Saturday, August 27, 2011

பிச்சையெடுத்தேனும் காப்பாற்றுவோம்........

எனக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஆனால் இதை எப்படியேனும் தெரிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் ஓரத்தில் நின்று, ஆற்றொன்னா கண்ணீருடனும் இதை எழுதுகிறேன். நாம் சாதாரணமாக விளையாடும் போது கீழே விழுந்து அடிபட்டால் கூட நம் தாய்களின் உள்ளம் எப்படி பதறுகிறது? நான் ஒவ்வொரு முறையும் பைக்கில் வெளியே செல்லும் போதும் "சைட் ஸ்டேண்ட் எடுத்துவுடு" என மறக்காமல் என் அம்மா வாசலில் இருந்து சொல்லுவார். ஒருநாள் திடீரென நான் செய்யாத குற்றத்திற்காக எனக்கு தூக்கு தண்டனை என அறிவித்தால் என் தாய் எப்படி களங்குவார் என யோசிக்கிறேன்.. வார்த்தைகள் வரவில்லை...

மரணத்தை விட கொடியது என்ன தெரியுமா? மரணத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருப்பது... என்ன நடக்குமோ, என்ன நடக்குமோ என அனுதினம் வெந்து சாவது...  இதுதான் 21 வருடங்களாக அண்ணன் பேரறிவாளனுக்கும், முருகனுக்கும், சாந்தனுக்கு அவர்தம் உறவினர்களுக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

முக்கியமாக  அண்ணன் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.. நெஞ்சில் அளப்பரியா சோகத்தை சுமந்து கொண்டு அந்த தாய் அங்கு இங்கு என இல்லாமல் அனைத்து இடங்களிலும் தன் மகனுக்கு நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார். நம் நாட்டின் சட்டமோ நிரபராதிகளை விடுவிப்பதில்லை, திறமையான வக்கீல்களை வைத்திருப்பவர்களையே விடுவிக்கிறது. அப்படிப்பட்ட ஊரில் எங்கிருந்து கிடைக்கும் ஏழைக்கு நியாயம்? ஒருமுறை இந்த காணொளியைப் பாருங்கள். அந்த அன்னையின் நியாயத்தைக் கேளுங்கள்...

இரக்கமற்ற சாடிஸ்டுகளைப் போல், கொலைகார மனநோயாளிகள் டெட் பண்டி, டாமரைப் போல் கொடூர சாடிசத்தோடு குற்றம் சுமத்தப்பட்டவர்களை நடத்தியுள்ளது இந்த அரசு! சற்று நினைத்துப்பாருங்கள். பருவம் ஆரம்பிக்கும் 19வயதில் கைது செய்யப்பட்டு, விவரிக்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, இளமையை தொலைத்து, காதல் வாழ்க்கையைத் தொலைத்து, ஆசைகளே இல்லாமல் 21 வருடங்களாக மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி இருக்கும் அந்த அண்ணனைப் பற்றி ஒருநிமிடம் யோசியுங்கள்.
ஒரே மகனை, சமூகநீதியைக் காக்க கொள்கையை ஊட்டி வளர்த்த மகனை, ஒழுக்கத்தையன்றி வேறெதையும் போதிக்காமல் வளர்க்கப்பட்ட மகனை குற்றமே செய்யாத தன் மகனை ஒரு கொலைகாரியின் பழிவெறிக்கு பழிகொடுக்கப்போவதை எண்ணி பதறும் அந்த அன்னையின் நெஞ்சம் என்ன பாடுபடும்?  அண்ணன் பேரறிவாளனின் அன்னையும், தந்தை குயில்தாசனும் தங்கள் மகன் தூக்கிலிடப்பட்டால் சிறை வாசலில் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என அறிவித்திருக்கிறார்கள். எவ்வளவு கொடுமை இது? அண்டை நாட்டில் குடும்பம் குடும்பமாக கொத்துக்கொத்தாக மடிந்த போது சும்மா தான் இருந்தோம். லட்சம் தமிழரைக் கொன்றவன் தமிழகம் வந்தபோது சும்மாதான் இருந்தோம். தமிழரே கதியென, தமிழகமே நாதியென நம்மையே, நம்மைமட்டுமே எதிர்நோக்கி இருக்கும் ஒரு குடும்பமே பழியாகப்போகும் போதும் சும்மாதான் இருக்கப் போகிறோமா?  இந்த தமிழ்பூமி இன்னும் எவ்வளவு பாவத்தை தான் சுமக்கும்? நாம் அதை அனுமதித்தால் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்கள் ஆக மாட்டோமா? ஒரு தமிழ் குடும்பம் சக-தமிழர்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இதயத்தை துடிக்க வைத்து இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.  அளக்க இயலா பாசத்துடன், தன் மகன் கடைசி நொடியிலாவது காப்பாற்றப்பட மாட்டானா என்ற ஏக்கத்துடன் அந்த அன்னையின் மனம் துடித்துக்கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம்?

