Thursday, March 10, 2011

இதைப் படிங்கடா வெள்ளை மோகம் புடிச்சவய்ங்களா! (Fair&lovely விமர்சனம்)


ஒரு விளம்பரம். அதுல நேர்முகத்தேர்வு நடக்குது. ஒரு எல்லாந்தெரிஞ்ச விளக்கெண்ணய் இன்னொருத்தன் கிட்ட கேள்வியா கேக்குறான். கடைசிலதான் தெரியுது கேள்வி கேட்டவன் தான் இன்ட்டெர்வ்யூக்கு வந்தவனாம், பதில் சொன்னவன் interview எடுக்குறவனாம்! என்னடான்னு பாத்தா ஒரு (fairness cream) சிகப்பழகு க்ரீம் போட்டதுனால இவரு 'பாஸ்'(pass) ஆயிட்டாராம் interviewல!

அட நாய்களா.. இது தெரிஞ்சா நான் காலேஜுக்கே போயிருக்க மாட்டேனேடா. வீட்லயே உக்காந்து முகரைல cream பூசிட்டு interviewக்கு போயிருப்பேனே! அப்படி எந்த கம்பனிலடா வெள்ளையா இருக்குறவனா பாத்து வேலைக்கு எடுக்குறான்? சரி வெள்ளையா இருந்தா வேலை கொடுப்பான்னா, வெண்குஷ்டம் வந்தா தான் அந்த கம்பனில ப்ரொமோஷன் கொடுப்பாய்ங்களா? கிரகம் என்ன விளம்பரம்டா இது? உங்க கற்பனைத் திறனுக்கு அளவே இல்லையாடா?

இன்னொரு விளம்பரம். நடிகர் சூர்யா என்ற அமெரிக்கர் ஒரு shopping mallல ஸ்டைலா நடப்பாரு. உடனே பொம்பளைப் புள்ளைங்கள்லாம் அவரையே பாக்கும். இதைப் பார்த்துட்டு ஒரு கேனையன் "இந்த குள்ளனையெல்லாம் ஃபிகர் பாக்குதே. நம்மளப் பாக்கலையே. கலர்தான் காரணமோ?"னு நினைச்சுக்கிட்டு ஏதேதோ fairness cream வாங்கிப் போட்டுப் பாப்பான். உடனே சூர்யா என்ற மூணறையடி அமெரிக்கர், "இதைப் போடுப்பா. நான் இதைப் போட்டுத்தான் ஃபிகர் கரக்ட் பண்றேனு" சொல்லி ஒரு சொரி மருந்தைக் கொடுப்பாரு. அவன் அதை முகரைல தடவுனவுடன எல்லா புள்ளைங்களும் அவனைப் பாக்கும்! அடங்கொக்கா மவனே... அந்தப் புள்ளைங்க சூர்யாவைப் பார்த்ததே "யாருடா இவன்? மூணு அடில குள்ள மனிதன் போறானே"னு நினைச்சு ஆச்சரியமா பாத்ருக்குங்க. இவய்ங்க நம்மகிட்ட சிகப்பழகு அது இதுனு புருடா வுட்றாய்ங்க!

ஒரு நடிகனுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்புணர்ச்சி வேணாமா? பெப்சி குடிக்க சொன்ன. குடிச்சோம்! சிமெண்ட் வாங்க சொன்ன. வாங்குனோம்! கிரகம்.. சரவணா ஸ்டோர்க்கு போக சொன்ன. போனோம்! அடப் பாவி இப்ப கண்டதை மூஞ்சில தடவ சொல்லி, "தடவுனாதான் ஃபிகர் பாக்கும்"னு ஒரு புரளிய கிளப்புறியே, இது நியாயமா? ஐந்தரை அடிக்கு மேல் உயரமாக இருக்கும் ஆண்கள் தான் அழகு, அதற்கு கீழ் இருக்கும் ஆண்கள் எல்லாம் அசிங்கமானவர்கள்னு ஒரு விளம்பரம் போட்டா இந்தாளுக்கு நல்லாருக்குமா? 


