Monday, February 21, 2011

நடுநிசி கவுதம்மேனன்: குட்டி விமர்சனம்

நேரா பாயிண்டுக்கு வர்றேன். இது ஒரு கேவலமான படம்! குப்பை! சாக்கடை! இயக்கத்துல இருந்து, காமிரா, கதை, திரைக்கதை, நடிப்பு, நடிகர்கள்னு (சமீரா தவிர்த்து) எல்லாமே கேவலம். நடிப்பு செம மொக்கை. ஹீரோவின் வசன உச்சரிப்பு கேக்க கேக்க ஸ்டமக் அப்சட் ஆகி, தலை வலிச்சு வாந்தி வந்துச்சு. சைக்கோவில் ஆரம்பித்து, ஆளவந்தானில் நுழைந்து, சிவப்பு ரோஜாக்களைப் பிழிந்து, எல்லா இங்கிலீசு, தமிழ் படங்களையும் கலந்து கட்டி, சாக்கடைய ஊத்தி மிக்ஸ் பண்ணி எடுத்தது தான் நடுநிசிநாய்கள்.

ஒரு வன்புணர்வு காட்சி 15நிமிடம் டீடெய்லா காட்டுறாய்ங்க! இது என்ன exploit filmஆ? அதைப் பாக்குற அளவுக்கெல்லாம் நம்ம ஊர் மக்கள் மனநிலை முதிர்ச்சி அடையல! என்னதான் 'A'னு போட்டாலும் நம்ம ஊரு தியேட்டர்கார பசங்க குழந்தைங்க எல்லாத்தையும் உள்ள விட்டுறாங்க! ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நேத்தே எழுதலாம்னு ஆரம்பிச்சேன். கெட்ட வார்த்தையா வந்துச்சு!  நிப்பாட்டிட்டேன்! அப்புறம் வழக்கமா கெட்ட வார்த்தையா எழுதுற ஒரு பிரபல பதிவரோட blog எட்டிப் பாத்தா, அந்தாளு அந்தப் படத்தை புகழ்ந்து தள்ளிருக்காரு! இந்த மாதிரி வக்கிரமான, லாஜிக் இல்லாத, கேவலமா இயக்கப்பட்ட, மிகக் கேவலமா நடிக்கப்பட்ட படங்களை ரசிப்பவர்கள் மனநோயாளிகளாதான் இருக்க முடியும்.எல்லாருக்கும் கேவலமா தெரியிற ஒரு விஷயம் நமக்கு நல்லதா தெரிஞ்சதா சொன்னா நம்மளை எல்லாரும் பெரிய அறிவாளினு நினைச்சுக்குவாங்கனு இந்த அல்பங்களுக்கு ஒரு நப்பாசை.

பதிவர் உண்மைத்தமிழன் அருமையா விமர்சனம் எழுதிருந்தாரு. அதுனால இந்தப் படத்தின் விமர்சனம் படிக்கனும்னா அவரு blog போங்க. இந்த பதிவு என் புலம்பல் தான்! ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெளிவா தெரியுது, 'நடுநிசி நாய்கள்'ல ஒரு நாய் கவுதம், மத்ததெல்லாம் அதை நல்லாருக்குனு சொல்றவய்ங்க!! அப்புறம் ஒன் மோர் மேட்டர், இது சைக்கோ த்ரில்லர் இல்ல. சைக்கோ எடுத்த த்ரில்லர்!

11 comments:

Chitra said...

இது சைக்கோ த்ரில்லர் இல்ல. சைக்கோ எடுத்த த்ரில்லர்!


..... Thank you for the warning!

முத்துசிவா said...

ஹிஹி... இந்த நாய நா எங்கயோ பாத்துருக்கேனே? !!!!!!

(ஹலோ... இது double meaning இல்லைங்க)

தமிழ்வாசி - Prakash said...

என்னத்த சொல்ல.... அதான் நீங்களே சொல்லிடிங்களே! ம்ஹும் நான் வேற திட்டனுமாக்கும்?

இதப் படிங்க முதல்ல: இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

இரா.இளவரசன் said...

@முத்துசிவா

ஹிஹி... இந்த நாய நா எங்கயோ பாத்துருக்கேனே? !!!!!!/////////

அதே டெய்லர் அதே வாடகை!

baskar said...

better luck next time GVM

பாலா said...

