Thursday, February 3, 2011

ராகுல் 'பாய்'யும் இரண்டு 'நாய்'யும்!

ராகுல் காந்திக்கு பதிலா ராகுல் டிராவிட்டை காங்கிரசு தலைவர் ஆக்குனா கூட அந்தக் கட்சி கொஞ்சமாச்சும் உருப்படும்! இந்த 41 வயது சின்னப் பையன் அந்தக் கட்சியை முன்னேறவே விட மாட்டான் போல!

எங்கயாச்சும் தேர்தல் வந்துட்டாப் போதும் உடனே அங்க போயி காங்கிரசு தானா ஜெயிக்கிற நாலு தொகுதியையும், 'தேர்தல் வியூகம் போடுறேன் பேர்வழினு 'டக் அவுட்' ஆக்காம வுட்றதில்லனு கங்கனம் கட்டி வேலை பாக்குறான்யா இந்தாளு! பீகார்ல காங்கிரஸ் தலைவர்களை தேர்தலுக்கு அப்புறம் டிவில பாக்குறப்ப ரொம்ப பாவமா இருந்துச்சு. அப்படித் தேம்பித் தேம்பி அழுதாய்ங்க. "ஏன்டா உன்ன நாங்க கூப்டோமாடா? நீயா வான்டட்டா வேன்ல வந்து எங்க மூஞ்சில பூரான் வுட்டுட்டுப் போயிட்டியேடா"னு புலம்பிருக்காங்க. அப்புறம் 'Z' பாதுகாப்பு கொடுத்துதான் பீகாரை விட்டு ராகுலை வெளிய கொண்டு வந்தாங்களாம்! நடக்குறதெல்லாம் பார்த்தா தமிழ்நாட்டுலயும் அப்படி ஆயிரும் போல!

இவரு தேர்தல் வியூகம் போட்டு தமிழ்நாட்டுல எல்லா கட்சியையும் ஊறுகாய் ஆக்கிட்டு, இவரு மெயின் டிஷ் ஆகப் போறாராம்!
                                                        
 எல்லாக் கட்சியும் ஆட்சி அமைக்க தான் கூட்டணி போடுவாய்ங்க! ஆனா கட்சி நடத்தவே கூட்டணி போட்ருக்க ஒரே கட்சினா அது காங்கிரசு கட்சிதான்.  காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளான இளங்கோவன் காங்கிரஸ், தங்கபாலு காங்கிரஸ், வாசன் காங்கிரஸ், சிதம்பரம் காங்கிரஸ், யுவராஜ் காங்கிரஸ் போன்ற ஐந்து காங்கிரஸ் கட்சிகளும் தான் இந்த தடவ ராகுல் காந்தியின் ஊத்துக்கு (தேர்தல் வியூகத்துக்கு) ஊறுகாய் ஆகப் போற கட்சிங்கனு நினைக்கிறேன்!

போன தடவை திமுக கூட கூட்டணி வச்சப்பையே தங்கபாலு, இளங்கோவன், சிதம்பரத்துக்கு ஆப்பு வச்சாய்ங்க! இந்த தடவ தேமுதிக, பாமக கூட கூட்டணி வைக்க வியூகம் வச்சிருக்காராம் ராகுலு! அட மொக்கப் பயலே! அவய்ங்க கூட கூட்டணி வைக்கிறதுக்கு எதுக்குடா வியூகம்? விஜயகாந்துக்கு ஒரு கட்டிங் ஊத்திவுட்டாப் போதும். ராமதாசுக்கு ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி கொடுத்தா போதும்! மேட்டரு ஓவர்! ஆனா அந்த எம்.பிய கொடுக்க முதல்ல ஜெயிக்கனும்ல!!
                                                     