பேசாம வில் ஸ்மித், ஒபாமா, பிரய்ன் லாரானு ஆளுக்கு ஒரு fairness cream கொடுத்து வெள்ளையாக சொல்லிட்டோம்னா எல்லாரும் வெள்ளைக்காரன் ஆயிருவோம். அப்புறம் இனப் பிரச்சினையே இருக்காதுல்ல! இந்த ஐடியா நெல்சன் மண்டேலா, லூதர் கிங், மால்கம்X க்கு எல்லாம் தெரியாமப் போச்சு. தெரிஞ்சுருந்தா எல்லாரும் போராட்டமெல்லாம் பண்ணாம ஆளுக்கு ஒரு fairness cream வாங்கி தடவிட்டுப் போயிருப்பாய்ங்க!

நம்மாளுங்களை செருப்பால அடிக்கனும். "வெள்ளையா ஆகனும்னா தினமும் காலை, மாலை உணவுக்குப் பின் அரை லிட்டர் ஃபினாயிலைக் குடி"னு சொன்னாக் கூட நம்ம ஊர் புள்ளைங்க குடிக்குங்க. அந்த அளவுக்கு அடிமைப் புத்தி, inferiority complex.
அதுங்களை சொல்லி குற்றமில்ல. ஒரு வெள்ளையான பொண்ணும், மாநிறமான பொண்ணும் சேர்ந்து டிவி பாக்குதுங்கனு வைங்க. அதுல என்ன காட்றாய்ங்க? வெள்ளையா இருக்க பொண்ணு, கருப்பா இருக்க பொண்ணுகிட்ட "கவலைப் படாத. இதைப் போட்டீனா நீயும் என்ன மாதிரி வெள்ளைய, அழகா ஆயிருவ. வேலை கிடைக்கும். நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். அது இது"னு சொன்னா அந்த கருப்பான புள்ளைக்கு தாழ்வு மனப்பான்மை வருமா வராதா? நந்திதா தாஸ் பாத்ருக்கீங்களா? அவங்களை விட என்ன அழகு வேணும்? கீழ இருக்க வீடியோ பாருங்க. கருப்பா இருக்க புள்ளைய வேணும்னே அசிங்கமா காட்டனும்னு எட்டு முழ சேலைய கிழவி மாதிரி சுத்திவிட்டுட்டு, அப்புறம் cream போட்டதுனால வாய்ப்பு கிடைச்ச மாதிரி காட்டிருப்பாய்ங்க! இதெல்லாம் ஒரு விளம்பர யுக்தியா? அசிங்கமா இல்ல! வெள்ளையா இருக்குறது ஒரு வியாதி. அதுனாலதான் வெள்ளைக்காரன் நேரம் கிடைக்கிறப்பல்லாம் வெயில்ல அம்மணமா உக்காந்து Sun bathங்குற பேருல அந்த குறைபாட்டை சரி பண்ணிக்கிறான். இல்லேனா அவன் தோல் சுருங்கி சுண்ணாம்பு மாதிரி ஆயிரும். இந்த பிரச்சினை நமக்கு இயற்கையாவே நம்ம நிறத்தால இல்லாம இருக்கு. அது இந்த அரைகுறைகளுக்குத் தெரியாம வெள்ளையாக அலையுதுங்க! வெள்ளைக்காரனோட skin texture பாருங்க. பக்கத்துல பாத்தா அறுவெறுப்பா இருக்கும்.

