Monday, July 25, 2011

தமிழ்சினிமாவை சிதைக்கும் நல்ல படங்கள்.எதுக்கு சுத்தி வளைத்து? நேரடியாவே தெய்வத்திருமகன் படத்துக்கு வருகிறேன். அருமையான படம். பார்க்க நெகிழ்ச்சியா இருக்கிறது. விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். ஆத்மார்த்தமான இசை. திரைக்கதை, வசனத்தில் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் இழையோடுகிறது. பார்ப்பவர்கள் பல இடங்களில் அழுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் படம் கொண்டாடப்பட வேண்டிய படமல்ல!  நல்ல சினிமா அல்ல. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கும் படம். பொறுங்கள். திட்டாதீர்கள். முழுதாக முடித்துக்கொள்கிறேன்.

நல்ல படம் அது சார்ந்த திரையுலகை உலக பார்வையாளர்கள் முன் பெருமையாக திரையிடப்பட வேண்டுமே தவிர, உலக பார்வையாளர்கள் முன் திரையிடப்படுவதற்கே அச்சம் தருவதாய் இருக்கக் கூடாது. சில ஆண்டுகள் முன்பு ப்ளாக் என்ற இந்திப்படம் வந்தது. அருமையான திரைப்படம். ராணி முகர்ஜீயும், அமிதாப்பு நடிப்பில் பின்னியிருப்பார்கள். இந்திய விமர்சகர்கள், ரசிகர்கள் எல்லோருமே அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். ஆனால் அந்தப்படத்தை சர்வதேச விருதுகளுக்கு அனுப்ப முடியவில்லை. ஏனெனில் அது ஒரு வேற்றுநாட்டுப்படத்தின் தழுவல். அந்தப்படத்தை அனுப்ப பயந்து அதே ஆண்டு வெளிவந்த 'பெஹலி(Pehli)' என்ற படத்தை அனுப்பினார்கள். அது ராஜஸ்தானிய நாடோடிக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது. இது போன்றதொரு பயத்தைத் தருவதுதான் தெய்வத்திருமகள் படமும். இது நல்லபடம் தான் எனினும், சர்வதேச விருதுகளுக்கு அனுப்பப்பட்டால், திரைப்படங்கள் அது சார்ந்த சமூகத்தினை உலகிற்கு காட்டும் கண்ணாட்டியாக இருக்கும் சூழலில், தெய்வத்திருமகன் படத்தால் நம் திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அவமானம் தான் சேருமேயொழிய பாராட்டுக்களோ, புகழோ அல்ல.

போக்கிரி என்ற தெலுங்குப்படம் தமிழில் மீள் உருவாக்கம் (ரீமேக்) செய்யப்பட்டபோது, தெலுங்கு பதிப்பில் நடித்த மகேஷ்பாபுவின் மூக்கை உரியும்  சேட்டைகளைக் கூட விஜய் அப்படியே தமிழ் போக்கிரியில் செய்திருப்பார். அப்போது ஊரே அவரைக் கிண்டல் செய்தது. காப்பி அடிக்கிறான் அது இது என குறை சொல்லியது. இப்போது தெய்வத்திருமகனில் விக்ரம், Sean Pennயின் நடிப்பை மிகச்சாதாரணமாக காப்பியடித்து நடித்திருக்கிறார். மகேஷ்பாபுவின் குரங்கு சேட்டையை களவாடியதற்கே விஜய்யை குறை சொன்ன நாம், Sean Pennயின் பல மாத உழைப்பை, ஆராய்ச்சியை ஒரே ஒரு DVDயைப் பார்த்து காப்பி அடித்து மிமிக்ரி செய்திருக்கும் விக்ரமை எவ்வளவு கேலி செய்ய வேண்டும்? கண்டிக்க வேண்டும்? ஆனால் விக்ரமின் நடிப்பைப் புகழ்ந்து கொண்டு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். மகேஷ்பாபுவை தன் ஆக்ஷன் இமேஜை தக்கவைப்பதற்காக விஜய் காப்பி அடித்தார் என்றால், Sean Pennஐய் தன் சிறந்த நடிகர் இமேஜை தக்கவைப்பதற்காக விக்ரம் காப்பி அடித்துள்ளார். ரெண்டு பேருமே காப்பி. இதில் என்ன வித்தியாசம் கண்டுவிட்டீர்கள். (விக்ரமை விஜய்யுடன் ஒப்பிடுவதற்காக மன்னிக்கவும். அவரின் பல படங்களின் ரசிகனாய், அவர் நடிப்பிற்கு விசிறியாய் இருந்தும் அவரின் இந்த செயலை என்னால் ஏற்கவே முடியவில்லை)

