Sunday, August 21, 2011

அன்னா ஹஜாரே என்ற 80வயது பயங்கரவாதி!

ஏற்கனவே அன்னா ஹஜாரே நடத்திய சீசன்1 உண்ணாவிரதத்தைப் பற்றி அன்னா ஹஜாரே என்ற ஊறுகாய்!ங்குற கட்டுரையில் எழுதியுள்ளேன். இப்போ சீசன்2 உண்ணாவிரதத்தைப் பற்றி புதிய கருத்துக்கள் ஒன்றுமில்லாத பட்சத்தில் சில புதிய கேள்விகளும் பயங்களும் ஆட்கொள்ளுகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை ஒரு கிழவர் ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு பட்டினி ஆயுதத்தால் மிரட்டுகிறார். ஊழல் மலிந்து கிடப்பதற்கு காரணம், இருக்கும் சட்டங்களை ஒழுங்காக பயன்படுத்தாததால் தான் என்பதை மறந்து, அல்லது தெரிந்தும் மறைத்து இந்த 'லோக்பல் பில்'லை நிறைவேற்றிவிட்டால் எல்லாமே தீர்ந்துவிடும் என்பதைப் போல் மக்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார். லோக்பல் பில் ஊழலுக்கென்றே இருக்கும் பிரத்யேக சுப்ரீம் கோர்ட் என சுருக்கமாக சொல்லலாம். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் எல்லா ஊழலும் லோக்பல் பில்லிலும் நடக்க வாய்ப்பு உண்டு என்ற உண்மையை மக்களிடம் மறைக்கிறார். லோக்பல் பில் உறுப்பினர்கள் அல்லது லோக்பல்பில் பெஞ்ச் மகாபலம் பொருந்தியதாக இருக்கும் பட்சத்தில் அதில் உள்ளவர்கள் நாட்டிலேயே அதிகமாக ஊழல் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்.

இந்த மகாபலம் பொருந்திய லோக்பல் பில் பெஞ்சை வைத்து தங்களுக்கு படியாத அரசியல்வாதிகளை மிரட்டி பணிய வைக்கவும், தங்களுக்கு தேவையான சட்டங்களை உருவாக்கவும், அழிக்கவும், மாற்றவும் முடியும். பணியாதவர்களை தண்டிக்கவும் முடியும். RSS பின்ணணி கொண்ட ஹஜாரேவும் அவரது அடிப்பொடிகளும் நாளை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை மிரட்டி சிறுபான்மையினருக்கெதிரான சட்டங்களை இயற்றவைக்க  மாட்டார்கள் என்பதற்கும், இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட சட்டங்களை நீக்க வைக்க மாட்டார்கள் என்பதற்கும் என்ன நிச்சயம்? இப்போதே ஹஜாரேக்கு ஆதரவு தருபவர்களை கவனித்தால் பனியாக்களும் பிற உயர்சாதியினரும் இணைந்த இந்துத்துவ வாடை பயங்கரமாக வீசுவது நன்றாக தெரியும். நாட்டில் ஊழல் பெருகியதற்கு இடஒதுக்கீட்டில் வந்த அரசு அதிகாரிகளே காரணம் என அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக சிந்தனை கொண்ட பல சமூகசேவகர்கள் அன்னாவிடம் இருந்து ஒதுங்கி இருப்பதற்கும் அதுதான் காரணம். இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது.

