Friday, June 17, 2011

'வலைபாயுதே'வும் மதிப்புக்குரிய அறிவுத் திருடர்களும்!

24 மணி நேரமும் நெட்லயே உக்காந்து இருக்கவன் கூட இப்பல்லாம் "நம்ம ஸ்டேடஸ் அப்டேட் ஆனந்தவிகடன் வலைபாயுதேல வந்திருக்கா?"னு ஆர்வமா வாரவாரம் வாங்கிப் பாக்குறான்.  நம்ம சாதாரணமா நம்ம Facebook மற்றும் twitterயில் போடும் status updatesயில் சிறந்தவற்றை அவங்களே தேர்ந்தெடுத்து நம் பெயருடன் பிரசுரிக்கிறாங்க. இது நல்ல விஷயம் தான், ஏன்னா நம்ம பேருலாம் கூட ஆனந்தவிகடன்ல வருதே!!

பிரச்சினை இது இல்ல. எப்படியாச்சும் ஆனந்தவிகடனில் வர்ற வலைபாயுதே பகுதில நம்ம இடம் புடிக்கனும்னு சில அல்பர்கள், அல்பிகள் அலையிதுங்க. இதுக்குன்னே ப்ரத்யேகமா உக்காந்து, மூளைய கசக்கிப் புழிஞ்சு, "எப்படி எழுதுனா ஆனந்தவிகடன்"ல செலெக்ட் பண்ணுவாங்கனு யோசிச்சிட்டே இருக்குறது ஒரு வகை.  இந்த வகைகள் தலகீழ தொங்கி கூட யோசிச்சு தொலையட்டும், ஆனா அடுத்தவனோட status updateஐ அப்படியே காபி அடிச்சு அதுங்க பேருல அதுங்க அக்கவுண்ட்ல போட்டுக்குறதுதான் கேவலமா இருக்கு! 

சமீபத்துல என் நண்பர் ராம்குமாரோட 'ஸ்டேடஸ்' வரிகளைத் திருடி, ******ங்குற ஒரு பெண் அவங்க 'ட்விட்டர்'ல போட்ருக்காங்க. அது இந்தவார ஆனந்தவிகடன்ல அந்த பெண்ணின் பேர்ல வந்திருக்கு. என் நண்பர் ராம்குமாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சவுடன என்னை ஃபோன்லகூப்ட்டு ரொம்ப வருத்தப்பட்டாரு.ரொம்ப கேவலமான செயல் அது.

வலைபாயுதேவில் வந்திருக்கும் ஸ்டேடஸ் அப்டேட் இதுதான்.
"
பெண்கள் காதலிச்சாஅந்த பெண்ணை தவிர வேறு எவருக்கும் தெரியாது.ஆண்கள்காதலிச்சாஅவன் காதலிக்கும் பெண்ணைதவிர அனைவருக்கும்தெரியும்" 

இதுபோல் ஏராளமான திருடர்கள் உண்டு! (ஒருமுறை ஒரு இணையம் என் கவிதையை வேறு ஒருவர் பெயரில் வெளியிட்டு பின் உண்மை அறிந்து என்னிடம் மன்னிப்பும் கேட்டது) உலகிலேயே மோசமான திருட்டுன்னா அது அறிவுத்திருட்டு தான். நம்மகிட்ட 100ரூபாய் திருடுனா கூட நமக்கு அவ்ளோ வேதனை இருக்காது ஏன்னா எல்லா 100ரூபாயும் ஒரே மதிப்புதான் எப்பவேணாலும் சம்பாதிச்சுக்கலாம். ஆனா அறிவு அப்படி இல்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி. ரொம்ப தனித்துவமானது. அதை அல்பத்தனமா திருடி உபயோகிச்சு பேரு வாங்குற திருடர்களை என்ன செய்யலாம்? அதுங்களுக்கா அறிவு வந்து திருந்துனா தான் உண்டு! இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களிடம் அனுப்புங்கள். எல்லாரிடமும் பகிரச் சொல்லுங்கள். கொஞ்சமேனும் அவமானப்பட்டால் தான் திருடர்கள் திருந்துவார்கள்!


கொசுறு flashback: ஒருமுறை ஆர்குட்டில் என் நண்பர் யுவன் பிரபாகரனின் 'about me'யை மதிப்புக்குறிய ஒரு திருடர் சுட்டு அவர் profileயில் போட்டுக்கொண்டார். அதுக்கு யுவன் என்ன செய்தார் தெரியுமா? அந்த திருடரின் scrapbookயில் "அண்ணே இப்படி பண்றவங்களை எங்க ஊர்ல விருந்தாளிக்குப் பொறந்தவன்னு சொல்லுவோம்" என்றார். அடுத்த சில நொடிகளிலேயே திருடர் about meஐ மாற்றிவிட்டார்! :-)


23 comments:

Melwin said...

