Sunday, June 26, 2011

தூக்கிலிடுங்கள்! ஜூன்26 ஒரு பார்வை!

மே17 இயக்கத்துக்கு முதலில் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களை "ஐஷ்வர்யா ராய் வந்திருக்காக, சச்சின் வந்திருக்காக பக்கத்து தெருல Ad film shooting எடுக்குறாக" என்று சொல்லி மட்டுமே ஒரு இடத்தில் குவிய வைக்க முடியும் என்பதை உடைத்து உணர்வுக்காகவும் கூட வைக்க முடியும் என உணர்த்தியிருக்கிறார்கள். மிகப்பெரிய கூட்டம்  என்று சொல்லமுடியாதெனினும் வந்த ஒவ்வொருவரும் ஒரு கூட்டத்துக்கு சமம். அத்தனை உணர்வு பொங்கி வழிந்தது.

லட்சக்கணக்கில் மக்கள் கூடியிருக்க வேண்டிய கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் மட்டுமே கூடி இருந்தது லேசான வருத்தத்தைத் தரத்தான் செய்தது. உடனடியாக மாறவேண்டியதும், மாற்றப்பட வேண்டியதும் அரசியல்வாதிகள் அல்ல மக்களின் மனநிலையே எனத் தோன்றியது. இரண்டரை கோடி பேர் உள்ள சென்னையில் இவ்வளவு பேரால் தான் ஒரு இன அழிப்புக்கு அஞ்சலி செலுத்த வர முடிந்ததா? அன்னா ஹஜாரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன் மிகச் சிறிய கால அவகாசத்தில் கோவையில் ஓரிடத்தில் மக்கள் திரண்டார்களே.... ஒரு இன அழிப்பிற்கு, ஊழல் எதிர்ப்பு அளவிற்கு கூட மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால் இந்த மக்களை என்ன சொல்ல? 

கட்சி சார்பின்றி ஏராளமான பொதுமக்கள் வந்திருந்ததும் முக்கியமான அம்சம். ஆனால் ஒரே ஒரு கட்சி மட்டும் கொடி பிடித்தபடியும், கட்சிக்கொடி பதித்த டி-ஷர்ட்டுகளை அணிந்துகொண்டும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். கட்சி சார்பில்லாத நிகழ்ச்சி என அறிவித்திருந்த மே17 இயக்கம் இதை கண்டித்திருக்க வேண்டும்.  அந்த கட்சியின் தலைவரையும் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் இதை பெரிதுபடுத்தி கூட்டத்தின் நோக்கத்தை மாற்றி எழுத நான் விரும்பவில்லை. ஆனால் பொதுவான ஒரு உணர்ச்சிகரமான மக்கள் கூட்டத்தை சுயவிளம்பரத்திற்காக ஒரு கட்சி பயன்படுத்திக்கொள்ள தெரிந்தோ தெரியாமலோ அனுமதித்தது எரிச்சலூட்டத்தான் செய்தது!

தலைப்புக்கு வருகிறேன். உணர்ச்சி பொங்க கோஷமிட்ட ஒரு பெண் திடீரென "தூக்கிலிடுங்கள் தூக்கிலிடுங்கள் பிரபாகரனை தூக்கிலிடுங்கள்" எனக் கத்திவிட்டார். அவரைப் பின்தொடர்ந்து கோஷமிட்ட கூட்டமும் அதையே சொல்லித் தொலைக்க பின் சிறிய சலசலப்பிற்குப் பின் "தூக்கிலிடுங்கள் தூக்கிலிடுங்கள் ராஜபக்சேவை தூக்கிலிடுங்கள்" எனச் சரியாக கோஷமிட்டார்.

முகநூலில் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்த பல நண்பர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் நேரில் சந்தித்துப் பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பல இளைஞர்களும், இளம்பெண்களும் கூடியிருந்தார்கள். குடும்பங்களுடன் சில பேர் வந்திருந்தார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாய் இருந்தது. உணர்ச்சி பொங்க கோஷங்கள் எழுப்பினர். எழுச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் குறைவில்லை. வெற்றிகரமாக ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கும் மே17 இயக்கத்தினருக்கு மீண்டும் வாழ்த்துக்களும் தமிழ் உணர்வாளர்களின் நன்றிகளும்.

