Monday, March 21, 2011

வைகோ என்ற அப்பாட்டக்கர்!!

ஆட்சியில் இல்லாத ஜெயாவுடன், "கூட்டணியில் இருக்கிறோம்"னு அப்பாவியாய் நம்பி பல வருசம் கூடவே இருந்து, இன்று அடிபட்டு, மிதிபட்டு வெளியே துரத்தப்பட்டிருக்காரு வைகோ. காரணம் கேட்டா, "உங்களையெல்லாம் எப்ப பாஸ் நாங்க கூட்டணில வச்சிருந்தோம்? நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டீங்கன்னா நாங்களா பொறுப்பு?"னு சொல்லிட்டாங்களாம் அந்தம்மா! அப்புறம் 'வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே'னு background music ஓட நம்மாளு போயஸ் தோட்டத்துல இருந்து ரிட்டர்ன் ஆயிருக்காரு பாவம்! ஆனா அதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேலை.
 
ஆணவத்துனாலயும், தான்தோன்றித்தனத்துனாலயும், மத்தவய்ங்களை என்னிக்குமே மதிக்காத பார் போற்றும் குணத்தாலயும் நடந்த இந்த கேவலமான கூட்டணிக் குழப்பத்த மக்கள் முன்னாடி சிக்கல் இல்லாமல் சமாளிக்கிறதுக்காக சில மொக்கைத்தனமான காரணங்கள் சொல்றாய்ங்க இப்ப. மேலோட்டமா பாத்தா கூட காறித் துப்புற மாதிரி இருக்கு.

ஜெயலலிதாவுக்கு தொகுதி பிரிச்சதைப் பத்தி ஒன்னுமே தெரியாதாம். எல்லாமே சசிகலாவின் வேலையாம்.
இதை எப்படி வெக்கமே இல்லாம அதிமுககாரங்களும், ஜெயலலிதாவுக்கு காவடி எடுக்கும் தினமலரும் சொல்றாய்ங்களோ தெரில. நாளைக்கு ஜெயலலிதா முதல்வர் ஆகி, தமிழ்நாட்டுல திடீர்னு ஒரு உத்தரவு போடுறாரு, "திமுக ஆட்சி கஜானாவை காலியாக்கிவிட்டது அதுனால மக்கள் எல்லாரும் தலைக்கு ரெண்டாயிரம் ரூபாய் மாசாமாசம் அரசுக்கு செலுத்தனும்"னு. இதை நம்ம, "என்ன முட்டாள்தனமா இருக்கே?"னு கேட்டு தப்பித்தவறி போராட்டமும் பண்ணிட்டோம்னு வைங்க, (அந்தம்மா எஸ்மா, நக்மானு ஆயிரம் சட்டம் போட்டு உள்ள தள்ளும். அது வேற விஷயம்) உடனே "எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. சசிகலாவின் முடிவு"னு சொல்லி தப்பிச்சுக்கலாமா? யாரு முதல்வர்? ஜெயாவா? சசிகலாவா? மன்மோகன்சிங் என்ற வாய்பேசா மொக்கைச்சாமிக்கும் ஜெயாவுக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்? திமுகல இதேமாதிரி "கலைஞர் எந்த முடிவும் எடுக்கல, ராஜாத்தி அம்மாள் தான் எடுத்தார்"னு ஒரு செய்தி பரவியிருந்தா, அதை இந்த தினமலர் மாதிரி பத்திரிக்கைகள் எவ்ளோ கேவலமா சித்தரிச்சிருப்பாங்கனு ஊருக்கே தெரியும். ஆனா ஜெயா விஷயத்தில ஜெயாவின் ஆணவம் தப்பிக்க "சசிகலா மேல பழியைப் போடு"னு இந்த பத்திரிக்கைகளே ஐடியா கொடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? 

