Monday, April 11, 2011

அன்னா ஹஜாரே என்ற ஊறுகாய்!

CNN ibnல அன்னா ஹஜாரேயிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது, "உங்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுகொள்வீர்களா?" என்று! பிரதமர் ஆவதற்கு இந்த எளிய வழி இருப்பது தெரிந்திருந்தால் நானும் மீனவர்களுக்காக நாலு நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பேன். ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால் நானோ, நீங்களோ இந்தியாவில் பெயர் போன அகிம்சை வழியில் போராடினால் கூட செத்து, அழுகி, காய்ந்து, காக்கையால் தூக்கிச் செல்லப்படுவோமேயொழிய, இந்த ஊடகங்களால் கண்டுகொள்ளப்பட மாட்டோம்! ஏன்னா எதை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றும், எதை மக்களிடம் இருந்து முழுதாய் மறைக்கவேண்டும் என்றும் ஊடகங்கள் தெளிவாய் முடிவு செய்கின்றன, மேலிட உத்தரவின் பேரில்.

ஒரு போராட்டத்தின் சாரமும், அந்தப் போராட்டத்தின் மூலம் போராளிகள் பெற விரும்பும் கவனமும், எழுச்சியும் அந்த போராட்டத்தை மக்களிடையே எடுத்துச்செல்லும் ஊடகங்கள் அதை எந்த தொனியில் கொண்டு செல்கின்றன என்பதிலேயே அடங்கியிருக்கிறது! அன்னா ஹஜாரேயின் போராட்டத்தை பொறுத்தவரை, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அடுத்து ஊடகங்களால் 'புதிய சுதந்திரப் போராட்டமாகவே' அது சித்தரிக்கப்பட்டது! தினமலரின் முதற்பக்க செய்தி, "நாடு முழுதும் எழுச்சி" என்று.

ஒன்றை நாம் நிதானமாக கவனித்தால், ஹஜாரேயின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் சட்டென ஆரம்பித்து, வெகு சுலபத்தில் ஊடகங்களின் ஆதரவைப் பெற்று, அதன் மூலம் நாட்டு மக்களின் அமோக ஆதரவையும் பெற்று, வெகுசீக்கிரம் வெற்றியும் பெற்ற போராட்டம். ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போராட்டம் 'அரங்கேற்ற'ப் பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுவாகவே உள்ளது. மிக முக்கியமான சந்தேகம், ஒரு நாட்டின் அரசை நிர்ப்பந்தம் செய்யும் ஒரு போராட்டத்தை நடத்த அவ்வளவு சுலபமாக டெல்லி கேட்டின் வாசலில் இடம் கொடுக்கப்பட்டது எப்படி? எந்த போராட்டமானாலும் அங்கே இடம் கொடுக்காத டெல்லிவாசிகள் எப்படி ஹஜாரேயை மட்டும் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்கள்? இரண்டாவது, அந்தப் போராட்டத்திற்கு சோனியாவே ஆதரவு கொடுத்தது. மூன்றாவது, வெகு சீக்கிரத்தில் கோரிக்கையை அரசு ஏற்றுகொண்டது. நான்காவது மிதமிஞ்சிய ஊடகவெளிச்சத்தில் 'லோக்பல் பில்' என்பது ஊழல்களையெல்லாம் ஒழிக்க வந்த அவதாரம் போலவே மக்களிடம் சித்தரிக்கப்பட்ட தொனி. இந்த சந்தேகங்களையெல்லாம் சற்று ஒத்தி வைப்போம். ஏனெனில் நம் மக்கள் இதை மட்டும் படித்துவிட்டு "எதைச் செய்தாலும் குற்றம் சொன்னா என்ன அர்த்தம்?" எனக் கேட்பார்கள். லோக்பல் பில் பற்றி சில வரிகளில் சொல்கிறேன்.