 தெய்வத்திருமகன் இயக்குனரிடம்  சில கேள்விகள். அதெப்படி இணையத்தின் மூலம் உலகம் கையளவு சுருங்கியிருப்பது தெரிந்தும் தைரியமாக ஒரு படத்தை, அதுவும் ஆங்கிலப்படத்தைக் காப்பி அடிக்க முடிகிறது? ஆங்கிலப்படத்தை பார்க்கவேண்டுமென்றால் விஜய் டிவியிலும், சன் டிவிலயும் டப்பிங் செய்து ஒளிபரப்பும் போது பார்த்துக்கொள்வோமே? இதற்கு எதுக்கு நீங்கள் கஷ்டப்பட்டு இன்னொரு நடிகரை வைத்து எடுக்குறீர்கள்? மதராசப்பட்டணம் படத்திலேயே பல காட்சிகள் டைட்டானிக், லகான் படக்காட்சிகள் தான். இருந்தும் அந்தப் படத்தின் டெக்னிகல் விஷயங்களும், உங்கள் சொந்த காட்சிகள் சிலவும் உங்களை காப்பாற்றிவிட்டது. ஆனால் விக்ரமின் சிகையலங்காரத்தில் இருந்து கையை ஆட்டி ஆட்டி பேசும் மேனரிசம் வரை அச்சுஅசல் காப்பியடித்திருக்கிறீகள், இதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அதுவும் Iam Samக்கு ஒரு நன்றி கார்டு கூட போடாமல்? நீங்கள் Inspiration எனச் சொன்னால் கூட ஏற்றுகொள்ளலாம் ஆனால் நீங்கள் Iam Samஐ காட்சிக்கு காட்சி தமிழில் மீள் உருவாக்கம் செய்திருக்கிறீர்கள். உலக சினிமாவை காப்பி அடித்தால் வரும் சினிமாவும் உலகசினிமாவாகத்தான் இருக்கும். இதில் என்ன பெருமை? வந்துவிடப்போகிறது? இந்தப் படத்தால் நீங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்திற்கு நல்ல பெயராவது கிடைக்குமென நினைக்கிறீர்களா? ஏற்கனவே இந்தி திரையுலகை காப்பியடிப்பதில் மன்னர்கள் என உலகம் விளிக்கும் வேலையில் தமிழ்சினிமா மானத்தையும் வாங்க வேண்டுமா? Iam Samஐ பணம் கொடுத்து உரிமைபெற்றிருக்க வேண்டாம், குறைந்தபட்சம் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் போட்டது போல மூலப்படத்திற்கு ஒரு நன்றி கூடவா உங்களால் போட முடியாது? உங்கள் மதராசப்பட்டணம் படத்தை வடநாட்டில் ஒரு இயக்குனர் அப்படியே காப்பி அடித்து உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையென்றால் என்ன குதி குதிப்பீர்கள்?

படம் நல்ல பொழுதுபோக்குப்படம் தான். கேவலமான தமிழ் சினிமா சூழலில் இது போன்ற படம் நல்ல ரசனை உள்ள ரசிகர்களுக்கு நல்ல தீனிதான். ஆனால் இந்தப் படத்தை கொண்டாடினால், புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு மிகப்பெரிய தவறான உதாரணாம் ஆகிவிடும். சரியான முறையில் சரியான படங்களை காப்பி அடித்தாலே தமிழ்நாட்டில் புகழ் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி புதிதாய் சிந்திக்கும் திறனையே காலப்போக்கில் மழுங்கடித்துவிடும். அது தமிழ்சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தடையாகிவிடும்.

