Wednesday, April 13, 2011

தமிழ்புத்தாண்டு பற்றிய முழு வரலாறு!


தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!!

சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.


தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.

தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, "சோறு" எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
-பாரதிதாசன்.29 comments:

Anonymous said...

நல்ல தகவல்கள். நன்றி.

Anonymous said...

//பரபவ//

பிரபவ


//நண்பகல், ஏற்பாடு, மாலை//

ற்பாடு.

http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வினோத்பாபு said...

பாரதிதாசனே சொல்லிட்டாரா ! அப்ப சரியாத்தான் இருக்கும் ! அருமையான கட்டுரை ! நேரம் ஒதுக்கி ஆய்வு செய்து இருக்கிறீர்கள் ! பாராட்டுக்கள் !

Philosophy Prabhakaran said...

அருமை... அருமை... இப்படி ஒரு கட்டுரையைத் தான் தேடிக்கொண்டிருந்தேன்... இதை எனது நண்பர்கள் சிலருக்கு மெயில் மூலம் அனுப்ப விரும்புகிறேன்...

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

பகிர்வுக்கு நன்றி திரு, அசோக்
உங்கள் ஆதரவுடன் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

நன்றி ! இரவு வணக்கம் ~

Anonymous said...

Excellent article! Thanks.

tamilan said...

CLICK TO READ

===>
ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல. நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?
<====.

Nagasubramanian said...

நல்லதொரு அலசல்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
sorry, சித்திரைக் கனி வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

பிரமாதம் அருமையான கட்டுரை .......

PRINCENRSAMA said...

அய்யா அனானி, தமிழ்ப்புத்தாண்டு வந்தால் பிரியாணி கிடைக்குமா எனக் கேட்பது... தமிழ் செம்மொழியானால் கறிக்குழம்பு கிடக்குமா என்று கேட்பது போன்ற ஈத்தரை வாதங்களை, பொருமல்களை உங்கள் முன்னோர் சோ உள்பட எண்ணற்றோர் செய்துவிட்டனர். உடனே ’நான் பார்ப்பான் அல்ல. தமிழன் தான். ஆனால் கருணாநிதியைப் பிடிக்கவில்லை’ என்று பிறப்பு ரகசியம் பற்றியெல்லாம் பேசாதீர்கள். பார்ப்பனிய விசம் பாய்ந்த உடல்களும் அவ்வாறே கருதப்படும்.

எளிய, சிறந்த பதிவு தந்த அசோக்கு நன்றிகள்!

http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_3759.html
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_9338.html
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_13.html

தமிழ்நாள்காட்டி இணையத்தில்....
http://princenrsama.blogspot.com/2011/01/blog-post_31.html

akulan said...

நல்லா இருக்குது....
உங்களுக்கு வாழ்த்து இல்லை....

cooldhurga said...

very nice ! புத்தாண்டு என்னும் தொடக்கம் , இதில் இவளவு உண்மைகளா ? வரலாறு அலசி ஆராயிந்து இச்சூழ்நிலையில் தெரிவித்தமைக்கு நன்றி !

ilayaraja said...

இது நாள் வரை சித்திரை ஒன்றே வருடத்தின் முதல் நாள் என்றிருந்தேன்
இன்றே தங்களால் உண்மையறிந்தேன்
உரைத்ததற்கு நன்றி

அருள் said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

Anonymous said...

தமிழ் புத்தாண்டு பற்றிய தகவலுக்கு நன்றி.

அதே போல் "திராவிடம்" என்ற சொல் பற்றிய வரலாற்றையும் உரைத்தால் நன்றாக இருக்கும்.

"திராவிடம்" என்பதே சமஸ்கிருத சொல் தான். கிருத்துவ பாதிரியார் கால்டுவெல் ௧௮௫௬-ல் தமிழில் "திராவிடம்" என்ற சொல் (அ) கட்டு கதையை அவிழ்த்து விடுவதற்கு முன்னால் "திராவிடம்" என்ற சொல்லே தமிழில் கிடையாது. அப்படி இருந்தால் தயவு செய்து தெளிவு படுத்தவும்.

nathan said...

superb great to share

Arunkumar said...

நல்ல கட்டுரைக்கு நன்றி நண்பரே.
இது போன்ற கட்டுரைக்கு 'References' தந்தாள் மேலும் படிபதற்கும், அறிந்துகொள்ளவும் மிகவும் உதவியக இருக்கும்.

Melwin said...

Very nice article. Keep it up my boy :)

Melwin said...

Very nice article. Keep it up my boy :)

Mohan kumar said...

அன்புள்ள‌ அசோக்,

என‌க்கு தெரிந்த‌வ‌ரை இளவேனில் சித்திரை, வைகாசி மாதங்களுக்குரியது. உம்முடைய‌ க‌ட்டுரையில் தை-மாசி மாதங்களுக்குரியது என்று குறிப்பிட‌ப‌ட்டுள்ள‌து.
விளக்க‌ம் ம‌ற்றும் ஆதர‌ நூல்க‌ள் ப‌கிர்ந்துகொள்ள‌யும் .

டான் அசோக் said...

@Mohan

இதற்கு பெரிய ஆதார புத்தகங்கள் எல்லாம் தேவையில்லை.
வேனில் என்பதை வெயில் எனவும் கொள்ளலாம். சித்திரை மாதத்தில் வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பகுக்கிறார்கள்.

Jai said...

Megavum arumaiyaka athuvum Sariyan timingyoudu sonnerkal

Nanrigl palla

R.Elan. said...

நல்ல அருமையான கட்டுரை.பாராட்டுக்கள்.

sea bloggers inc said...

superb...jaya ku jalra thattupavargale ungaluku thamizh varalaru enna theriyuma? yen andha ammayaruke theriyadhu...

முருகன் said...

Good One.. Mr. Ashok. Keep Writing this kind of articles more and more.

மதுரை சரவணன் said...

arumaiyaana pakirvu..vaalththukkal. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

அசோக்,

நல்லப்பதிவு.

தமிழ் புத்தாண்டு,பொங்கல் மற்றும் உழவர் திருநாள்,திருவள்ளுவர் பிறந்த நாள் வாழ்த்துகள்.

2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.

தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை

அப்பு said...

நன்றி...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு தைப் பொங்கல் வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...