Tuesday, June 21, 2011

எலி நேகட் ரன்னிங்! எ சாரு நிவேதிதா ஸ்டோரி!

இலக்கிய உலகின் ப்ளேபாய், விடலைப் பையன், தீராத விளையாட்டுப்பிள்ளை, ரெமி மார்டின் சரக்கின் உலக வினியோகஸ்தர், ஆணழகர் சாரு பற்றி இப்ப ஒரு ஆபாச சாட் சர்ச்சை கிளம்பிருக்கு. அந்தாளு chat பண்ணா ஆபாசமா தான இருக்கும் அப்புறம் அதுல என்ன தனியா ஒரு 'ஆபாச சாட்'னு உங்கள மாதிரிதான் நானும் நினைச்சேன். விஷயம் என்னன்னா, இணையத்துல இலக்கிய ஆர்வ மிகுதில கவிதை எழுதிட்டிருந்த ஒரு பொண்ணு  நம்ம சாரு அண்ணனை இலக்கிய உலகத்தின் மேதைனு நினைச்சு ஆர்வத்துல அவருகூட பேசிருக்கு. அண்ணனும் ஆரம்பத்துல நல்லா பேசி கரக்ட் பண்றதுக்கு சாம-தான-பேத தண்டங்களையும் உபயோகிச்சிருக்காரு. ஆபாசமக கொஞ்சிக்கூட பார்த்திருக்காரு. கடைசில ஒன்னும் வொர்க் அவுட் ஆகலேனு தெரிஞ்சவுடன அந்த பொண்ணப்பத்தி சில நாட்களுக்கு முன் புகழ்ந்து தள்ளுன அவரோட அதே facebook pageல தரக்குறைவா திட்டிருக்காரு. இப்ப அந்த பொண்ணு பாவம் முகநூலை விட்டே போயிருச்சு!

இதையெல்லாம் எழுத்தாளர் தோழி தமிழச்சி தன் தளத்தில் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்த ஆதாரங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் தான். யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் இவ்வாற அவதூறுகளை பரப்ப முடியும் தான். அது வெகு சுலபமும் கூட! ஆனால் இங்கே சர்ச்சயில் சிக்கியிருப்பது போப் ஆண்டவரல்ல. கிடைத்த கேப்பில் எல்லாம் கிடாய் வெட்டும் அண்ணன் 'கேப் ஆண்டவர்'. இவர் மேல் குற்றம் சாட்ட நமக்கு விக்கிலீக்ஸ் எல்லாம் தேவை இல்லை. இவர் தளத்தில் உள்ள இவரின் எழுத்துக்களை(??) அவ்வப்போது படிக்கும் சராசரி வாசகன் இவர் மீது வைத்திருக்கும்  எண்ண ஓட்டம் போதும்.

சாருவின் தளத்தை அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சிலருக்கு தெரியும், எந்திரன் படத்துக்கு தனக்கு முதல் காட்சி டிக்கெட் கிடைக்கவில்லையென்பதால் அந்தப் படத்தைப் பற்றி சாரு என்னென்ன உளறினார், பிதற்றினார் என்று. விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தனக்கு சன்மானம் கொடுக்கவில்லையென்பதால் நீயா-நானா நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் புலம்பிக்கொண்டே இருந்தார். பொதுவாக இவர் எழுத்துக்களில் எல்லாம் ஒரு அசாதாரணம் தெரியும். பொதுவாக மிகச்சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கொஞ்சம் eccentric ஆக இருப்பார்கள், அவர்கள் படைப்புகளிலும் அது வெளிப்படும். ஆனால் அது மேன்மைத்தனமாய், மேதாவித்தனமாய், அறிவாளித்தனமாய் இருக்குமேயொழிய அல்பத்தனமாய் இராது. சாருவின் கட்டுரைகளில் வெளிப்படும் அசாதாரணத்தை நாம் 'eccentric' வகையறாவில் சேர்க்க முடியாது. அல்பம் வகையில் தான் அவை சேரும்! தனக்கு அது கிடைக்கவில்லையே என்ற கடுப்பில், வெறுப்பில் மணலை அள்ளிவாரி தூற்றும் ஒரு கேவலமான மூன்றாம் தர கோபமே அதில் வெளிப்படும். நான் மேற்சொன்ன எந்திரன், நீயாநானா கட்டுரைகள் அதற்கு உதாரணம். அதே போன்ற ஆற்றாமையை தான் கவிதை எழுதிய பெண்ணிடமும் காட்டியுள்ளார் சாரு.