வைகோ என்ற நல்ல மனுசன, அப்பாவிய, "ஃபாசிச அரசு"னு ஏர்போர்ட்ல கூவிட்டே வந்த சில வாரங்கள்லயே ஜெயாவை கும்பிட்ட அந்த மனிதருள் மாணிக்கத்தை மிகவும் நல்ல முறையில் உபயோகித்துவிட்டு இப்போது செருப்பால் அடித்து விரட்டிவிட்டிருக்கிறார் ஜெயா. எதிர்பார்த்ததுதான். ஆனால் நம்ம சில முக்கியமான விஷயங்களை கவனிக்கனும்.

அஞ்சு வருசமா அதிமுகவோட எதிர்கட்சி அரசியல்ங்குறது கொடநாட்டில் ஓய்வெடுப்பது மட்டுந்தான்னு இருந்தப்பயும், மக்கள் எதிர்கட்சினு ஒன்னு இருக்கு, அது அரசின் தப்புக்களை தட்டிக் கேட்டுட்டு தான் இருக்குனு உணர வச்சது ம.தி.மு.கவின் போராட்டங்களும், எதிர்ப்புகளும் மட்டுமேங்குறத நம்ம மறக்க கூடாது. ஆனா அந்தம்மா மறந்துட்டாங்க! அதிமுக கூட்டணியோட தலைமைக் கட்சியான அதிமுக கொடநாட்டில் குறட்டை விட்டுட்டு இருந்தப்பக்கூட அந்த கூட்டணினு ஒன்னு இருக்குன்ற மாயையை உருவாக்கி காப்பாத்திட்டிருந்தவர் வைகோ என்ற பழுத்த அரசியல்வாதி. அவருக்குதான் ஜெயலலிதாவின் ஆணவமும், அகங்காரமும் இன்று இப்படி பதில் சொல்லியிருக்கிறது.

ஆனா கடைசி வரைக்கும் கூட வைகோ வழக்கம்போல காலில் விழுந்துருவாருனு நினைச்சேன். ஆனா முதல்முறையா மானஸ்தன் அதிசயமா கோபத்தை தக்கவச்சுட்டு ஊருப்பக்கம் போயிட்டாரு. ஆனா அவருக்கு தப்பித்தவறி வந்த ரோஷத்துக்கு கூட 'திமுக கிட்ட வாங்குன காசுதான் காரணம்னு தினமலர் மாதிரி ஜெயலலிதா மீது 'பாசப்பிணைப்புள்ள' பத்திரிக்கைகள் சொல்லுறதுதான் உச்சகட்ட காமடி!

ஏன்பா கலைஞரை என்னப்பா நினைச்சீங்க? 'ஓரமா போ'னு சொல்லிட்டா 40கோடி கொடுப்பாரு? 40கோடி கொடுத்திருந்தா "ஓரமா நில்லு"னுல சொல்லிருப்பாரு!!! மதிமுக தனியா நின்னுருந்தா அது திமுகவுக்கு பலம்னு சின்னப் புள்ளைக்கு கூடத் தெரியும். ஆனா இந்த காவடி தூக்குற பத்திரிக்கைக்காரய்ங்க  என்னத்தையாவது பொய் சொல்லி ஜெயலலிதாவை நல்ல பண்பான தலைவரா காட்டனும்! அதுக்காக என்னத்த வேணாலும் சொல்லுவாய்ங்க போல! ஆனா என்னதான் குளத்தை துணி மூடி மறைச்சாலும் ஈரம் வெளிய தெரிஞ்சிரும்!

சரி. மானம் போச்சு! ஆனா வைகோ இப்ப தேர்தல் புறக்கணிப்பு பண்ணிருக்குறது அவர் கட்சிக்கு அவரே வச்சிக்கிட்ட கொள்ளி. ஒரு முதல்வர் சரியா நடந்துக்கனும்னா சரியான எதிர்க்கட்சி வேணும். அந்த எதிர்க்கட்சி அதிமுக கிடையாது. அதுவும் அந்த தகுதி அந்த அம்மாக்கு சுத்தமா கிடையாது! ஆனா வைகோவுக்கு இருக்கு, அல்லது ஒரு காலத்துல இருந்துச்சு! ஆனா எல்லா வாய்ப்புகளையும் அல்பத்தனமான காரணங்களுக்காக விட்டுட்டுப் போனவரு வைகோ! இப்ப பாத்தா கொஞ்சம் கூட தகுதியே இல்லாத பாமக எல்லாம் வளந்து நிக்குது! இவரு ஊருப்பக்கம் போயிட்டாரு!

