Friday, February 18, 2011

'ரகடா'(தெலுங்கு) கதையும், நாகர்ஜுனா ரசிகன் ஆன கதையும்!


அதெப்படி தெலுங்குல மட்டும் ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே கதையை, ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே திரைக்கதைய வச்சே இத்தன படத்தை ஓட்டுறாய்ங்கனு தெரில! ரவிதேஜா, நாகார்ஜூனா, ஜூனியர் NTR மாதிரி ஆட்கள், வேற கதைக்கு போகவே மாட்றாங்க!
(நாகர்ஜுனாவின் 'ககனம் (பயணம்)' படத்துக்கு முந்தைய நிலவரம் இது!)

ரெண்டு குரூப் வில்லன் இருப்பாங்க. நம்ம ஹீரோ ரெண்டு பேருக்கும் லைன் அடிச்சு வுட்டு, அதாவது சண்டை மூட்டி விட்டு அவரு ஜெயிப்பாரு! காரணம் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும்! அப்புறம் கண்டிப்பா ரெண்டு ஹீரோயின் இருந்தே ஆகனும். அதே மாதிரி ரெண்டு ஹீரோயின் கூடவும் சேர்ந்து ஆடுற டூயட் இருந்தே ஆகனும்! நம்ம அர்ஜூன் படம் மாதிரி!

'ரகடா'னா சண்டைனு அர்த்தம். கரக்டா சொல்லனும்னா 'ரகளை'! இந்தப் படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு. ஏன்னா கடைசியா நாகர்ஜூனா நடிச்ச 'கேடி' படம் பயங்கர ஃப்ளாப்! இன்னொரு மேட்டர்! நானும் என் தம்பியும் சின்ன வயசுல இருந்தே செம நாகார்ஜூனா ரசிகர்கள். அதுக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு! சின்ன வயசுல ஒரு டப்பிங் படம் பார்த்தோம். அதுல நாகார்ஜூனாவை ஒரு பத்து பேரு அடிச்சுருவாங்க. வீட்டுக்கு வந்து ஒரு சாக்ஸ் (Socks) எடுப்பாரு. கை நிறைய கோலிகுண்டு அள்ளி, அந்த சாக்ஸ்ல அதையெல்லாம் போட்டுட்டு அந்த பத்து பேரையும் பிச்சு எடுப்பாரு பாருங்க!! செம ஆக்ஷன்!! அப்போ நான் நாலாவது, என் தம்பி ஒண்ணாவது! அதைப் பார்த்ததுல இருந்து நாகார்ஜூனாவின் அதிதீவிர ரசிகர்கள் ஆயிட்டோம்! ரட்சகன் படத்தை தமிழ்நாட்டுல எனக்குத் தெரிஞ்சு பத்து தடவைக்கு மேல ரசிச்சு ரசிச்சு பார்த்த ரெண்டே பேரு நானும் என் தம்பியும் தான்! அதுனால நான் மட்டமான ப்ரிண்டா இருந்தாலும் பரவால்லனு 'ரகடா' டவுண்லோட் பண்ணி பார்த்ததுல ஆச்சரியம் இல்ல.

'ரகடா' கதை, மேல நான் சொன்ன வழக்கமான தெலுங்கு கதைதான்! அதை விடுங்க! படத்துல நம்ம தெலுங்கு தலைவர் 'பிரம்மானந்தம்' இருக்காரு! அவரும் நாகார்ஜூனாவும் வர்ற இடத்துல எல்லாம் செம காமடி!


ஒரு உதாரணம்:
பிரம்மானந்தம்: என்னையும் சிரிஷா (அனுஷ்கா) டார்லிங்கையும் பார்த்தா அபிஷேக் பச்சன், ஐஷ்வர்யாராய் மாதிரி இருக்கும்.
நாகார்ஜுனா: அது சரி! இதுல யாரு ஐஸ்வர்யா ராய், யாரு அபிஷேக் பச்சன்?

படம் ஃபுல்லா இது மாதிரி தான்! அதுக்காக மட்டுமாவது படம் பாக்கலாம்! அடுத்து ராதாமோகன் இயக்கத்துல 'ககனம்', தமிழ்ல 'பயணம்' நடிச்சுருக்காரு! அதுக்கு ஒரு விமர்சனம் எழுதவேண்டியது நம்ம கடமை! ஏன்னா தமிழ்ல எனக்கு மிகவும் புடிச்ச டைரக்டரும், அகில உலகத்துல எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் சேர்ந்திருக்கும் படம்! நாகார்ஜூனா ஃபேன்ஸ் இங்க கமண்ட்ல 'உள்ளேன் ஐயா' சொல்லிட்டுப் போங்க!

12 comments:

ம.தி.சுதா said...

நல்லாயிருக்குங்க தமிழ் டப் பார்த்திட்டு அப்புறம் சந்திப்போம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் இந்தியன்..!

sakthistudycentre-கருன் said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

Chitra said...

அதுல நாகார்ஜூனாவை ஒரு பத்து பேரு அடிச்சுருவாங்க. வீட்டுக்கு வந்து ஒரு சாக்ஸ் (Socks) எடுப்பாரு. கை நிறைய கோலிகுண்டு அள்ளி, அந்த சாக்ஸ்ல அதையெல்லாம் போட்டுட்டு அந்த பத்து பேரையும் பிச்சு எடுப்பாரு பாருங்க!! செம ஆக்ஷன்!!


.... அய்யோ.... பார்க்க மிஸ் பண்ணிட்டேனே! அந்த சீன், Youtube ல இருந்தா லிங்க் கொடுங்க, ப்ளீஸ்!

இரா.இளவரசன் said...

@chithra
கண்டிப்பா.. தேடிப் பாக்குறேன்.

அஞ்சா சிங்கம் said...

உஸ்.......................... அப்பா ............... முடியல என் நண்பன் ஒருத்தன் இருக்கான் அவனும் இப்படி தான் எல்லா டப்பிங் படத்தையும் பார்த்துட்டு வந்து கதை சொல்லுவான்..
அவன் தீவிர ராஜசேகர் ரசிகன் ..........

நமக்கு தெலுங்கு பட டைட்டில் மட்டும் தான் பிடிக்கும் கவுண்டர் பொண்ணா கொக்கா , எவன்டா இங்க எம்.எல்.ஏ. ,இந்த மாதிரி ....................

இரா.இளவரசன் said...

@அஞ்சா சிங்கம்
தல... என்னதான் இருந்தாலும் நீங்க நாகர்ஜூனாவை ராஜசேகரோட compare பண்ணது மன்னிக்க முடியாத குற்றம். ராஜசேகர் தெலுங்கு படத்துல கூட சொந்தக் குரல் கிடையாது! :-(

முத்துசிவா said...

Evadu kodithe dimma tirigi mind block aipoddo vaade naagarjum

வீராங்கன் said...

ஹலோ.., நாகூ..வின் ரசிகர்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்காங்க,,

வீராங்கன் said...

//அது சரி! இதுல யாரு ஐஸ்வர்யா ராய், யாரு அபிஷேக் பச்சன்?//

இது அனு அக்காவுக்கு தெரியுமா..,


ஒரு சாயல்ல அக்காவுக்கு பச்சன் சாயல் உண்டுதானே...,

பாலா said...

உள்ளேன் ஐயா...

Sowmiya said...

ullen ayya

Ajith said...

உள்ளேன் ஐயா.

Related Posts Plugin for WordPress, Blogger...