Tuesday, June 21, 2011

எலி நேகட் ரன்னிங்! எ சாரு நிவேதிதா ஸ்டோரி!

இலக்கிய உலகின் ப்ளேபாய், விடலைப் பையன், தீராத விளையாட்டுப்பிள்ளை, ரெமி மார்டின் சரக்கின் உலக வினியோகஸ்தர், ஆணழகர் சாரு பற்றி இப்ப ஒரு ஆபாச சாட் சர்ச்சை கிளம்பிருக்கு. அந்தாளு chat பண்ணா ஆபாசமா தான இருக்கும் அப்புறம் அதுல என்ன தனியா ஒரு 'ஆபாச சாட்'னு உங்கள மாதிரிதான் நானும் நினைச்சேன். விஷயம் என்னன்னா, இணையத்துல இலக்கிய ஆர்வ மிகுதில கவிதை எழுதிட்டிருந்த ஒரு பொண்ணு  நம்ம சாரு அண்ணனை இலக்கிய உலகத்தின் மேதைனு நினைச்சு ஆர்வத்துல அவருகூட பேசிருக்கு. அண்ணனும் ஆரம்பத்துல நல்லா பேசி கரக்ட் பண்றதுக்கு சாம-தான-பேத தண்டங்களையும் உபயோகிச்சிருக்காரு. ஆபாசமக கொஞ்சிக்கூட பார்த்திருக்காரு. கடைசில ஒன்னும் வொர்க் அவுட் ஆகலேனு தெரிஞ்சவுடன அந்த பொண்ணப்பத்தி சில நாட்களுக்கு முன் புகழ்ந்து தள்ளுன அவரோட அதே facebook pageல தரக்குறைவா திட்டிருக்காரு. இப்ப அந்த பொண்ணு பாவம் முகநூலை விட்டே போயிருச்சு!

இதையெல்லாம் எழுத்தாளர் தோழி தமிழச்சி தன் தளத்தில் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்த ஆதாரங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் தான். யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் இவ்வாற அவதூறுகளை பரப்ப முடியும் தான். அது வெகு சுலபமும் கூட! ஆனால் இங்கே சர்ச்சயில் சிக்கியிருப்பது போப் ஆண்டவரல்ல. கிடைத்த கேப்பில் எல்லாம் கிடாய் வெட்டும் அண்ணன் 'கேப் ஆண்டவர்'. இவர் மேல் குற்றம் சாட்ட நமக்கு விக்கிலீக்ஸ் எல்லாம் தேவை இல்லை. இவர் தளத்தில் உள்ள இவரின் எழுத்துக்களை(??) அவ்வப்போது படிக்கும் சராசரி வாசகன் இவர் மீது வைத்திருக்கும்  எண்ண ஓட்டம் போதும்.

சாருவின் தளத்தை அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சிலருக்கு தெரியும், எந்திரன் படத்துக்கு தனக்கு முதல் காட்சி டிக்கெட் கிடைக்கவில்லையென்பதால் அந்தப் படத்தைப் பற்றி சாரு என்னென்ன உளறினார், பிதற்றினார் என்று. விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தனக்கு சன்மானம் கொடுக்கவில்லையென்பதால் நீயா-நானா நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் புலம்பிக்கொண்டே இருந்தார். பொதுவாக இவர் எழுத்துக்களில் எல்லாம் ஒரு அசாதாரணம் தெரியும். பொதுவாக மிகச்சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கொஞ்சம் eccentric ஆக இருப்பார்கள், அவர்கள் படைப்புகளிலும் அது வெளிப்படும். ஆனால் அது மேன்மைத்தனமாய், மேதாவித்தனமாய், அறிவாளித்தனமாய் இருக்குமேயொழிய அல்பத்தனமாய் இராது. சாருவின் கட்டுரைகளில் வெளிப்படும் அசாதாரணத்தை நாம் 'eccentric' வகையறாவில் சேர்க்க முடியாது. அல்பம் வகையில் தான் அவை சேரும்! தனக்கு அது கிடைக்கவில்லையே என்ற கடுப்பில், வெறுப்பில் மணலை அள்ளிவாரி தூற்றும் ஒரு கேவலமான மூன்றாம் தர கோபமே அதில் வெளிப்படும். நான் மேற்சொன்ன எந்திரன், நீயாநானா கட்டுரைகள் அதற்கு உதாரணம். அதே போன்ற ஆற்றாமையை தான் கவிதை எழுதிய பெண்ணிடமும் காட்டியுள்ளார் சாரு.