ஆனா தேர்தலை புறக்கணிச்சது பெரிய தப்பு. ஒரு கட்சி இடைத்தேர்தல்களைக் கூட எதாச்சும் காரணம் சொல்லி புறக்கணிக்கலாம். ஆனா பொதுத்தேர்தலை புறக்கணிச்சா அது மக்களைப் புறக்கணிக்கிற மாதிரி! அதுவும் சீட்டு கிடைக்கலேன்றதுக்காக கூட்டணியை புறக்கணிக்கலாம், தக்காளி தேர்தலையே புறக்கணிக்கலாமா? அதை விட ஒரு கேவலம் இருக்கா?
என்னமோ போங்கப்பா. வைகோவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது, தப்பான இடத்துல விசுவாசமா இருந்தா என்ன ஆகும்ன்றதுக்கு சரியான உதாரணம்.


கொசுறு:
இதையெல்லாம் எழுதுறப்ப இன்னொரு கேள்வி தோன்றத தவிர்க்க முடியல. கூட்டணியில் அஞ்சு வருசம் இருந்த வைகோவையே அந்தம்மா "அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா நீ?"னு சொல்லி விரட்டிவுட்ருச்சே, வைகோ கூட்டிட்டுப் போன சீமான் இன்னும் அங்க இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்? சொம்ம்மா கயிவி கவியி ஊத்திருக்கும் அந்த அம்மா! நல்லவேளை சீமான் காங்கிரஸ் எதிர்ப்புனு மட்டும் சொல்லி எஸ்கேப் ஆயிட்டாரு! 9 comments:

Jabes said...

Ippa neenga en THI.MU.KA ku sombu pudikireenga nu therila

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

final finishing touch joober....

James said...

//Ippa neenga en THI.MU.KA ku sombu pudikireenga nu therila//

Sollitaru Sombu thukki...

Don Ashok said...

Ippa neenga en THI.MU.KA ku sombu pudikireenga nu therila//////

@jabes புரில. எங்க தூக்கிருக்கேன்? தினமலரோட பார்ப்பன புத்திய சொன்னாலே திமுகவுக்கு சொம்பு தூக்குறேனு அர்த்தமா? வைகோ ஜெயில்ல இருந்தப்ப "அங்க மட்டன் கிடைக்கும். அதுனால வைகோவுக்கு பிரச்சினை இல்ல"னு போட்ட பேப்பர் அது!

ரஹீம் கஸாலி said...

நன்றி என்றால் கிலோ எவ்வளவுன்னு கேக்கும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வச்ச பாவத்தை அனுபவிக்கிறார் வைகோ.....சும்மா நச்சுன்னு இருக்கு பாஸ் உங்க பதிவு

Don Ashok said...

@raheem
மிக்க நன்றி ரஹீம்

பாலா said...

21 சீட்டு கொடுத்திருந்தா இவர் இவ்வளவு தன்மானத்தோட நடந்துகிட மாட்டாரு. அம்மா நல்லவங்க ஆகியிருப்பாங்க.

Don Ashok said...

@பாலா
ஓரளவு உண்மைதான். ஆனால் சில விஷயங்களை சகிக்க வேண்டுமென்பதால் தான் கூட்டணி. எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போய்விட்டால் கூட்டணி வேண்டாமே கட்சியுடனே சேர்ந்துவிடலாம். அதனால் தான் கூட்டணி முறிந்தவுடன் சகித்த விஷயங்களை மட்டும் எல்லோரும் கூறுகிறார்கள்.

Anonymous said...

என்ன வோய் அவள்ளாம் எப்பவும் அப்படித்தான்... அக்ராஹாரத்துல என்ன சொல்லுறாளோ.. அதைத்தான் அவா கடைபிடிச்சுன்டே இருப்பா..என்னவோ புதுசா பாக்குறாமாறி இப்படி கோவிச்சுக்கிறேளே....

Related Posts Plugin for WordPress, Blogger...