Sunday, October 30, 2011

ஏழாம் அறிவும், போதிதர்மரும், ஐந்தறிவு தமிழர்களும்!

நேரடியா விஷயத்துக்கு வர்றேன். ஜென் புத்தகங்களையும், கதைகளையும் படித்தபோது போதிதர்மரைப் பற்றி தெரியும் என்றாலும் அவர் தமிழர் என்ற விவரமெல்லாம் எனக்குத் தெரியாது. சில மாதங்களுக்கு முன்னால் தோழர் பிரதீப்புடன் Chatயில் பேசிக்கொண்டிருந்தபோது "போதிதர்மர் காஞ்சிபரத்துக்காரர். தமிழர்." எனக் கூறினார். எனக்கோ பயங்கர ஆச்சரியம். அதுவரை 'ஜென்' மீது நான் கொண்டிருந்த மதிப்பு அத்தகைய சிந்தனை முறையை (சிந்தனையற்ற முறை என்றும் சொல்லலாம்) வாழ்வில் கொண்டிருந்த சீனர்கள் மேல் மிகுந்த மரியாதை இருந்தது. போதிதர்மர் என்ற டாமோ, தமிழர் என்ற விஷயம் தெரிந்தவுடன் என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை! புல்லரித்தது! அதன் பின் தான் போதிதர்மரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். ஏழாம் அறிவு படமும் போதிதர்மரின் வாழ்க்கையைப் பற்றிய வரலாற்று புனைவு தான். முதல் நாளே அந்தப் படத்தைப் பார்த்ததற்கான காரணமும் அதுதான்.

Inception படத்தின் காப்பி என்ற வதந்தியை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு முற்றிலும் வேறு களத்தில் பயணித்திருக்கிறார் முருகதாஸ். 600ஆம் நூற்றாண்டில் போதிதர்மர் சீனர்களுக்கு கற்று கொடுத்த கலையைக் கொண்டே இந்தியாவுக்கெதிரான மறைமுக யுத்தத்தை நடத்த நினைக்கிறது சீனா. அதை ஒரு இளம் விஞ்ஞானியுடன் சேர்ந்து முறியடிக்கிறார் போதிதர்மரின் வழித்தோன்றலான சர்க்கஸ் சாகசக்காரர்.

சீனாவுக்கு பயணிக்கும் போதிதர்மரில் இருந்து ஆரம்பிக்கிறது படம். படம் பார்க்கும் முன் போதிதர்மர் புத்தருக்கு சமமானவர் ஆயிற்றே, அந்த அமைதியை எப்படி சூர்யா நடிப்பில் கொண்டு வரப்போகிறார் என்ற அச்சம் இருந்தது. கண்களில் ஒளியும், முகத்தில் அமைதியும் தவழ அழகாக நடித்திருக்கிறார் சூர்யா.

படத்தில் சூர்யாவின் சில காட்சிகளைப் பார்க்கும் போது 'இந்தாளு என்ன வேணா பண்ணுவானா?' எனத் தோன்றியது. "சிங்கத்த டிவில பாத்ருப்ப, சர்க்கஸ்ல பாத்ருப்ப"னு பஞ்ச் டயலாக் பேசுவதில் இருந்து குங்க்ஃபூ வரைக்கும் எப்படி செஞ்சுத்தொலைக்கிறார் என்று தெரியவில்லை! நம் தொழிலில் நாம் சூர்யா போன்ற உழைப்பைப் போட்டால் எப்படி இருக்கும் என கற்பனை செய்தேன் பிரமிப்பாக இருந்தது.

இசை வழக்கமான ஹாரிஸ் ஜெயராஜிசம்! நிறைய காப்பி! நிறைய ரிப்பீட்! பல்லவ அரசைக் காட்டும் இடங்களில் அருமையாக இருந்தது. சீனப்பாடலை அப்பட்டமாக "பாபா ப்ளாக்சீப்" என்ற ஆங்கில சிறார் பாடலின் ராகத்தில் அப்படியே அமைத்திருந்தது கேலிக்கூத்தாக இருந்தது!


"வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. ஒருத்தனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்றது பேரு வீரம் இல்ல"
"எத்தனை நாள் தான் அடிவாங்குறது? திருப்பி அடிக்கனும்!"
"யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சு நம்ம ஆவணப் பொக்கிஷங்களை எல்லாம் அழிச்சுட்டாங்க" இதெல்லாம் சூர்யா பேசும் வசனங்கள். தியேட்டரில் ஆராவாரமாய் இருந்தது.

ஒரு Mainstream சினிமாவில் தைரியமாக ஒரு படக்குழு ஈழம் சம்பந்தப்பட்ட வசனங்களை வைக்கிறதென்றால், இலங்கைக்கு ஆயுதம் வழங்கிய இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை 'துரோகம்' என விமர்சிக்க வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? முருகதாஸுக்கும், உதயநிதிக்கும், சூர்யாவுக்கும் அந்த தைரியம் எக்கச்சக்கம்!

படத்தில் சில சறுக்கல்களும் உண்டு. சீன வில்லனை வழக்கமான தமிழ் டாட்டா சுமோ வில்லன்கள் போல கழுத்தை ஆட்டி ஆட்டி நடிக்கவைத்தது, தமிழர்களின் பண்டையகால சாதனைகளை அடுக்கும்போது வட இந்தியரான ஆரியபட்டாவை உள்ளே நுழைத்தது, பார்வை வசியத்தை வில்லன் மிக அதிகமாக உபயோகப்படுத்தியது, சர்க்கஸ் சூர்யா உடலில் போதிதர்மரின் திறமை குடிபுகுவதற்கு பதிலாக ஆவி புகுந்ததைப் போல அவரை நடிக்க வைத்தது போன்ற குறைகளும் உண்டு. நடுவில் காதல் காட்சிகள் வேகத்தை வெகுவாக குறைக்கின்றன.