லோக்பல் பில் என்பது சுதந்திரமாய் செயல்படும் ஒரு அமைப்பு. எந்த அரசியல்வாதியும் பங்கு பெறாமல் ஊழலை தண்டிக்கும், ஊழல் பணத்தை திரும்பப் பெரும் ஒரு அமைப்பு. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், மொத்த அதிகாரத்தையும் குத்தகைக்கு எடுத்த ஒரு அமைப்பு. ஆங்கிலத்தில் 'Independent body'. இதுதான் இந்தியாவின் முதல் independent body என்றால் நாம் இதை ஆதரிப்பதில் அர்த்தம் உண்டு. ஏற்கனவே தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், CBI போன்ற so called independent bodies of India எந்த லட்சணத்தில் செயல்படுகின்றன என நமக்குத் தெரியும். இவை அனைத்துமே இதுவரை ஆளும் நடுவண் அரசின் கைக்கூலியாக, பிரச்சினை செய்யும் அரசியல்வாதிகளையும், எதிர்க்கட்சியையும், கூட்டணிக் கட்சிகளையும் அடக்க, ஒடுக்க, பயமுறுத்த மட்டுமே பயன்பட்டுவரும் பயங்கர dependent bodies. இது போன்ற ஒன்றுதான் இந்த 'Lokpal bill'ம். லோக்பல் பில்லில் மட்டுமென்ன வானத்தில் இருந்து குதித்த நடுநிலையாளர்களா இருக்கப் போகிறார்கள்? அதே கட்சிக்காரன் தான். அதே அரசியல் தான். அதே காசு தான். அதே ஊழல் தான்! இப்படியாகப்பட்ட, மற்றுமொரு கையாலாகாத, ஊழலின் மற்றொரு பிறப்பிடமாக இருக்கப்போகிற 'லோக்பல் பில்'லை, இந்திய மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளைத் தீர்க்க வந்த அவதாரபுருஷனாக ஊடகங்கள் சித்தரிப்பது காங்கிரஸ் அரசின் மற்றும் அதன் வியாபார பங்குதாரர்களான தொழில் முதலைகளின் ஆணையால் மட்டும் தானேயொழிய, தானாக அல்ல. ஊழலை அடக்க புது சட்டங்கள் எல்லாம் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களே மிகக் கடுமையானவை. அதை செயல்படுத்துவதில் தான் மிகப்பெரும் ஏமாற்றுவேலை நடக்கிறது. புதிது புதிதாக சட்டங்கள் ஏற்பட்டாலும் இதே ஏமாற்றுவேலை தான் நடக்கும். 
                                       

காங்கிரஸ் அரசுக்கு என்ன லாபம்? எந்த ஒரு கட்சியுமே பெரும்பாலும் ஆட்சியை இழந்தபின் தான் ஊழல் புகார்களையும், பெரும் மோசடிப் புகார்களையும் சந்திக்கும். ஆனால் தற்போதைய காங்கிரசு அரசு ஆட்சியில் இருக்கும்போதே படுபயங்கர ஊழல் புகார்களுக்கு உள்ளாகி அவப்பெயரை மிக அதிகமாக வாங்கிவைத்துள்ளது. இந்த நிலையில் ஊழலுக்கு எதிராக தான் இயற்றும் சட்டம் அதற்கு மிக நல்ல பெயரை மக்களிடையே வாங்கித் தரும். அதாவது என் வீட்டில் யாரும் புகைப்பிடிக்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரிடமும் நான் கடைபிடிக்கச் சொன்னால், தானாகவே என் சுற்றத்தாரும், என் வீட்டினரும், என்னை புகைப்பிடிக்காதவனாகத் தான் எண்ணிக்கொள்வார்கள். அதே logic தான் இங்கும். மொத்தமாக ஊழல் புகார்களை கூட்டணிக்கட்சிகளிடம் தள்ளிவிட்டு தான் நேர்மையானவனாகக் காட்டிக்கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் போராடுபவர்கள் உரிமைப் போராளிகள் என்று மக்களுக்கு அருந்ததிராய் போன்றவர்களால் புரியத் தொடங்கியுள்ள இந்நேரத்தில், ஹஜாரேயின் அகிம்சை போராட்டத்தை ஆதரித்தால் மற்ற போராளிகள் மக்கள் முன் கெட்டவர்களாகவும், அரசு மக்களிடையே நல்ல அரசாகவும் தெரிவார்கள். "இந்த அரசு சரியான காரணங்களோடு போராட்டம் செய்பவர்களைத் தான் ஆதரிக்கிறதே. அப்படியானால் மற்ற போராளிகள் எல்லாம் சரியான காரணத்திற்காகப் போராடவில்லை போல" என மக்களை நம்பவைக்க முடியும் அல்லது குறைந்தபட்சம் அந்த போராட்டங்களைப் பற்றி கேள்வி எழும்போது ஹஜாரேயின் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட செயலை காரணம் காட்டியே தப்பிக்கலாம்.
                                        