அதுமட்டும் இல்ல. எந்த கருமத்த எவ்வளவு பூசினாலும், நம்ம கலரை மாத்த முடியாது. அது விஞ்ஞான ரீதியா நிரூபிக்கப்பட்ட ஒன்று. நம்ம தோல் நிறம், நம்ம கருவா உருவாகுறப்பவே தீர்மானிக்கப்படுது, DNAல பதிவும் செய்யப்பட்டுறது. குங்குமப்பூ, அரளிப்பூனு எதைத் தின்னாலும் வயித்துல இருக்க குழந்தையோட நிறம் மாறாது. வெட்டிச் செலவும், வீண் side effectsசும் தான் மிச்சம். 


அது என்னாங்கடா எந்த மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டா, நல்ல கலரா சிகப்பா வேணும்னு கேக்குறீங்க? ஒரு பொண்ணு வேணாம் தம்பி, ரெண்டா கட்டிக்கனு ரெண்டு வெள்ளைப் பன்னியைக் கொண்டு வந்தா கட்டிக்கிவீங்களாடா?

நம்ம போயி வெள்ளைக்காரன் கிட்ட, "உன் தோல் ஏன்பா வெள்ளையா இருக்கு? இதைத் தடவு மாநிறமா அழகா ஆயிருவ"னு சொன்னா, செருப்பை சாணில முக்கி அடிப்பான். ஆனா அவன் வந்து நம்மகிட்ட, "என்னப்பா இது? உன் தோல் கருப்பா இருக்கு? இதைத்தடவு வெள்ளையா ஆயிருவ"னு சொன்னா பல்லைக் காட்டிக்கிட்டு வாங்கித் தடவுறோம். ஒரு படத்துல தல கவுண்டரு சொரி மருந்த திம்பாரே, அது மாதிரி. இதுக்கு பேருதான் அடிமைப் புத்திங்குறது. நம்மகிட்டயே காசை வாங்கி நம்ம இனத்தையே அசிங்கப்படுத்துறான், நமக்கும் அது கொஞ்சம் கூட உறைக்காம சொந்தக் காசுல சூன்யம் வச்சுகிட்டே இருக்கோம்!

நல்லா சொல்றேன் கேட்டுக்கங்க. Fair and lovely, fair and handsome, fairever னு எந்தக் கருமத்த பூசுனாலும் தோல் வெள்ளையா ஆகவே ஆகாது. சொரி புடிச்சு தான் அலையனும். ஆனா வெள்ளையாக மாற வேற சில சுலபமான வழிகள் இருக்கு,

1)தொடர்ந்து 72 மணி நேரம் தண்னீரில் மூச்சுவிடாமல் மூழ்கியிருக்க வேண்டும். தோல் நல்ல வெள்ளை நிறத்தில் மாறும். உடம்பு உப்பி பொலிவு பெறும். ஆனா என்ன? உன் ஆத்தானால கூட உன்னை அடையாளம் கண்டு புடிக்க முடியாது.

2) கொதிக்குற சுண்ணாம்பில் தினமும் முகம் கழுவி வரவும். முதல் நாளிலேயே நல்ல முன்னேற்றம் தெரியும்.

3) பிளேட் ஒன்றை எடுத்துக்கொண்டு தோலை சுரண்ட வேண்டும். அடித்தோலுக்கு முன்னேற முன்னேற தோலின் நிறம் மாறிக்கொண்டே வரும். ரத்தம் வந்தால் கம்பனி பொறுப்பல்ல..

அதனால மக்களே... வெள்ளையாத்தான் ஆவேன். அதான் எனக்கு பெருமைன்னு இன்னும் நினைச்சீங்கன்னா, மேற்கண்ட வழிகளைத் தவிர வேறு வழி கிடையாது. மத்த மானமுள்ளவர்களுக்கு நான் என்ன சொல்றேன்னா, கருப்பாவோ மாநிறமாவோ இருப்பதற்காக எந்த வகையிலும் தாழ்வுமனப்பான்மை அடைய தேவையில்லை. ஏன்னா வெள்ளையா இருக்குற காரணத்துனால வெள்ளைப் பன்றி உயர்ந்ததும் இல்ல. கருப்பா இருக்குறதுனால யானை தாழ்ந்ததும் இல்ல.

