்களா? இல்லை 2009ல் வெளியிடவேண்டிய இதழ்களை 2013ல் வெளியிடுகிறார்களா? கலைஞர் இப்போது முதல்வர் என்றாலும் இப்படி எழுதுவார்களா? கொஞ்சம் நிதானமாக கட்சி பேதமின்றி இந்த ஊடகங்களின் பொறுக்கித்தனத்தை யோசித்துப் பாருங்கள்.

ஜெயலலிதாவையும், கலைஞரையும் நாம் திட்டுகிறோம். அவர்களால்தான் எல்லாம் எனப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் யார் குற்றவாளிகள் எனத் தெரிகிறதா? இப்போது இப்படி எழுதுகிறார்களே, அடுத்தமுறை ஆட்சி மாறியவுடன் அப்படியே பல்டி அடித்து திமுகவின் காலை நக்கத் தொடங்கிவிடுவார்கள். இதுதான் காலம்காலமாக தமிழக ஊடகங்களின் ட்ரெண்ட்!

நாம் என்ன செய்வோம்? "உன்னைத் திட்டுனா நான் படிப்பேன் என்னைத் திட்டுனா நீ படிப்ப" என மாற்றி மாற்றி இந்த பிச்சைக்காரர்களுக்கு உணவிட்டுக்கொண்டிருக்கிறோம். இவர்களும் உடல்மாறி உடல்மாறி ஒட்டு உண்ணிகளைப் போல நம் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம். வைகோ ஈழப்போராட்டத்தைப் பற்றி உணர்ச்சிகரமாக பேசிய ஒரு பேட்டியை "வைகோ தமாஷ் பேட்டி" என வெளியிட்டிருந்தது தினமலர். அதை வைகோவை பிடிக்காதவர்கள் எல்லாம் பகிர்ந்தார்கள். பின் கலைஞரை கிண்டல் செய்து தினமலர் வெளியிட்டால் அதை மதிமுககாரர்கள் உள்ளிட்ட கலைஞரைப் பிடிக்காதவர்கல் பகிர்கிறார்கள். இப்படித்தான் இந்த கொசுக்கள் இதுவரை உயிர்வாழ்ந்து வருகின்றன.

அன்பு மக்களே. நீங்கள் எந்தக் கட்சி எந்த இயக்கம் என்ன கொள்கை என்றாலும் பரவாயில்லை. ஒன்றே ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். நாட்டை சீரழிப்பது அரசியல்வாதிகளோ, சினிமாக்களோ அல்ல. ஊடகங்கள். ஆனந்தவிகடன், குமுதம், தினமலர் போன்ற ஊடகங்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை காலை நக்கி தண்ணீர் குடிக்கிறவர்கள். உங்கள் கருத்தையே அவர்கள் எழுதினாலும் அதனால் அவர்களுக்கு லாபம் இருந்தாலேயொழிய எழுத மாட்டார்கள். உங்கள் எதிரியை இன்று திட்டுவதால் அதை ஆதரிக்காதீர்கள். நாளையே ஆட்சியும், காட்சியும் மாறினால் உங்களைத் திட்டுவார்கள். முதலில் இந்த ஒட்டுண்ணி ஊடகங்களை தமிழ்நாட்டில் இருந்து அகற்றினாலேயொழிய, முடக்கினாலேயொழிய உருப்படியாய் எதுவுமே மக்களால் செய்யமுடியாது. செய்யவும் விடமாட்டார்கள்!!!

11 comments:

குருநாதன் said...

fully agree with this

Jayadev Das said...

நண்பரே, சென்ற தி.மு.க. ஆட்சியை இறக்குவதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. தினமலரில், விகடனில் அவரைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டியதால்தான் அவர்கள் தேர்தலில் பணத்தைக் கொட்டியும் ஜெயிக்க முடியவில்லை.

Barari said...

நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.இதற்க்கு பெயர் ஊடக வியாபார (வேசி)தனம்.

gokul said...

perfect

gokul said...

perfect comment about our media.

டான் அசோக் said...

நண்பரே, சென்ற தி.மு.க. ஆட்சியை இறக்குவதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. தினமலரில், விகடனில் அவரைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டியதால்தான் அவர்கள் தேர்தலில் பணத்தைக் கொட்டியும் ஜெயிக்க முடியவில்லை.////

தேர்தல் அறிவிக்கப்பட்டபின் ஒரு யூ டர்ன் போட்டு இதை ஆரம்பித்தார்கள்! மேலும் ஊடகத்தால் எல்லாம் திமுக தோற்கவில்லை. மக்கள் மாற்றி மாற்றி ஓட்டு போட்டே பழகி விட்டார்கள். 1996 முதல் 2001வரை நல்லாட்சி செய்த திமுக அரசையே காரணமில்லாமல் தோற்கடித்தவர்கள் தானே நம் மக்கள்!!

Unknown said...

100% correct. They can change their profession

Anonymous said...

பத்திரிகைகாரனுங்க அத்தனை பேரும் *சி பசங்க

முல்லை மயூரன் said...

What foolish comparison from u , karuna wad cm that time I think u r dmk visilu2009ல் தானே அதெல்லாம் நடந்தது? அப்போது என்ன '*******'க் கொண்டிருந்தார்களா? இல்லை 2009ல் வெளியிடவேண்டிய இதழ்களை 2013ல் வெளியிடுகிறார்களா?

முல்லை மயூரன் said...

Ananda vikatan did blamed tmk in2009 , u may selective amnesia like karina

daya said...

Being sri Lankan though have criticism over sri lankan media i am proud of it irrespective language or community there is trend they write against the regime there fore approximately 30 odd journalist payed their lives Tharaki,Lasatha many more

Related Posts Plugin for WordPress, Blogger...