ஒரே இடத்தில் அதிகாரம் அனைத்தும் குவிவது சர்வாதிகாரம் ஆகாதா? அதிகாரத்தை பரவலாக்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காக பணியாற்றுவது தானே ஜனநாயகம்? அந்த பிரதிநிதிகளை ஆட்டிவைக்கும் அதிகாரத்தை ஒரு 'குழு'விடம் கொடுப்பது உச்சக்கட்ட சர்வாதிகாரம் ஆகாதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச அதிகாரம் உள்ள பிரதமரையே லோக்பல் வரம்புக்குள் கொண்டு வருவது எவ்வளவு ஆபத்தான செயல்? அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கும் போதே ஒரு நாட்டில் இவ்வளவு ஊழல் நடக்கிறதென்றால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டால் எவ்வளவு ஊழல் நடக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். லோக்பல் பில் பெஞ்சில் உள்ளவர்கள் நல்லவர்களாக மட்டும் தான் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? வானத்தில் இருந்து வரும் தேவதூதர்களா அவர்கள்? அவர்களும் இந்தியர்கள் தானே?  அன்னாவின் மீதே ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் இருக்கும் பட்சத்தில், நாளை வருபவர்கள் எம்மாத்திரம்?

நாலு நாள் சாப்பிடாமல் இருந்தால் இந்த அரசு என்ன சொன்னாலும் கேட்குமா? எந்த தகுதி, என்ன அருகதை அன்னாவுக்கு இருக்கிறதென்று அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது(நடத்துகிறது)? உண்ணாவிரதம் இருந்தால் எவனுக்கும் எதையும் கொடுத்துவிட வேண்டுமா? காந்தகார் விமானத்தை கடத்தி தீவிரவாதிகளை விடுவிக்கசொல்லி அரசை மிரட்டிய பயங்கரவாதிகளுக்கும், தன் உயிரைக் காட்டி மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்பி லோக்பல் பில்லின் pros and consகளை விளக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என அரசை மிரட்டும் இந்த அன்னாவுக்கும் என்ன வித்தியாசம்? நாளை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனச் சொல்வதைப் போல அங்கங்கு அவன் அவன் உண்ணாவிரதம் இருந்து அரசை மிரட்ட ஆரம்பித்தால் என்ன செய்வது?

கொஞ்சம் கூட சிந்திக்காமல் அன்னா அன்னா என கூச்சல் போடுவதும், அவர் புகைப்படத்தை ஏந்தித் திரிவதும், அரசை மிரட்டும், ஜனநாயகத்தையே அசைத்துப்பார்க்கத் துடிக்கும் ஒரு போராட்டத்தை இரண்டாம் சுதந்திரப்போர் எனச் சொல்லுவதும் சுதந்திரத்துக்காக போராடியவர்களை எல்லாம் ஒரே மூச்சில் இகழ்வது போலாகும்.

ஆமாம்... அவர் 80 வயதில் பட்டினி தான் கிடக்கிறார். அதற்காக, அந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஜனநாயகத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு பிரதிநிதிகளையும் ஒரு கிழவர் கேலிக்குள்ளாக்கிக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 80வயது என்பது போராட்டத்திற்கு நாம் ஆதரவு கொடுக்க ஒரு தகுதி அல்ல! நாட்டைத் தூக்கிக் கொடுப்பதற்கு பதிலாக பரிதாபப்படுவதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது!

27 comments:

Sasithar said...

Theriyadha maraindha vishayangalai therindhu kolla mudigiradhu ... aanal tharpodhaya vuulal prechchanaigalin alavey makkalai eerkiradhu enbadhayum oppu kolla vendum ... Indha blogpost migavum arumai arumai ... anna hazarevai pugalndha ennaye neengal sindhikka vaithu veetirgal ... neengal padu thiramaisali pa :PPP ... :P pesama katchi vonnu aaramuingalaen :P

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

This is not a karunaneethi hunger strike d.m.k supported all people do not support Anna so u proved

ரா. அசோக் said...

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) // ஒங்களுக்கு கருணாநிதின்னு எங்கயாச்சும் எழுதலைனா தூக்கம் வராதா ?
கலைஞர் லோக் பால் பில்லில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.
சரி திமுக காரன் ஹசறேவுக்கு சப்போர்ட் பன்ன மாட்டானா ? அப்ப வேற எந்த கட்சிக்காரன் சப்போர்ட் பண்ணுவான் ?
லோக் பால் பில்லில் பிரதமரை சேர்க்க கூடாதுன்னு ஜெய லலிதா சொல்லிருக்கா.

