Tuesday, September 4, 2012

குடிவெறியர் குங்ஃபூ வெறியர் ஆன கதை! முகமூடி சோடாமூடி!

"முகமூடி ஜீவாவை எங்கயோ கொண்டு போகும்."
"முகமூடி இதோட முடியாது. ஐந்து ஆறு பாகங்கள் எடுப்பேன்"
"ஹாலிவுட் இயக்குனர்கள் தமிழ் படங்களின் டிவிடி பார்த்து படம் எடுக்கும் காலம் வரும்"

                                        
இதெல்லாம் முகமூடி இயக்குனரின் பொன்மொழிகள். சரி இப்ப மேட்டருக்கு வருவோம். முகமூடி தொடங்கி கொஞ்ச நேரத்துல என் பின்சீட்டுல இருந்த ஒரு ஆண்ட்டி, "என்னங்க இது? ஜீவா கக்கூஸ் கழுவுற பூதம் மாதிரி இருக்கான்"னு அவங்க கணவர்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. யோசிச்சு பார்த்தபின் தான் அந்தம்மா, "மிஸ்டர். Muscle" கிருமி நாசினி விளம்பரத்த சொல்றாங்கனு தெரிஞ்சுச்சு. Mr.Muscle கூட ஊடுருவி சென்று கிருமிகளை தாக்குச்சு. ஆனா முகமூடி, ஹீரோயினுக்கு காட்டக்கூடாதத காட்டிக்கிட்டே ரோட்ல சுச்சா போனதோட சரி. வேற எந்த ஊடுருவலும் இல்ல.

கதை ரொம்ப வித்தியாசமானது. ஊர் சுத்திட்டே குங்ஃபூ போடுற ஹீரோ ஒரு பொண்ண டாவடிக்கிறாரு. அந்த பொண்ணு அதோட ஸ்கூட்டில செங்கல், செருப்பு, ஆசிட்னு சகல ஆயுதங்களையும் வச்சுக்கிட்டே சுத்துற ஒரு சமூக போராளி! ரோட்ல சண்டை போடுற ஹீரோ மூஞ்சில ஒருநாள் ஆசிட் ஊத்திருது! அதுல இம்ப்ரெஸ் ஆகுற நம்ம ஹீரோ, அந்த பொண்ண பாக்குறதுக்காக பேண்ட் மேல ஜட்டி இருக்க மாதிரி ஒரு ட்ரெஸ் போட்டுட்டு டெய்லி அது வீட்டுக்கு நைட்ல போறாரு. அவரு பேரு முகமூடினும் சொல்லிக்கிறாரு. அப்படி ஒருநாள் போறப்ப முகமூடிக்கு 'சூச்சு' வந்துருது. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் ஹீரோ 'சூச்சு' போற மாதிரி சீன் வச்ச இடத்துலதான் மிஷ்கினின் திறமை தெரியிது. அதுமட்டுமில்லாம சூப்பர் ஹீரோவோட 'இதை' ஹீரோயின் பார்த்துருது. நல்லவேளை ரோட்ல ஒன்பாத்ரூம் போனதால சூப்பர் ஹீரோவோட 'அதுல' ஆசிட் ஊத்திருமோனு நான் பயந்துட்டேன். ஆனா பாருங்க, ஹீரோவோட முகத்த பாத்து எரிச்சல் பட்ட ஹீரோயினுக்கு, 'அதை' பார்த்தவுடன லவ் ஸ்டார்ட் ஆயிருது! மிஷ்கின் இஸ் டபுள் கிரேட்!

