Wednesday, March 30, 2011

இந்தியா ஜெயிக்கனும். இல்லேனா பாகிஸ்தான் தோக்கனும்!

"ஏம்பா.. மேட்ச் போற போக்கைப் பாத்தா பாகிஸ்தான் ஜெயிச்சிரும் போலயேப்பா!"னு ஒருத்தன்கிட்ட கேட்டேன். "நீயெல்லாம் இந்தியனா? இப்படிச் சொல்ல வெக்கமா இல்ல?"னு சொல்லிட்டு என்னை தேசவிரோதி மாதிரி பாத்தான் ஒருத்தன். சரி இதுக்கு மேல பேசுனா பொடா கிடானு எதாச்சும் சட்டத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருவானோனு பயந்துட்டு பேசாம இருந்துட்டேன்! 

"சச்சின் 100 அடிச்சா வெடி போடனும்னு வெடியெல்லாம் வாங்குனியே, அவுட் ஆயிட்டானே!! ஊருக்கு வர்றப்ப கொண்டு வா. நம்ம போடுவோம்"னு சொன்னேன் என் நண்பன் கிட்ட. அவன், "இப்படி ஆகும்னு தெரியும் மச்சி அதான் அவன் 50 அடிக்கிறப்பவே எல்லா வெடியையும் போட்டேன்."ன்னான்!!

"அடக் கிரகம் புடிச்ச தமிழர்களா!!! BCCI என்பது TCS, WIPRO மாதிரி ஒரு தனியார் நிறுவனம்! அது ஜெயிச்சா என்ன? தோத்தா என்னய்யா? தேசப்பற்றோட வேடிக்கை பாக்க இது என்ன இந்தோ-பாகிஸ்தான் போரா?"னு முகநூல்ல ஒரு ஸ்டேடஸ் அப்டேட் போட்டேன்யா! ஒருத்தன் வந்து ஒன்னு சொன்னான் பாருங்க, "தாய் நாடு தாய்க்கு சமம், அதை தெய்வமாக்குவதும், தேவடியாளாக்குவதும் அவனவன் இஸ்டம்..."னு! வாழ்க்கையே வெறுத்துட்டேன்! மொக்கப்பய புள்ள! என்னம்மா டயலாக் வுடுது பாரு! பேசாம நம்ம விசயகாந்து படத்துக்கு வசனம் எழுதப் போங்கடா! இப்பல்லாம் அவரு பட வசனம் ரொம்ப மொக்கையா இருக்கு!

பாகிஸ்தான்னா அவ்ளோ வெறி வருது! வெறி நாய் மாதிரி! இத்தாலிக்காரியா இருந்து இப்போ இந்தியாக்காரியா convert ஆகிருக்க (நாடு மாறத மதம் மாற்றம் மாதிரி ஈசி ஆக்கிட்டீங்களேடா!!) ஒருத்தி இலங்கைல செஞ்ச உள்குத்து வேலைனால சீனாக்காரன் நம்ம தலைலயே குண்டு போடப் போறான்! அப்ப பாகிஸ்தான் காரனும், வடநாட்டுக்காரனும் சேர்ந்து சிரிப்பான்டி! அப்ப இருக்கு ஆப்பு!

பேசாம ரெண்டு நாட்டு ராணுவ வீரர்களையும், காஷ்மீர் போராளிகளையும் கூப்பிட்டு, பேட் பால் கொடுத்து மேட்ச் விளையாட வச்சு, யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு காஷ்மீர்னு சொல்லீட்டோம்னா பல உயிர் மிச்சமாகும்ல!
 
மேட்ச் இந்த நொடில போற போக்கைப் பாத்தா இந்தியா ஜெயிச்சிரும் போல! சரி விட்டுத் தொலைங்கடா! "நல்லெண்ன, வேப்பேண்ண, கடலெண்ண பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன?"னு நானும் நல்ல இந்தியனா உங்க கூட சேந்து, "இந்தியா ஜெயிக்கனும். இல்லேனா பாகிஸ்தான் தோக்கனும்!"னு சொல்லி இந்த மொக்கைப் பதிவை முடிச்சுக்குறேன்!

7 comments:

jaisankar jaganathan said...

சூப்பர் தல

Anonymous said...

//இந்தியா ஜெயிக்கனும். இல்லேனா பாகிஸ்தான் தோக்கனும்!//

ஜூப்பரு!

