Wednesday, July 27, 2011

தினமலர் என்னும் தரம்கெட்ட உலகமகாபொய்யர்கள்

ஏன் திடீரென தினமலர் பற்றி? தினமலரைப் பற்றி மட்டும்தான் எப்போதுமே எழுதலாம்! ஏனெனில் தினம் தினம் ஏதாவது விஷத்தை கக்கும் கேவலத்தை செய்வது தினமலர் மட்டுமே. கட்டுரையின் இறுதியில் வைகோவைப் பற்றிய தினமலரின் சேட்டையைக் குறிப்பிட்டுள்ளேன். அதற்குமுன் கீழே தினமலரின் பொறுக்கித்தனங்களுக்கு வகைக்கு ஒன்றாக உதாரணங்கள் கொடுத்துள்ளேன்..

பல வருடங்களுக்கு முன், வாஜ்பாய் இந்தியப் பிரதமராகவும், முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகவும் இருந்த காலகட்டம் அது. அப்போது ஐ.நாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற ஒரு மிக முக்கியமான மாநாட்டைப் பற்றி தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது, " மாநாட்டில் வாஜ்பாய் முஷாரஃப் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி உலகமே இரு நாடுகளின் சிதைந்து கொண்டிருக்கும் உறவை பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தினமலர் ஏதோ இருநாட்டு பிரதிநிதிகளையும் 'நாய்' போல சித்தரித்து 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என செய்தி வெளியிட்டிருந்தது. முதன்முதலில் தினமலர் என்ற செய்தித்தாள், மேஜை துடைக்கக்கூட லாயக்கில்லாத காகிதமாகப் பட்டது அன்றுதான். பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தினமலர் மட்டுமே சரியான உதாரணம்.மேலே இருக்கும் படத்தில் உள்ள பெண்களைப் பாருங்கள். கல்லூரி மாணவிகளின் உடை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது தினமலர் வெளியிட்ட படம் இது. அரை பக்கத்திற்கு இந்த ஆறு மாணவிகளை candid (தங்களை யாரோ படம் பிடிப்பது, படம் பிடிக்கப்படுபவருக்கு தெரியாது) ஆக படம்பிடித்து வெளியிட்டிருந்தது.  எவ்வளவு பெரிய பொறுக்கித்தனம் இது? இதே விஷயத்தை செல்ஃபோன் வைத்து செய்பவனை தானே 'ஈவ் டீசிங்' எனப் பிடித்து சிறையில் தள்ளுகிறார்கள்? இப்படி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஆறு அப்பாவி மாணவிகளின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து, அவர்களின் படத்திற்கு கீழே "ஆபாசமாக உடையணியும் மாணவிகளை மக்கள் எதிர்க்கவேண்டும்" என்று குறிப்பு வேறு வெளியிட்டிருந்த தினமலரை என்ன செய்வது? அதன் ஆசிரியரை அல்லவா முதலில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டும்? இப்படியொரு தப்பான செய்திக்காக தங்கள் பெண்பிள்ளைகளின் படம் செய்தித்தாளில், அதுவும் முதல் பக்கத்தில் வந்திருப்பதைப் பார்த்த அந்த பெற்றோர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? இதுதான் தினமலர் தனக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சமூக அக்கறையா?

இது போன்ற ஏராளமான கேவலம் பிடித்த செயல்களை தினமலர் செய்து கொண்டே தான் இருக்கிறது. காரைக்குடியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் சந்திப்பில் ஓய்வு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த துணைவேந்தர்கள் மூவரை தூங்கும்போது படம் பிடித்து அந்தப் படத்தின் கீழ் தன் பாணியில் நக்கலாக செய்தியும் போட்டிருந்தது தினமலர். 
தூங்கும் போது ஒருவரை படம் எடுக்கலாமா? நம் தனிப்பட்ட நண்பர்களிடம் கூட நாம் செய்யக் கூசும் செயல் அது. அந்தப் படத்தைப் பார்த்த லட்சக்கணக்கான மாணவர்களின் மனதில் எந்த விதமான தாக்கத்தை அது உண்டு பண்ணியிருக்கும்? துணைவேந்தர்களின் குடும்பங்கள் எவ்வளவு வெட்கியிருப்பார்கள்? நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் லட்சக்கணக்கான மாணவர்களையும் வழிநடத்தும் துணைவேந்தர்களை தூங்கும் poseஇல் படமெடுத்து நக்கலடித்து பொறுக்கித்தனம் செய்த தினமலருக்கு என்ன சமூக அக்கறை இருக்கிறது?

