Wednesday, November 2, 2011

ஜெ அரசு இன்னும் மெருகேற அறிவுரைகள்.முதல்ல ஒரு நாட்டுக்கு நூலகம் என்பது தேவையில்லாத விஷயம். மரத்தையெல்லாம் வெட்டி, அதுல தாள் செஞ்சு அத்தனை புத்தகத்தை அச்சடித்து அதை போய் உக்காந்து மணிக்கணக்கா படிச்சு, அதைப் பற்றி பேசி அறிவை வளர்த்து என்ன செய்யப்போறோம்? அந்த அறிவையெல்லாம் எடுத்துட்டா போகப் போறோம்? இல்லையே! கடைசில பன்னி மாதிரி, நாய் மாதிரி நம்மளும் செத்துருவோம். அதுனால புத்தகமே இல்லாம இருந்துட்டா வெட்டியா அதுல நேரம் செலவழிக்க வேண்டியதில்ல! நிறைய தியேட்டர் இருக்கு! திருவிழாக்கல்ல மிட்நைட்ல ரெக்கார்டு டான்ஸ் போடுவாங்க. அதையெல்லாம் பார்த்து ரசிச்சு சந்தோசமா இருக்குறதை விட்டுட்டு ஏன் சார் புத்தகம் படிச்சு நேரத்தை வீணாக்கனும்?

எனக்கு தெரிஞ்சு இந்த பள்ளிகளே வீணான விஷயம் தான். தேவையில்லாம எல்லா புள்ளைங்களையும் சேர்த்து ஒரே இடத்துல உக்காரவச்சு பாடம் சொல்லி என்ன கருமத்துக்கு? அப்படியே எல்லாம் ஸ்கூலையும் மூடிட்டு விபச்சார விடுதி ஆக்கிரலாம். ஏன்னா டாஸ்மாக்க்கு அடுத்து அதை செஞ்சா அரசுக்கு நல்ல லாபம் வரும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லிருக்காங்களாம். மக்களுக்கு நல்லது செய்யவா அரசு இருக்கு? எதுல லாபமோ அதை செஞ்சாதான வருமானம் பெருகும். குடிகாரன் திருந்தனும்னு நினைச்சா கூட முடியாதுல்ல. ஏன்னா முக்குக்கு முக்க அவனுக்கு temptation! வீதியோரங்களில் விபச்சாரப் பெண்கள் நின்னு அழைப்பது மாதிரி டாஸ்மாக் நிக்குதுல்ல. ஒருத்தன் தாண்டி போயிர முடியுமா? புதுசா எங்கெல்லாம் ஆரம்பிக்கலாம்னு ஆராயிறதுக்கு அதிகாரிகள் வேற அப்பப்ப அலையிறாங்க! மருந்து கிடைக்கிறதுதான் நம்ம ஊர்ல கஷ்டம். சாராயத்துக்கு அலையவே வேண்டாம்! அதுனால என்ன சொல்றேன்ன்னா மக்களோட குடிபோதைக்கு நல்ல தீனி போட்டாச்சு! அதுக்கு அப்புறம் எதுல வருமானம் வரும்? பெண்போதைல தான! அதுனால அடுத்து அதைப் பண்ணிரலாம். டாஸ்மாக் மாதிரி அதுக்கு எதாச்சும் நல்ல பேரா வச்சுட்டா தமிழகம் ஒரு முன்னுதாரணமா இருக்கும். அப்படியே ஆணுறைகளையும் வித்தா சைடுல ஒரு வருமானம் தானே. இப்படிலாம் பண்ணாதான நாடு முன்னேறும். மக்கல் சந்தோசமா இருப்பாங்க.

முதல் கட்டமா அண்ணா நூலகத்தை மூடியிருக்கும் அரசுக்கு வாழ்த்துக்கள். அது "தென் ஆசியாவின் "  மிகப்பெரிய நூலகமாம். அதிநவீன வசதிகளோடு கட்டப்பட்ட அரசு நூலகம் . முற்றிலும் குளிரூட்டப்பட்ட நூலகம் . லைட் எல்லாம் தேவையில்லயாம் அதுக்கு, இயற்கையாகவே சூரிய வெளிச்சம் உள்ளே வர்ற மாதிரி கட்டப்பட்டதாம். அந்த நூலகத்தில் தற்போது ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன . இந்த நூலகத்தில் ஒரே நேரத்தில் 1 .2 மில்லியன் புத்தகங்களை அடுக்கி வைக்க வசதி உண்டு. இப்படி ஒரு கேவலமான நூலகம் நமக்கு தேவையா? அதும் தமிழ் புத்தகங்களை இருக்க விடலாமா? அதை மருத்துவமனையா மாத்துறதுக்கு பதிலா ஸ்டூடியோவா மாத்திருக்கலாம். நல்ல வருமானம் வரும். அப்படியே சட்டமன்றத்துல குளிர்கால கூட்டத்தொடர் நடக்குறப்ப அதுல இருக்க நூல்களையெல்லாம் எரிச்சு குளிர்காயலாம். கிரகம் அதெல்லாம் அதுக்காச்சும் பயன்படட்டும்!