பொதுவாகவே பெரும்பான்மையாக NGO எனப்படும் Non governmental Organisationகள்(பெயரைக் கேட்கும் போதே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" கதைதான் நினைவுக்கு வரும்.) செயல்படுவதே இந்த வேலையைச் செய்யத்தான். உண்மையான மக்கள் போராட்டம் வெடிக்கக்கூடிய சமயங்களில் போலியாய் ஒரு போராட்டத்தை நடத்துவார்கள். பின் அந்த போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளும். உடனே மக்களுக்கு எல்லா உரிமையும் கிடைத்துவிட்டதாக மற்ற பகுதிகளில் உள்ள மக்களை நம்பவைத்துவிட்டு பிரச்சினையில் சிக்கும் மக்களை அம்போ என விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதுதான் பெரும்பான்மை Non governmental Organisationகளுடைய பிரதான வேலை. இவர்களால் ஏமாற்றப்பட்டோ, அல்லது இவர்களுடன் சேர்ந்தோ அன்னா ஹஜாரே போன்றவர்கள் அவ்வப்போது உதிப்பார்கள். இந்தமுறை காங்கிரசு, தான் இழந்த மானத்தை மீட்க, அன்னா ஹஜாரேவை ஊறுகாய் ஆக்கியுள்ளது! இவர்கள் வாங்கிய கூலிக்கும் அதிகமாக வேலையைப் பார்த்துவிடுவதால் 11 வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரொம் ஷர்மீளா போன்ற உண்மையான போராளிகள் மக்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.

மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவம் நடத்தும் ஏதேச்சிகார ஆட்சி அந்த மக்களை பல ஆண்டுகளாக சிதைத்து, துன்புறுத்தி வருவதை எதிர்த்து ஷர்மீளா 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் வாயின் வழியே ட்யூப் சொருகி தொண்டை வழியாக வயிற்றில் திரவ உணவுகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் ஊழலுக்கு எதிராக, ஹஜாரேக்கு ஆதரவாக தெருவுக்கு வந்த நம்மில் 99% பேருக்கு தெரியவே தெரியாது. எது பிரதான பிரச்சினை? ஊழலா, மனித உரிமையா? நம் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்படும்போதும், வன்புணர்வு செய்யப்படும்போதும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருந்தால், அதன்மூலம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மறைக்கப்பட்டால் நாம் எவ்வளவு கொடியவர்கள்? அப்படிப்பட்ட ஒரு வேலையை தான் ஹஜாரேயின் உண்ணாவிரதத்தால் நம் அரசு நம்மை செய்யவைத்திருக்கிறது. நாமும் செய்தோம்! இப்போது நல்லபிள்ளை போல் அரசு மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டுள்ளது. ஹஜாரேயும் தியாகி ஆக்கப்பட்டுள்ளார். ஷர்மீளாக்கள் செத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். அரசியல்வாதிகள் சம்பாதித்துக் கொண்டேயிருப்பார்கள்.

முதல் வரியில் CNN IBNல் அன்னா ஹஜாரேயிடம் கேட்கப்பட்ட கேள்வியை கவனியுங்கள். அப்துல் கலாம் எப்படி பாஜகவிற்கு பயன்பட்டாரோ, அதேபோல் காங்கிரசுக்கு ஒரு அன்னா ஹஜாரே. என் நண்பர் ஒருவர் முகநூலில் சொன்னதைப் போல முகநூலில் உலவும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மக்கள் "Make Anna hazarre PM" என்று ஒரு page ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

22 comments:

தமிழ்வாசி - Prakash said...

///அன்னா ஹஜாரே என்ற ஊறுகாய்///

அப்படியா சொல்றிங்க...

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

நன்றி திரு, அசோக்

Anonymous said...

//தமிழ்வாசி - Prakash said...
அப்படியா சொல்றிங்க...
//

Mr. Villakkennai ... mulusa padichchu paarththuttu comment podu

Anonymous said...

Good Article man

உலக சினிமா ரசிகன் said...

ஆதிக்க சக்திகள் & ஊடகங்களின் எண்ணப்படி உருவாக்கிய வண்ணப்படம் ‘அண்ணா ஹசாரேதான் 2011காந்தி’

உலக சினிமா ரசிகன் said...