இது மிகவும் முக்கியமான உதாரணம். என்னை மிகவும் பாதித்த மனம், கொதிக்கச் செய்த இன்னொரு செய்தி இது. அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டு ஒரு இந்தியப் பேராசிரியர் இறந்த செய்தியை கீழ்க்கண்டவாறு வெளியிடுகிறது தினமலர். "அமெரிக்காவில் இந்தியப் பேராசிரியருக்கு சதக் சதக். துடிதுடித்து இறந்தார்" என்று. எவ்வளவு இரக்கமின்மை! எவ்வளவு வக்கிரம்! ஒரு உயிரிழப்பின் வலியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் லட்சணம் இதுதானா!? மரணத்தில் கூட எவ்வளவு நக்கல்?!! அந்தப் பேராசியர் குடும்பம் எவ்வளவு வருந்தியிருக்கும்? இதுதான் மனிததன்மையை காப்பாற்றுவதாக சூளுரைக்கும் பத்திரிக்கையா?

அரசியல்வாதிகளையும், No parkingயில் வண்டியை நிறுத்தும் பொதுமக்களையும் கண்டிக்கவும், படமெடுத்து போடவும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது இந்த தினமலருக்கு? 


புவனேஷ்வரி என்ற துணைநடிகை சில நடிகைகளின் பெயரை சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நடிகைகளின் படத்தையெல்லாம் பெரிதாகப் போட்டு, அந்த நடிகைகள் விபச்சாரம் செய்தார்கள் என்ற செய்தி நிரூபிக்கப்படும் முன்னரே அச்செய்தியை 'Fact'ஆக சித்தரித்து படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர், அதன் முதலாளிகளில் ஒருத்தனான 'அந்துமணி ரமேஷ்' மீது நிருபர் உமா பாலியல் புகார் தெரிவித்தபோது அந்த செய்தியையும் 'Fact' ஆகவெ கருதி வெளியிட வேண்டியதானே? ஆனால் தினமலர் எபப்டி react செய்தது என கீழே பாருங்கள்.

புவனேஷ்வரி சொன்னால் உடனே எல்லா நடிகைகளும் விபச்சாரிகளாம். ஆனால் உமா என்ற நிருபர், அதுவும் தினமலர் நிருபர், அந்துமணி ரமேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னபின் அவனை மக்கள் முன் நிரபராதி ஆக்க சாம-தான-பேத-தண்ட வழிகளையெல்லாம் உபயோகித்தது தினமலர். பல தொலைக்காட்சிகளில் மிகத் தெளிவாக, நடந்த அசிங்கங்களை புட்டுப்புட்டு வைத்த   அந்தப் பெண் நிருபரை, நாக்கூசாமல் மனநோயாளி என்றெல்லாம் செய்தி வெளியிட்டது தினமலர். உமா என்ற நிருபர் ஏழு வருடம் வேலை பார்த்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவில்லையாம். புகார் அளித்தவுடன் தான் தெரிகிறதாம். ஒருகட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தினமலருக்கே பைத்தியம் பிடித்துவிட நிலையில் அது வெளியிட்ட படத்துடன் கூடிய செய்தியைக் கீழே பாருங்கள்.