இந்த பொழப்புக்கு நாடு ரோட்ல நின்னு ............................................ 500 , 1000

Anonymous said...

what ever your claim, there is no need to post the profile info's...

Anonymous said...

எண்ணங்களும், சிந்தனைகளும் யாருக்கும் சொந்தமில்லை நண்பா... அப்படியே நடந்திருந்தாலும் தங்களது விமர்சனம் மோசமாக உள்ளது. வன்மையான வார்த்தைகளை தவிர்க்கவும்....

ரமேஷ் ரத்தினசாமி said...

எண்ணங்கலும் சிந்தனைகளும் யாருக்கும் சொந்தமில்லையா? நல்லா இருக்கே கதை. அது ரெண்டு மட்டும் தான் நமக்கு சொந்தம். திருடர்கள் இதுபோல் செய்யும்போது மிக்க வருத்தமாக இருக்கு,. அனுபவித்தால் தான் தெரியும். மூடர்கள்.

அ.முத்து பிரகாஷ் said...

தல! உங்க கோபம் புரியுது.. சில சமயங்களில் எதேச்சையா கூட இப்படி நடக்க வாய்ப்பிருக்கு .. சில எழுத்தாளர்களுக்கு நாவலின் பக்கங்களே ஒத்து போறச்ச 140எழுத்துக்கள் என்பது ஒத்துப் போக சாத்தியங்கள் அதிகம் தான். ஆனாலும் உங்க கோபம் புரியுது... நீங்க இந்த பதிவில் எழுதிய சில வரிகளை இன்னும் இரண்டு நாள் கழிச்சு நீங்களே வாசிக்கும் போது..ச்சே நாம ஏன் இப்படி எழுதினோம்னு கண்டிப்பா உங்களுக்கே தோணும்... வாழ்க்கை இப்படித்தான் போயிட்டிருக்கு நம்ப எல்லோருக்குமே!!....பெரும்பாலும் போன்சாய் மரத்தடியில் தான் நாம உட்கார்ந்திருக்கோம்.

நட்புடன்,

www.twitter.com/AMuthuPrakash

Don Ashok said...

@muthuprakash
எப்படி இவ்ளோ சாதாரணமா சொல்ல முடியுது நண்பா உங்களால? ஆனந்தவிகடன் போன்ற ஒரு வெகுஜன ஊடகத்தில் இந்த திருட்டு வேலைக்கு அங்கீகாரம் கிடைத்ததால் தான் இந்த தாக்கம். என் கோபத்திலும், என் நண்பரின் வருத்தத்திலும் நியாயத்தை உணருங்கள். திருட்டில் என்ன நியாயம் இருக்கப் போகிறது?

Anonymous said...

அனுபவித்தால் தான் தெரியும் என்றால் பாதிக்கப்பட்டவர் பதிவு போடவேண்டியதுதான். தங்களுக்கு என்ன? புத்திசாலிகள்!

Anonymous said...

கருமம் எல்லாத்தையும் திருடுவாங்க போல.. இதுல இவங்கள மரியாதையா தான் திட்டனுமாம் ல... என்ன சார் நியாயம் இது...?? அவன் அவனுக்கு வந்தா தான் தலைவலியும் வயற்றுவலியும் தெரியும்.. பசிக்கு திருடுரவனையே திருடன்னு திட்டுறோம்.. இதுங்க புகழுக்காக திருடுதுங்க இதுங்கள திட்டாம மெட்சிகுவாங்களா...

உமா கிருஷ் said...

