Saturday, July 9, 2011

ஹரியின் வேங்கை. அதே டெய்லர் அதே வாடகை!

"சிங்கம் வந்து சக்கப்போடு போட்டு சில மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள எப்படிடா இந்தாளு கதை எழுதி, திரைக்கதை எழுதி, படம்புடிச்சு அடுத்தப் படத்தையும் வெளியிட்ருக்காரு?" இது நான்.

"அதே கதை. அதே திரைக்கதை. சீன் மட்டும் மாத்தி போட்ருக்காரு. இத செய்ய ஒரு மாசம் பத்தாதா?" இது என் தம்பி!

வேங்கை படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்த பேச்சு இது! ஹரி படத்துல என்னென்ன இருக்கும்? வேகமா வசனம் பேசுற ஹீரோ, தாவணி கட்டிய ஹீரோயின், கெத்தான அப்பா கேரக்டர் ஒன்னு, பாசத்தை பொழியிற அம்மா அல்லது பாட்டி, ரொம்ப கெட்டவன் இல்லாத வில்லன் ஒருத்தன் அப்புறம் எல்லாத்துக்கும் மேல அரிவாள். இது எல்லாம் மீண்டும் ஒருமுறை சரியான விகிதத்துல கலந்து இருக்கும் படம் தான் வேங்கை.

தனுஷ் நல்லா வசனம் பேசுறாரு. உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடங்களில் சூப்பரா நடிக்கிறாரு. ஆனா அவரை விட பத்து மடங்கு கனமாக இருக்கும் பெரிய பெரிய குண்டர்களையும், ரவுடிகளையும் சண்டைக்காட்சிகள்ல தூக்கி வீசுறப்ப நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு!
வழக்கமா ஹரி பட கதாநாயகிகள் பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற மொக்கையா இருக்க மாட்டாங்க. தமன்னாக்கும் இந்தப் படத்துல முக்கியமான காட்சிகள் இருக்கு. அவரும் நடிக்கிறாரு. ஆனா படத்தோட நேட்டிவிட்டி (Nativity) அவரால் பாதிக்கப்படுது. கருப்புத் தோலில் தெரியும் வெள்ளை தேமல் மாதிரி ஒட்டாமல் இருக்கிறார்.

ராஜ்கிரண் வழக்கம் போல சூப்பர்! சண்டைக்கோழில நடித்த அதே கதாப்பாத்திரம். கைவந்த கலையா நடிக்கிறாரு. தனுஷை காப்பாற்ற போராடும் இடங்கள் அருமை. "நான் பாண்டிச்சேரில இருக்கேன்"னு பொன்னம்பலம் பொய் சொல்றப்ப, "டேய் லேண்ட்லைன்ல இருந்து எனக்கு இப்ப ஃபோன் பண்ணு"னு ராஜ்கிரண் சொல்ற இடம் செம!

இசையைப் பத்தி சொல்ல ஒன்னும் இல்ல. நம்ம தல DSP கொஞ்சம் மொக்க போட்ருக்காரு. ரெண்டு பாடல் பரவால்ல. படத்தோட போஸ்டர்ல பிரகாஷ்ராஜை பாக்குறப்ப எரிச்சலா இருந்துச்சு! இந்தாளு எத்தனத் தடவதான் இதே மாதிரி நடிப்பாருன்னு! ஆனா படம் பாக்குறப்ப இப்படி ஒரு வில்லனை பிரகாஷ்ராஜ் தவிர வேற யாருனாலயும் திரைல கொண்டு வர முடியாது! பிரகாஷ்ராஜ் சூப்பர்! சிங்கம், ஐயா படங்களைவிட இதுல பிரகாஷ்ராஜ் தாறுமாறு!

பெண்களின் உடைகளைப் பற்றி சமூகப்பொறுப்புணர்வுடன் நல்ல கேள்விகளை தமிழ், ஆறு, வேல், இப்போ வேங்கைனு எல்லாப் படத்துலயும் ஒரு காட்சியிலாவது கேள்வி கேட்கிறார் ஹரி. ஆனா எதுக்கு பாடல்கள்ல தன் கதாநாயகிகளை உரிச்சகோழி மாதிரி ஆடவிடுறார்னு தெரில! சிங்கத்துல அனுஷ்கா, இதுல தமன்னா. பாடல் உடைகள் சகிக்கல! ஹரிக்குதான் வெளிச்சம்!

'ஐயா' திரைப்படம் மாதிரியே 'வேல்' திரைப்படம் இருந்துச்சு! 'வேல்' மாதிரியே 'ஆறு' இருந்துச்சு!  சாமி மாதிரியே சிங்கம் இருந்துச்சு! அதுனால என்ன? எல்லாம் நல்லாத்தான இருந்துச்சு! அதே மாதிரி தான் இப்ப வேங்கையும்! ஹரியின் முந்தைய எல்லா படங்களையும் போலவே இருக்கு! பார்த்திபன் வடிவேலுகிட்ட சொல்ற மாதிரி "அதே டெய்லர் அதே வாடகை!" ஆனா எந்த இடத்திலும் சலிப்பு தட்டாம திரைக்கதையை வேகமா நகர்த்தும் இந்த ஃபார்முலாவை அந்தாளு எங்கதான் கத்துக்கிட்டாரோ! படம் செம ஸ்பீடு! ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், தனுஷ், ஹரிக்காக கண்டிப்பா பாக்கலாம்!


8 comments:

Anonymous said...

:) தொடர்ந்து எழுதுங்க

பாலா said...

கடைசி வரி உண்மை. ஹரி படம் என்றாலே படம் பார்க்கும் இரண்டரை மணி நேரம் போவதே தெரியாது. இந்த ஒரு காரணத்துக்குத்தான் ஹரி படம் வெற்றி அடைகிறது.

Jayadev Das said...

\\ஆனா அவரை விட பத்து மடங்கு கனமாக இருக்கும் பெரிய பெரிய குண்டர்களையும், ரவுடிகளையும் சண்டைக்காட்சிகள்ல தூக்கி வீசுறப்ப நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு!\\ஹா ...ஹா ...ஹா ...

dharma said...

Hariyota patankkala Tamil was super film

Thangasivam B.Pharm,M.B.A,DPH said...

NICE.......

நந்தா ஆண்டாள்மகன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா

அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com

Photo's Blog said...

அண்ணா ஹசாரே போல ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணுர ராஜ்கிரன் & கோ , அவங்க சொந்தகாரான லிவ்விங்ஸ்டன் செய்யுற கோல்மால் வேலைகளைப் பற்றியோ - தன் காதலி குடும்பத்துக்கு மட்டும் காசு வாங்கிகொடுக்கும் ஹீரோவோ பத்தியோ, சாதி பெரும பேசுரது பத்தியோ.... விட்டுடிங்களே பாஸீ... நடிப்பு பத்தி சொல்லி இருக்கிங்க.. கதைய பத்தியும் சொல்லி இருக்கலாம் பாஸ்.... தொடர்ந்து சாதிப் பெருமைகளை பேசித்திரியும் இவன் போன்ற ஆட்களுக்கு இப்படி ஆதரவாக உங்களைப் போன்ற தோழமைகள் எழுதுவது வேதனையை அளிக்கிறது சார்.

Related Posts Plugin for WordPress, Blogger...