நரேன் ஒரு குங்ஃபூ மாஸ்டர். குங்ஃபூ சொல்லிக் கொடுத்துட்டே தனியா இருக்க கிழவன் கிழவியை எல்லாம் கொன்னு கொள்ளை அடிக்கிறாங்க. கிழடுகளை கொல்ல எதுக்கு குங்ஃபூனு நீங்க யோசிக்கலாம். ஆனா சூப்பர் ஹீரோ முகமூடிக்கு குங்க்ஃபூ தெரிஞ்சதால வில்லன்களையும் குங்ஃபூ வீரர்களா காமிச்சிருக்காரு மிஷ்கின். நம்ம கிராம நாயகன் செல்வாதான் ஜீவாவோட குங்ஃபூ மாஸ்டர். மிஷ்கினின் குங்ஃபூவை எளிய முறையில், மூன்றே மணி நேரத்துல நம்மளும் கத்துக்கலாம். உள்ளங்கையை சப்பட்டையா வச்சுக்கிட்டு காத்துல மெதுவா தடவனும். அப்புறம் செவுத்துல பூரிக்கட்டைய சொருகி வச்சு நடூல மாத்தி மாத்தி மெடுவா வெட்டுனா அதான் குங்ஃபூ! (நல்லவேளை ப்ரூஸ்லி உயிரோட இல்லை) ஜீவாவுக்கு கடைசியா ஒரு அதிமுக்கியமான  'குங்ஃபூ ஃபார்ம்'மை எங்கயோ உச்சில வச்சு, ஒற்றைக்காலில் நின்னபடியே செல்வா சொல்லிக்கொடுப்பாரு பாருங்க, அதான் படத்துல ட்விஸ்ட்! 'ஈமு ஃபார்மை' விட கொடூரமாக இருக்கும் அந்த  குங்ஃபூ ஃபார்ம்! அதை வச்சுதான் நரேனை ஜீவா கடைசி சீன்ல தோக்கடிப்பாரு!

ஜீவாவோட தாத்தா கிரிஷ் கர்னாட் ஒரு சைண்டிஸ்ட். பாத்திரத்துக்கு ஈயம் பூசுறவன் மாதிரி  தகரத்த நெருப்புல வச்சுட்டே இருக்க ஒரு சைண்டிஸ்ட். அதை நம்ம நம்பனும்னு அவருக்கு டவுசர் போட்டு சுத்தவுட்ருக்காரு மிஷ்கின். அவரோட நண்பர் ஒரு டெய்லர் தாத்தா. சீன தூதரகத்துல இருந்து இவருகிட்ட ட்ராகன் தைக்க ஆர்டர் எல்லாம் கொடுக்குறாங்க. ஆனா ப்ளாட்ஃபார்ம் டெய்லர்கிட்ட ஆர்டர் கொடுக்குற அளவுக்கு சைனாவை பிச்சக்கார நாடா ஆக்குனதுல மிஷ்கினோட நாட்டுப்பற்று தெரியுது. படத்துல எல்லாருமே லூசு மாதிரி எங்கயோ வெறிச்சு பாக்குறாங்க, கத்துறாங்க. பாத்ரூம் போறப்ப பாதில தண்ணி நின்ன மாதிரி காலை அகட்டி வச்சு நடக்குறாங்க. ஓடுறா சீன், நடக்குற சீனையெல்லாம் கட் பண்ணா படமே பத்து நிமிஷம் தான்!

இப்படியான இந்த வித்யாசமான படத்தில் பேட்மேனாக ஜீவா, கமிஷனர் கோர்டானாக நாசர், ஜோக்கராக நரேன், ஹார்வி டெண்டாக மலையாள கமிஷ்னர், Mr.Foxஆக கிரிஷ் கர்ணாட், ஆல்ஃப்ரட் ஆக காஸ்ட்யூம் தாத்தாவும் நடிச்சிருக்காங்க. எல்லாமே எதேச்சையான Inspiration அல்லது மிஷ்கின் பாஷைல சொல்லனும்னா ட்ரிப்யூட்!

ஸ்பைடர்மேன்ல ஸ்கூல் பஸ்ஸை கடத்தி அந்தரத்துல தொங்கவிடுற சீன் இதுலயும் இருக்கு. இதுவும் ட்ரிப்யூட் தான்! இதுமாதிரி ஏகப்பட்ட ட்ரிப்யூட் இருக்கு. எல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி கடைசில முகமூடிய பாக்குறப்ப, நரேன் "பாட்மியான், ஸ்பைடர்மியான், அயன்மியான்.. இப்ப முகமூடி"னு அழகா சொல்லுவாரு பாருங்க. அப்படியே புல்லரிச்சிரும்!

