Thursday, July 7, 2011

180 - எ கி.மு180 ஸ்டோரி.

அதெப்படிப்பா? அதே பழைய மோரை திருப்பி திருப்பி வேற வேற டம்ளர்ல ஊத்தி கொடுத்துட்டே இருக்கீங்க, மக்களும் குடிச்சுட்டே இருக்கோம்? வாழ்வே மாயம்ல இருந்து சாருக்கானின் கல்ஹோனாஹோ வரை அரைச்சு அரைச்சு தண்ணியா போன மாவை எடுத்து சித்தார்த்தைப் போட்டு திரும்ப அரைச்சிருக்காரு இயக்குனர் ஜெயேந்திரா. 180 திரைப்படத்தின் கதை, கிமு180 ஆம் ஆண்டில் எகிப்திய மன்னர்களின் அரண்மனையில் நடத்தப்பட்ட நாடகங்களுக்காக உருவாக்கப்பட்ட பழைய கதை! (இன்னொரு முக்கியமான விஷயம். இந்த படத்தை சில பேரு Fantasy genre அது இதுனு சொல்லிட்டு அலையிறாங்க. எமன் வேஷத்துல ஒருத்தன் ஒரு சீன்ல வந்தா அந்த படம் Fantasy ஆயிருமா? என்ன கொடுமை சார் இது!)

சில இயக்குனர்களுக்கு கதை எப்படி இருந்தாலும் பரவால்ல அழகழகா லோகேஷன் காமிச்சு, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒவ்வொரு காட்சியும் புகைப்படம் மாதிரி கொடுத்தா மக்கள் கதையில், காட்சியில் இருக்கும் கேவலங்களை சகிச்சுக்குவாங்கனு தைரியம். இந்த பட இயக்குனர் ஜெயேந்திராவுக்கும் அதே தைரியம் தான். படம் திரைப்படம் மாதிரி இல்ல. ஒரு பிரபல புகைப்படக்கலைஞரின் புகைப்பட ஆல்பத்தை பார்த்த மாதிரி இருக்கு.

பாடல்கள்? பாடல்கள் எனக்கு நியாபகம் இல்ல. ஆனா "நீ கூறினால்"னு ஒரு பாடல் ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பிச்சுச்சு. ஆனா இடைல எங்கயோ போயி, எங்கயோ வளைஞ்சு காணாம போயிருச்சு. எல்லா பாட்டுமே இசையமைக்கும் போது இசைஅமைப்பாளர் பாதில எந்திருச்சுப் போயிட்டு திரும்பி வந்து இசையமைச்ச மாதிரி விட்டகுறை தொட்டகுறையா இருக்கு.

சித்தார்த்! கதாப்பாத்திரத்துக்கு அருமையான தேர்வு. அந்தாளு படத்தோட முதல் பாதில அளவுக்கதிகமான சந்தோசத்தோட லூசுத்தனமா அலையும் போதே, ரெண்டாவது பாதில ஆள் காலி ஆகப் போறாருனு தெளிவா தெரியுது. எல்லாமே மிகைப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்கள். கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள் யாருமே நம்ம தினசரி சந்திக்கும் நபர்கள் போல இல்ல. சினிமாத்தனம் மிதமிஞ்சி நிக்குது! இரண்டு கதாநாயகிகளில் நல்லா நடிச்சிருக்குறது நித்யா மேனன். பிரியா ஆனந்தின் கதாப்பாத்திரம் ஸ்டீரியோ டைப் லூசு கதாநாயகி. கொஞ்சி கொஞ்சி பேசிட்டே மொக்க போட்றாங்க. எரிச்சலா வருது!

ஒளிப்பதிவு. இந்த ஒன்னுக்காகவே படம் பாக்கலாம். மிக அருமை. அதும் முதல் பாடலில் ஒவ்வொரு காட்சியும் அழகு. (ஆனா பாட்டு செம்ம்ம்ம்ம்ம மொக்க). இன்னொரு முக்கியமான விஷயம் இந்த படத்தில் ரெட் காமிரா (Red Digital Camera) பயன்படுத்தியிருக்காங்க. ஏற்கனவே இந்த காமிரா அச்சமுண்டு அச்சமுண்டு படத்துல உபயோகிச்சிருந்தாங்க. ஆனா இவ்வளவு அழகா இந்த காமிரா படம் புடிக்கும்னு இந்த படத்துலதான் தெரியுது. Red Camera எல்லாருக்கும் கிடைச்சா குறைந்த பட்ஜெட்ல நல்ல தரமான படங்களை எடுக்கலாம். 