சாருவின் தளத்தில் அந்தப் பெண்ணைப் பற்றி அவர் எழுதிய போதே, "என்னடா எலி அம்மணமா ஒடுதே"னு எனக்கு தோன்றியது. (அந்தப் பெண், சாரு தன்னை புகழ்ந்தது பற்றி பெருமையாக அவரது முகநூல் பக்கத்தில் சிலாகித்திருந்தது தனிக்கதை) அம்மணமாய் ஓடியதற்கான காரணத்தை தான் இப்போது தமிழச்சி அம்பலப்படுத்தியுள்ளார்.  அந்தப் பெண் சாருவின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவரை தன் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியவுடன் சாருவின் 'புலம்பல் பூதம்' வெளிவந்து தன் வேலையை ஆரம்பித்திருக்கிறது. அதனால் ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை, சாருவின் முந்தைய கட்டுரைகளில் தேங்கிக்கிடக்கும் முரண்களையும், அம்முரண்களுக்கான காரணத்தையும் பார்த்தாலே போதும்.

இந்த சர்ச்சை ஒன்றும் சாருவின் இலக்கியவாழ்வை(???) அசைத்துப்பார்க்கப் போகும், அவர் வாசகர் வட்டத்தை குறைக்கப் போகும் சர்ச்சை அல்ல. சகீலா படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கிறார் என்பதற்காக அவரது ரசிகர் கூட்டம் குறைந்துவிடுமா என்ன? அதுபோல் தான் இதுவும்.  சகீலாவும் நடிகை, அவரை பலருக்குப் பிடிக்கும் என்பதற்காக அகாடெமி அவார்டை அவருக்கு கொடுக்க முடியுமா? இவரும் எழுதுகிறார் என்பதற்காக இவரை இலக்கியவாதி என்பதா? அவரை பெரிய தமிழ் இலக்கிய உலகின் மன்னனைப் போல் அவர் வாசகர்கள் அவரை தூக்கிக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு அவர் 'என்னவோ' அதை மட்டுமே வெளியே கொண்டாட வேண்டும்.

சாரு போன்ற ஒரு 'பச்சை'க்குழந்தையின் சேட்டையைப் பார்த்து அந்தப் பெண் இணையத்தில் எழுதுவதை நிறுத்தியிருக்கத் தேவையில்லை.  பெண்கள் மேல் சாரு போன்றவர்கள் நிகழ்த்தும் இந்த பாலியல் ரீதியான எழுத்து வன்முறையை வீழ்த்தவாவது தொடர்ந்து அந்தப் பெண் எழுதவேண்டும்.

கட்டுரைக்கு சம்பந்தப்பட்ட சுட்டிகள்:

சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!

சாரு என்ற காமெடி பீஸ்.
 

Friday, June 17, 2011

'வலைபாயுதே'வும் மதிப்புக்குரிய அறிவுத் திருடர்களும்!