ஏற்கனவே ராகுல்காந்தி தமிழ்நாட்ல வந்து 'காங்கிரசு'னு பேசுனாலே அவரு மூஞ்சிய பார்த்துட்டு எல்லாரும் வீட்டுல போயி தனியா 'கெக்கே பெக்கே'னு சிரிக்கிறாய்ங்க. இதுல இந்த கூட்டணி வேற அமைஞ்சுருச்சுனு வைங்க ஆதித்யா, சிரிப்பொலி எல்லாம் இழுத்து மூடிருவாய்ங்க! 
ராமதாஸ் சொல்றாரு, மக்களுக்கு அறிவே இல்லையாம். பாமக ஆட்சி அமைச்சாதான் நல்லதாம், அது மக்களுக்கு புரியவே மாட்டேங்குதாம். சார் சார்... ஆட்சி அமைக்கிறத ஏதோ பொண்ணு சமைஞ்சதுக்கு பந்தல் அமைக்கிற மாதிரி சொல்றீங்களே சார்?? மந்திரிக்கு எங்க போவீங்க? சரி அதை விடுங்க. 234 MLA வேட்பாளர்களுக்கு எங்க போவீங்க? 234 தொகுதில, ஒரு பாமக உறுப்பினருக்கு ஒரு தொகுதினு கொடுத்தா கூட 232 தொகுதி மிஞ்சுதே சார்!! 

எல்லாரும் அரசியலுக்கு வந்துதான் குடும்பத்த உள்ள கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வருவாய்ங்க! ஆனா குடும்பத்தோட ஜாலியா 'தீம் பார்க்' போற மாதிரி மொத்தமா குடும்பத்தை கூட்டிகிட்டு அரசியலுக்கு வந்த ஒரே ஆள் கேப்டன் விஜயகாந்த்து தான்! சேலத்துல அவர் 'ஆத்துனாரு' பாருங்க ஒரு சொற்பொ(க)ழிவு... கொடூர காமடி... கீழ இருக்குறதெல்லாம் கற்பனை மாதிரி தெரியும் ஆனா சத்தியமா இல்லை! நிஜத்தில் அவர் பேசியவை! ஒரு நாலு பாயிண்ட் மட்டும் தர்றேன்....

1)"ஏன் தயாரிப்பு நிறுவனம் பேரை 'Red giant'னு ஆங்கிலத்துல வச்சிருக்காங்க? சிகப்பு பூதம்னு தமிழ்ல வைக்கலாம்ல?" (ஆமா கேப்10 உங்கள வச்சு படம் எடுத்திருந்தா 'கருப்பு பூதம்'னே வச்சிருக்கலாம்! அவய்ங்க தப்பு பண்ணிட்டாங்க!)

2) "CM, Stalin ஹோட்டலுக்கு போனா விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க. நான் போனா எவனும் கண்டுக்க மாட்றான்!" (ஆமா. நல்லா தின்னுபுட்டு "மக்களோட கூட்டணி அவங்ககிட்டயே வாங்கிக்க"னு சொல்லிட்டு பில்லு கட்டாம போயிருப்பீங்க! எவன் மதிப்பான்!!??)

3) "CM, ஸ்டாலின் எல்லாம் கார்ல போனா எல்லாரும் வழி விடுறாங்க. ஆனா நான் போறப்ப விடவே மாட்றாங்க" (ஆமா இவரு பெரிய 108 ஆம்புலன்ஸ்.. இவருக்கு வழிவிட்டா 100 உயிரு பொழைச்சுக்கும்!)

4) "அதிமுக கூட கூட்டணி வைக்க நினைக்கிறவங்க கை தூக்குங்க.. (சிலர் தூக்குறாங்க) சரி, கீழ போடுங்க. திமுக கூட கூட்டணி வைக்கனும்னு சொல்றவங்க கைதூக்குங்க. (சிலர் தூக்குகிறார்கள்). ஹ்ம்ம். சரி. கீழ போடுங்க. கூட்டணி பத்தி நானே முடிவு பண்ணிக்கிறேன்!" (அப்புறம் என்னத்துக்கு கேப்10 கைதூக்கி தூக்கி எறக்க சொன்னீங்க? இது என்ன யோகா கிளாஸ்சா கேப்டன்?)

5) "நான் ஏன் வேகமா பேச மாட்டேங்குறேன் தெரியுமா? வேகமா பேசுனா உளறிருவேன்!" (ஆமா இல்லேனா மட்டும் நீங்க ரொம்ப கரக்டா பேசிருவீங்களாக்கும்! முதல்ல ஒரு இடத்துல நின்னு பேசுங்க கேப்டன். பி.டி.உஷா மாதிரி மேடைல ஓடிகிட்டே இருக்கீங்க!??)

