Thursday, March 31, 2011

சகாயம்-அழகிரி பிரச்சினை! தேர்தல் ஆணையத்தின் பழிவாங்கல்!

எத்தனையோ தேர்தல்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் எப்போதும் தேர்தல் சமயத்தில் கட்சிகள் மீது குறைபட்டுக் கொள்ளும் மக்கள் இந்த முறை தேர்தலிலே நிற்காத ஒரு கட்சி மீது மிக அதிகமான எரிச்சலிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் தான் அது!

"மக்கள் தங்களின் அவசரத் தேவைக்குக் கூட பணமெடுக்க முடியாதபடி தொந்தரவு செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் லட்சணமா? மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பிள்ளைக்கு கல்லூரிப் பணம் கட்டும் பெற்றோர்கள் எல்லாம் கழுத்தில் Notice தொங்கவிட்டுக்கொண்டு அலைவார்களா? Receipt இல்லாத பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் என்ன வருவாய்த் துறையா?" என்றெல்லாம் ஏற்கனவே நீதிமன்றத்தால் தேர்தல் ஆணையம் கண்டிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது சகாயம் மீது அழகிரி தொடுத்த வழக்கிலும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தால் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது.  

நேர்மைக்கு பெயர் போன மதுரை ஆட்சியர் சகாயம், பல இடங்களில் நடந்த கூட்டங்களில் பொதுமக்கள் முன்பு "ஆட்சிமாற்றம் வேண்டும்" எனப் பேசியதாக  செய்திகள் வந்திருந்தது. மத்திய அமைச்சர் அழகிரி இதனால் கோபமுற்று, சட்டத்திற்கு புறம்பான இச்செயலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் "தேர்தல் ஆணையம் ஏன் சகாயம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?" எனக் கேள்வியும் எழுப்பியிருந்தார். இக்கேள்வியை தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் எழுப்பியபோது, "சகாயம் அப்படி பேசவில்லை என்றும். அச்செய்தி பொய் என்றும் பதில் அளித்தது. உடனே நீதிமன்றம், "ஏன் அந்த நாளேட்டின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேட்டு நாளேட்டுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!
இந்நிலையில் 'அசிங்கப்பட்ட' தேர்தல் ஆணையம், மத்திய அமைச்சர் அழகிரிக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை அழகிரி வெளியூர் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது தீடீரென வாபஸ் பெற்றுவிட்டது! இது வெளிப்படையான பழி வாங்கும் நடவடிக்கை என தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன! நேர்மைக்கு பேர் போன சகாயம் இப்ப சைலண்ட் ஆனது ஏன்னு தெரில! நான் கூட நேத்து அழகிரிய திட்டியும், இவரைப் புகழ்ந்தும் எழுதிருந்தேன்! இன்னைக்கு தேர்தல் ஆணையமும், சகாயத்தின் மவுனமும்  எல்லாத்தையும் கேள்விக்குறி ஆக்கிருக்கு! இருந்தாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சகாயத்தின் மீது அவசரமாக எந்த முடிவுக்கும் இந்நிலையில் வர இயலாது! தேர்தல் ஆணையமே பாதுகாப்பு வாபஸ் செயலுக்கு பொறுப்பு!

மேலே உள்ளவை கருத்துக்கள்(opinions) அல்ல, செய்திகள்(facts)! எனக்கு என்ன சந்தேகம்னா, பொது இடத்துல அநாகரீகமா வேட்பாளரை அடிச்ச விஜயகாந்தை கேள்வியே கேக்கல இந்த தேர்தல் ஆணையம்! இன்னைக்கு எங்கயோ ஒரு கூட்டத்துல தண்ணியப் போட்டு "அழகு நிலையம் நடத்தும் பெண்கள் எல்லாம் தரங்கெட்டவர்கள்"னு பேசிருக்கு அந்த டாஸ்மாக் கதாநாயகன்! அதை அந்தப் பெண்களின் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் புகாராக தெரிவித்துள்ளார்கள்! என்ன செஞ்சு கிழிக்குதுனு பாப்போம்!

10 comments:

தமிழ்வாசி - Prakash said...

சரக்கை மாத்தி ஊத்தி கொடுத்திட்டாங்க ஜெயா .. அதான் இப்படி ஆடுறார் விஜயகாந்த்.

Anonymous said...

பின்வரும் வரிகளின் மூலம் என்னதான் நீங்கள் உண்மையை மறைக்க நினைத்தாலும்,
//மேலே உள்ளவை கருத்துக்கள்(opinions) அல்ல, செய்திகள்(facts)!//
அது உங்களின் உண்மை(உங்களின் தனிப்பட்ட கருத்து தான்) முகத்தை(திருடர்கள் முன்னேற்ற கழகம்) வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது நண்பா.