சாருவின் தளத்தில் அந்தப் பெண்ணைப் பற்றி அவர் எழுதிய போதே, "என்னடா எலி அம்மணமா ஒடுதே"னு எனக்கு தோன்றியது. (அந்தப் பெண், சாரு தன்னை புகழ்ந்தது பற்றி பெருமையாக அவரது முகநூல் பக்கத்தில் சிலாகித்திருந்தது தனிக்கதை) அம்மணமாய் ஓடியதற்கான காரணத்தை தான் இப்போது தமிழச்சி அம்பலப்படுத்தியுள்ளார்.  அந்தப் பெண் சாருவின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவரை தன் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியவுடன் சாருவின் 'புலம்பல் பூதம்' வெளிவந்து தன் வேலையை ஆரம்பித்திருக்கிறது. அதனால் ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை, சாருவின் முந்தைய கட்டுரைகளில் தேங்கிக்கிடக்கும் முரண்களையும், அம்முரண்களுக்கான காரணத்தையும் பார்த்தாலே போதும்.

இந்த சர்ச்சை ஒன்றும் சாருவின் இலக்கியவாழ்வை(???) அசைத்துப்பார்க்கப் போகும், அவர் வாசகர் வட்டத்தை குறைக்கப் போகும் சர்ச்சை அல்ல. சகீலா படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கிறார் என்பதற்காக அவரது ரசிகர் கூட்டம் குறைந்துவிடுமா என்ன? அதுபோல் தான் இதுவும்.  சகீலாவும் நடிகை, அவரை பலருக்குப் பிடிக்கும் என்பதற்காக அகாடெமி அவார்டை அவருக்கு கொடுக்க முடியுமா? இவரும் எழுதுகிறார் என்பதற்காக இவரை இலக்கியவாதி என்பதா? அவரை பெரிய தமிழ் இலக்கிய உலகின் மன்னனைப் போல் அவர் வாசகர்கள் அவரை தூக்கிக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு அவர் 'என்னவோ' அதை மட்டுமே வெளியே கொண்டாட வேண்டும்.

சாரு போன்ற ஒரு 'பச்சை'க்குழந்தையின் சேட்டையைப் பார்த்து அந்தப் பெண் இணையத்தில் எழுதுவதை நிறுத்தியிருக்கத் தேவையில்லை.  பெண்கள் மேல் சாரு போன்றவர்கள் நிகழ்த்தும் இந்த பாலியல் ரீதியான எழுத்து வன்முறையை வீழ்த்தவாவது தொடர்ந்து அந்தப் பெண் எழுதவேண்டும்.

கட்டுரைக்கு சம்பந்தப்பட்ட சுட்டிகள்:

சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!

சாரு என்ற காமெடி பீஸ்.
 

12 comments:

Anonymous said...

மிகவும் கேவலமான ஒரு செயல் இது... அதே போல ஒருவருடைய பேச்சு சரி இல்லை என்றால் ஆரம்பத்திலேயே "அந்த பெண்" வன்மையாக கண்டித்திருக்க வேண்டும்...நாளுக்கு நாள் சாருவின் பேச்சு ஆபாசமாக இருப்பதை நாமே உணரும் பொழுது அந்த பெண்ணும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாரு- நித்தியானந்தாவுக்குத் துள்ளிய துள்ளைக் குறிப்படவில்லை. இத்தனைக்கும் நித்தி - பெருவிரலால்
தனக்கு நெற்றியில் அழுத்தியதும்,அன்றிலிருந்து "அது" வேலை செய்யவில்லை என எழுதி; நித்தி புகழ் பரப்பியவர், இப்போ இப்பெண்ணின் படம் பார்த்ததும், அது வேலை செய்ததாம்.
இவர் நல்ல மனநலமருத்துவரைச் சந்திப்பது மேல்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

No Ila, it can be proved. Have you seen online tutorials for sotware applications where all the user interaction (mouse movements, voice etc) are captured.