ஆதிக்க சக்திகள் & ஊடகங்களின் எண்ணப்படி உருவாக்கிய வண்ணப்படம் ‘அண்ணா ஹசாரேதான் 2011காந்தி’

வினோத்பாபு said...

அருமையான கட்டுரை ! உண்மையில் அரசும் , உளவுத் துறையும் இது போன்ற விசயங்களில் எப்படி செயல்படும் என்று சாமானிய மக்களுக்கு புரிவதில்லை ! இது கிட்டத்தட்ட கோயபல்ஸ் டெக்னிக் தான் ! ஆனால் பலரும் இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்தி முடித்த திருப்தியில் இருப்பதால் இது அவர்கள் புத்திக்கு புரியுமா என்று தெரியவில்லை ! மறுபடியும் வாழ்த்துக்கள் ! அனைத்து கோணங்களையும் அலசும் இதுபோன்ற கட்டுரைகளும் அவசியம் வர வேண்டும் !

saarvaakan said...

நல்ல வித்தியாசமான் சிந்தனை,

ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும்,யாருமே எதிர்க்காமல் எல்லாரும் ஆதரித்ததும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.

ஆனால் பாருங்க உலகக் கோப்பை முடிந்ததும் ஆரம்பித்து ஐபிஎல்கு முன்னரே போராட்டைத்தை முடித்து கொண்டார்.

சரி பார்ப்போம் என்ன அந்த லோகபல் மசோதா?எப்படி பயன் படுத்தப் போகிறார்கள்?
நன்றி

எட்வின் said...

நறுக்குன்னு மண்டைல கொட்டியிருக்கீங்க... யாருக்குப் புரியப் போகுது இதெல்லாம்.

என்னது இலவச கூழ் ஊத்துராங்களா!! எந்த தெருவுலங்க?!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

மிகச்சரியான விழிப்புணர்ச்சி பதிவு..

மக்களுக்கு இந்த அரசியலை புரியக்கூட நேரமில்லை .. ஆர்வமுமில்லை..

Jayadev Das said...

நீங்கள் சொல்வது சிந்திக்க வைக்கிறது. ஆளும் கட்சியின் சதியாகவும் இருக்கலாம். ஆனாலும் அந்த மனிதர் நல்லவராகத்தான் தெரிகிறார். மக்களுக்கு தன்னமற்ற தொண்டு ஏராளமாகச் செய்திருக்கிறார். பணத்துக்கு கூவுவதாக இருந்தால் அவர் இளமையிலேயே கூவி இருக்கலாம், இந்த வயதில் அல்ல.

\\ஏற்கனவே தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், CBI போன்ற so called independent bodies of India எந்த லட்சணத்தில் செயல்படுகின்றன என நமக்குத் தெரியும்.\\


அது சரி தேர்தல் கமிஷனை எதுக்கு இந்த லிஸ்டில் சேர்த்திருக்கிறீர்கள்? டி.என் சேஷன் இருந்தப்போ எல்லா அரசியல் வியாதிகளின் கண்ணிலும் விரலை விட்டு ஆட்ட வில்லையா? நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டவில்லையா? இப்போது கூட, நியாயஸ்தன் , யோக்கியன், நேர்மையின் மறு உருவம் ஆகிய மஞ்சள் துண்டு எதற்காக தேர்தல் கமிஷனைப் பார்த்து ஊளையிட்டுக்
கொண்டிருக்கிறது? அவர்கள் நேர்மையாய் இருப்பதால் தனது வேலை சுளுவாக முடியவில்லை என்று தானே கருவிக் கொண்டிருக்கிறது?

Carfire said...

எனக்கும் இலேசாக இந்த சந்தேகம் இருந்தது. ஏன் என்றால் இவர் ஒரு காலத்தில் PJB க்கு எதிராக மட்டுமே போராடி கொண்டு இருந்தவர்.
ஒரு வேலை இந்த போராட்டம் உண்மையானதாகவே இருந்தால் நல்லது தான் இல்லை வழக்கம் போல காங்கிரசின் கைங்கர்யம் தான் என்றால் ஒன்றும் செய்ய இயலாது.
5 மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் வருகின்றது இதை இவர்களின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக காட்டிக்கொள்ள எளிதான வழி அல்லவா?