அழகர்சாமியின் குதிரை படத்தை ஏன் நாம் இவ்வளவு கொண்டாடவில்லை? மண்ணையும், மக்களையும் சுமந்து திரியும் நெகிழ்ச்சியான கதைகள் நம் ஊரில் ஏராளமாக உண்டு. சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் புதைந்து கிடக்கின்றன. Iam Sam படத்தை உங்களால் பணம் கொடுத்து உரிமை பெற்று மீள் உருவாக்கம் செய்ய முடியாது.  ஆனால் நம் ஊர் கதைகளை மிகச்சுலபமாக உரிமை பெறலாமே? அழகர்சாமியின் குதிரையை உலக அரங்கில் திரையிட்டால் உலகம் நம் சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும், நம் மதிப்பு உயரும், ஆனால் தெய்வத்திருமகனை ஒரு அமெரிக்காக்காரன் பார்த்தால் காறித்துப்புவான்!
 

30 comments:

அந்தோணி பர்ணாந்து said...

நம்ம கல்வி முறையும், நாம குழந்தைகளை வளர்க்கிற முறையும் அப்படியே விழுங்கி வாந்தி எடுப்பது போன்றது தானே . அந்த மாதிரியான கட்டமைப்பில் வளர்ந்தவர் தானே விக்கிரமும் ....அவரும் அவருக்கு கற்று கொடுக்கப்பட்டதை அப்படியே எந்த வித சிந்தனையும் இன்றி அப்படியே விழுங்கி அதை செரிக்காமலேயே வாந்தி எடுத்து தள்ளி இருக்கிறார் ..அது தான் உண்மை ......நம்ம குழந்தைங்க எழுதிய தேர்வு தாளை ஒரு அமெரிக்கனிடமோ இல்லை ஐரோப்பியனிடமோ குடுத்து திருத்தினால் முட்டை மார்க் தான் கிடைக்கும்..சமயங்களில் செயிலுக்கு போக வேண்டியதும் வரும் ...பரீட்சை தாளில் வாத்தியார் பயன்படுத்திய வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை தவறவிட்டாலும் அரை மதிப்பெண்ணில் இருந்து ஒரு மதிப்பெண் வரை குறைக்கப்படும் கொடூரத்தை சந்தித்து இருக்கிறேன் . சமயங்களில் அடியும் கிடைத்து இருக்கிறது ..... அப்பவெல்லாம் நல்லா வாந்தி எடுக்குறவன் தான் முதல் மாணவனாக வகுப்பில் வருவான் ......

தேவையற்றவனின் அடிமை said...

அருமை....இரண்டு படங்களையுமே பார்க்கவில்லை....பார்க்க முயற்ச்சிக்கிறேன்....

bandhu said...

நீங்கள் சொல்லியிருப்பது அவ்வளவும் நூற்றுக்கு நூறு உண்மை! இது போன்ற உருவல் படங்கள் வெற்றி பெறுவது நல்லதல்ல!

உலக சினிமா ரசிகன் said...

தங்கள் கோபம் மிக நியாயமானது.
இப்படத்தின் வெற்றி சுயமாக சிந்திப்பதை முடமாக்கி விடும்.

ஆகுலன் said...

நல்ல கோபத்தில் இருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.....

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

அசோக் உங்களின் இந்த கருத்தோடு மட்டும் உடன்படுகிரேன் ஆனால் உங்களின் அரசியல் கருத்துகளோடு உடன்பாடு இல்லை.

சமுத்ரா said...

அருமை

Jayadev Das said...

அருமையான பதிவு. சூப்பர்.

\\தெய்வத்திருமகன் இயக்குனரிடம் சில கேள்விகள். அதெப்படி இணையத்தின் மூலம் உலகம் கையளவு சுருங்கியிருப்பது தெரிந்தும் தைரியமாக ஒரு படத்தை, அதுவும் ஆங்கிலப்படத்தைக் காப்பி அடிக்க முடிகிறது?\\\ 98% மக்களுக்கு இன்னமும் இணைய இணைப்பு இல்லை என்ற தைரியம்தான். மேலும், இணையத்தை பயன்படுத்துபவர்களிலும், பலருக்கு பிளாக்குகள் இருப்பதும் தெரியாது!!

karurkirukkan said...

best analysis,best writting.thanks.

deesuresh said...