Anbu said...

காங்கிரஸ் அரசு மீது தமிழர்கள் அனைவருக்கும் கோபம் உள்ளது, அதற்க்காக காங்கிரஸ் அரசை எதிர்ப்பவர்கள் அனைவரும் உத்தமர்கள் என்று அர்த்தம் கிடையாது.. நமக்கு வேண்டியது ஒரு நிலையான அரசு.. நம்மிடம் தமிழகத்தில் உள்ள 40 எம்.பி களை வைத்து மிரட்டினாலே போதும் மத்திய அரசை வழிக்கு கொண்டுவருவதற்க்கு.. அதற்க்கு தேவை நம்மிடம் ஒற்றுமை..அண்ண ஹசாரே போன்றவர்கள் கூட்டத்தை கூட்டி சாகப்போகிறேன் என்று மிரட்டினால் சாகட்டும் என்று விட்டுவிட வேன்டும்..

Anbu said...

காங்கிரஸ் அரசு மீது தமிழர்கள் அனைவருக்கும் கோபம் உள்ளது, அதற்க்காக காங்கிரஸ் அரசை எதிர்ப்பவர்கள் அனைவரும் உத்தமர்கள் என்று அர்த்தம் கிடையாது.. நமக்கு வேண்டியது ஒரு நிலையான அரசு.. நம்மிடம் தமிழகத்தில் உள்ள 40 எம்.பி களை வைத்து மிரட்டினாலே போதும் மத்திய அரசை வழிக்கு கொண்டுவருவதற்க்கு.. அதற்க்கு தேவை நம்மிடம் ஒற்றுமை..அண்ண ஹசாரே போன்றவர்கள் கூட்டத்தை கூட்டி சாகப்போகிறேன் என்று மிரட்டினால் சாகட்டும் என்று விட்டுவிட வேன்டும்..

Katz said...

அதிக ஹிட்ஸ் வேண்டி இப்படி தலைப்பு இட்டு அன்னாவை கேவலப் படுத்த வேண்டாம்.

If your view is original that comes from your heart, then you are a real pessimist.

sOMU said...

இவர்களுக்கு உண்மையில் பொறாமை என்று நினைகிறேன் ,அவர் என்னவாக வேண்டும் என்றாலும் இருக்கட்டும் ஆனால் இன்று மக்கள் எல்லாரும் ஒன்று கூடி ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்த ஒரு காரணமாக இருந்தார் அல்லவா அதுவே போதும் ,அதை விட்டு விட்டு வேண்டாத கதையா தாங்கள் தான் உலகத்தில் மிக பெரிய புத்திசாலிகள் போல் பேசுவது,சொல்லுவது

rajamani said...

Hi genius,then why can't you give solution

டான் அசோக் said...

இங்கே ஒரு அறிவாளி தனது கருத்துக்களுடன் ஆபாசங்களையும் பதிந்து தொலைக்கிறார். வெறும் கருத்துக்களை மட்டும் பதிந்தால் வெளியிடப்படும்.

Sunantha said...

எப்பா டான்,
போய் புள்ள குட்டிங்கலயாவது படிக்க வைப்பா..

Elayaraja Sambasivam said...