Anonymous said...

http://www.giriblog.com/2011/04/tamilnadu-avoid-anna-hazare.html

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

//ஆங்கிலத்தில் 'Independent body'. இதுதான் இந்தியாவின் முதல் independent body என்றால் நாம் இதை ஆதரிப்பதில் அர்த்தம் உண்டு. ஏற்கனவே தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், CBI போன்ற so called independent bodies of India எந்த லட்சணத்தில் செயல்படுகின்றன என நமக்குத் தெரியும். இவை அனைத்துமே இதுவரை ஆளும் நடுவண் அரசின் கைக்கூலியாக, பிரச்சினை செய்யும் அரசியல்வாதிகளையும், எதிர்க்கட்சியையும், கூட்டணிக் கட்சிகளையும் அடக்க, ஒடுக்க, பயமுறுத்த மட்டுமே பயன்பட்டுவரும் பயங்கர dependent bodies. இது போன்ற ஒன்றுதான் இந்த 'Lokpal bill'ம். // திரும்பவும் ஒரு முறை படித்தேன் ! இந்த வரிகள் தான் கொஞ்சம் யேசிக்க வைத்தது !!

Anonymous said...

podaaaaango.. nalla vaayila varuthu asingama...

நந்தா ஆண்டாள்மகன் said...

வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை.மக்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது.

Anonymous said...

மிகவும் அருமையாகச் சொன்னீர்கள்.
எனது மனதிலும் இப்படியான எண்ணங்கள் தோன்றின. இந்திய அரசிற்கு கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபனும், அன்னை பூபதியும் உண்ணா நோன்பு இருந்த உயிர் துறந்த போதும் கூட இரங்காத இந்திய அரசியல்வாதிகள் இப்பொழுது மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக எல்லா கோரிக்கைகளையும் நிறைவு செய்தார்கள் என்று நினைத்துப் பார்த்தேன்.

Satheesh said...

Nalla pathivu...kannal kanpathum poi...kathal ketpathum poi...thira visaripathe poi....

Cinna thirutham....

Visarikum pothu yaridam visarikirom endru parthu visari.....

தமிழ் அமுதன் said...

///அப்துல் கலாம் எப்படி பாஜகவிற்கு பயன்பட்டாரோ, அதேபோல் காங்கிரசுக்கு ஒரு அன்னா ஹஜாரே.//


மிக சரி..!

Vaanathin Keezhe... said...

Good Ashok. Now i'm happy on seeing more effective arguments against this fake Gandhi and his cheap fasting Tantras.

-Vino

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

www.tamil10.com

நன்றி

madu said...

நீங்க சொல்றத கொஞ்சம் சுருக்கி போரட்டம்கரத இப்படி வரையருக்கலாம்னு நினைக்கிறேன்

உங்க போராட்டத்த எந்த ஒரு டிவி சேனலும் கவர் பண்ணிட கூடாது. அப்படி பண்ணிட்ட நீங்க corporate ஆதரவு பெற்ற நாடகம் நடத்துவதாக அர்த்தம்
உங்க அன்றாட பிரச்சனைக்கெல்லாம் நடத்துன அது செல்லாது. நீங்க நடத்துற பிரச்சன கண்டிப்பா வட கிழக்கு மாநில பிரச்சனயாவோ இல்ல மாவோயிஸ்ட் பிரச்சனயாவோ மட்டும்தான் இருக்கணும்
நகரில் எதாவது முக்கியமான இடத்துல நடந்தா அது போராட்டமாக கொள்ள படாது.
நீங்க நடத்துற போராட்டம் மூலமா முழுமையான தீர்வு கிடைக்கணும். சும்மா இப்ப இருக்குறத விட கொஞ்சம் நல்ல நிலைமைக்கு கொண்டு வருமுன்னு சொன்னலாம் அத நாங்க போராட்டமுன்னு ஒத்துக்க முடியாது.

இத எல்லாம் பண்ணுனாலும் நாங்க இன்னும் சில கேள்வி கேப்போம்

இப்ப இந்த போராட்டம் நடத்துற நீங்க இது வரைக்கும் எங்க இருந்தீங்க?. இது வரை இல்லாத அக்கறை இப்ப உங்களுக்கு எதுக்கு?
நீங்க ஏன் ஆப்ரிக்கால காங்கோல நடந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கலா? அப்ப நீங்க என்ன முதலாளித்துவ ஆளா?

Related Posts Plugin for WordPress, Blogger...