முந்தைய அரசு அரிசினு எதைச் சொன்னுச்சோ அது எல்லாம் இனி மலம் என வழங்கப்படும். இந்த அர்சு இன்றிலிருந்து மலத்தை அரிசி என வழங்கும். மக்கள் அதைத்தான் உண்ண வேண்டும். அப்படினு ஒரு உத்தரவு போட்டா இந்த அரசின் பெயர் வரலாற்றில் நிலைக்கும். சீக்கிரம் அப்படி ஒரு அறிவிப்பு வரலாம். அதை ஆதரிக்க நம்ம நாட்ல ஆள் இல்லையா என்ன? தினமலர் முதல் பக்கத்துல வாழ்த்து செய்தி போடுவான்!

இப்படிப்பட்ட நல்லவர்கள் வாழும் நற்தமிழகத்தில் இப்படியே வரிசையா எல்லாத்தையும் மூடிட்டே போனா, மாத்திட்டே போனா ஜாலியா இருக்கும். அஞ்சு வருசம் போறதே தெரியாது! சர்ர்ர்ருனு போயிரும். பாலம், ரோடு எல்லாம் போடுறதுக்கா அரசு? கல்வி கொடுக்குறதுக்கா அரசு?  மருத்துவமனை தான் நம்ம அன்றாடத் தேவை! போயஸ் கார்டனைத் தவிர எல்லாத்தையும் மருத்துவமனையாக்குற வரைக்கும் தக்காளி ஓய்வே இல்ல! நன்றி! வாழ்க அரசு! வளர்க ஜனநாயகம்! நாசமாய் போக மக்கள்! எங்க தெரு பாட்டி சொன்னதுதான் நியாபகம் வருது... "********** *********கு புத்தகம்னு தெரியுமா காகிதம்னு தெரியுமா?"

6 comments:

Robin said...

Super :)

ரா.செழியன். said...

ஒட்டு இதுக்குத்தான் போட்டார்களா?இதை அங்க மாத்தறது,அதை இங்க மாத்தறதுனு பந்தாட்டம் ஆடுறதுக்கு?இந்த மழை நாளிலும் ஊரக பகுதிகளில் மூன்று மணி நேரம் பவர்கட்.எத்தனையோ பிரச்சனைகளிருக்க கலிஞரை நோஸ்கட் பண்றதுக்கு மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அருமையான கட்டிடம்தான் கிடைத்ததா?இதுக்குதான் மக்கள் ஒட்டு போட்டார்களா?பதிவில் நீங்க சொன்ன ஐடியாக்கள் உண்மையிலேயே நடந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.வாழ்க தமிழக தமிழன்.

காஞ்சி முரளி said...

ஆடுவோமே...! பள்ளு பாடுவோமே...!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று...!
பாரதி கண்ட கனவு நனவாகிகொண்டிருக்கிறது நண்பரே...!

ஏன்...! இந்த கோபம்...!

வெர... ஒண்ணு போட்டா....
சுர ஒண்ணா முளைக்கும்...!

ஏப்ரல்ல வெர போட்டார்கள் என் இனிய தமிழ் மக்கள்...!

இப்ப... வெர மொளைக்கமா... சுரயா..? முளைக்கும்...!

திணை விதைத்தவன்... திணை அறுப்பான்...!
வினை விதித்தவன்...! வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும்...!
இது யதார்த்தம்...! உண்மை...!

ஏப்ரல் மாதம் விதைத்தவர்கள்...
அதன் பலனை
நவம்பரில் அறுவடையில் விளைந்ததை அனுபவிக்கிறார்கள்...!

இதென்ன...!
இன்னமும் இருக்கு...!

வாழ்க...! தமிழ்த்திருநாடு...!
வாழ்க...! அதன் மக்கள்....!

நடக்கட்டும்...! நடக்கட்டும்....!

நாடாண்ட முத்தரையர் said...

என்ன பண்ண இதுதான் நடக்கும் என்றால் என்ன பண்ண முடியும்? சகிப்புதன்மை தமிழனுக்கு அதிகம்.

Anonymous said...

மிக சரியான வார்த்தைகள்! பேய் அரசாட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்!

Agarathan said...

சிங்களவனுக்கும் இந்த அரசுக்கும் என்ன வித்தியாசம் அவன் யாழ்பாண நுலகத்தை அழித்தான் இவர்கள் இங்கே என்ன செய்ய தமிழர்களின் தலைவிதி

Related Posts Plugin for WordPress, Blogger...