நிச்சயம் இந்த குற்றச்சாட்டு பொய்யானது.ஒருவரிடம் குற்றம் சாட்டும் முன்பு அது பற்றி நீங்க செய்தீர்களா என்று கூட கேட்காமல் இப்படி பெரிய அபாண்டமா போட்டிருக்காங்க.நான் முக நூலில் இருக்கிறேன் என்பது உண்மையே.ஆனால் அது அவ்வளவு ஆக்டிவ் ஆக வைத்திருப்பதில்லை.பெயருக்கு முகநூல் வைத்துக்கொண்டு ட்விட்டர் ல எழுதியதை தான் அங்கே பதிவிடுவேன்.அவ்வளவே.ஒரே சிந்தனை வேறு எவருக்கும் வருவதே இல்லையா?எனது நட்பு வட்டத்தில் புதியதாய் இப்பொழுதே இணைந்துள்ள வேறு ஒருவருடைய ஸ்டேட்ஸ் போய் படிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை.யாருடையதையும் திருடி போட வேண்டிய கட்டாயம் இல்லை.டிவிட்டரில் இருக்கும் எனது நெடுநாளைய நண்பர்களுக்கு தெரியும் நான் எப்படி என்று.என்ன எது என்றே தெரியாமல் திரு.அசோக் என்ன சொன்னாலும் நம்பி விடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் போல.எனக்கு என் அறிவு இருக்கு.அதுல என்ன தோணுது அதை எழுதி பேர் வந்தாலும் சரி வராட்டியும்.சரி.இதற்கு முன் இரண்டு தடவை விகடனில் எனது ட்வீட் வந்திருக்கு.மல்லிகை மகள் என்ற புத்தகத்திலும் வந்திருக்கு.போங்க சார்.போய் அந்த ட்வீட் எங்க அதே மாதிரி யார் எழுதி இருக்காங்க என கண்டுபிடித்து உங்களுக்கு ஜால்ரா அடிக்க ஆள் சேர்த்துக்கோங்க.விகடனில் என் நட்பு வட்டத்தில் வேறு எவருடைய ட்வீட் திருடப்பட்டு வந்தால் கூட உடனே அதை நட்பு வட்டத்தில் தெரிவிப்பவள் நான்.வந்து அங்கே கேட்டுபாருங்கள்.பெயருக்குத்தான் முக நூல் வைத்திருக்கிறேனே தவிர இங்கே யார் என் நட்பு வட்டத்தில் புதிதாக இணைந்தவர்களை கூட தெரியாது.உங்களுக்கு அவசியம் தெரியனும் என்றால் உங்கள் நட்பு வட்டத்தில் வெகு நாட்களாக இருக்கும் சுதா சரவன்ஜி அவரிடம் கேளுங்க.என்னை பற்றி.எவருடைய அறிவையும் திருடி பெயர் வாங்கும் அளவிற்கு தரம் இறங்கியவள் நான் கிடையாது.இதற்கு மேல் நம்பறதும் நம்பாததும் உங்க விருப்பம்.என் மனதிற்கு தெரியும்,

உமா கிருஷ் said...

வேறு ஒருவர் கற்பனையை திருடி எழுதற அளவுக்கு என் கற்பனை இன்னும் வறண்டு போகல.எனக்கு முன்னால் அவர் எழுதி இருக்கலாம்.ஆனா அவர் முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கின்றாரா என்று கூட தெரியாது.திரு.அசோக் என்பவரையே நான் இப்போ தான் சேர்த்தேன்.இதுல இவர் நண்பருடைய எழுத்தை நான் பார்த்து எழுதினேன் என்று அபாண்டமா போட்டு இருக்கார்.எனது நண்பர் கொடுத்தார் .இந்த லிங்க் கூட.தாராளமா திட்டுங்க.ஆனா திருடுபவர்களை திட்டுங்கள்.மன்மோகன் ஒரு பொம்மை என்றும் அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வதை ஊரே சொல்லுது.யாரை பார்த்து யார் காப்பி அடிச்சாங்க.அவங்களுக்காக தெரியாதா?இந்த ட்வீட் முழுக்க முழுக்க நான் பார்த்த அனுபவம்.எனது தோழியிடம் அவளை காதலிப்பவன் இவ்வாறே நடந்து கொண்டான்.வாழ்க்கையில் தினம் நடப்பைவகளை ஊன்றி கவனித்தால் போதுமானது.நான் எழுதறது திரும்ப விகடன் ல ஒரு நாள் வரும்.ஏனென்றால் என் எழுத்துக்கள் மீது நம்பிக்கை இருக்கு.அப்பவும் இதே மாதிரி எங்கே எவன் எழுதி இருக்கான் என்று போட்டு தேடுங்க.ஆல் தி பெஸ்ட்.

freeyavudu_mame said...