நேற்றிரவு தான் தெய்வத் திருமகள் பார்த்தேன்..!! நிச்சயம் நல்ல படம் தான்..!! மாற்றுக் கருத்து இல்லை..!! ஆனால் அசோக் நீ சொல்வது போல் யூ ட்யூபில் "ஐ அம் சாம்" இன் சில காட்சிகளையும் பார்த்தேன்..!! கொஞ்சம் கூட மாற்றமில்லாத காட்சிகள்..!! உலக சினிமாக்களில் நல்ல சினிமாக்களை தமிழுக்கு அறிமுகப் படுத்திய விஜய்க்கு நன்றி சொல்லலாம் என்றால், அது என் சொந்தக் கதைஎன்று சொல்லும் போது, ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..!!
இன்ஸ்பிரேஷன், நன்றி என்றாவது ஒரு வார்த்தை அந்த ஆங்கிலப் படத்துக்குப் போட்டிருக்க வேண்டும்..!! ஏற்கனவே ஒரு இந்திப் படம் வேறு இதே போல் வந்திருக்கும் போது, சும்மா, சொந்தக் கதை என்று சூனியம் வைத்துக் கொள்வது நல்லதல்ல

நிதி said...

அருமையான பதிவு

Nesan said...

சரியான ஆய்வு நண்பரே காப்பியடித்தே கதைவிடும் தமிழ் சினிமா!

Anonymous said...

காப்பி அடித்து விட்டான், திருடி விட்டான் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அன்பர்களுக்கு,
நான் 2 விஷங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. முதலில் சொல்லுங்கள் எது திருட்டு.
நாம் பாடசாலையில் பயிலும் கல்வி ஆசிரியரின் சொந்த புத்தியில் வருவாதா? யாரோ எழுதியதைதானே உமிழ்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குப்பெயர் திருட்டா?
நாம் உண்ணும் உணவு அம்மாவின் சொந்த சிந்தனையில் வடித்ததா? ஏற்கனவே இருப்பதைதானே மாற்றி சமைக்கிறார் இது திருட்டா? இதுவரை சினிமாவில் காட்டாத விஷயங்களை காட்ட வேண்டும் என்று ஆசை பட்டால் அது பேராசை.
2. தமிழ்திருமகள் என்று ஒரு படம் வாராமல்போய் இருந்தால் நம்மில் எந்தனை பேருக்கு I Am Sam பற்றி தெரிந்து இருக்கும். இன்று இதை திருட்டு என்று கதறிக்கொண்டு இருக்கும் 95% பேருக்கு, I Am Sam என்று ஒரு படம் வந்து இருப்பதே தெரிந்திருக்காது. உலகில் உள்ள நல்ல படங்களை பார்த்துவிட வேண்டும் சல்லடை போட்டு தேடும் உலகபட மேதாவிகளா நாம்?பொழுதுபோக்கிற்காக சினிமா பார்க்கும் சாதாரண இரசிகர்கள்.

இது ஒரு படத்தின் காப்பி என்பதை, நம் மக்கள் கண்டுபிடித்துவிட மாட்டார்கள் என என்னும் அளவிற்கு இயக்குனர் ஒன்றும் அறிவில்லாதவர் அல்ல. சொல்லப்போனால் உலகப்படம் என்ன உள்நாட்டிலேயே ஹிந்தியில் ஏற்கனவே எடுத்து விட்டார்கள். அதையும் மீறிதான் நமக்காக, நம் மொழியில், நம் இசையில், நம் சுவையில், நம் ரசனை மேம்பட இதைபோன்றதொறு படைப்பை அளித்திருக்கிறார். அமெரிக்காகாரன் பார்த்து காரி துப்புவதற்கோ, லண்டன் காரன் கெக்கலிப்பதற்கோ நாம் படம் எடுக்கவில்லை. ஒரு நல்ல படைப்பு தந்தால் பாராட்டுவதை விடுத்து எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து நக்கீரன் பரம்பரை என்பதை நிருபிப்பதில் நம் தமிழன் கில்லாடிதான்.
PRABHUSHANKAR.A

Katz said...

//98% மக்களுக்கு இன்னமும் இணைய இணைப்பு இல்லை என்ற தைரியம்தான். மேலும், இணையத்தை பயன்படுத்துபவர்களிலும், பலருக்கு பிளாக்குகள் இருப்பதும் தெரியாது!! //

மிகச் சரி.

Jayadev Das said...