படத்தைப் பத்தி அவ்வளவுதான். மேல சொன்னதையெல்லாம் கூட்டி கழிச்சு பாருங்க. கூட்டல் தொகை '+'ல வந்தா படம் பாருங்க. இல்லேனா நெட்ல எதாச்சும் இயற்கை காட்சிகள் ஆல்பம் இருந்தா புரட்டி பாருங்க!


7 comments:

Niroo said...

vadai

bandhu said...

// எல்லாமே மிகைப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்கள். கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள் யாருமே நம்ம தினசரி சந்திக்கும் நபர்கள் போல இல்ல. சினிமாத்தனம் மிதமிஞ்சி நிக்குது!//
இது ராஜீவ் மேனன் (மின்சாரக்கனவு), ஜீவா (உள்ளம் கேட்குமே மோர்), மணிரத்னம் (பல படங்கள்) போன்ற பலருக்கு பொருந்தும்! இந்த படத்திலேருந்து மீ தி எஸ்கேப்!

முத்துசிவா said...

//இந்த படத்தை சில பேரு Fantasy genre அது இதுனு சொல்லிட்டு அலையிறாங்க.//

machi avaru engada fantacy nnu sonnaru... pendacy nnu sollirunthaaru.. neethan thappa purinjikitta....

//vadai//

machi unnoda blog layum virus vanthuruchi da... paathukka

Yaani said...

பாஸ் . நீங்க சாருக்கின் கல் கோனா ஹே உண்மையிலேயே பார்த்தீர்களா இல்லை யாரும் சொல்ல கேள்விப்பட்டீங்களா. நாயகர்கள் இருவரும் நேயாளிகள் என்பது மட்டும்தான் இதில் ஒற்றுமை. நீங்கள் சொல்வது எப்படியுள்ளது என்றால் கருணா நிதியும் ஊழல் செய்துள்ளார். ஜெயலலிதாவும் ஊழ்ல் செய்துள்ளார் . மன்மோகனும் ஊழல் செய்துள்ளர்ர் . ஆகவே இவர்கள் மூவரும் ஒருவர் என்பது போல் உள்ளது.

Niroo said...

virus?

smfriend said...

நான் உங்கள் எழுத்துக்களை விரும்பி வாசிக்கும் ஒருவர். இன்றைய நாட்க்களில் எதையுமே குறைகளின் பக்கத்தில் இருந்து விமர்சிக்கும் பலரில் நீங்களும் ஒருவராகி விட்டீர்கள் .
100 % புதியகதைகள் என்ற பெயரில் வரும் சில அசிங்கமான கதைக்கருப்படங்களை விட 1000 % மேலான படமிது .எல்லாமே புதிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பர்ர்கும் உங்களைபோன்றவர்களின் எதிர்பார்ப்பு எவ்வளவிற்கு சரி என்று தெரியவில்லை.உண்மையில் நீங்கள் சொன்ன முந்தய படங்களின் கதையின் கருவுடன் பெருமளவு இணைந்து போனாலும் படத்தை பார்க்கும் போது பெரிதாக அந்த உணர்வு எழவில்லை.
உண்மையில நீங்க படங்களில் எதை எதிர்பார்கிறீர்கள் என்று என்று புரியவில்லை.
பாடல்களில் ஒரு செழுமை தெரிவதுடன்..ஒவ்வெரு பாடல்களு வெவ்வேறு வகையான உணர்வையே தருகிறது.இரைச்சல் இல்லை.கத்தல் இல்லை.
இந்தபடத்தில் குரிப்பிடப்படகுடிய விடயங்கள் பல இருக்கும் பொது நீங்கள் குறைகளை பெரிதாக எடுத்துக்காட்டி இருப்பது சரியில்லை .

கழுகு said...

One of the very very worst movie i had seen in the recent times.,.

Related Posts Plugin for WordPress, Blogger...