Monday, May 28, 2012

கடவுள் இருவகைப்படும்!

மனிதன் சமூக-விலங்காக வாழத்தொடங்கிய காலந்தொட்டே கடவுள் என்ற கருத்தியலின் மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் கடவுள் உருவாக்கப்பட்ட அல்லது தோன்றிய அதே நொடியில் தான் கடவுள் மறுப்பு கொள்கையும் தோன்றியிருக்க வேண்டும். அதேபோல் கடவுள் வழிபாடு என்பதற்கான வழிமுறையாக மதங்கள் உருவாக்கப்பட்டது அதற்கும் பல ஆண்டுகளுக்குப் பின்புதான்.

பொதுவாகவே கடவுள் இருப்பு-மறுப்பின் மீதான விவாதங்களில் கடவுளை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாத காரணத்தால் விவாதத்தின் முடிவில், "நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு." என்றோ, "அறிவியலால் பதில்சொல்லமுடியாத சக்திதான் கடவுள்" என்றோ கூறிவிட்டு கடவுள்-ஏற்புடையோர் விடைபெறுவது வழக்கம். இந்த இடத்தில் கடவுள் என்ற கருத்தியலை இரண்டு வகைகளாக நாம் பிரிக்கலாம். கடவுள் என்ற இனம்புரியாத மேலேயிருக்கும் எதோ ஒரு சக்தி, அல்லது இயேசு, அல்லா, கிருஷ்ணர் போன்ற வரலாறு (மதக் கதைகள்) உடைய என நம்பப்படும் மதரீதியான கடவுள்கள். இதைச் செய்யும் போது தானாகவே கடவுள் நம்பிக்கையுள்ளோரும் இரண்டு வகைகளாக பிரிவர்!

அதனால் இயல்பாகவே உலகின் மிகப்பெரிய, பழமையான கேள்வியாக கருதப்படும் "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" என்ற கேள்வியைவிடவும் முக்கியமான கேள்வி, "இருவகைக் கடவுள்களில் உண்மையான கடவுள் யார்?" என்பது. அதற்கான விடை ஒருவேளை மதரீதியான கடவுள் தான் உண்மையான கடவுள் என்பதாக இருந்துவிட்டால் அதிலிருந்து முளைக்கும் மற்றொரு கேள்வி, "எந்த மதத்தின் கடவுள் உண்மையான கடவுள்?" என்பதாக இருக்கும்!! ஆனால் நாம் வழக்கமாக கடவுள் விஷயத்தில் இவ்வளவு விரிவாக செல்வதில்லை! மேலோட்டமாக பேசிச்செல்வதோடு சரி!

மேலேயுள்ள கேள்விகளுக்கான விடைகளை கடவுள் நம்பிக்கையுள்ளோர் அலச ஆரம்பித்தார்களேயானால், சண்டையும் சச்சரவுகளும் கொலைகளும் பெருகுமேயொழிய விடை கிடைக்காது! முதலில் மதம் சார்ந்த கடவுள்களுக்கு வருகிறேன். மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே இணையும் ஒரு புள்ளி "கடவுள் இருக்கிறார்" என்பது. அதேநேரம் எந்தக் கடவுள் உண்மை? எனும் கேள்வி எழும்போது ஒரு மதம் இன்னொரு மதத்தை மறுக்கவே செய்யும். இன்னும் ஒருபடிமேலே போய் இஸ்லாமும், கிறித்தவவும் தவறான கடவுளை (false god) வணங்குபவர்களுக்கு மேலுலகத்தில் தண்டனை உள்ளதாகவும் பறைசாற்றுகின்றது!

ஒரு பேச்சுக்காக கடவுள் இருக்கிறார் எனவும், உலகில் இந்து-இஸ்லாம்-கிறித்தவம் ஆகிய மதங்கள் மட்டுமே இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அதன்படி ஒருவேளை இந்த உலகை அல்லா படைத்திருந்தால் கிருஷ்ணரும், ஏசுவும் கட்டுக்கதைகள். ஏசு (அல்லது அவரது தந்தை) படைத்திருந்தால் அல்லாவும், கிருஷ்ணரும் கட்டுக்கதைகள். கிருஷ்ணர் படைத்திருந்தால் ஏசுவும், அல்லாவும் கட்டுக்கதைகள். ஆகமொத்தம் உலகில் உள்ள முக்கிய மதங்களான மூன்றில் ஏதோ இரண்டு பொய்! ஏதோ இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் முட்டாள்த்தனமாக இல்லாத ஒன்றை இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்!