Similarly once you go to girls inbox and click Charu's name, it will take to his FB page and no one can deny it. It can all be captured as a video. Am i making sense?

The person who made Charu video might have had access to the girl's FB inbox.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

No Ila, it can be proved. Have you seen online tutorials for sotware applications where all the user interaction (mouse movements, voice etc) are captured.

Similarly once you go to girls inbox and click Charu's name, it will take to his FB page and no one can deny it. It can all be captured as a video. Am i making sense?

The person who made Charu video might have had access to the girl's FB inbox.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

ஆயிரம் இருந்தாலும்...

தெலுகு கேர்ள்ஸ் தான் ரொம்ப அழகா இருப்பாங்கன்னு உன்மையை(!!!!!) சொன்னதற்காக அகில இந்திய தெலங்கான முன்னேற்ற கழகம் சார்பா அன்னாத்தேக்கு வனக்கம் வச்சிகிறோம் பா...

jayaram said...

hi,

அந்த கர்மத்தை பார்த்த போது எனக்குள் தோன்றிய கருத்து இது தான் .. தவறோ சரியோ ...சொல்ல முற்படுகிறேன்... அதற்காக அவருக்கு துணை போவதை நினைக்க வேண்டாமே .....
இதற்கு சாரு மட்டுமே பொறுப்பு என்று கூறுவது எவ்வகையில் சரியாகும் ...
சாரு ஒன்றும் அந்த பெண்ணை நாடி சென்று இதை எல்லாம் சொல்லவில்லை ... மேலும் அவர் குறித்து வரும் சர்ச்சைகள் அனைத்துமே மூன்றாம் நான்காம் ரகமா இருக்கும் பட்சத்தில்
இந்த பெண் அல்லவா கவனமாக அவரை கையாண்டு இருக்க வேண்டும்..
அதே போல் ஆண்களை குற்றம் சொல்லும் அனைத்து பெண்களையும் பார்த்து தான் சொல்லுகிறேன்... தவறுகளுக்கு வழி வகுத்து விட்டு பின்னர் பழியை தூக்கி ஆண்கள் தலையில் போடுவது மட்டும் எவ்வகையில் சரி?

Don Ashok said...

சொன்னதற்காக அகில இந்திய தெலங்கான முன்னேற்ற கழகம் சார்பா அன்னாத்தேக்கு வனக்கம் வச்சிகிறோம் பா...///
நாம் தமிழர் கட்சி ப்ளீஸ் நோட் இட்!

சுடரகன்: சிவா முருகையா said...

This guy (i mean idiot) is very proud about his skill of child abuse. he wrote about it proudly. Furthermore, he is Nithiyananda`s direct seedan (he told this Vijay TV) In contrast, he is so called postmodernist (avare sollikiddaru)

சுடரகன்: சிவா முருகையா said...

This guy (i mean idiot) is very proud about his skill of child abuse. he wrote about it proudly. Furthermore, he is Nithiyananda`s direct seedan (he told this Vijay TV) In contrast, he is so called postmodernist (avare sollikiddaru)

அ.முத்து பிரகாஷ் said...

சாரு போன்றவர்கள் நிகழ்த்தும் வன்முறையை நிறுத்தவாவது அவர் மீண்டும் எழுத வேண்டும்.
மிகச் சரியான புள்ளியில் உங்கள் பதிவு குவிந்திருக்கிறது.மீண்டும் எழுத மட்டுமல்ல சாரு குறித்து புகார் அளிக்கவும் அவர் முன் வர வேண்டும்.
ஜெயேந்திரர் நடந்து கொண்டதற்கும் சாரு நடந்து கொண்டதற்கும் என்ன வித்யாசம்?
நன்றி தோழர்!

சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

வித்யவீணா said...

இதுபோல் எழுதுவதற்கு உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அசோக். சூப்பர்.

ஜம்புலிங்கம் said...

இந்த நாயை தெருநாய்களுக்கு Castration செய்வது போல் செய்தால்தான் என்ன? இத்தனை வயதில் அலையும் இவன்தான் 'ம்' நாவலின் ஹீரோ. பெற்றதையே உண்ணும் பூனை போன்றவன்தான் இவன்.

Related Posts Plugin for WordPress, Blogger...