என்னோட கமெண்ட்.
ஏற்கனவே அன்னா ஹஜாரே நடத்திய சீசன்1 உண்ணாவிரதத்தைப் பற்றி அன்னா ஹசாரே என்ற ஊறுகாய்!ங்குற கட்டுரையில் எழுதியுள்ளேன். இப்போ சீசன்2 உண்ணாவிரதத்தைப் பற்றி புதிய கருத்துக்கள் ஒன்றுமில்லாத பட்சத்தில் சில புதிய கேள்விகளும் பயங்களும் ஆட்கொள்ளுகின்றன.
[இந்த தள்ளாத வயசுல, தான் என்ன கஷ்ட்ட பட்டாலும்,தன்னக்கு அப்புறம் வர சந்ததி நல்ல இருக்கனும், அப்படின்னு நெனைகரவங்க உங்களுக்கு ஊறுகாய், அப்படின்னா நீங்க நல்ல இருக்கனும் அப்படி உங்களக்காக கஷ்ட்ட பட்ட உங்க அப்பா அம்மா எல்லாம் என்னனு கூப்புடு வீங்க...]


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை ஒரு கிழவர் ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு பட்டினி ஆயுதத்தால் மிரட்டுகிறார். ஊழல் மலிந்து கிடப்பதற்கு காரணம், இருக்கும் சட்டங்களை ஒழுங்காக பயன்படுத்தாததால் தான்
[இத்தன வருஷம் நாட்ட ஆண்டு உங்களால சட்டத்த சரி வர பயன் படுத்த முடியல , ஏன் பயன் படுத்த மறுக்குரிங்க, அப்படின்னு கேள்வி கேட்கனும்ன நமக்கு கொஞ்சம் அதிகாரம் வேணும் சார், அதுக்கு தான் இந்த லோக்பால் சட்டம் வேணும் அப்படின்னு போரடறாரு]

!நல்ல வேலை நீங்க காந்தி உண்ணா விருத்தம் இருந்த பொது இல்ல, கிழவர் என்னமா சொல்றிங்க!
தயவு செய்து, அந்த மெய் பொருள் காண்பது அறிவு, அப்படின்னு இருக்கறத எடுத்துருங்க, அணைத்து உயிர் களுக்கும் மதிபளிகனும் அப்படின்றது தான் முதல் பாடமே..


ஒரே இடத்தில் அதிகாரம் அனைத்தும் குவிவது சர்வாதிகாரம் ஆகாதா?
[இதனால தான் பிரதமர் என்ன செய்தாலும் நம்பளால கேள்வி கேட்க முடியல அதாவது புரியிதே சந்தோசம்]

ஜனநாயகம்,ஜனநாயகம்,அப்படின்னு நிறய இடத்துல எழுதி இருக்கீங்க, மக்களால தேர்ந்தெடுத்த ஆட்சி நடக்கணும்னு சில நூறு வருஷம் போராடி வாங்கன நம்ப சுதந்திரம் என்ன ஆட்சினவது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா எந்த மக்கள் மன்மோகன் சிங்க, தேர்ந்தெடுத்தாங்க அப்படின்னு.
மக்களை நேரடிய சந்திக்கவே பயப்படற மன்மோகன் சிங், இதுவரைக்கும் யாரும் நேரடிய தேர்ந்தெடுத்தது அவர் பிரதமரா அகவே இல்ல.

[இந்த கட்டுரை முழுதும், கேவலமா எழுதுன அதிகமான கமெண்ட் கிட்டைகும் அப்படின்ற சுயநலம் மட்டும் தான் தெரியுது]

மழைதூறல் said...

உங்கள் பதிவு வரவேற்கதக்கதே.ஊர்ல ஒருத்தன் நல்லவருனு மட்டும் மீடிய செய்தி வெளியிட்டார்கான போதும் அவன் பின்னாலயே போய் ஜால்ர தட்டுற கேசுகள் நமூர்ல அதிகம் .பக்கத்துல இருக்கிர மள்ளிகை கடையில சாமான் 1,2ரூபா கூட வித்த சண்டை போடுர ஆளு .சூப்பர் மார்கெட்டுல அதிகம் கொடுத்துட்டு மூடிகிட்டு போவான்கே. அவரு நல்லவரு சொல்லி கீழேயே ஒரு கருத்து வரலாம் ஜாக்கிரதை.

srithar said...

if u don't want support him.. do not write like this... i think u r not a Indian............ no..1 fucker uuuuuuuu

WiNnY... said...

