Sunday, August 21, 2011

வெரி வெரி ஹேப்பி பர்த்டே டூ கிருஷ்ணா தி சைன்டிஸ்ட்!


ஒரு 20 வருஷம் இருக்கும். நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிச்சிட்டிருந்தேன். அப்ப ஒருநாள் எங்கூட படிச்ச ஒரு பொண்ணை நான் "போடி"னு சொன்னதுக்கு எங்கப்பா பிச்சுட்டாரு என்னை! ஆனா கிருஷ்ணனோட அப்பா அப்படி இல்ல. அவரு சூப்பர் மேன்! வெரி ஜோவியல் ஃபெல்லோ! அவரோட புள்ளை, பொம்பளைங்க குளிக்கிறப்ப அவங்க ட்ரெஸ்ஸை எடுத்து ஒளிச்சு வைச்சு விளையாண்டப்ப கூட கோவமே படாம "இவனுக்குள்ள எதோ இருந்திருக்கு பாரேன்!"னு சொல்லி ரசிச்ச ஜென்டில்மேன். ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்! இந்த மாதிரி ஒரு நல்ல அப்பா அம்மா கிடைச்சதுனால தான் கிருஷ்ணனால அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிஞ்சுச்சு. இன்னும் சொல்லப்போனா அவரை உலக-விஞ்ஞானிகளின் தந்தைனு கூட சொல்லலால். அவரோட கண்டுபிடிப்பு 'ஈவ் டீசிங்'! உலகத்துல முதல் முதல்லா ஈவ் டீசிங் என்கிற நல்ல விளையாட்டை அறிமுகப்படுத்திய விஞ்ஞானி அவருதான்.

நம்ம ஊருல சுடிதார் மேல இருக்க ஷாலை(shawl) புடிச்சு இழுத்தாலே நம்மூரு புள்ளைங்க கொண்டே போட்ருங்க. ஆனா கோபியர்கள் ரொம்ப நல்லவங்க. ஒன்னும் போடாம குளிக்கிறப்ப கிருஷ்ணன் அவங்க ட்ரெஸ் எடுத்து ஒளிச்சப்ப கூட ரொம்ப நிதானமா கெஞ்சி கேப்பாங்களாம். ஆனா இப்ப ஏன் உலகம் இப்படி ஈவ் டீசிங்க்கு தண்டனை அது இதுனு கொரூரமா மாறிருச்சுனு தெரில. இதைத்தான் கிருஷ்ணன் கலிகாலம் வரும்னு கீதைல சொல்லிருக்காரு போல.

"கிருஷ்ணர் கடவுள்டா. அவரு என்ன வேணா பண்ணலாம். என்ன பண்ணாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்?"னு சொல்றீங்களா... அடப்பாவிகளா.. சேலைய தூக்கிட்டு ஓடுறதுல என்னடா அர்த்தம் இருக்கப்போகுது?

நாங்க சின்ன வயசுல பக்கத்து ஏரியாக்கு சைட் அடிக்கப்போவோம். அப்ப அந்த ஏரியா பசங்க "என்னடா ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிக்கிறீங்களா?"னு கேட்டுட்டே அடிக்க வருவாய்ங்க. அப்ப நாங்க சைலண்டா வந்துருவோம். ஏன்னா ஏரியா வாரியா பிரிச்சிருக்கப்ப அதை மதிக்காம அவிய்ங்க ஏரியாக்கு போனது எங்க தப்புதான்.. அதுனால பேசாம வந்துருவோம். அவிய்ங்க எங்க ஏரியாக்கு வந்தாலும் அதே ட்ரீட்மென்ட் தான். அதாவது ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிச்சாலே அது தப்பு. அதான் நம்ம கலாச்சாரம், பண்பாடு! இப்படி இருக்கப்ப.. கிருஷ்ணன் வந்து கடவுள். வேற ஸ்பீஸீஸ்(Species), வேற ப்ரீட்(Breed). அதாவது species விட்டு species வந்து சைட் மட்டும் அடிக்கல, ஈவ்  டீசிங் வேற பண்ணிட்டு போயிருக்காரு. நம்மல்லாம் பொங்கனுமா வேணாமா?

சரி விடுங்க.. இப்ப ரொம்ப லேட்! வெரி வெரி ஹேப்பி பர்த்டே டூ கிருஷ்ணா தி சைன்டிஸ்ட்!   

3 comments:

Jayadev Das said...

மெய்ப்பொருள் காண்பதறிவு!- இதை தங்களின் கொள்கையாக வைத்திருந்தும், அதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி அறிவதற்கு நீங்கள் பயன்படுத்தாது துரதிர்ஷ்டம். நீங்கள் ஒரு நாத்தீகராகவோ அல்லது கிருஷ்ணரை வணங்காத பிற மத நம்பிக்கையுடையவராக இருக்கலாம், அதற்காக மக்கள் வணங்கும் தெய்வத்தை இப்படி தரம் தாழ்த்தி எழுதியிருப்பது வேதனையளிக்கிறது. இந்தியா சமய சார்பற்ற நாடு, அதன் பொருள் மக்கள் விருமும் சமயத்தை, நம்பிக்கையை அவர்கள் பின்பற்றலாம் என்பதே. உங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரைப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் நக்கலும் நையாண்டியும் செய்திருப்பது அவரை வழிபடும் என் போன்றவர்களின் உள்ளங்களுக்கு வேதனையைத் தரும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் பெண்களின் சேலையை எடுத்துக் கொண்டு போய் மரத்திலமர்ந்ததை பற்றி படித்த நீங்கள் அவரது கீதையைப் படித்து புரிந்து கொள்ள முயன்றதுண்டா? அவரைப் பற்றி ஸ்ரீமத் பாகவத புராணாம் பன்னிரண்டு காண்டங்களில் புகழ்ந்துள்ளதே, அதைப் படித்ததுண்டா? அவற்றை படித்து புரிந்து கொள்ளுங்கள், அதற்க்கு மேல் உங்களால் இப்படி அவரை நக்கல் நையாண்டி செய்ய முடியுமா என்று பாருங்கள்.

m said...

jayadev das youre right

Anonymous said...

தங்கள் மீது ஒப்பற்ற ஓறிறையின் சாந்தியும் சமதானமும் உண்டவதாக தமிழ் வலைப்பூ வரிசையில் மீண்டும் ஒரு மகுடம் வலைப்பூ பறந்த நோக்குடன் மலர வாழ்த்துகிறேன்.
ஒ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம்

Related Posts Plugin for WordPress, Blogger...