மேலே உள்ள படத்தில் நிருபர் உமா தெளிவாக 'தனக்கு சேர வேண்டிய settlementகளை கொடுங்கள்' எனக் கேட்டு அந்த ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். யாராவது தான் பணிபுரிந்த அலுவலகத்தில் இருந்து தனக்கு பணம் வரவேண்டியிருக்கும் போது, அதைக் கேட்டு அளிக்கும் ராஜினாமா கடிதத்திலேயே புகாரும் கொடுப்பார்களா? அதுவும் அந்த அலுவலகத்தின் முதலாளியே பொறுக்கித்தனம் செய்யும் போது எப்படி அவரிடமே புகாரும் கொடுக்க முடியும்? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்ற அபார நம்பிக்கையை தினமலர் தனக்குள் வளர்த்துக் கொண்டுவிட்டது. இதற்கு மக்களும் மூல காரணம். இந்த லட்சணத்தில் பா.கே.ப என்று வாரமலரில் பெரிய plucker போல கட்டுரை எழுதுவதும் அல்லாமல் அந்துமணி பதில்கள் என்ற தலைப்பில் ஊருக்கு உபதேசம் செய்யும் நித்யானந்தா வகையறா தான் இந்த அந்துமணி. ஒவ்வொரு வாரமும் இந்த ஆள் எழுதும் கட்டுரையில் உ.பா (உற்சாக பானமாம்.) குடித்ததைப் பற்றியும், தனக்கு அந்தப் பழக்கம் இல்லையென்றும் மறக்காமல் எழுதுவான் இந்த அந்துமணி ரமேஷ் என்ற பாலியல் குற்றவாளி.  

அந்துமணி ரமேஷின் இரு முகங்கள்
நடப்பு விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு வைகோ இமயம் தொலைக்காட்சியில் தினமலர் தன்னைக் கேவலப் படுத்தியதைப் பற்றி வருத்தப்பட்டிருந்தார். அதாவது பொடாவில், தினமலரின் மாறாப்பாசத்தை தன்னகத்தே கொண்டே ஜெயலலிதா தன்னை சிறையில் தள்ளிய போது தன்னைப் பற்றிய பயோடேட்டாவை வெளியிட்ட தினமலர், கூடவே, "வைகோவுக்கு மிகவும் பிடித்த உணவு ஆட்டுக்கறி. ஆனால் சிறையில் அது போடப்படுவதால் வைகோவுக்கு மகிழ்ச்சிதான்" என தன் திமிர்த்தனத்தைக் காட்டியிருந்ததாகவும், அதனால் தான் மிகவும் வேதனை உற்றதாகவும் பேசியிருந்தார் வைகோ. 

தொலைக்காட்சியில் தன் மானம் போனதை உணர்ந்த தினமலர் உடனே அடுத்தநாள் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிடுகிறது, "வைகோ என்ற நல்லவர் தேர்தலை புறக்கணித்ததால் மக்களுக்கு தான் நஷ்டம்" என்று நல்லவிதமாக நடிக்கிறது. எப்படிப்பட்ட கேவலமான பத்திரிக்கை பாருங்கள்.

வைகோ நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்ல தினமலர் யார்? மக்கள் தினமலரிடம் கருத்தா கேட்டார்கள்? வைகோவின் செயல்களையும், பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் மட்டும் அப்படியே வெளியிடுவதுதானே உன் வேலை? அதையெல்லாம் படித்து வைகோ மீதான கருத்தை மக்கள் உண்டாக்கிக்கொள்வார்கள். ஆனால் பெரிய Inception படத்தின் கதாநாயகன் போல மக்கள் மூளையில் கருத்துக்களைப் பதியச் செய்கிறது இந்த தினமலர்.

வாசகர் கடிதம் என்ற பெயரில் தானே எழுதி ஒவ்வொரு பெயரில் வெளியிடும் கீழ்த்தரமான செயலையும் தினமலர் பல ஆண்டுகளாக செய்தே வருகிறது! அதற்கு ஆதாரம் கீழே! தினமலரிலும், காலைக்கதிர் என்ற தினமலர் குழுமத்தின் மற்றொரு பத்திரிக்கையிலும் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்த ஒரே கடிதம்!