ஒருத்தன் நல்லது செய்தால் அதை பிடிக்காமல் நாலு பேரு திரியததான் செய்வாங்க. அதுல ஒருத்தர் தான் நீங்க.

முகநூலில் உங்க கருத்துக்களை , பதிவுகளை பலபேர் லைக் கொடுக்குறடததால நீங்க என்ன சொன்னாலும் கேட்க கூட்டம் இருக்குன்னு நினைக்க வேண்டாம்.

எல்லாருக்கும் ஒருவழின்னா இடும்பனுக்கு ஒருவழி...

ஊழலை பற்றி பேசாமல் இருந்த மக்கள் ஊழலை பற்றி பேச வைத்திருப்பவர் அன்னா.

உங்கள் கட்டுக்கதைகளை உங்கள் மனத்தில் வைத்ிக்கொளுங்கள். வீணாய் தெருவில் எறிந்து உங்கள் மீதே சாக்கடை தெளித்து கொள்ளாதீர்...

siva said...

அனைவருக்கும் வணக்கம் ,
அண்ணா ஹசாரே என்ன்பவர் சமுக பொது நல வாதி. அவர் நம் நாட்டை காக்கும் தீவிரவாதி ..........ஏனென்றால் நாட்டை சுரண்டும் திருடர்களிடமிருந்து, நாட்டை காக்கும் (உங்கள் கருத்தில்) தீவரவாதி .என்றால் பொருந்தும் .எதோ ஒரு நாய் என்பது வயது கிழட்டுப்பயல் என்று சொல்லிருந்தது.ஆம் நம் தலை முறைக காக்க போராடும் கடவுள் அவரை பற்றி குறை கூற எந்த பயலுக்கும் அருகதை இல்லை ............

டான் அசோக் said...

ஏம்பா தோழர்களே. அன்னாவை நான் காரணமே இல்லாம குறை சொல்லல. எத்தனை கேள்விகளை முன்வச்சிருக்கேன். அதுல ஒரு கேள்விக்காவது பதில் சொல்லிருக்கீங்களா யாராச்சும்? எல்லாரும் என்னை திட்டுறதுல தான் குறியா இருக்கீங்க! இதுதான் மாஸ் ஹிஸ்டீரியா. மிக ஆபத்தானது இது! அதில் இருந்து வெளிய வந்த 'இவன் சொல்லிருக்குறது என்னனுதான் பாப்போமே'னு ஒரு நிலைக்கு வாங்க. அப்பதான் நான் கேட்கும் கேள்விகளை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் வரும். கண்மூடித்தனமா கேள்வி கேட்கிறவன் எல்லாம் தேசதுரோகினு ஒரு கொள்கைய வச்சுக்கிட்டு இருந்திங்கன்னா இப்படிதான் திட்ட தோணும். என்னை திட்டுறதை பத்தி கவலை இல்ல. வெளியிட முடியாதபடி ஆபாசமா திட்டாதீங்க. பொது இடத்தில் பகிரும் அளவுக்கு திட்டுனீங்கன்னா கண்டிப்பா வெளியிடுவேன்! முடிஞ்சா அப்படியே என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுதானு பாருங்க:-)

Elayaraja Sambasivam said...

உங்களோட கேள்விகள கொஞ்சம் புரியற மாதிரி லிஸ்ட் பண்ண முடியுமா..
இங்க எனக்கு என்ன புரிஞ்சுதே அத விளக்கரன்.