நீங்கள் சந்தேகிப்பதால் திரு.சகாயம் அவர்களின் நேர்மைக்கு எந்த இழுக்கும் வந்து விட போவதில்லை... ஆனால் குஞ்சா நெஞ்சனின் பாதுகாப்பு நீக்கப்பட்டது உங்களை ஒரு பதிவை வெளியிடும் அளவிற்கு பாதித்துவிட்டதா ?!?!?! என்பதை என்னும் பொது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது தோழா....

Anonymous said...

ஜிங்கு சாங்! ஜிங்கு சாங்!
கருப்பு செவப்பு கலரு ஜிங்கு சாங்!!

உலக சினிமா ரசிகன் said...

தேர்தல் கமிசன் சிறப்பாக செயல் படுகிறது....சிறு குறைபாடுகள் இருந்தாலும்.

Anonymous said...

Why is it Sagayam's concern about withdrawing security to Azhagiri?
And why should you expect Sagayam to speak in public regarding that?

Don Ashok said...

And why should you expect Sagayam to speak in public regarding that?///

நான் சகாயத்தை சாடவில்லை. ஆட்சிமாற்றம் வேணும்னு பேசிருந்தாருன்னா, இதையும் பேசித்தான் ஆகனும். தேர்தல் ஆணையம் தன் மாவட்ட MP ஒருவரை பழி வாங்குவதை வேடிக்கைப் பார்ப்பது தார்மீக அடிப்படையிலும், நேர்மை நீதி என பேசும் ஒரு கலெக்ட்டருக்கு அழகா?

Anonymous said...

எனக்கு மிக ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது உங்கள் கட்டுரை...எனக்கு சகாயம் பற்றி மீடியாவின் பார்வைக்கு அவர் வரும்முன்பே நிறைய விஷயங்களை கேள்விபட்டிருக்கிறேன். முள்ளிவாய்க்கால் சம்பவம் பற்றி அவர் வேதனையோடு என் நண்பர் ஒருவரிடம் பேசிய பேச்சுகள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது. அழகிரி நம்மை போன்ற எளிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த முன்று இளைஞர்களை கொன்று தப்பித்தது மட்டுமில்லாமல் நிலபிரபுத்தவம் மாறாமல் மத்திய அமைச்சர் ஆகிவிட்டார். என்ன ஆயிற்று உங்களுக்கு...? பிரவீன் குமார் போன்ற பீகார் அதிகாரிக்கும் துணிச்சல் இக்காலகட்டத்தில் தேவையான ஒன்று.. கருணாநிதி மாதிரியான பக்கா அரசியல்வாதியிடம் வேறு வழியில்லை.. அதற்காக நாம் சில சிரமங்களை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.. சின்னஞ்சிறிய அபத்தங்களை கூட சகிக்கமுடியாமல் கடும்கண்டனம் தெரிவித்து கட்டுரை எழுதும் நீங்கள்... தேர்தல் ஆணையத்தின் இப்படியான கடும் நடவடிக்கைகளை விமர்சிப்பது எனக்கு ஆச்சர்யமே...?

Anonymous said...

http://www.perumalmurugan.com/2011/01/1.html
கீழ்கண்ட இணைப்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளது நீங்களும் மற்ற நண்பர்களும் அவசியம் படிக்கவேண்டும் ... நாம் தமிழராக பிறந்தற்காக சிறிது பெருமைபடும் படி நடந்துக்கொள்ளும் சகாயம்.

Don Ashok said...

@அனைவருக்கும்
சின்னஞ்சிறிய அபத்தங்களை கூட சகிக்கமுடியாமல் கடும்கண்டனம் தெரிவித்து கட்டுரை எழுதும் நீங்கள்...///

இந்தக் கட்டுரை செய்தியின் அடிப்படையிலானது. அச்செய்தியைக் கேட்டபின் தேர்தல் கமிஷன் உண்மையிலேயே ஒருதலைபட்சமாக நடக்கிறதோ என்ற எண்ணம் இருந்தது. இன்று தேர்தல் கமிஷன் மேல் எந்த தவறும் இல்லை, அழகிரி தனக்கு ஒதுக்கப்பட்ட 11 காவலர்களுக்கும் மேல் 26 காவலர்களை பாதுகாப்புக்கு வைத்திருந்தார் என செய்தி வெளியாகியுள்ளது. அதற்குள் இந்த கட்டுரையை அவசரப்பட்டு எழுதிவிட்டேன் என்றே தோன்றுகிறது. மன்னிக்கவும். மேலும் ஆட்சியர் சகாயம் மேல் எனக்கும் பெருமதிப்பும் மரியாதையும் உண்டு. மிக்க நன்றி. இந்தக் கட்டுரையை யாரும் பரிந்துரைக்காதீர்கள்.

Anonymous said...

தி.மு.கவிற்கு ரொம்ப ஓவரா ஜால்ரா தட்ட்றீங்க? தேர்தல் கமிஷன பாராட்ட மனசு இல்லாவிட்டாலும் உங்க தலைவர் அறிக்கை போலவே எழுதாதீங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...