Thursday, September 1, 2011

மங்காத்தா -'தல'யின் தாறுமாறு!

தலயோட ரசிகர் தலய வச்சு படம் எடுத்தா எப்படி இருக்கும்? அதான் மங்காத்தா!

படம் ஒரு Heist வகையை சேர்ந்தது. Heistனா ஒரு குழுவா போயி எதாச்சும் இடத்துல இருக்க பணத்தை எப்படி திட்டம் போட்டு கொள்ளையடிக்கிறாங்கங்குறதை படமா காட்றது. மங்காத்தா அந்த வகை தான். தமிழ் படம் 2.30மணி நேரம் இழுக்கனும்ல அதுக்காக நிறைய தேவையில்லாத விஷயங்களை சேர்த்திருக்காரு வெங்கெட் பிரபு! அவரு எதெல்லாம் கமர்ஷியல் ஐட்டம்னு நினைச்சு சேர்த்திருக்காரோ அதெல்லாம் படத்தோட வேகத்துக்கு மிகப்பெரிய தடைகளா இருக்கு. நீங்க படம் பாக்குறப்ப உங்களுக்கே தெரியும்.

வெங்கட் பிரபு இன்னும் 'சென்னை28,சரோஜா, கோவா' ஹேங்ஓவர்ல இருந்து வெளிய வரல. இந்த படம் அப்பப்ப வர்ற கோமாளித்தனத்துனால தீவிரம் குறைஞ்சு அங்க இங்க காமடி பீஸ் ஆயிருது. ப்ரேம்ஜி மொக்கை அதுக்குதான் உதவுது! அதுவும் மஹத்னு ஒரு கேரக்டர்ல நடிச்ச பையன் மிகத்தவறான தேர்வு. அந்தப் பையன் வர்ற எல்லா சீன்லயும் அனுபவமின்மை நல்லா தெரியுது! யாரோ ரொம்ப ரெக்கமண்ட் பண்ணி நடிக்க சான்ஸ் வாங்கிகொடுத்த மாதிரி மொக்கையா நடிக்கிறாரு! பாக்க பொடியன் மாதிரி இருக்குறது செம காமடியா இருக்கு!

படம் Oceans11னின் காபி எல்லாம் இல்ல. ஆனா அந்த ட்ராஃபிக் சிக்னல்லை hack பண்ணி கன்ட்ரோல் பண்றது போன்ற காட்சி எல்லாம் உறுவல். ப்ரேம் பெரிய கம்ப்யூட்டர் மேதையா இருக்கலாம். ஆனா ஒரு திண்டுக்கல் பூட்டை கம்ப்யூட்டர்ல கனெக்ட் பண்றதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு! என்னதான் சொல்லுங்க நம்மளை நம்ப வைக்கிற மாதிரி பொய் சொல்றதுல அமெரிக்காக்காரன் அமெரிக்காக்காரன் தான்! லாஜிக் இல்லாம எதாச்சும் செஞ்சா கூட  நம்புற மாதிரி பண்ணுவாய்ங்க!

அர்ஜூன் நல்ல தேர்வு. அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒரு ஹீரோ தான் சரியா இருக்கும்னு முடிவு பண்ணது சூப்பர்! நம்ம தெலுகு தல நாகார்ஜூனா இருந்திருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்! தல,  "என்ன சொல்றான் ஆக்ஷன் கிங்"னு கேக்குற சீன் தாறுமாறு!

த்ரிஷா, அஞ்சலி, லட்சுமிராய்! ஊறுகாய்னு ஒரு வார்த்தை இருக்குல்ல.. அதுக்கு சரியான அர்த்தம் மங்காத்தால இவங்க மூணு பேரோட கதாப்பாத்திரம் தான்! தேவையே இல்லாத துணைநடிகைகள்!

மங்காத்தாவில் யுவன் ஒரு ஹீரோ! பின்னணி இசை மிரட்டல்! அதுவும் அந்த தீம் இசை கொடூரம்!
                                   