இருக்கும் சட்டங்களை ஒழுங்காக பயன்படுத்தாததால் தான் என்பதை மறந்து
[அவரோட போரட்டத்துக்கு முதல் காரணமே இது தான், இது கேள்வி போல தெரியல]

லோக்பல் பில் உறுப்பினர்கள் அல்லது லோக்பல்பில் பெஞ்ச் மகாபலம் பொருந்தியதாக இருக்கும் பட்சத்தில் அதில் உள்ளவர்கள் நாட்டிலேயே அதிகமாக ஊழல் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்.
[ஒரு ஊழல் வாதிய பிரதமர், ஊழல் தடுப்பு பிரிவு தலைவரா நியமிகறாரு, ஒரு விஷயம் தெரிஞ்சிக்கிங்க சுப்ரீம் கோர்ட் தானே வந்து ஒரு வழக்க எடுத்து கருத்து சொல்றது, எப்பவாவது ஒரு முறை தான் நடக்குது, ஆனா லோக்பால், தானே முன் வந்து விசாரிக்கலாம், அது மட்டும் இல்ல, இன்னைய தேதிக்கு யார் ஜனாதி பதியா வரணும், யாரு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் எல்லாம் தீர்மானிக்க படறது எல்லாம் நம்ப ஆளுங்கட்சி தான், அவங்க சரி வர செயல் பட முடியல, அதனால லோக்பால் அப்படின்றது அத்தியாவசியமானது]

RSS பின்ணணி கொண்ட ஹஜாரேவும் அவரது அடிப்பொடிகளும் நாளை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை மிரட்டி சிறுபான்மையினருக்கெதிரான சட்டங்களை இயற்றவைக்க மாட்டார்கள் என்பதற்கும்
[அதென்னங்க RSS RSS அப்படி சொல்றிங்க, நான் முஸ்லிம் அதனாலே மசுதிக்கு போறேன், நான் கிறிஸ்டியன் அதனால சர்ச் போறேன், இப்படி யார் சொன்னாலும் ஒத்துகிரிங்க, நான் இந்து கோயிலுக்கு போறேன் அப்படி சொன்ன உடனே RSS ..., இது வரைக்கும் இந்தியா முஸ்லிம் கிட்ட, கிறிஸ்டியன் கிட்ட எல்லாம் அடிமையா இருந்தாட்சி, இன்னுமும் நாங்க அடிமையா தான் இருக்கனும் அப்படின்னு எதிர் பர்கிரிங்கள, இது வரைக்கும் இந்தியாவுல எத்தினை முறை குண்டு வெடிச்சிருக்கு, எதாவது இந்து குண்டு வச்சி பல பேரா கொன்றுக்கான, அப்படி இல்லன ஒன்னு பண்ணலாம் இந்து அப்படின்ற மத த்த அழிச்சிட்டு எல்லோருமே முஸ்லிமா மாரிடுவாம், அப்புறம் க்ரிஷ்டியான்க்கு எதிர செயல் படுரிங்கன்னு சொல்லுவீங்க]


நாலு நாள் சாப்பிடாமல் இருந்தால் இந்த அரசு என்ன சொன்னாலும் கேட்குமா? எந்த தகுதி, என்ன அருகதை அன்னாவுக்கு இருக்கிறதென்று அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது(நடத்துகிறது)?
[இத்தன ஊழல் பண்ண காங்கிரெஸ் க்கு நீங்க சொல்லி குடுக்கறிங்க, இது தனி மனித சுயநல போராட்டமா இருந்த அப்படி பண்ணி இருக்கலாம்]

இதுக்கு மேலயும், டைம் வேஸ்ட் பண்ணி பதில் சொல்ல வேணாம்னு முடிவேடுதிட்டான்.

உன்னளோட கமெண்ட் இருந்தே தெரியுது எவ்வளவு திட்டு வான்கிரிங்கன்னு...உங்கள்ளுக்கு எதிர கமெண்ட் போடறவங்க யாருமே அண்ணா சொந்த காரனோ , உன்னோட பரம எதிரியோ கிடையாது

saba,lic agent,kagam said...

நம் தலை முறைக காக்க போராடும் கடவுள் அவரை பற்றி குறை கூற எந்த பயலுக்கும் அருகதை இல்லை ............