இயல்பாகவே நீங்கள் உங்கள் மதம் சார்ந்த கடவுளை வணங்கும்போது பிற மதங்கள் எல்லாவற்றையும் மறைமுகமாக எதிர்ப்பதாகவும், மறுப்பதாகவும் தான் பொருள். மதக்கலவரங்களின் போது இந்த மறைமுகமான எதிர்ப்பு வெளிப்படையாக நடக்கிறது. அதனால் இயல்பாகவே ஒவ்வொரு மத-நம்பிக்கையுடையவருமே மதத்துவேஷத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. (Every individual religious person has the potential to perfom a religion oriented crime, either verball or physically). இல்லை நான் மதங்களை மதிப்பவன், எல்லா மதங்களும் எனக்கு சம்மதம் என சொல்வீர்களேயானால் உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்கிறேன், 'மதநல்லிணக்கம்' என்ற ஒரு வார்த்தையை உங்களின் கடவுள் கேட்டால் உங்கள் மேல் கடுங்கோபம் கொள்வாரேயொழிய வேறு கடவுளை வணங்குபவர்களோடு நீங்கள் நல்கிய 'நல்லிணக்கத்திற்காக' பாராட்ட மாட்டார்! மதநல்லிணக்கம் என்பது இல்லாத, போலியான ஒரு வார்த்தையேயொழிய நடைமுறைக்கு சாத்தியமே இல்லாதது. மேலும் எல்லா மதங்களும் சம்மதம் என்ற கருத்தில் உங்களுக்கு ஏற்பிருந்தாலும் உங்கள் கடவுளுக்கு கண்டிப்பாக இருக்காது. அதனால் நிச்சயமாக மதநல்லிணக்கம் என்பது உங்கள் கடவுளுக்கு பிடிக்காத, ஏற்பில்லாத பாதை என என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்!

ஒரு உதாரணத்திற்கு நீங்கள் ஒரு தீவிர மதப்பற்றுள்ள கிறித்தவர் என வைத்துக்கொள்வோம். திடீரென ஒருநாள் மரணமடையும் நீங்கள், உங்கள் கடவுளான 'இயேசுவை'ப் பார்க்கும் ஆவலோடு வானுலகம் செல்கிறீர்கள்! அங்கு சென்று பார்த்தால் மிகப்பெரிய அதிர்ச்சி! இந்துக்கடவுளான எமதர்மன் அமர்ந்திருக்கிறான்! அவன் சொர்க்கம்-நரகம் என பிரித்தனுப்ப, இறந்தவர்களை நேர்முகத்தேர்வு செய்துகொண்டிருக்கும் போது நீங்கள், "என் பெயர் ஜான் மோசஸ். நான் ஒரு கிறித்தவன்" எனச் சொல்கிறீர்கள். எமன் என்ன செய்வான்? உங்கள் மேல் கடுங்கோபம் கொண்டு நரகத்திற்கு தானே அனுப்புவான்! (இந்த மாதிரி தர்மசங்கடமான கற்பனையை தவிர்க்க வேண்டுமானால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி மேலோகம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் படுஅபத்தமாக இருக்கிறது!) அதேநேரம் நீங்கள் நாத்திகராய் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் இறந்து வானுலகம் செல்கிறீர்கள். அங்கே பார்த்தால் ஏசு இருக்கிறார்! உங்களை நேர்முகத்தேர்வு செய்கிறார். அப்போது, "ஏசப்பா உன்னை இன்றுதான் கண்டுகொண்டேன். நான் எந்த மதமும் கிடையாது என்னை உன் பாதங்களின் ஏற்றுக்கொள்" என கதறியழுது காலில் விழுந்தீர்களேயானால் ஏசு உங்களை சொர்க்கத்தில் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது! இதை ஏன் சொல்கிறேன் என்றால், இருவேறு கடவுள்களுக்குள் எது உண்மையான கடவுள் என முடிவுசெய்யும் பொருட்டு மதக்கலவரங்கள் நடந்திருக்கிறதேயொழிய, ''கடவுள் இல்லை'' என சொன்னவர்களுக்கும் "கடவுள் உண்டு" என சொன்னவர்ளுக்கும் கலவரம் நடந்ததாய் வரலாறு இல்லை! ஆக ஒருவேளை கடவுள் என்பவர் உண்மையில் இருந்தாலுமே கூட "கடவுள் இல்லை" எனச் சொல்வதே சாவுக்குப் பிறகும் நன்மை செய்வதாய் இருக்கிறது! மேலும் அதுதான் கடவுளுக்குப் பிடித்தமாகவும் இருக்கிறது! இப்படியொரு வித்தியாசமான, முரணான ஒரு முடிவிற்குதான் நம்மை இந்த மதங்களும் அவைகளின் கோட்பாடுகளும் இட்டுச் செல்கிறது!