உலகமே போற்றும் போதிதர்மரின் பெயரைக் கூட தெரியாமல் வாழும் தமிழரின் இன்றைய இழிநிலையை, இன வரலாற்றை மறந்து, இனத்தின் பெருமையை மறந்து, பிற இனங்களைப் பின்பற்றி, பிறமொழிகளைப் பேசுவதைப் பெருமையாக எண்ணி, பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பெயரளவில் மட்டுமே தமிழராய் வாழும் தமிழர்களிடம், தங்கள் இனத்தில் ஒரு புத்தன் உண்டு, அவனுக்கு நாடெங்கும் சிலை வைத்து அவனை கடவுளாக வணங்கும் ஒரு வல்லரசு நாடு உண்டு என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது இரு தமிழ் அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர், "என்ன மாப்ள? போதிதர்மரு போதிதர்மருனு மூணு மணி நேரம் கொண்டேபுட்டாய்ங்க. வேலாயுதமாவது போயிருக்கலாம்டா" என்று! மக்களே.. மதம் மாறுவது போல சுலபமாய் இனம் மாற முடிந்தால் புதியதை தெரிய மறுக்கும், பழையதை புரிய மறுக்கும் இந்த கேடுகெட்ட, சுயமரியாதையற்ற ஐந்தறிவு ஜீவன்கள் நிறைய இருக்கும் தமிழினத்தில் இருந்து உலகின் எதோ மூலையில் மானத்துடன் வாழும் எதோ ஒரு குட்டி இனத்திற்கு மாறிவிடலாம்! எஞ்சியுள்ள காலத்தை கொஞ்சமேனும் சுயமரியாதையோடு கழிக்கலாம்!

9 comments:

MRSelvam said...

true...true... Very nice---also the last paragraph

நம்பிக்கைபாண்டியன் said...

ஏழாம் அறிவை அதிகம் குறைசொல்வர்களை தமிழ் உணர்வுடன் நடுநிலையாக இருந்து கண்டித்திருக்கிறீர்கள், சமீபத்தில் இயக்குநர் தங்கர் பச்சானும் இதையேதான் சொல்லியிருந்தார். உணர்வுள்ள பதிவு.

Agarathan said...

தோழரே ... இப்படி ஒரு நச் என்ற விமர்ச்சனத்தைதான் எதிர் பார்த்தேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

Akash said...

உங்கள் கருத்துகள் அத்தனையும் உண்மை

Guna said...

THIS MOVIE IS FOR TRUE TAMILAN.

NOT FOR VISILADICHAAN KUNJUGAL... KEVALAMKETTA SIL TAMIL PESUM JANTHUKKAL

arogara said...

"பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பெயரளவில் மட்டுமே தமிழராய் வாழும் தமிழர்களிடம்,...."
- என்னமோ இந்த படத்த கலை சேவை செய்யறதுக்காக எடுத்த மாதிரி சொல்லுற.. காசு சேமியா செய்யதா இந்த ஏழரைய கூட்டிருக்காங்க; பொதி தர்மர பத்தி சொன்னத யாரும் தப்பா சொல்ல வரலை , போதி தர்மர இங்க வியாபாரம் பண்ணி இருக்காங்க.. தமிழ் தமிழ் ன்னு சொல்லி ஜல்லி அடிக்கிறாங்க..

"திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது இரு தமிழ் அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர்,"
- வேணும்முன்னா தமிழர்களுக்கு படத்த சும்மா காட்டு.. அப்பா நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்!! காசு குடுத்து பார்த்து உனக்கு ஒன்னும் சொல்லக் கூடதா !!!
"படத்தில் சூர்யாவின் சில காட்சிகளைப் பார்க்கும் போது 'இந்தாளு என்ன வேணா பண்ணுவானா?' எனத் தோன்றியது. "சிங்கத்த டிவில பாத்ருப்ப, சர்க்கஸ்ல பாத்ருப்ப"னு பஞ்ச் டயலாக் பேசுவதில் இருந்து குங்க்ஃபூ வரைக்கும் எப்படி செஞ்சுத்தொலைக்கிறார் என்று தெரியவில்லை!" -
போங்க பாஸ் காமெடி பண்ணாதீங்க !! .. முதல்ல கோபமா பார்க்கிறதுக்கும், முறைப்பா பார்க்கிறதுக்கும் உள்ள வித்தியாசத்த சூர்யாவ கத்துக்க சொல்லுங்க பாஸ் !! டைரக்டர் கோப பட சொல்லுற எல்லா சீன்லேயும் அண்ணன் முறைசுக்கிட்டே இருக்காரு !! (எல்லா படத்துலையுமே)..

சூர்யா - பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு !! SAFE GAME SURYA !! இவன் படம் வெற்றிக்கு மட்டும் உரிமை கொண்டாடுவான்.. தோத்தா அது பரமசிவன் (டைரக்டர்) கணக்கு!!! இந்த ஏழரை இப்ப முருகதாஸ் கணக்கு!! இப்படித்தா ரத்த சரித்திரம் னு பில்டப் குடுத்தானுங்க.. படம் தோத்ததும் பேச்சே இல்ல !!

arogara said...

அஞ்சு அறிவு தமிழன் போட்ட கமெண்ட்.. அதான் மரியாத கம்மி.. ஒருமைல இருக்கும் !!

சமுத்ரா said...

gud review

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல விமர்சனம்

Related Posts Plugin for WordPress, Blogger...