என்ன எடுத்தாலும் மக்கள் பார்ப்பார்கள் என்றும், தான் ஒருவன் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்பவன் என்கிற நினைப்பில் இந்த ஆள் பண்ற அட்டூழியம் தாங்க முடியவில்லை.

Shadow said...

நாடுநிசி நாய்கள் கல்லால அடி பட்டன, உங்களால் இளவரசன் ....
நீங்க ஒரு நல்ல தமிழன் ....
- சக்தி

போளூர் தயாநிதி said...

என்னத்த சொல்ல.... அதான் நீங்களே சொல்லிடிங்களே!

Anonymous said...

if you don't like it go kill yourself nobody put a gun to your head to watch the movie.

Anonymous said...

இந்த மாதிரி வக்கிரமான, லாஜிக் இல்லாத, கேவலமா இயக்கப்பட்ட, மிகக் கேவலமா நடிக்கப்பட்ட படங்களை ரசிப்பவர்கள் மனநோயாளிகளாதான் இருக்க முடியும்.எல்லாருக்கும் கேவலமா தெரியிற ஒரு விஷயம் நமக்கு நல்லதா தெரிஞ்சதா சொன்னா நம்மளை எல்லாரும் பெரிய அறிவாளினு நினைச்சுக்குவாங்கனு இந்த அல்பங்களுக்கு ஒரு நப்பாசை.//////same thought of mine:)

அப்டிப்போடு... said...

இந்தாளு யார்யா தமிழ் சினிமாவ‌ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போக? நடுப்பகல் நாய்கள்னு மலையாளத்துல எடுக்க வேண்டியதுதானே?. இவிங்களோட அச‌ண்டா(Agenda) புரியாம சினிமாவைக் காதலிக்கிறேன்னு திரியுறவங்களுக்கு என்னாத்த சொல்ல?, நீ சினிமாவக் காதலிக்கரதுக்காக ஒட்டு மொத்த தமிழனும் அசிங்கப்படமுடியாதுன்னுதான் சொல்லமுடியும். அல்லு அர்சூன்ங்கிற தெலுங்கு பையன் தமிழ் நாட்டுல பொறந்து வளர்ந்த பையன். மேடைகளில் தம் பற்றை தயங்காமல் சொல்லிச்சு 2 தடவ. அல்லுவோட எல்லாப் படமும் மலையாளத்துல நல்லா ஓடும். அவரு ஒரு மேடைல அல்லு இல்ல நான் மல்லு அர்சூன்னு சொல்லிவச்சாரு!. பூரி செகநாதன், மலையாள பாணியில தமிழர்களை கேவலமாக சிந்தரித்து அல்லு அர்சூன வச்சு தேசமுடுருன்னு படம் எடுத்து இருக்கிறார். ஒரு சொறி மலையாளியை தமிழனாகவும் (இந்தாளு ஓரிரண்டு மலையாளப்படத்துலயே தப்பும் தவறுமா தமிழ் பேசி தமிழனா நடிக்கும்!), தெலங்கான சகுந்தலா (இந்தம்மா மாகாராட்டிரத்தை சேர்ந்தவர் தெலங்கனா கிடையாது!!) தமிழச்சியாகவும் தப்புந் தவறுமா தமிழ்பேசி நடிக்குது. எப்படி தமிழர்களை சித்தரித்திரிக்கிறார்கள் என்று படத்தைப்பாருங்கள் தெரியும். இந்தப்படத்தையும் வெக்கமில்லாம தமிழில் டப்படிக்கிறாய்ங்க சினிமா காதலர்கள்!!. இதற்கு முன்னர் ஒக்கடு மதிரி தெலுங்குப்படத்தில் தமிழர்கள் குச்புக்கு கோவில் கட்டினார்கள் என கிண்டலடித்திருக்கிறார்கள்தான் (பிரகாசுராசுதான் நடிகர்!). ஆனால் மலையாளி உள்ள புகுந்தால் வரும் மாற்றம் தனிதான். நான் அத்தனை மலையாளிக்கும் எதிரி கிடையாது. மாதவன் நாயர் போன்றவர்களை படித்து வளார்ந்தவர்கள்தான் நாங்களும். ஆனால் தமிழர்களை கேவலப்படுத்தும் மலையாளிகளை இனிமேலும் சும்மா விடமுடியாது.

Related Posts Plugin for WordPress, Blogger...