ஏராளமான தோழர்கள் களத்தில் அந்த மூவருக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அன்னைக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நாம் அனைவரும் பங்குபெறுவோம். இணையத்தின் ஒவ்வொரு சந்திலும் நம் போராட்டம் பரவட்டும். அது இது என இல்லை... நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்வோம். மூவரைக் கொலை செய்ய செப்டம்பர் 9 என தேதி குறித்துள்ளது அரசின் கொலை இயந்திரம். அதற்குள் நம் போராட்டம் உச்சத்தை எட்ட வேண்டும்.

தோழர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த நிலையிலும் தமிழக அரசின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். நம் ஒரே நம்பிக்கை தமிழக அரசும் அதை தற்போது தலைமையேற்று நடத்தி வரும் ஜெயலலிதாவும் தான். அரசுக்கெதிரான போராட்டங்களை அவர் அரசு என்றுமே நல்ல நோக்கோடு பார்த்ததில்லை. இந்நிலையில் அவருக்கு எந்த நிலையில் கோபம் ஏற்படாதவாறு நம் கோரிக்கையை அவரிடம் எடுத்து வைப்பது நம் கடமை. கெஞ்சிக்கேட்டேனும்... இரைஞ்சிக்கேட்டேனும்.. பிச்சையெடுத்தேனும்......... நம் அண்ணன்களைக் காப்பாற்றுவோம்...

ஒருவேளைத் தவறினால்...... நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும், தமிழகத்தில் என்ன நடக்கவேண்டும் என்பதையும் அந்த அன்னை அற்புதம் அம்மாளின் முகம் நமக்கு  கற்றுத்தரும்...

5 comments:

anthony said...

அந்த அநீதியை நடக்க விட கூடாது.

R.Elan. said...

இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை கொடுப்பது தமிழன் ஒவ்வொருவனுக்கும் தண்டனை கொடுப்பது போல என்பதை உணர்வோம்.இந்திய தேசியம் என்று பேசுவது இனி வீண் வேலை.

ttpian said...

i am not an INDIAN
I am a tamil man!
Let us all join together to teach racist India

சூனிய விகடன் said...

ஒரு வழக்கில் நாட்டின் உச்சமான நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்து வாதங்களையும் கேட்டபிறகு அந்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறதென்றால் அந்தத் தண்டனையை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். கருணை மனுவுக்கு வாய்ப்புள்ளது ....போட்டார்கள்....உடனே மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுக்கும் கூப்பாடுதான் வரும்..... தமிழர்களைத் தூக்கில் போட்டால் தமிழர்கள் போராட்டம் நடத்துவார்கள்.....அப்சல் குருவைத் தூக்கிலிட்டால் காஷ்மீரிகள் போராடுவார்கள்...... கல்லூரி மாணவனைத் தூக்கிலிட்டால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலவரம் வெடிக்கும்... மளிகைக்கடைக்காரனைத் தூக்கில் போட்டால் , மளிகைக்கடைக்கார்கள் எல்லாம் பெரும் போராட்டம் நடத்துவார்கள் என்றால் அப்புறம் நாட்டில் சட்டத்தின் நடைமுறைதான் என்ன..?

கொலை வழக்கு நடந்து முடிந்து குற்றவாளிக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு ஆயுள் தண்டனை கிடைப்பதற்குள் பத்து வருடமாகி விடுகிறது .. ஆயுள் தண்டனை என்பது பதினாலு வருஷம் என்று எந்த அறிவிலி சொன்னானோ தெரியவில்லை...எல்லா மூடர்க ளும் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்...அப்புறம் அண்ணாதுரை, காந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள் ...அவர்கள் கோமணம் அவிழ்த்த நாள் என்று ரெமிஷன் கொடுத்து எல்லாம் செய்து அவன் அவன் பரோல் லீவில் கூட ஊரைச்சுத்துகிறான்...

சமூகத்தின் அமைதியைப் பொருட்டுதான் சிறைகள் ஏற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தனிமைப்படுத்தபடுகிரார்கள் ...திருந்தி வாழும் வாய்ப்புக்காகத்தான் வெளியில் விடுகிறார்கள் ...அதுகூட செய்ய முடியாத நபர்கள் என்பவர்களுக்குத்தான் தூக்கு தண்டனை கிடைக்கிறது . எதையுமே செய்யக்கூடாது என்றால் என்ன மயித்துக்குப்பா இந்த கோர்ட்டு புண்ணாக்கு எல்லாம்.....எல்லாத்தையும் மூடிட்டு .....எவனுக்கு என்ன சவுரியமோ..செஞ்சுக்குங்கடானு விட்டுட வேண்டியது தான்

Related Posts Plugin for WordPress, Blogger...