24 மணி நேரமும் நெட்லயே உக்காந்து இருக்கவன் கூட இப்பல்லாம் "நம்ம ஸ்டேடஸ் அப்டேட் ஆனந்தவிகடன் வலைபாயுதேல வந்திருக்கா?"னு ஆர்வமா வாரவாரம் வாங்கிப் பாக்குறான்.  நம்ம சாதாரணமா நம்ம Facebook மற்றும் twitterயில் போடும் status updatesயில் சிறந்தவற்றை அவங்களே தேர்ந்தெடுத்து நம் பெயருடன் பிரசுரிக்கிறாங்க. இது நல்ல விஷயம் தான், ஏன்னா நம்ம பேருலாம் கூட ஆனந்தவிகடன்ல வருதே!!

பிரச்சினை இது இல்ல. எப்படியாச்சும் ஆனந்தவிகடனில் வர்ற வலைபாயுதே பகுதில நம்ம இடம் புடிக்கனும்னு சில அல்பர்கள், அல்பிகள் அலையிதுங்க. இதுக்குன்னே ப்ரத்யேகமா உக்காந்து, மூளைய கசக்கிப் புழிஞ்சு, "எப்படி எழுதுனா ஆனந்தவிகடன்"ல செலெக்ட் பண்ணுவாங்கனு யோசிச்சிட்டே இருக்குறது ஒரு வகை.  இந்த வகைகள் தலகீழ தொங்கி கூட யோசிச்சு தொலையட்டும், ஆனா அடுத்தவனோட status updateஐ அப்படியே காபி அடிச்சு அதுங்க பேருல அதுங்க அக்கவுண்ட்ல போட்டுக்குறதுதான் கேவலமா இருக்கு! 

சமீபத்துல என் நண்பர் ராம்குமாரோட 'ஸ்டேடஸ்' வரிகளைத் திருடி, ******ங்குற ஒரு பெண் அவங்க 'ட்விட்டர்'ல போட்ருக்காங்க. அது இந்தவார ஆனந்தவிகடன்ல அந்த பெண்ணின் பேர்ல வந்திருக்கு. என் நண்பர் ராம்குமாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சவுடன என்னை ஃபோன்லகூப்ட்டு ரொம்ப வருத்தப்பட்டாரு.ரொம்ப கேவலமான செயல் அது.

வலைபாயுதேவில் வந்திருக்கும் ஸ்டேடஸ் அப்டேட் இதுதான்.
"
பெண்கள் காதலிச்சாஅந்த பெண்ணை தவிர வேறு எவருக்கும் தெரியாது.ஆண்கள்காதலிச்சாஅவன் காதலிக்கும் பெண்ணைதவிர அனைவருக்கும்தெரியும்" 

இதுபோல் ஏராளமான திருடர்கள் உண்டு! (ஒருமுறை ஒரு இணையம் என் கவிதையை வேறு ஒருவர் பெயரில் வெளியிட்டு பின் உண்மை அறிந்து என்னிடம் மன்னிப்பும் கேட்டது) உலகிலேயே மோசமான திருட்டுன்னா அது அறிவுத்திருட்டு தான். நம்மகிட்ட 100ரூபாய் திருடுனா கூட நமக்கு அவ்ளோ வேதனை இருக்காது ஏன்னா எல்லா 100ரூபாயும் ஒரே மதிப்புதான் எப்பவேணாலும் சம்பாதிச்சுக்கலாம். ஆனா அறிவு அப்படி இல்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி. ரொம்ப தனித்துவமானது. அதை அல்பத்தனமா திருடி உபயோகிச்சு பேரு வாங்குற திருடர்களை என்ன செய்யலாம்? அதுங்களுக்கா அறிவு வந்து திருந்துனா தான் உண்டு! இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களிடம் அனுப்புங்கள். எல்லாரிடமும் பகிரச் சொல்லுங்கள். கொஞ்சமேனும் அவமானப்பட்டால் தான் திருடர்கள் திருந்துவார்கள்!