இது மாதிரி ரெண்டு சூப்பர் கூட்டணித் தலைவர்கள்! இவங்களோட ராகுல் காந்தியும் கூட்டு சேர்ந்தா நாடு விளங்கிரும்! நாடு விளங்குதோ இல்லையோ காங்கிரசு விளங்கிரும்! ஆனா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க! ராகுல்காந்தி இருக்க வரைக்கும் 'நாம் தமிழர் கட்சி'னால எல்லாம் காங்கிரசை ஒழிக்கவே முடியாது! ஏன்னா அவரே அதை அழிச்சுருவாரு!  அதுக்கு வியூகம் வகுத்துட்டாரு!

10 comments:

Anonymous said...

Very Nice..Good one

முத்துசிவா said...

//எல்லாக் கட்சியும் ஆட்சி அமைக்க தான் கூட்டணி போடுவாய்ங்க! ஆனா கட்சி நடத்தவே கூட்டணி போட்ருக்க ஒரே கட்சினா அது காங்கிரசு கட்சிதான//
ஹி ஹி

பாலா said...

//ஆட்சி அமைக்கிறத ஏதோ பொண்ணு சமைஞ்சதுக்கு பந்தல் அமைக்கிற மாதிரி சொல்றீங்களே சார்??

ஹா ஹா ஹா...

எல்லா கருத்துக்களுமே அருமை.

PRINCENRSAMA said...

யப்பா.. இளவரசன்...! ரொம்ப நன்றிப்பா....! எப்படி உனக்கு நன்றி சொல்றதுன்னு தெரியல... இவ்வளவு சந்தோசமா நான் சிரிச்சதில்லை... நான் மட்டுமில்ல... இதை சத்தமா படிச்சுக்காட்டக் கூட முடியல... கண்ணீர் வரவர சிரிச்சோம்... ஒட்டிப்போன வயிறே குலுங்கக் குலுங்க சிரிச்சேன்... நீ நல்லா இருய்யா!

கக்கு - மாணிக்கம் said...

பயங்கர லொள்ளுதான்! :))))
// "நான் ஏன் வேகமா பேச மாட்டேங்குறேன் தெரியுமா? வேகமா பேசுனா உளறிருவேன்! //

சிரிப்பு தாங்கல. இப்படியெல்லாம் கூடவா ஜனங்களிடம் ஒரு "தலைவன் " பேசுவான். ?? நல்ல காமெடிதான்.
அது யார் கடைசியில் தூக்கில் தொங்கும் ஒரு பொம்மை? காங்கிரசா? சிம்பாலிக்காக??

தங்கராசு நாகேந்திரன் said...

234 MLA வேட்பாளர்களுக்கு எங்க போவீங்க? 234 தொகுதில, ஒரு பாமக உறுப்பினருக்கு ஒரு தொகுதினு கொடுத்தா கூட 232 தொகுதி மிஞ்சுதே சார்! நீங்க சொல்லுறத பாத்தா பாமாகால்ல ராமதாசும் அன்புமணியும் மட்டும்தான் உறுப்பினர்களா?

இரா.இளவரசன் said...

அது யார் கடைசியில் தூக்கில் தொங்கும் ஒரு பொம்மை? காங்கிரசா? சிம்பாலிக்காக??///

அது உங்க இஷ்டம் தல! எப்படி வேணாலும் எடுத்துக்கலாம்! வாக்காளன்னு எடுத்தாலும் சரி! காங்கிரசுனு எடுத்தாலும் சரி! ஹிஹி!

இரா.இளவரசன் said...

நீங்க சொல்லுறத பாத்தா பாமாகால்ல ராமதாசும் அன்புமணியும் மட்டும்தான் உறுப்பினர்களா?///

நான் அப்படியா சொன்னேன். மூணாவது உறுப்பினர் இருந்தா நல்லாருக்கும்னு தானே சொன்னேன்!

Chitra said...

very funny.

raja said...

மீண்டும் எழுத்தில் ரணகளம் ஆக்கியிருக்கீறிர்கள் கொள்ளைகூட்ட காங்கிரஸ் கட்சியை. வாரத்துக்கு ஒரு கட்டுரையாவது எழுதுங்கள். உங்களுக்காகவே இந்த காமெடியன்கள் (ராகுல்,ராமதாஸ்,கேப்டன்) காட்சிகளை உருவாக்குகிறார்களா....?

Related Posts Plugin for WordPress, Blogger...