@PRABHUSHANKAR.A

இந்தப் பதிவில் என்ன சொல்லியுள்ளார் என்பதையே புரிந்து கொள்ளாமல் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். இதற்க்கு முன்னரே வந்த ஒரு திரைப் படத்தை வைத்து இன்னொரு மொழியில் திரைப்படம் எடுப்பதை தவறு என்று யாரும் சொல்லவில்லை. கஷ்டப் பட்டு எவனோ எடுத்த படத்தை உரிய அனுமதி பெறாமல் லவட்டி படத்தை எடுத்துவிட்டு, அதற்க்கு பாராட்டு விழா எடுப்பதும், தேசிய விருது கொடுத்துக் கொள்வதும், வெளிநாட்டு திரைப் படவிழாக்களுக்கும் விருதுகளுக்கும் அனுப்பி வைத்தல், இதெல்லாம் தான் தவறு என்று பதிவர் சொல்லியுள்ளார். இது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதை. இப்படி திருடப் பட்ட கதை என்று தெரிந்த பின்னர் விஜய், விக்ரம் மீதிருந்த மதிப்பே போய் விட்டது, மேலும் நந்தலாலா திருடப் பட்ட கதை என்ற செய்தி முன்னரே அறிந்தபடியால், அந்தப் படத்தின் மீதே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியது, படத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை, இவர்கள் படத்தை உரிய அனுமதியோடு எடுத்தால் யாரும் இவர்களைக் குறை சொல்லப் போவதில்லை.

Don Ashok said...

@jayadev
மிக்க நன்றி தோழர். இதை நான் சொல்லி சொல்லி அலுத்துப்போய்விட்டேன். சரி விரிவாக எழுதலாம் என்றுதான் பதிவாய் போட்டேன், அதிலும் அதே கேள்வியை கேட்கிறார்கள். :-(

Tamil Stories in Tamil said...

உங்களது கருத்துக்கள் அதிங்கபிரசங்கி தனமாக இருக்கிறது... ஒரு கலைஞனின் தவறை சுட்டிகாட்டுவதில் தவறில்லை... அதுக்காக குரங்கு சேஷ்டை, காறித்துப்புவார்கள் என்றெல்லாம் எழுதக்கூடாது... நானும் கணிப்பொறி துறையில் பணியாற்றுபவன். "தெய்வதிருமகள்" (நீங்கள் தெய்வத்திருமகன் என்று எழுதி இருக்குறீர்கள். இதையே உங்களால் பிழை இல்லாமல் எழுதமுடியவில்லை) படத்தை பார்த்த பிறகுதான் எனக்கு "I Am Sam" என்று ஒரு படம் இருப்பதே எனக்கு தெரியும்.. என்னைபோல கோடிகணக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நாங்கள் சர்வதேச விருதை பற்றி கவலை படுவதில்லை. அடுத்தவர்களது மனதை புண்படுத்தாமல் எடுத்துசொல்லும் எந்த கருத்தும் வரவேற்க்கதக்கது... நான் சொன்ன கருத்து தவறாக தெரிந்தால் மன்னிக்கவும்,

Anonymous said...

நல்ல தேர்ந்த விமர்சனம் நண்பரே!.... ஆனாலும் விக்ரமின் அசாத்திய திறமையை குறைத்து மதிப்பிட முடியாது... எத்தனை பேரால் காப்பி அடித்தாலும் அவ்வாறு நடிக்க முடியும்?!!

Pradeep S said...

மீள் உருவாக்கம் குற்ரம் அல்ல என்பது என் கருத்து. எல்லா இந்தியருக்கும் தெரிந்த மஹா பாரதத்தின் கர்ணன் கதை தான் தளபதி, கோட் பாதர் என்னும் உலக புகழ் பெட்ட்ரபடத்தின் தழுவல் தான் நாயகன்,இந்த படம் நியூயார்க் டைம்ஸ் நூற்றாண்டின் சிறந்த படைகளில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.. ஒக்கடு என்ற கில்லி இன் வெற்றியும் soldier என்ற வில்லு படு தோல்விக்கும் கரணம் அவை
மீள் உருவாக்கம் என்பதால் அல்ல அவை எடுக்கப்படும் விதமும் தரமும் பொருட்டே அமையும்.

Azar said...

@PRABHUSHANKAR.A
//2. தமிழ்திருமகள் என்று ஒரு படம் வாராமல்போய் இருந்தால்// SUPERRRRR

Azar said...

@PRABHUSHANKAR.A
//2. தமிழ்திருமகள் என்று ஒரு படம் வாராமல்போய் இருந்தால்// SUPERRRRR

Anonymous said...

bt v remake masala movies frm telugu! stil ppl like n make t a hit without sayn a word.. ths kinda movis r to be encouragd.. atlst seein them ppl's taste wil improv n film makers wud b drivn to produce good ones..

www.vikkee.com said...