பத்திரிக்கை என்றால் செய்தியைச் சொல்வதா? கருத்தைச் சொல்வதா? செய்தித்தாள் எனச் சொல்கிறோமா? கருத்துத்தாள் எனச் சொல்கிறோமா? தினமலர் காலம்காலமாக செய்வது இதைத்தான், அதாவது செய்திகளை தனக்கு வேண்டிய பாணியில் அல்லது தொனியில் போட்டுவிட்டு அதனுடன் சேர்த்து நஞ்சு தடவிய தன் கருத்தையும் மக்கள் மனதில் திணித்துவிடுகிறது. தினமலருக்கு கைவந்த கலை இது.

இது போன்ற சமூகப்பொறுப்புணர்வே இல்லாத பத்திரிக்கைகளை மக்கள் கண்டிப்பாய் இனங்காண வேண்டும். ஒரு பத்திரிக்கையின் பணி என்பது உண்மையான செய்தியை மக்களிடம் அளித்துவிட்டு, அச்செய்தி பற்றிய கருத்தை மக்களே சிந்தித்து உண்டாக்கிகொள்ள வழிவகுப்பதேயன்றி விஷக்கருத்துக்களையும், நஞ்சுப் பரப்புரைகளையும் மக்கள் மனதில் பதிய வைப்பதல்ல. தினமலரை கண்டிப்பாகப் புறக்கணிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. ஊடகப் புல்லுருவிகளை சுத்தப்படுத்தினால் மட்டுமே நாடு சுத்தப்படும்.

(இது ஒரு மீள்பதிவு)

சன் குழுமம் என்ற மற்றொரு கீழ்த்தரமான ஊடகத்தைப் பற்றிய என் பதிவு இங்கே சன் நெட்வொர்க்கும் கொடூர மாறன்களும்

27 comments:

தமிழ் அமுதன் said...

good post.!

தமிழ்வாசி - Prakash said...

மீள் பதிவு என்றாலும் காரம் இன்னமும் இருக்கு

ஆகுலன் said...

வசிக்கவே கடுப்பா இருக்குது...
சட்ட ரீதியில் எவர்களுக்கு தண்டனை குடுக்க முடியாதா...

எனது கனா.................

Sketch Sahul said...

good post.!

R.Elan. said...

இப்ப புரட்சிதலைவிக்கு ஜால்ரா போட்டு வருகிறது இந்த கருமாதி பத்திரிகை,அது மட்டுமல்ல இந்த கிறுக்கு பத்திரிகை ஒரு பெயரை பரவலாக பெற்றுள்ளது,அது என்ன தெரியுமா,தினமலம்.தமிழுணர்வு,ஈழம் என்றாலே இந்த பூணூல் பத்திரிகைக்கு பிடிக்காது.நக்கலும்,கொழுப்பும் ஜாஸ்தி இந்த தினமலத்துக்கு.

Philosophy Prabhakaran said...

அருமையான அலசல்... ரசித்துப் படித்தேன்... மீள் பதிவு என்று அறிந்ததும் முதல்முறை தர விட்டதற்காக வருந்தினேன்... சன் டிடிஎச் குறித்த பதிவையும் இப்போதுதான் படித்தேன்... அதுவும் கிளாஸ்...

நாமெல்லாம் டி.ஆர், சாம் ஆண்டர்சன் போன்றவர்களை எப்படி ரசிப்போமோ அதே போல அந்துமணி ரமேஷை ஒரு காமெடி பீசாக ரசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது...

guna said...

sorry bad post

senkathiron said...

They should be punished according to Law..

Robin said...

நல்ல பதிவு!

பூங்குழலி said...

சமீபத்திய இவர்களின் முதல் பக்க தலைப்பு செய்திகள் அருவருப்பாய் இருக்கிறது ...ஆட்சி மாறி இரண்டு மாதங்களே ஆன நிலையில் என்னமோ தேனாறும் பாலாறும் ஓடுவதாக நம்ப வைக்க முயல்கிறது

Hyder said...

very good information to know about dinamalar's original face.thank you for your hard work.