கடைசியா, "ஒன்னுக்கு போயி ஃபிகரை கரக்ட் பண்றவன்லாம் நம்மளை அடிக்கிறானே"ங்குற விரக்தில நரேன் அவராவே தண்ணிக்குள்ள விழுந்து செத்ருவாரு. குங்ஃபூ மாஸ்டருக்கு நீச்சல் தெரியாதது ரொம்ப பாவமா இருந்துச்சு!

ஆனா ஒன்னு. தமிழ்நாட்ல இன்னும் ஒரு இருபது வருசத்துக்கு எவனும் சூப்பர் ஹீரோ படம் எடுக்க மாட்டான். ப்ரூஸ்லீக்கு இந்த படத்த டெடிகேட் பண்ணி தேவையில்லாம அந்தாளு ஆவியையும் கடுப்பேத்திருக்காரு மிஷ்கின்! குடிவெறியை ஊக்குவிக்கும் விதமான பாடல் இதுலயும் உண்டு.  குடிவெறியர் ஒருவர் குங்ஃபூ வெறியர் ஆனால் என்ன ஆகும் என்பதே முகமூடி படத்தின் கதை!


11 comments:

பட்டிகாட்டான் Jey said...

மிசுக்கினு இன்னும் எத்தனை பேர்ட்டதான் அடிவாங்கவாரோ தெரியலையே அண்ணே....

Karthik Somalinga said...

சூப்பர்! நான் விமர்சனத்தை சொன்னேன்! :)

ரொம்ப ஜாலியா எழுதி இருக்கீங்க! :)

KSB said...

oh my god....

Chris said...

this is the most stupidest review i have seen in the recent times.

movie is not that bad.

Chris said...

dumb ass review. movie is not that bad.

RAJA said...

very very humorous write up, fantastic :)))

வவ்வால் said...

விமர்சனம் நல்ல நகைச்சுவையாக இருந்தது ,

ஆனால் குடிவெறியர் குங்க்பூ வெறியர் ஆனப்படம் என்பதை ஒத்துக்க முடியாது ,ஏன் எனில் டிரங்கன் மங்கி ஸ்டைல் என குங்குமப்பூ இருக்காம், அந்த ஸ்டைலை கற்றுக்கொள்ள ஜீவ குடிச்சு பழகினாரே ஒழிய அவருக்கு மது வாசமே பிடிக்காதாம் ,மிஸ்கின் படத்தில் இதனை சொல்ல மறந்துவிட்டார் :-))


ஹி...ஹி நாங்களும் நிறைய குங்குமப்பூ படம் பார்த்திருக்கோம்ல.

எனக்கு மட்டும் யாராவது ஸ்பான்சர் செய்தால் "முகமூடி - தி டிரங்கன் மாஸ்டர் ரிடர்ன்ஸ்" என ஒரு படம் எடுப்பேன் :-))
(அதில் நெறைய ட்ரிப்பூட் வைப்பேன்)

ஹீரோயின் படம் போடாமல் ஒரு திரை விமர்சனமா ? சீக்கிரம் ஒரு படம் போடவும் :-))

அருண்பிரசாத் வரிக்குதிரை said...

ஆமாம். கொஞ்சம் ஓவராகவே அளந்து கொண்டுதான் இருந்தார், மிஸ்கின். நல்ல விமர்சனம். கட்டாயம் எனது தளத்துக்கும் ஒருமுறை வாருங்கள்.
http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html

மோகன் குமார் said...

சிரிக்க முடியாம சிரிச்சிகிட்டு இருக்கேன் செம !

பிரபல இயக்குனர்கள் தங்கள் படத்தை இப்படி தாறுமாறா விமர்சித்தால் உதவி இயக்குனர்கள் மூலம் பின்னூட்டம் போடுற மாதிரி தெரியுது !

உங்களுக்காகவே க்ரிஸ் என்று ஒரு Profile உருவாக்கி பின்னூட்டம் போட்டிருக்காங்க :))

முரளிகண்ணன் said...

செம கலாய்ப்பு மிஷ்கினை. சூப்பர்

Cable சங்கர் said...

semma.. comedy.. padichu siruchi mudiyala.. :))))))

Related Posts Plugin for WordPress, Blogger...