Everyone is welcoming the movie and cricizing the author for giving the rant.

if you don't understand tamil, i repeat in engilsh: His point is not stealing it, but stealing it without giving credit to the source.

@கணிப்பொறி துறையில் பணியாற்றுபவன்:
I ask you one question: "If any of your team member takes the program you wrote, and claims to the manager that he completed the work, won't you feel cheated?"

What Vijay did is as same as that.

It will be nice if they added one single line to the credits section: "Inspired by I AM SAM".

I don;t know hw many of u know 3 IDIOTS was partly stolen from Chetan bhagat's FIVE POINT SOMEONE book. After huge fight, they got that book name to the credits.

naveen said...

hello this film already copied by bollywood with ajay devgan as hero so long back, this is bit late here....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ராணி பத்திரிக்கை கூட இது சாம் படத்தின் தழுவல் என விமர்சனம் போட்டுள்ளது

நிதி said...

Remake படங்களுக்கு நாம் அதரவு தரக்கூடாது காவலன் படத்துக்கு கொடுத்த ஆதரவின் விளைவு இப்போது நடிகர் விஜய் நடிக்கும் படம் அனைத்தும் பிற மொழியில் வந்த படங்கள் தான். இப்படி எடுக்கும் படத்தில் ஒரு காட்சி கூட தாய் படத்தில் இருந்து மாறுவது இல்லை காரணம் அதை மாற்றி படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது இப்படி எல்லாம் நடிக்க வேண்டுமா? அல்லது இப்படி எல்லாம் இயக்க வேண்டுமா?. Ok அப்படி நடிப்பவர்கள் எல்லாம் நாங்கள் அதை செய்தோம் இதை செய்தோம் என்று TV யில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சொல்ல கூடாது

Anonymous said...

antha kulandaiyin perai kuda copy adithu irukurargal
lucy diamond=nila

vanji.k.thangamani said...

தயவு செய்து இந்த திரைப்படத்தை குறை சொல்லாதீர்கள்.ஏன்னா?நீங்க சொல்லுற 'i am sam' திரைப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட்டாலும் எங்க கிராமத்து ஜனங்களுக்கு புரியாது.அவங்களுக்கு இணையதளத்துல படம் பார்க்கவும் தெரியாது.விக்ரமும், விஜயும் ஏன்?படத்தில் எல்லாருமே நல்லா உழைத்திருக்கிறார்கள்.அதற்காக பாராட்டுங்கள்.

சாணக்கியன் said...

தெய்வத்திருமகள் பார்த்துவிட்டு i am sam பார்த்தேன். கண்டிப்பாக தெய்வத்திருமகள் ஒரு முழுக்காப்பி அல்ல!. அருமையாக localize செய்து எடுக்கப்பட்டிருக்கிற ஒரு adoption movie. ஷூ வாங்கப் போவது, படிக்கட்டில் தடுக்கி விழுவது போன்ற காட்சிகளை மட்டும் சுடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... கண்டிப்பாக மூல இயக்குநர் பார்த்தால் பாராட்டுவார். மேலும் ஆங்கிலத்தில் அது கொஞ்சம் சீரியஸான அறிவுப்பூர்வமான படம். இங்கே அதை சூழலுக்கேற்ப உணர்வுப்பூர்வமான படமாக மாற்றியிருக்கிறார்....

JeYa said...

/Iam Samஐ பணம் கொடுத்து உரிமைபெற்றிருக்க வேண்டாம்//

தெய்வத்திருமகள் படம் திரையிட முன் 10 நாட்களுக்கு முன்னே I am SAm திரைப்படத்தை எடுத்த நிறுவனத்துக்கு 10 கோடி கேட்டு பின் 2.5 கோடி ரூபாய் குடுத்ததாக செய்திகளில் அறிந்தேன்..

தெரியாமல் காப்பி பண்ணி செய்கிற படங்களாப்பற்றி எழுத மாட்டீர்கள்.. காப்பிக்கு காசு குடுத்து எடுக்கிற படங்களைப்பற்றி எழுதுகிறீர்கள்.. இதுவரை யாரும் வெளிநாட்டுப்படங்களுக்கு றீமேக் காசு குடுத்ததாக கேள்விப்படவும் இல்லை..

Related Posts Plugin for WordPress, Blogger...