Friday, April 22, 2011

(சாய்)பாபா கிச்சு கிச்சு தா!

தலைப்பை பாத்தீங்களா? நான் எவ்ளோ அநாகரீகமானவன்? சாகப்போற மனுஷன பத்தி மனிதாபிமானமே இல்லாம பேசுற என்னை அந்த பகவான் மன்னிக்கவே மாட்டாரு.... இப்படிலாம் நீங்க நினைப்பீங்க. ஆனா இப்ப மட்டும் அந்த பகவான் என்னை கண்டுக்க மாட்டாரு. ஏன்னா அவரே வாயில, மூக்குல, காதுல பைப் சொருகி ICUல தான இருக்காரு! :-( So sad!

எத்தனையோ சாய்பாபா மேஜிக் வீடியோ youtubeல இருக்கு. அதையெல்லாம் பாத்தும் பல மனிதர்கள் திருந்தாம இருக்குறதுதான் வருத்தமாவும், கேவலமாவும், காமடியாவும் இருக்கு. சாய்பாபாவுக்கும் மற்ற சாமியார்களுக்கும் வித்யாசம் இருக்கு. மத்த சனியன் எல்லாம் கடவுள் அருள் பெற்றது. ஆனா சாய்பாபா மட்டும் தான் கடவுளாகவே வாழ்பவர்! அதுனால அவரு 'ஐசியூ'வில் படுக்கையை நாறடிப்பது கடவுள் சித்தாந்தத்தையே நாறடிக்கிற மாதிரி!

மேட்டருக்கு வர்றேன். நான் அஞ்சாவது படிக்கிறப்ப சாய்பாபா ஃபோட்டோவைப் பாத்து என் நண்பன் கிட்ட "என்னடா இந்தாளு மண்டை விசிறியை விரிச்சா மாதிரி இருக்கு.. கருமம்"னு சொன்னேன். அதுக்கு அவன், "அப்படி சொல்லாதடா. பாபா தலைல இருக்க ஒவ்வொன்னும் பாம்பு"னு சொன்னான். அதுக்கு நான் "புழு மாதிரி இருக்கு. பாம்புனு சொல்றியேடா"னு கேட்டுத் தொலைச்சிட்டேன்! அப்புறம் அவன் அந்த பாபா அருளால என்கிட்ட பேசவே இல்ல! :-( எனக்கு இப்ப என்ன டவுட்டுன்னா, பாபா இப்ப மண்டையப் போட்டாருன்னா அந்தாளு தலைல இருக்க பாம்பு எல்லாம் செத்துருமா அல்லது அவரு தலைல இருந்து பிச்சுகிட்டு ஓடிருமானு தான்! யாராச்சும் பாபா செத்தோனே போயி பார்த்தீங்கன்னா எனக்கு சொல்லுங்க ப்ளீஸ். 

சாய்பாபாவின் மந்திர தந்திர லீலைகளைக் காண சொடுக்குங்கள் Saibaba exposed(youtube)


8 comments:

Carfire said...

அவன் தான் அவனையே கடவுள்னு சொல்லிக்கறன நீங்களும் அவன கடவுள்னு சொல்றிங்க ....
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைய இருங்க இல்லன சாமி தலைல இருக்கற பாம்பு அவரு செத்த அப்புறம் உங்ககிட்ட வந்தாலும் வரும் ......
"நான் அஞ்சாவது படிக்கிறப்ப சாய்பாபா ஃபோட்டோவைப் பாத்து என் நண்பன் கிட்ட "என்னடா இந்தாளு மண்டை விசிறியை விரிச்சா மாதிரி இருக்கு.. கருமம்"னு சொன்னேன்."
எனக்கு இப்பயும் இந்தாளு மண்டைய பார்த்த ஒரு படத்துல செந்தில் தலைல கவுண்டமணி தீ வைப்பாரே அந்த காமெடி தான் நியாபகம் வரும் ....

Anonymous said...

innuma intha ulagam nammla nambikitu eruku

Anonymous said...

பாபாவை கடவுளாக்கியதும் நாம் தானே. இதில ஈழத்தில வேற இவர்க்கு பல ஆச்சிரமங்கள் வச்சு பசனைகள் செய்கிறார்கள். இன்னும் இந்த ஆசாமிகளை பற்றி புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல

pithamagan said...

first a biggest salut for ur dillu...pinni pedal eduthttel...

sindhu said...

Hi,

i like this, keep doing these things.

Anonymous said...

hi,

keep doing these things.

ஹரி said...

இப்படியெல்லாம் எழுதக்கூடாது கடவுள் கோவிப்பாரு, அவர் தானாக இறக்கவில்லை , அவரின் வயிற்றுக்குள் இருக்கும் தங்க சிவலிங்கங்களை கொள்ளையடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்; அவர் உண்மையிலேயே ஒரு நல்லவர் உத்தமர் ஏழைகளுக்கு விபூதியும் பணக்காரர்களுக்கு தங்கச்சங்கிலிகளும் அள்ளிக்கொடுத்தவர்

Anonymous said...

சித்து விளையாட்டுக்கள் செய்தார். அதை வீடியோ எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்துள்ளீர்கள். நபிகள் நாயகம் நிறைய அற்புதங்களை(சித்து விளையாட்டுகள்) செய்துள்ளார்,
தண்ணீரை ரசமாக மாற்றிய சித்து விளையாட்டுக்காரர் ஏசுவை தான் உலகில் பலர் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்.
ஏசுவும் ஒரு மனிதர் தான் தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டவர், பல சித்து விளையாட்டுக்கள் செய்தவர். ஆனால் அவர் செய்த அதே மாய வேலைகளை 2000 வருடங்களுக்கு பிறகு ஒருவர் செய்தால் அதை தவறு என்று நம்ப மறுக்கிறீர்கள். என்ன செய்வது 2000 வருடங்களுக்கு முன்பு கேமரா இல்லாமல் போய்விட்டதே?
அவர்கள் செய்தால் அது அற்புதம் ஆனால் இன்று பாபா செய்தால் மட்டும் அது மாயை, சித்து விளையாட்டா?

Related Posts Plugin for WordPress, Blogger...