தல! உடம்புல மொத்த உயிரும் 'தல'ல மட்டும் இருந்தா என்ன நடக்கும்? அதான் மங்காத்தா! மங்காத்தாவின் மொத்த உயிரும் தல அஜீத் மேல! பட்டயக் கிளப்பிருக்காரு! வெங்கெட் பிரபு அஜீத்துக்குன்னே செய்த கதை இது! அஜீத்தை தவிர யாரையும் மங்காத்தாவில் கற்பனை கூட பண்ண முடியாது. அஜீத்தை புகுந்து விளையாட விட்ருக்காரு  வெங்கெட்பிரபு! நல்லவேளை அசல் படம் மாதிரி தலைய சும்மா நடக்கவுட்ருவாய்ங்களோனு நினைச்சேன்! ஆனா தல முழு வேகத்துல நடிச்சிருக்கு!அதுக்காகவே அவருக்கு  பாராட்டுக்கள். நாற்பது வயது கதாப்பாத்திரம் கச்சிதமா பொருந்துது தலைக்கு! திடீர்னு பாத்தா அமர்க்களம் அஜீத் மாதிரி கடைசி காட்சியில் வந்து நிக்குறாரு! இடைவேளை காட்சியில் அவர் சிரிப்பதில் உலகின் மொத்த வில்லன்களின் வில்லத்தனமும் தெரிகிறது!   மொத்தத்துல தல தாறுமாறு!

அஜீத் கெட்டவனா நடிக்க சம்மதிச்சிருக்காரு! ஆக்சன் கிங் போலீசா நடிக்கிறாரு! ஜெயப்ரகாஷ் வேற கூட! துணைக்கு யுவன்! கதைக்களம் 500கோடியை கொள்ளை அடிப்பதைப் பற்றி. படம் என்ன ஸ்பீட்ல பிச்சிருக்கனும்!?? ஆனா சில இடங்களில் பயங்கர மெதுவா நகருது! காரணம் வெங்கட் பிரபுவின் பழைய டீம்! அந்த டீம் காமடிக்குதான் லாயக்கு! அவர்களை கொண்டு வந்து Heistயில் கலக்கப் பார்த்தால் தண்ணீல எண்ணய் மாதிரி ஒட்டாம இருக்காங்க! ப்ரேம் மற்றும் மஹத் இதில் அடங்குவார்கள். அப்புறம் எதோ ரெட்டினு ஒருத்தர் இருப்பாரே உயரமா! அவரும் இந்த ரகம் தான்! அரவிந்த் பரவாயில்லை! ஏன்னா அவர் படம் முழுவதும் நடிக்கவே இல்லை சும்மா அடிக்க மட்டும் தான் பயன்பட்டிருக்காரு!

மொத்தத்தில் படம் நல்லா இருக்கு! அஜீத்தை கொஞ்சம் பிடித்தால் கூட படம் ரொம்ப பிடிக்கும். அஜீத்தை ரொம்ப பிடித்தவர்களுக்கு கேட்கவே வேணாம்! முதல் பாதியில் கொஞ்சம் காட்சிகளை வெட்டி, பின்பாதியில் சில நீளமான சண்டைக் காட்சிகளை குறைத்தால் படம் இன்னும் நல்லா இருக்கும்! மங்காத்தால மத்த எல்லாத்தையும் விட்ருங்க! மங்காத்தா- தலயின் உச்சக்கட்ட ருத்ரதாண்டவம்! அந்த ஒரே காரணத்துக்காக படம் செமையா ஓடும்! தல தாறுமாறு!

6 comments:

electraspider said...

// அந்தப் பையன் வர்ற எல்லா சீன்லயும் அனுபவமின்மை இல்லாதது நல்லா தெரியுது! //


//அனுபவமின்மை இல்லாதது //

edit this..the review is average than anyother of ur reviews :)) but film is fantabulous

டான் அசோக் said...

மாத்திட்டேன் தோழர்! நன்றி! :-)

Philosophy Prabhakaran said...

Nice... சில வரிகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றன...

மைந்தன் சிவா said...

திருப்தியான விமர்சனம்!!

kobiraj said...

நல்லா இருக்கு .ஓட்டு போட்டாச்சு

Mr.Rain said...

மிக சரியான விமர்ச்சனம்..

Related Posts Plugin for WordPress, Blogger...