25 comments:

தமிழ்வாசி - Prakash said...

செம நெத்தியடி பதிவு.. கலக்கிட்டிங்க...

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

BorN 2 BooM said...

mulumaiyaana alasal..

Naraya therinjukitten.. Nandri Ashok.

bandhu said...

நல்ல பதிவு! தயவு செய்து நீங்கள் வெள்ளையாக கொடுத்த ஐடியாவில் நான்கவதை நீக்கி விடுங்கள்.

Anonymous said...

வெடிகள கொளுத்தி போட்டாலும் அடித்தளம் உறுதியில்லாத அயோக்கிய கோட்டைகள் மீது தான் வீசுறீங்க. நீங்க நாயின் சிறுநீரை ஒரு பாட்டிலில் அடைத்து ஒரு ஆங்கில பேரை வைத்து விளம்பரத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் சூர்யா,கார்த்திக்.. ஏன் அவங்க அப்பா சிவக்குமாரே நடிச்சிட்டு போவாரு.... அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவு உச்சத்தில் இருக்கு. பன்னாடைகள் இந்த தொழில் செய்வதற்கு வேறு ஏதாச்சும் பலான தொழில் செய்யலாம்.

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே மலேசியாவில் மலாய் பெண்கள் அனைவருமே மீராஜாஸ்மின் நிறத்தில் இருப்பார்கள்.சீனப்பெண்கள் தமன்னா கலரில் இருப்பார்கள்.சிகப்பழகு விளம்பரங்கள் இந்த வேறுபாட்டை மையப்படுத்தி காசு பார்க்கிறது.கருப்பாக இருப்பது ஆரோக்கியம் மட்டுமல்ல...மதிப்பானதும் கூட என்று விளம்பரப்படுத்த வேண்டும்.

தயவு செய்து நான்காவது வழிமுறையை பதிவில் நீக்கிவிடவும். நகைச்சுவை என்ற வடிவத்தில்.... காலம்காலமாக காயப்பட்டுவரும் அந்நோயாளிகளை நீங்களும் புண்படுத்த வேண்டாம்.

techarun said...

arun

very nice blog....Awareness about face cream...Today GLOBALIZATION'S Unwanted things are available in market to cheat indians.....

முத்துசிவா said...

ஹி ஹி . நல்ல வேளை...வெள்ளைய இருந்த அழுக்காயிருவேன்னு தான் எங்க அம்மா என்ன கருப்பா பெத்துட்டாங்க....

இரா.இளவரசன் said...

@அனைவருக்கும்
4வது வரியை நீக்கிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

பாலா said...

வெள்ளையா இருக்குறவங்களை எல்லாம் ஃபீல் பண்ண வச்சுடுவீங்க போலிருக்கே?

நல்ல பதிவு

Anonymous said...

உங்களுக்கு வெள்ளையா இருக்கிறவங்களப் பாத்து பொறாம. ச்சீ ச்சி இந்தப் பழம் புழிக்கும்னு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்ல அலற்றீங்க. அதுக்கு நாங்க என்ன செய்வதாம்.

நாங்க, நாளைய முதல்வர் எங்கள் தங்கத் தானைத் தலைவர் சூரியா சொல்றதக் கேட்டு வெள்ளயாயிட்டோம்னாங்கிற பதட்டத்துல உளற்றீங்க. எங்க சூரியாவுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரியப்போவுது? போங்கப்பா, எங்கத் தலைவர் சொல்றதுதான் சரி.

அல்லாரும் பேரு அண்டு லவ்வுலி பூசிக்குங்கப்பா. வெள்ளப்பொண்ணுங்கல்லாம் சுத்திச் சுத்தி வரும் - பாடைல போனப்புறம், எரிக்கறதயோ பொதய்க்கறதயோ பார்க்க!

நல்ல பதிவு.