கொசுறு flashback: ஒருமுறை ஆர்குட்டில் என் நண்பர் யுவன் பிரபாகரனின் 'about me'யை மதிப்புக்குறிய ஒரு திருடர் சுட்டு அவர் profileயில் போட்டுக்கொண்டார். அதுக்கு யுவன் என்ன செய்தார் தெரியுமா? அந்த திருடரின் scrapbookயில் "அண்ணே இப்படி பண்றவங்களை எங்க ஊர்ல விருந்தாளிக்குப் பொறந்தவன்னு சொல்லுவோம்" என்றார். அடுத்த சில நொடிகளிலேயே திருடர் about meஐ மாற்றிவிட்டார்! :-)


Tuesday, June 7, 2011

ஏன் பாபா ராம்தேவ் டைப் போலி போராட்டங்கள்?

அன்னைக்கு அன்னா ஹஜாரே, இன்னைக்கு பாபா ராம்தேவ். ஒருவழியா ஒன்னுகூடி ஊழலை ஒழிச்சுருவாய்ங்க போல. "இந்திய மக்கள் அனைவரும் வாரம் இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் ஊழல் ஒழியும்"னு பேசுனாலும் பேசுவாய்ங்க கொஞ்ச நாள்ல.  அதும் இந்த பாபா ராம்தேவ் நம்ம சங்கர் பட ஹீரோ மாதிரி போலீஸ் உதவியால மேடைல இருந்து பறந்த காட்சி அற்புதம். ஆனா அதைப் பார்த்துட்டும் நாலு பேரு வெக்ஸ் ஆகி ஃபீல் பண்றான்யா நம்ம நாட்டுல! அதான் எனக்கு கஷ்டமா இருக்கு. எப்படி இப்படிலாம் இந்த ஊர்ல மட்டும் நடக்குதுன்னே தெரில. எவன் பேசுனாலும், எவன் உண்ணாவிரதம் இருந்தாலும் கூட்டம் கூடிறாய்ங்களே. நாலு நாள் சாப்பாட்டு செலவு மிச்சம் ப்ளஸ் தியாகி பட்டமும் கிடைக்கும் ப்ளஸ் கும்பலோட கும்பலா டிவில மூஞ்சியும் தெரியும்னு நினைப்பாய்ங்களோ என்னவோ!

பொது இடத்துல சட்டை போடாம சுத்துற நாகரீகம் கெட்ட பயபுள்ளைக்கு ஊழலைப் பத்தி என்ன திடீர்னு அக்கறை? எல்லாத்துக்கும் மேல கொடுமை என்னன்னா ஊழலுக்கு மரண தண்டனை கொடுக்கனுமாம். என்ன லூசுத்தனம் இது. மத்த எல்லா தப்புக்கும் இந்த நாட்டுல சரியா தண்டனை கொடுக்குறாங்க, ஊழலுக்கு மட்டும் குறைச்சு கொடுக்குற மாதிரி. ஆனா இந்தாளு ப்ளான் பண்ணி பண்றான் போல. ஒருவேளை ஊழலுக்கு மரண தண்டனை கொடுத்தா ப்ளூ தலைப்பா போட்ட ரோபோல இருந்து நேத்து பஞ்சாயத்து போர்ட் பிரசிடண்ட் ஆனவன் வரைக்கும் தூக்குல தொங்கிருவாய்ங்க. அப்புறம் எல்லாரும் செத்தவுடன இவன் தேர்தல்ல நின்னு பிரதமர் ஆகலாம்னு பாக்குறான் போல. முதல்ல கூட்டம் கூடுறதை நிப்பாட்ட சட்டம் கொண்டு வரனும். அது என்னடா எவனாச்சும் சாப்பிடாமா இருந்தா உடனே தியாகி ஆக்கி அவன் பின்னாடி ஒரு லட்சம் பேரு கூடுறாய்ங்க இந்த நாட்டுல?