அடுத்து, "கடவுள் என்பவர் நமக்கு மேல் இருக்கும் புரியாத சக்தி" என்று சமாளிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட வாக்கியத்தை அடிக்கடி உபயோகிப்பவர்களின் சித்தாந்தத்தைப் பற்றி..........

-தொடரும்! 

18 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

முனைவர் பரமசிவம் said...

நண்பரே,

புதிய கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்.

தொடருங்கள்; தொடர்வேன்.

//”கடவுள் இல்லை” என்று சொன்னவர்களுக்கும், “கடவுள் உண்டு” என்று சொன்னவர்களுக்கும் கலவரம் நடந்ததாக வரலாறு இல்லை//

உண்மைதான். காரணம்..........

அவர்கள் மிக மிக மிகச் சிறுபான்மையினர்.

தாக்கப்பட்டார்கள்; தாக்கியதில்லை.

அழிக்கப் பட்டார்கள்; அழித்ததில்லை.

பெரும்பான்மையினராக இருந்திருந்தாலும் அறிவு முதிர்ச்சி காரணமாக அத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்களோ?

மிக்க நன்றி.

தேவன் said...

புறக்கடவுள்களை பற்றி நன்றாக வேடிக்கையாக எழுதியுள்ளீர்கள்.

Venkat said...

Good thinking! I completey agree that even if there is a god, you don't have to worship him/her. Just do your duties, that should be enough, i assume.

கோவி.கண்ணன் said...

நல்லப் பதிவு, நல்ல சிந்தனைகள்

கோவி.கண்ணன் said...

நித்தியானந்தாவை நிந்தித்தாலே பாவி ஆகிவிடோமோ என்று பம்முவர்கள் உண்டு

:)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பிரச்சனையை கிளப்பும் ஒரு விஷயத்தை அழகாக , நகைசுவையாக எழுதி உள்ளிர்கள் .. தொடரட்டும்

PRINCENRSAMA said...

நட்சத்திரத்தை இப்போது தான் பார்த்தேன் டான்! அருமை! வாழ்த்துகள்! நல்ல தொடக்கம், தொடர்க!

துளசி கோபால் said...

அருமையான கோணம்!

மதவாரியா தனித்தனி நரகமும் தனித்தனி சொர்கமும் இருக்கு அங்கே!

சொர்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவில் ஒரே ஒரு கேட்!

சசிகலா said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு நிறைய விசயங்களை தெளிவு படுத்துகிறது .தொடருங்கள் .

தருமி said...

//ஒருவேளை கடவுள் என்பவர் உண்மையில் இருந்தாலுமே கூட "கடவுள் இல்லை" எனச் சொல்வதே சாவுக்குப் பிறகும் நன்மை செய்வதாய் இருக்கிறது! //

நல்லா இருக்கே ...

nadi narayanan said...

இந்த பதிவை கடவுள் படித்தால் சந்தோஷ படுவார் நண்பா #அவர் இருக்காரான்னு எனக்கு தெரியாது

Bharathiraja R said...

அருமை. சரியாகக் கோடு போட்டு அதன் மேல் ரோடு போட்டு அழைத்துச் செல்கிறீர்கள்.

இன்னும் கேட்கப் பட வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. இது போலவே நானும் ஒன்று எழுதியிருக்கிறேன். மாறுபாடுகளும் இருக்கும். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

http://bharatheechudar.blogspot.sg/2011/06/blog-post_09.html

ஜீவா (Jeeva Venkataraman) said...

//
இயல்பாகவே நீங்கள் உங்கள் மதம் சார்ந்த கடவுளை வணங்கும்போது பிற மதங்கள் எல்லாவற்றையும் மறைமுகமாக எதிர்ப்பதாகவும், மறுப்பதாகவும் தான் பொருள். //
அப்படியாகத் தான் இருக்கவேண்டுமென்பதில்லையே!
இந்து மதம் எப்போதுமே பிற மதங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவே இருந்து வருகிறது. அவரவர் கடவுளை தமக்குகந்த பெயரால் அழைத்தாலும் பிற மதங்களால் அழைக்கப்படும் பெயராலும் அழைக்கப்படலாம் என்பதை அறியாமல் இருக்கலாம். எந்த பெயரால் அழைக்கலாம் என்பதை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லையே!

ஜீவா (Jeeva Venkataraman) said...