ஹலோ என்னங்க நீங்க... இப்படி ஓவர் பில்டப் கொடுத்தா அதே ஆனந்த விகடன்லே வந்து பெட்டி எடுத்து கவர்ஸ்டோரி போடுவாங்கன்னு நினைச்சீங்களா?? ஏன் கண்ணதாசன் கருத்துகளை வைரமுத்து வேறு வார்த்தைகளால் சொல்லலியா?? இதே ஜூ.வியில் 'வந்தார்கள் வென்றார்கள்' எழுதிய 'மதன்' என்ன சொந்தமாவோ அல்லது கடந்த காலத்தை போய் பார்த்து விட்டா எழுதினார். பல புத்தகங்களில் உள்ள கருத்துகளை அவர் நடையில் எழுதினார். கொஞ்சம் வார்த்தைகளை மரியாதையாக எழுதுங்கள்.

freeyavudu_mame said...

ஹலோ என்னங்க நீங்க... இப்படி ஓவர் பில்டப் கொடுத்தா அதே ஆனந்த விகடன்லே வந்து பெட்டி எடுத்து கவர்ஸ்டோரி போடுவாங்கன்னு நினைச்சீங்களா?? ஏன் கண்ணதாசன் கருத்துகளை வைரமுத்து வேறு வார்த்தைகளால் சொல்லலியா?? இதே ஜூ.வியில் 'வந்தார்கள் வென்றார்கள்' எழுதிய 'மதன்' என்ன சொந்தமாவோ அல்லது கடந்த காலத்தை போய் பார்த்து விட்டா எழுதினார். பல புத்தகங்களில் உள்ள கருத்துகளை அவர் நடையில் எழுதினார். கொஞ்சம் வார்த்தைகளை மரியாதையாக எழுதுங்கள்.

kunthavai said...

வணக்கம்.
தங்கள் பதிவு கண்டோம். யாருடைய அறிவையோ திருடி யாரோ பெயர் வாங்கி இருக்கிறார்கள் என்று. நன்று.
இது உமாகிருஷ் என்னும் பெண்ணின் பெயரால் வந்ததால் உங்கள் நண்பரிடமிருந்து அவர் திருடினார் என்கிறீர்கள்..இதே உங்கள் நண்பர் பெயரில் வந்து,உமா அதைக் கண்டு உங்கள் நண்பர் அதைத் திருடி அதை தன் பெயரில் போட்டார் என்றால் அதை அப்படியே நம்புவீர்களா?
எதைச் சொன்னாலும் ஒரு அடிப்படை ஆதாரம் வேண்டும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என யார் மீதும் சேறு வாரி பூசிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
- அனு

Vettipullai said...

கொஞ்சம் கோபத்துல அளவுக்கு அதிகமா பேசிடீங்கன்னு தோணுது. அறிவை பத்தி பேசற நீங்க ஒரே கருத்தை பலரும் யோசிப்பாங்க, யோசிக்க வாய்ப்பு இருக்கு அப்படிங்கற பெரிய விஷயத்தை மறந்துடீங்க...இப்படி நீங்க பொருமவோ பொலம்பவோ அப்படி ஒன்னும் நோபெல் பரிசு பெறக்கூடிய கருத்தை விவாதிக்கலை. அவங்க ரெண்டு பேரும் சொன்ன கருத்தை எல்லாருமே உணர்ந்து தான் இருக்கோம்.

தேவை இல்லாம அவங்களை பத்தி இப்படி பேசி இருக்கவேண்டாம். அது அத்தனை கண்ணியமான செயல் இல்லை.. இணையத்தில் இப்படி பேசுறது நாகரிகமும் இல்லை...

பலே பிரபு said...

நண்பரே ஒன்றை கவனிக்கவும். 4ஆம் தேதி போட்ட ஸ்டேட்டஸ் 10ஆம் தேதி அவர் ட்விட்டரில் டிவிட் செய்து உள்ளார் என்பது நம்ப முடியாத ஒன்று. ஒவ்வொரு நாளும் ஸ்டேட்டஸ் மாறும் போது எப்படி ஆறு நாள் கழித்து அதை பார்க்க முடியும். இருவரும் நண்பர்களாக இருந்தால் கூட இது சாத்தியம் இல்லை, 6 நாட்கள் நினைவில் வைக்க இது என்ன பாடலா? கொஞ்சம் யோசித்து பதிவு எழுதி இருக்கலாம்.

Anonymous said...

உங்கள் பதிவைக் கண்டோம்.யார் அறிவையோ யாரோ திருடி இருக்கிறார்கள் என்று மிக உருக்கமாய் ஆதாரங்களோடு வேறு சொல்லி இருக்கிறீர்கள்.விகடனில் பெயர் வந்ததால் தான் இத்தனை பேச்சா? இதுவே உங்கள் நண்பர் பெயரில் வந்தால், தன் அறிவை திருடிவிட்டதாக செல்வி.உமாகிருஷ் சொல்லி இருந்தால் சரியென்று சொல்லி விடுவீர்களா?
யார் மீதும் சேறு வாரி பூச உங்களுக்கு யார் தந்த அதிகாரம் இது?
எதையும் பேசுவதற்கு, எழுதுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டு எழுதவும்.

settaikaaran said...