புரியறவங்களுக்குக் கண்டிப்பா புரியும். நீங்க கலக்குங்க!

நிலவு said...

ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 4 க்கு எதிராக‌ ! - http://powrnamy.blogspot.com/2011/03/4.html

ரஹீம் கஸாலி said...

அவர்கள் பொருளை வாங்க, அவர்கள் இப்படியொரு விளம்பர யுக்தியை கையாளுகிறார்கள் என்றால் நீங்கள் உங்கள் பதிவை படிக்க இப்படியொரு தலைப்பை வைத்து விளம்பர யுக்தியை கையாண்டு இருக்கிறீர்கள். சொன்ன கருத்து சாட்டையடியாக அருமையாக இருக்கிறது...அதேநேரம் தலைப்பு நெருடலாக இருக்கிறது...தலைப்பை மாற்றி விடலாமே...

ராவணன் said...

தலைப்பு சூப்பர்.

பதிவில் உள்ள விசயத்தைவிட தலைப்பு அருமை.

எப்படிச் சொன்னாலும் எதுவும் புரியாதவர்களுக்கு இப்படி சொன்னாலாவது புரியுமா?

தலைப்பில் எந்தத் தவறும் இல்லை.

இரா.இளவரசன் said...

@தமிழ்வாசி
தவறாமல் எல்லா இடத்திலும் போயி லின்க் போட்டு வந்துருவீங்க போல! எப்படிலாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு! :-(

@அனைவருக்கும்
தலைப்பையும் மாற்றிவிட்டேன்.

@ராவணன்
நன்றி. ஆனால் சரியான கட்டுரை தவறான தலைப்பினால் சேராமல் போய்விடக்கூடாது என்பதால் தலைப்பை மாற்றிவிட்டேன்!

உலக சினிமா ரசிகன் said...

கருத்துக்கு மதிப்பு கொடுத்து தலைப்பையே மாற்றிவிட்டீர்கள்.மிக்க நன்றி.விசாலமான மனதில்தான் மாற்றான் கருத்தையும் மதிக்கத்தோன்றும்.
நல்ல மனம் வாழ்க....
நாடு போற்ற வாழ்க....
கவிஞர் வார்த்தைகளால் வாழ்த்துகிறேன்.

கோவை நேரம் said...

நெத்தியடி பதிவு ...

Sathishkumar said...

நான் கூட ஆஸ்கார் பற்றிய ஒரு கட்டுரையை எழுதிருக்கிறேன். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்

http://007sathish.blogspot.com/2011/03/oscar-conspiracy.html

Aathirai said...

Super

Jack said...

super nalla sollunga appayavathu kekurangalaanu paapom nandri..........

Anonymous said...

செருப்படி பதிவு//// கட்டித் தழுவி உங்களைப் பாராட்டனும் போலிருக்கு.. வெள்ளை நிறப் பெண் தேடும் ஆண்களுக்கு இரண்டு வெள்ளைப் பன்னி - சான்ஸே இல்லை பாஸ் !!! நந்திதா தாஸ் என்ன வெள்ளையா அவர் அழகான பெண்ணாக இல்லையா என்ன??? தோலின் நிறம் என்பது நமது சமூகத்தின் தாழ்வு மனப்பானமையின் வெளிப்பாடு தான். ...

akulan said...

நல்ல பதிவு.................

Aysha said...

After using fair and handsome my brother-in-law got very bad rashes in his face. He is already fair...en indha vetti velaiyo??

Shayini said...

Semma semma...nethiadi na ithuthaan:) nammalla eamaruravan irukra varaikum eamathuravan irupaan....enaku pudicha colour karupputhan:)

Ganesan said...

நெத்தியடிக் கட்டுரை தலைவா! தொடர்ந்து விளாச வாழ்த்துக்கள்..........

vikeymaya said...

ennada karupargal maanaada

Related Posts Plugin for WordPress, Blogger...