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

மாசிலா said...

Excellent post. Thanx for these informations and your analyse.

Anonymous said...

படத்திலிருக்கும் பெண்கள் மாடல்களா ? தினமலர் செய்திக்காக போஸ் கொடுத்தவர்களா ? அல்லது அப்பாவிப் பெண்களா? எப்படி உங்களுக்குத் தெரியும்?

துணைவேந்தர்கள் தூக்கம்போட்டுக்கொண்டிருக்கும் படங்கள் மாதிரி ஆங்கிலச் செய்தித்தாள்களிலும் நான் பாத்திருக்கிறேன். தேவ கவுடா அடிக்கடி கூட்டங்களில் தூங்கிவிடுவார். அவர் பி.எம் ஆக இருக்கும் போது செய்தித்தாள்கள் அவர் தூங்கும் போட்டோக்களைப் போடுவதுண்டு. தினமலர் விதிவிலக்கல்ல.

இன்றைய தேதியில் செய்தித்தாள்கள் என்ன போட்டிருக்கின்றன? பார்த்தீர்களா ? பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் விதவிதமான போட்டோக்களைத்தான். அவரின் காலணி கூட தனியாக போட்டோ எடுக்கப்பட்டு 'இவர் என்ன காலணி போட்டிருக்கிறார் ? இவை கைப்பையின் பிராண்டு என்ன? கண்ணாடியின் விலை என்னவாக இருக்கும்? என்றெல்லாம் செய்திகள்

ஆக, பத்திரிக்கை என்பது இன்றைய கால கட்டத்தில் படிதாண்டா பத்தினியாக இருக்கவில்லை. எனினும், அவைகள் ஒரு நாகரிகமான அளவிளைக்கடைப்பிடிப்பது நல்லது.

R.Puratchimani said...

நல்ல கட்டுரை.
இருப்பினும் சில சந்தேகங்கள்...
அந்த பெண்கள் கல்லூரி பெண்களா அல்லது விளம்பர அழகிகளா எனபது தெரியுமா? அது கல்லூரி பெண்கள் எனும் பட்சத்தில் இது தவறுதான்.

//ஓய்வு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த துணைவேந்தர்கள் மூவரை தூங்கும்போது படம் பிடித்து//
அவர்கள் ஓய்வு நேரத்தில் தான் தூங்கினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? கான்பிரன்ஸ் நேரத்தில் தூங்கி இருந்தால் அதை வெளியிடலாமா? கூடாதா?
பாராளுமன்றத்தில் தூங்கும் உறுப்பினர்களின் காட்சிகளை போடுவது சரியா தவறா?

இந்த கட்டுரையில் விபச்சாரிகள் சம்பந்தமானதை சேர்க்காமல் இருந்திருக்கலாம்.
கட்டுரையில் கருத்துக்களை எழுதுவதில் தவறில்லை என்பது என் கருத்து. என்ன இரண்டும் தனி தனியாக இருக்க வேண்டும். செய்தியோடு கருத்தை கலக்க கூடாது.
உங்கள் பார்வையில் நல்ல செய்தித்தாள் எது?
மற்றபடி உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய நல்ல கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

நானெல்லாம் ஏன் தினமலர் படிக்கிறேன் என்று வெட்கபடவைத்துவிட்டது உங்கள் பதிவு...

நட்சத்திர அந்தஸ்துக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

கோவி.கண்ணன் said...

நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவை, தினமலர் செய்வது செய்தி விபச்சாரம்

MUTHU said...

நான் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவன். இந்த தினமலர் செய்யும் தனிமனித மீறல்கள் பிடிக்காமல் தினமலர் பத்திரிகை வாங்குவதை நிறுத்திவிட்டு தினத்தந்தியை வாங்குகிறேன். மேலும் செய்தி தேவையெனில் கூகுல் செய்திதான். தினமலர் என்றாலே வாந்திதான் வருகிறது.