என்னையா அறிவு திருடர்கள் நீங்க எழுதுறது எல்லாம் சொந்தமா வந்ததோ ! திருவள்ளுவரே எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டாறே நீர் எதற்கு எழுதுகிறீர் புதுசுசா எழுதுவதுக்கு யாரும் சுயம்பு கிடையாது எதுவுமே சொந்தம் கிடையாது உங்க நண்பருக்கு தோன்றியது ஏன் அவருக்கு தோன்றி இருக்ககூடாது ! அப்படி என்றால் இந்த விடையத்தை பல ஆங்கில புத்தகத்தில் நிறைய பேர் எழுதிவிட்டார்கள் உங்க நண்பர் எங்கிருந்து திருடினார்னு கேளுங்க ! டவுட் இருந்தா allan peace நிறைய நிகழ்வுகளில் இதை பற்றி பேசி இருக்கிறார் தேடிப்பாருங்கள் ! ஒரு பெண்ணை விமர்சிக்கும் பொழுது பிறப்பை பற்றி விமர்சனம் வைக்கும் வழக்கத்தை இப்படி விமர்சித்தேன் என்று உங்கள் தாயிடம் சொல்லிபாருங்கள் தோழர் ! விருந்தாளிகள் உங்கள் வீட்டிற்கும் வந்து போவார்கள் என்று தான் நினைக்கிறேன் துனிவு இருந்தால் இதை பிரசூரியுங்கள் பார்ப்போம் அடுத்தவரை விமர்சிக்க உரிமை உண்டு எனறால் உங்களுக்கு வரும் விமரசனங்களையும் ப்ரசுரிக்கும் துனிவு வேண்டும் இல்லை என்றால் எழுதுவதை நிறுத்திவிடவும் ! நன்றி வணக்கம் !

Melwin said...

Why u removed the screen shots? Never worry about these. When they do such worst things we have full rights to tear their mask.

முத்துசிவா said...

ஏன் நண்பா புகைப்படங்களை எடுத்த்டுவிட்டாய்?

துளசி கோபால் said...

இந்தத் திருட்டுலே பாதிக்கப்பட்டவள் நான். அப்படியே பதிவில் இருப்பதை படங்கள் உட்பட எடுத்துத் தன்பெயரில் போட்டுக்கிட்டார் ஒருத்தர்.

பதிவுலக நண்பர்கள் அங்கேபோய் கொடுத்த பின்னூட்டங்களால்..... அஞ்சு நாளைக்கு அப்புறம் நம்ம இடுகைகளைத் தூக்கிட்டார்.

ஆமாம்..... இந்த ஆ வி. மற்றவர்கள் எழுதுனதையெல்லாம் சுட்டு தன் பக்கங்களை நிரப்பிக் காசு பார்க்குதே! இதையா நம்மாளுங்க பெருமையா நினைச்சுக்கராங்க:(

மதுரை சரவணன் said...

unmai thaan... varuththamalikkirathu...

Anonymous said...

ஆறு நாட்களின் பின் இவருக்கும் இந்த ச்டடுஸ் மனதில் அதே வசனங்களுடன் தோன்றியது அதிசயம் தான். எடுத்ததை ஒத்துக்கொள்வது நல்லவர்களுக்கு அழகு .அதை விட்டுவிட்டு சாக்குப்போக்கு சொல்வதும் ஏனையவர்கள் வக்காலத்து வாங்குவதும் எதற்காக??? இப்படியும் ஒரு பிழைப்பு !!

சக்திவேல் said...

சொந்த கருத்து, கற்பனை மட்டுமே பகிற வேண்டும் என்றால் வலைதளம் முடங்கி பேகும் நண்பா.... நாம் அனைவருமே நாம் எங்கோ படித்ததை தான் பகிற்ந்து கொள்வோம்....உங்கள் தளத்தில் இருக்கும் அனைத்தும் உங்கள் சொந்த கருத்துக்கள் மட்டுமேவா நண்பா .......தயவுசெய்து கடுமையான சொற்கள் பயன்படுத்த வேண்டாம்.......


எல்லையில்லா அன்புடன்
K.சக்திவேல்

Related Posts Plugin for WordPress, Blogger...