WiNnY... said...

@ டான் அசோக் , Elayaraja Sambasivam அவர்களின் கருத்தை வெளியிடும் போதே அதற்க்கு பதில் சொல்லி இருக்கலாமே.
நான் Elayaraja Sambasivam கருத்தை ஒத்துக்கொள்கிறேன்.

மேலும் ஓன்று கூற வேண்டும், RSS அப்பின்னா தீவிர வாதியா ?? எவன் சொன்னான். முட்டா பயலுங்க சொல்லுவானுங்க அப்படி.
சுனாமி வந்தப்ப அழுகிய பிணங்களை தன் கையால் தூக்கி அப்புற படுத்திய வர்கள் RSS காரர்கள் .
இந்தியாவுக்கும் இந்தியன்னுக்கும் பிரச்சனை வந்தால் கரம் நீட்டுபவர்கள் RSS காரர்கள்

நம்ம ஊரில் தினமும் நடக்கும் RSS கூட்டத்தில் கலந்து பார். பின்பு பேசு...

Find about Anna with wikipedia and then find the line "It was a close shave for Hazare as one bullet had passed by his head" then read.
First you need to know about Hazare. then speak...

siva said...

அருமை நண்பர் அசோக் மற்றும் உங்களை போல் கேள்வி கேட்கும் அனைவருக்கும் இது தான் பதில்
நீ ஒரு உண்மையான தமிழன் என்றால் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்க மாட்டாய் இனியும் நீ பெரிய
புத்திசாலி மாதிரி கேள்வி கேட்டினா உன்ன மாதிரி .................................... வேற யாரும் இல்ல ......

indian said...

This guys want to get more hits on his Blog. Please please.. You should have at least 1% sense beofre publish your article. Nee oru kaikkkoooli maathiri irukka. Sattam sat tamnu pesuriyee... Antha sattaththa approve ps Raghu yaaru.. In they other thiruttukkoottaththa konda parliament thaan.

WiNnY... said...

//இவன் சொல்லிருக்குறது என்னனுதான் பாப்போமே'னு ஒரு நிலைக்கு வாங்க//

உங்கள் சிந்தனையை விட சவுக்கின் சிந்தனை பசுமரத்தாணிபோல் மனதில் இறங்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பை பின்பற்றி உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.http://www.savukku.net/home1/1180-2011-08-22-19-20-49.html

Chrystz said...

Where was Anna Hazare during government? Have any of you know about that guy like 5 months ago?

He is doing more politics than any good to the country?

Read the god damn Lokpal before you post here..

And too all those who suppor Anna Hazare... You all support him just to show yourself that you are fighting against corruption.. If you really wanna stop corruption instead of supporting these randoms , stand up against corruption in a real way...

Chuma nalavan madiri scene podadheenga ..

Elayaraja Sambasivam said...

Chrystz said...

If you really wanna stop corruption instead of supporting these randoms , stand up against corruption in a real way...

CAN YOU TEACH US THE REAL WAY...

Elayaraja Sambasivam said...

Where was Anna Hazare during government? Have any of you know about that guy like 5 months ago?

YOU MEAN TO SAY, IF SOMEONE WANT TO AGAINST THE CORRUPTION, THEY SHOULD BORN WITH POSTER - "IAM AGAINST FOR CORRUPTION".

Chrystz said...

Elayaraja You serious?
I what way you are helping fighing against Corruption?
you going on strike at the streets?

all you do is just posting information gathered from people of questionable IQ on your facebook profile.. and/or comment on blogs just to make yourself feel like you are working against corruption.. all these talks and posts aint gonna help..

Elayaraja Sambasivam said...

Stopping the rumors and nonsense comments against the good thing IS "ALSO A WAY TO AGAINST CORRUPTION".

if you are not interest to create corruption less INDIA, don't speak against some one initiatives. just keep calm.

Related Posts Plugin for WordPress, Blogger...