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!!


சரி நான் வந்த விஷயத்தைச் சொல்லிட்டுப்போறேன் இப்போதைக்கு.

இனிய நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

தாமிரபரணி said...

தமிழின எதிரியான தினமலருக்கு என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்,
நான் கல்லூரி படிப்பை முடிக்கும்வரை எனக்கு இந்த தினமலர் மற்றும் இந்த பார்பனர்களை பற்றி துளியும் தெரியாது,
இவ்வளவு ஏன் இந்தியாவைகூட என்நாடு என்று உண்மையாக நம்பியிருந்தேன்
ஆனால் இந்த வஞ்சர்களான பார்ப்பனர்கள் எவ்வளவு பெரிய தமிழன துரோகிகள் என்பது பல விடயத்தில் விளங்கியது
* தமிழ்களுக்கிடையே சாதி உட்புசல் ஆரம்பித்து,
* பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கீழ்த்தரமான கோட்பாடு வைத்து,
* கீழ்சாதி என்று சொல்லி மக்களை ஆடு மாகளைபோல் கோயில்களில் அனுமதிப்பதில்லை,
* தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழ்மொழி தீட்டுமொழி என சொல்லி கோயில்களில் அனுமதிப்பதில்லை
என்ன ஒரு இருமாப்பு இவர்களுக்கு, தமிழிலும் அர்ச்சனை செய்யபட வேண்டும் என இவர்களிடம் ஆரசாங்கம் கெஞ்சிகொண்டு இருக்கிறது இவனுங்க எல்லாம் ஒரு ஆளுங்க நாலு சாத்து சாத்துனா வழிக்குவர போறானுங்க.
* அனைத்து சாதியினவரும் அர்ச்சர்கள் ஆவதை அனுமதிக்க மாட்டார்கள் கேட்டா சாமி தீட்டாயிடுமாம்,
எப்படி எல்லாம் பேசுறானுங்க பாருங்க கொடிய விலங்கைவிட கீழ்தரமானவர்கள்.
* மத சண்டையை தூண்டிவிடுவதே இந்த பார்ப்பனர்கள் கூட்டம்தான் அதற்கு மட்டும் கீழ்சாதி மக்கள் வேண்டும்.
* இலங்கையில் பழங்குடி தமிழர்கள் அங்கு தங்கள் உரிமைக்காக போராடி வந்தால்
இந்த பார்ப்பன ஊடங்கள் பிழப்பு தேடி போன தமிழர்கள் தனி நாடு கேட்டா கொடுப்பாங்களா என்று அதை திரித்து கூறுகிறார்கள்,
இவர்களே தமிழகத்துக்கு அண்டி பிழப்புதேடி வந்த கூட்டங்கள்
* சிங்களவன் தமிழனை கொன்றுகுவிக்கும் போது இந்த பார்ப்பன கூட்டங்கள் கண்ணை பொத்திகொள்வார்கள்,
தன்னை பாதுகாக்க தமிழன் தாக்கிவிட்டால் வன்முறை என்று முழங்குவார்கள் மாங்கெட்ட ஈனநாய்ங்க,
பேடிகள் ஆம் இராமன் வழி பேடிகள் முதுகின் பின்னால் இருந்து தாக்குவதுதான் இந்த பார்ப்பனர்களின் வீரம்