//
இயல்பாகவே நீங்கள் உங்கள் மதம் சார்ந்த கடவுளை வணங்கும்போது பிற மதங்கள் எல்லாவற்றையும் மறைமுகமாக எதிர்ப்பதாகவும், மறுப்பதாகவும் தான் பொருள். //
அப்படியாகத் தான் இருக்கவேண்டுமென்பதில்லையே!
இந்து மதம் எப்போதுமே பிற மதங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவே இருந்து வருகிறது. அவரவர் கடவுளை தமக்குகந்த பெயரால் அழைத்தாலும் பிற மதங்களால் அழைக்கப்படும் பெயராலும் அழைக்கப்படலாம் என்பதை அறியாமல் இருக்கலாம். எந்த பெயரால் அழைக்கலாம் என்பதை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லையே!

Mohideen Kather said...

கடவுள் இல்லை என்பதைத்தான் அறிவியல் ரீதியாக நிருபிக்க இயலவில்லை என்பதே என் கருத்து.இவ்வளவு பெரிய அண்டசராசரம்,அதில் சூரியன்,பூமி,சந்திரன்,இன்ன பிற கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் பிற பால்வெளிகள் இங்கெல்லாம் பிரமாண்டமான கோள்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட வரையில் காந்த விதிகளுக்கு உட்பட்டு நீந்தி வருவதை காணும் பகுத்தறிவுள்ள யாரும் ஒரு படைப்பாளன் இருப்பதை மறுக்க மாட்டார்கள்.ஓவ்வொரு படைப்புகளையும் உற்று நோக்கும் போது அதில் உள்ள நுணுக்கங்களை வெறும் இயற்கை என்று ஒதுக்கித்தள்ளுவது எப்படி பகுத்து அறிவதாகும்.ஒரு அற்ப உதாரணம் நம் உறுப்புகளின் சீரான இயக்கம்.நாம் நினைக்கும் போது நம்முடைய சிறுநீர் வருவதற்கான வால்வு திறக்கிறது நாம் நினைத்தால் பாதியில் கூட நிற்கிறது.இவைகளை காணும் போது நாம் ஒரு மென்பொருள் இடப்பட்ட கணணி என்பது புலனாகும்.இன்னும் எத்தனையோ அற்புதங்களை நமது ஜீன் கள் கடத்தி வருகிறது இவை எப்படி இயற்கை யாகும்.மாறாக ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை நிருபிக்கும் சான்றுகளாகும்.
மேலும் கடவுள் இல்லை என்பவர்கள் அதிகரித்தால்,கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கும் இல்லை என்பவர்களுக்கும் கலவரம் வரத்தான் செய்யும்.மதம் இல்லை என்றால் கட்சிகள் மூலம் பிரிவினை, சண்டைகள் வரலாம்.
மேலும் நண்பர் அசோக் இயேசு, அல்லாஹ்(கடவுள்),கிருஷ்ணர்,என வரிசைபடுத்தி உள்ளார்.இது அவர் இஸ்லாம் மார்க்கதை பற்றி நன்கு படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இயேசு,புத்தர்,கிருஷ்ணர்,இவர்கள் எல்லாம் மனிதர்கள்,ஆனால் அல்லாஹ் என்கிற பதம் அவர் இரண்டாம் பத்தியில் குறிப்பிட்டுள்ள இனம் பிரியாத சக்தி அல்லது ஒரு படைப்பாளனை குறிக்கும் சொல்.
இந்த உலகை,உலகில் உள்ளவற்றை அண்ட சராசரங்களை படைத்தது பரிபாலித்து தன்னை வெளிக்காட்டாது பூமியில் நமக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து வாழ செய்துள்ள "அந்த ஒருவனை" மட்டும் வணங்கி வந்தால் நாளை மரணத்திற்குபின் அவரின் அன்பை ஏற்கனவே பெற்றவன் என்கிற பெருமிதம், அப்படி ஓன்று இல்லை என்றால் எந்த நஷ்டமும் இல்லை.ஒரு விஷயத்தை சரியாக சொன்னிர்கள் எம்மதமும் சம்மதம் என்பது ஒரு போலி கொள்கை.அவரவர் மார்க்கம் அவரவருக்கு,ஆனால் நம் எல்லாருக்கும் இடையில் மனிதம் நிலைக்கவேண்டும்.அதுவே நம்மை படைத்தவனுக்கு (சிலருக்கு மனசாட்சிக்கு)செய்யும் சிறப்பாகும்.

தருமி said...

//அப்படி ஓன்று இல்லை என்றால் எந்த நஷ்டமும் இல்லை.//

அப்டியா காதர்?

Mohideen Kather said...

ஐயா தருமி,
மேற்குறிப்பிட்டுள்ள வார்த்தை அப்படி ஒருவன் இல்லை என்று வாதிடுபவர்களுக்காக இடப்பட்டது. அப்படியா? என்ற ஒற்றை கேள்வியில் சுற்றலில் விடும் எண்ணம் ஒன்றும் இல்லையே?....

Related Posts Plugin for WordPress, Blogger...