Anonymous said...

கிரிக்கெட் இந்தியர்களின் மனநோய் போல ஆகிவிட்டது.. அதை தெரிந்தே இந்திய அரசு ஊக்குவிக்கிறது....(இந்திய அரசு என்பது பலநிறுவனங்களின் கூட்டமைப்பு தானே....) நீங்கள் ஒன்றை கவனிக்க தவறிவிட்டதாக எனக்குபடுகிறது... தமிழக மீனவர் எப்படி வேண்டுமானாலும் குண்டடிபட்டு சாகலாம்... ஆனால் கிரிக்கெட் விளையாடியவனுக்கும் பார்ப்பவனுக்கும் உள்ள பாதுகாப்பை கவனியுங்கள்... இதை விட கேனை கிறுக்கு நாட்டை நீங்கள் எங்கும் கண்டிருக்கமுடியாது...ஆனாலும் இந்தியா தோற்க்கூடாது... அதுவும் பாகிஸ்தானிடம்... பாகிஸ்தான் தோற்பதற்கு எதுவும் இல்லை.. எல்லாவற்றையும் அமெரிக்காவிடம் அடமானம் வைத்து தினமும் சலாம் போட்டு பல்லிளித்து பெரும்பாலான ஏழைகள் கொண்ட தேசம் அது. நமது இந்திய மீடியாக்கள் பாகிஸ்தானில் வீட்டுக்கு வீடு ஒரு கஸாப் இருப்பதாகவே ஒரு மாயை வைத்து கல்லா கட்டுகிறது...நீங்கள் அல்லது இங்கு வரும் வாசகர்களோ.. எவரெனும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய பாகிஸ்தான் பற்றிய இரண்டு கட்டுரைகளை வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்.. மிக வறிய,முட்டாள்தனமான பாவப்பட்ட ஜீவன்களை நீங்கள் அறிவீர்கள்..இன்றைய நாளில் எதிர்காலமே கேள்விகுறியான தேசம் அது.. நாம் மொஹாலியில் சில ஆயிரம் கொண்ட பாகிஸ்தான பணக்காரர்களை.. அங்குள்ள பெருவாரியான ஏழை பாகிஸ்தானியர்களுக்கும்.. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறித்தனத்துக்கும் நுனியளவும் சம்பந்தமில்லை.

Anonymous said...

ஏன் இந்த வெறித்தனம்

Just a Postman said...

nice one... can i use that comment on my blog http://postmanpostmartem.blogspot.com/
thanks

Jayadev Das said...

\\BCCI என்பது TCS, WIPRO மாதிரி ஒரு தனியார் நிறுவனம்! அது ஜெயிச்சா என்ன? தோத்தா என்னய்யா?\\சூப்பரப்பு. அருமையா சொன்னீங்க; இந்தப் பயலுக மேட்ச் முடிஞ்சதும் குடுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தோடு சூதாட்டப் பணம், விளம்பரத்துல நடிச்சு வரும் பணம் [அதுவும் குடிச்ச வயிறு வெந்து போகும் பெப்சி விளம்பரம், இவனுங்க நாட்டைக் காக்கப் போரவனுங்க..தூ...] எல்லாம் எடுத்துகிட்டு, பிட்சுமி நாய், பிக்மா என்று கில்மா கிடைச்சா பைக்கு ஏத்திக்கினு மஜா பண்ண போயிடுவானுங்க. ஆனா நாட்டைக் காக்க வெயிலிலும், உறையும் பனியிலும் இரவு பகலா உயிரையும் குடுத்து நாட்டைக் காக்கும் வீரனுக்கு ஒரு வெண்கலப் பதக்கத்தோடு அனுப்பிடுவானுங்க, அவன் வாழவே கஷ்டப் பட்டுகிட்டு இருப்பான், ஒருவேளை சண்டையில் அவன் செத்துட்ட அவன் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும், ஒருத்தனும் சீண்ட மாட்டார்கள். நன்றி கெட்ட நாய்கள்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//ஒருத்தி இலங்கைல செஞ்ச உள்குத்து வேலைனால சீனாக்காரன் நம்ம தலைலயே குண்டு போடப் போறான்! //

என் வாழ்நாளில் இது நடந்தால்.... அதுவே நான் பெற்ற பெரும் பாக்கியமாகும்.

நாராயண....நாராயண...

Related Posts Plugin for WordPress, Blogger...