அப்பறம் இந்த மாங்கெட்ட இந்திய அரசாங்கம்
தமிழர்கள் நாம் நடுவன அரசக்கு செலுத்தும் வரிபணம் அனைத்தும் விரயமாக்கபடுகின்றன,
எ-டு,
* இந்திய தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலும், இந்தியிலுமே நடத்தபடுகின்றன
தமிழில் நடத்த போராட வேண்டியதுள்ளது தமிழர்கள் என்ன இந்தியாவுக்கு பிழப்பு தேடி வந்தவர்களா,
* தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழை அனுமதிப்பதில்லை ஆனால் வடநாட்டில் இந்தியில் வழக்காடலாம்
* எல்லா மாநிலங்களிலும் இந்தியை வலுக்கட்டாயமாக புகுத்தி இந்தியை ஒரு தேவையான,வர்த்தக மொழியாக மாற்ற முயற்சி செய்கிறது,
இந்திக்கு செலவிடபடும் அனைத்து பணமும் இந்தி அல்லாத பிற மாநிலத்தவர்களின் பணம் எனபது குறிப்பிடதக்கது
* தமிழக மக்கள் பல போராட்டம் செய்தும், தமிழ அரசாங்கம் தீர்மானம் போட்டும் அதைபற்றி துளியும் கவலை கொள்ளாமல்
இலங்கையுடன் சேர்ந்துகொண்டு தமிழர்களை கொன்று குவிக்க பொருள் உதவி செய்கிறது,
(அதை பார்ப்பன ஊடங்கள் இவ்வாறு எழுதுகிறது
- இந்தியா உதவி செய்யவில்லை என்றாலும் சீனா, பாக்கிஸ்தான் போன்ற பிறநாடுகள் உதவி செய்யுமாம்
அதனால இந்தியா உதவிசெய்வதால் தப்பில்லையாம் ச்சய் என்ன மாதிரி பிறவிங்க இவர்கள்.
- பாக்கிஸ்தானுக்கு இந்தியா உதவில்லை என்றாலும் பிறநாடுகள் உதவதான் போகிறது
அதற்கு பேசமா இந்தியாவே உதவி செய்ய வேண்டியதானே
- உங்க பொருளை யாரோ திருடுறத்து பதிலாக உங்களுக்கு தெரிஞ்சவங்க திருடினா எற்றுகொள்விர்களா)
* இலங்கை கடற்படை 500க்கும் மேலான தமிழக மீனவர்களை சுட்டுகொன்றிருக்கிறது
இதுவரை நடுவண தரப்பில் இருந்து ஒரு கண்டன குரலோ எதிர்ப்போ செய்ததில்லை,
போதாத குறைக்கு இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வேற என்ன ஒரு தீமிரு இந்திய அரசுக்கு.

ஒன்றை மட்டும் இங்கு சொல்ல விழைகிறேன்
ஏ ஈன இந்தியாவே நீ தமிழனுக்கு எதிராக என்ன துரோகம் வேண்டுமானாலும் செய் அனால் அதற்கு முன்
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து விடுவித்துவிடு, எங்களுக்கு தெரியும் எங்களை பாதுகாத்துகொள்ள.


வரயிருக்கும் இந்திய விடுதலை நாளை புறக்கணிப்போம்
கறுப்பு கொடி எற்றுவோம், இந்தியகொடியை தீயிட்டு கொளுத்துவோம்( தமிழர்களின் உயிர் என்றால் அவ்வளவு மலிவாக போய்விட்டது உயிரை காப்பாற்ற முடியாது ஒரு அரசுக்கு கொடி ஒரு கேடா)

தமிழ்தேசியம் உருவாகும் அன்று இந்த கயவர்கள் எல்லாம் கழுவேற்றபடுவார்கள்

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்ல பதிவு .இந்த தினம*த்தை தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்

அரசூரான் said...

அதான் இன்னொரு பெயர் இருக்கே, தின மலம் - உண்மையின் குறைகல். உரைகல்லில் உரசிப்பார்த்தா தெரியும் உண்மை குறைவு என்று.

தாமிரபரணி said...
This comment has been removed by the author.
Melwin said...

Great da. Superb .........

Srikandarajah கங்கைமகன் said...

நல்ல பதிவு!

A.L.Raja said...

ஒரு நல்ல விஷயம் கூட உங்க கண்ணுக்கு தெரியவில்லையா?

A.L.Raja said...

ஒரு நல்ல விஷயம் கூட உங்க கண்ணுக்கு தெரியவில்லையா?

Related Posts Plugin for WordPress, Blogger...