நான் அன்னா ஹஜாரே பத்தி எழுதுனப்ப என்கிட்ட பத்து பேர் பயங்கர சண்டை போட்டாய்ங்க, என்னவோ நான் பலகோடிக்கு அந்நிய செலவாணி பண்ண மாதிரியும், அன்னா ஹஜாரே எனக்கு எதிரி மாதிரியும். இன்னும் ஒரு 15பேரு என்னை ஃபேஸ்புக் ஃப்ரண்ட் லிஸ்ட்டுல இருந்து தூக்கிட்டாய்ங்க. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு பாத்தா எல்லா பேப்பர்லயும் வந்துகிட்டே இருந்த அன்னா ஹஜாரே பேரை பேப்பர்ல இருந்தே தூக்கிட்டாங்க.

இதை ஏன் சொல்றேன்னா நம்ம ஊர்ல எல்லா போராட்டமுமே ஸ்டண்ட் தான்.  மக்களுக்கு நல்லா சாப்பிட்டுட்டு ஏப்பம் விடுற கேப்புல ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி நாட்டுல நடக்குற ஊழலை, அநீதியை நினைச்சு நரம்பு புடைக்கும். அந்த தற்காலிக போராட்ட குணத்தை உபயோகிச்சு தலைவனாகத்தான் எல்லா போராட்டமுமே. நம்ம இந்திய மக்களின் மனநிலை இப்ப இருக்க "அவனுக்குத்தானே பிரச்சினை, எனக்கென்ன"ங்குற  நிலைமைல உண்மையான சுயநலமில்லாத போராட்டம் எல்லாம் ரொம்ப தூரம். நடக்கவே நடக்காது. அடுத்த வேளை சோறு, எண்பது வருசம் உயிரோட இருப்போம்ங்குற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்துட்டே தான் இருக்கு. எப்ப இது ரெண்டுக்கும் பங்கம் வருதோ அப்பதான் உண்மையான போராட்டம் வெடிக்கும். அந்த சீற்றம் 15கோடில மேடை அமைச்சு இருக்காது, கொசுக்கடில சாக்கடை ஓரத்துல நடந்தாலும் உண்மையான கொள்கையோட நடக்கும், வடகிழக்கு மாகாணங்களல உரிமைக்காக போராடும் மக்களின் போராட்டம் மாதிரி.

பாபா ராம்தேவை என்னமோ நெல்சன் மண்டேலா மாதிரி சித்தரிக்கும் தினமலர், என்னைக்காச்சும் பதினைஞ்சு வருசமா சாப்பிடாம இருக்கும் ஐரோம் ஷர்மிளா ஃபோட்டோவை ஓரமாவாச்சும் போட்ருக்கா? இல்ல அவங்களைப் பற்றி தெரிஞ்ச நம்மதான் ஒரு சதவிகிதமாச்சும் உணர்ச்சிவசப்பட்டிருக்கோமா? மாட்டோம். ஏன்னா போராட்ட குணம் வருவதற்கான சூழ்நிலைகள் இப்ப நம்ம சமூகத்துல இல்ல. ஒரு உதாரணத்திற்கு சொல்லனும்னா பெட்ரொல் வாராவாராம் விலை கூடுனாலும் காசைக் கொடுக்கும் போது மட்டுமே புலம்பிட்டு, அப்புறம் மூடிட்டு போகும் மனநிலைல தான் நம்ம இருக்கோம். என்னைக்காச்சும் ஒருநாள் அடுத்த வேலை சோற்றுக்கு இல்லாதவன் தங்கத்தை பார்ப்பது போல நம்ம எல்லாரும் பெட்ரோலைப் பார்க்கும் காலம் வரும். அப்ப அதை எதிர்த்து எதாச்சும் உண்மைலயே செய்வோம். அப்படி ஒரு சூழ்நிலை நமக்கு ஊழல் போன்ற எல்லா பிரச்சினைகளிலும் நேரடியா வர்ற வரைக்கும் இந்தஅன்னா ஹஜாரே, பாபா ராம்தேவ் எல்லாம் சங்கர் படங்கள் மாதிரி சுயநலத்துக்காக போராடுவாங்க நமக்கும் அப்பப்ப ஒரு ஆத்ம திருப்தி. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. அவ்வளவுதான்!
Related Posts Plugin for WordPress, Blogger...