Tuesday, February 8, 2011

இணையத்துல எழுதுறவன்லாம் என்ன மயிரா?அதான் தலைப்புலயே 'மயிரு'னு சொல்லியாச்சு! அப்புறம் என்ன எழுத்துத் தமிழ்ல அழகுபடுத்துதல் வேண்டியதிருக்கு? அதான் பேச்சுத் தமிழ். சரி விஷயத்துக்கு வர்றேன்.

முன்னாடிலாம் ஒரு கட்டுரையோ, கவிதையோ, கதையோ, விமர்சனமோ.. அவ்வளவு ஏன் ஒரு வாசகர் கடிதம் எழுதனும்னா கூட, எந்தப் பத்திரிக்கைக்கு அனுப்புறமோ அந்தப் பத்திரிக்கையின் அரசியலை எல்லாம் மீறி அது வெளியிடப்பட்டால் தான் உண்டு! ("நீ எழுதிருக்குறது நல்லாருந்தாதான போடுவான்?"னு கேக்குறீங்க! அது வேற டிப்பார்ட்மென்ட்!) அப்படி கஷ்டப்பட்டு எழுதி அதை நாலு பேரை படிக்க வைக்கனும்னா என்ன பாடு படனும்??? ஆனா இப்ப நம்ம என்ன கருமத்த எழுதுனாலும் அதை என்னனு பாக்கவாவது நாலு பேரு இருக்காங்கன்ற நிலைமைய கொடுத்திருக்கிறது இணையம் தான். 

எதுக்கு இதை ஆரம்பிச்சேன்னா... நான் அரசியல் கட்டுரை எழுதுறப்பலாம் சில பேரு கிளம்புறாங்க.. "உக்காந்து என்ன வேணாலும் எழுதலாம். களத்துல வந்து பாரு.. களத்துல வந்து பாரு"னு! நீங்க களத்துல கிழிக்கிற லட்சணத்தைத்தான நாங்க எழுதுறோம். அப்புறம் "களத்துக்கு வா. களத்துக்கு வா"ன்னா என்ன அர்த்தம். நாங்க எழுதுறதெல்லாம் என்ன குப்பைலயா போகுது? ஒவ்வொரு மனதின் மாற்றமும் அவன் கேட்கும் பேச்சிலோ, படிக்கும் எழுத்திலோ தான் ஆரம்பிக்கும். நான் எழுதுறேன். படிக்கிறவன் படிக்கட்டும். புடிக்கலேனா என்கிட்ட கருத்தியல் ரீதியா மோதட்டும். அதைவிட்டுட்டு இப்படினா அப்படிங்குறது.. அபப்டின்னா இப்படிங்குறது!

அப்படியே எழுதுறதை விட்டுட்டு இவங்க பின்னாடி வந்துட்டா மட்டும் ஒழுங்கா போராடி கிழிச்சுருவாங்களா? இதுவரைக்கும் தமிழ்நாட்டுல விமர்சனம் பண்ண இடம் வைக்காத, அல்லது குறைந்தபட்ச விமர்சனத்துக்கு உட்பட்ட அரசியல்வாதி அல்லது 'போராளி' எவனையாச்சும் காமிங்க பாப்போம். இந்த மாதிரி நம்மளை களத்துக்கு கூப்பிடுறவங்களாம் எங்க இருக்காங்கனு பார்த்தா அதுல முக்காவாசிப் பேரு, அமெரிக்கா, லண்டன், பெங்களூர் மாதிரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள்ல உக்க்காந்துகிட்டு நம்ம தமிழ்நாட்டு ஊராட்சி, பஞ்சாயத்து அரசியல் வரைக்கும் இணையத்துல பேசுறாங்க! "ஏன்பா.. என்னைக்காச்சும் ஓட்டுப் போட ஊருக்கு வந்திருக்கியாப்பா?"னு கேளுங்க.. "இன் 1947 இந்தியால...."அப்படினு ஆரம்பிச்சு எதாச்சும் ஒளறுவாங்க! (நிறைய விதிவிலக்குகள் உண்டு. ஆனா அவங்கள்லாம் உண்மையான அரசியல் அக்கறையோட சரியான கருத்தியலோட அரசியல் விவாதங்களை ஏற்கும் மனநிலை படைத்தவர்களாகத்தான் இருக்காங்க. நான் சொல்றது மிதமிஞ்சி வெளியில் தெரியும் அரைகுறைகளை)
நம்ம என்னைக்காச்சும் இவங்ககிட்ட இப்படிக் கேட்ருக்கோமா? ஆனா நம்ம எழுதுனோம்னா படிச்சுப் பார்ப்பாங்க. அவங்க சார்ந்து இருக்குற இயக்கத்தையோ கட்சியையோ நம்ம ஒன்னும் எழுதிறக் கூடாது. அதை 'touch' பண்ணிட்டா , அவங்க விஷயத்த விமர்சனம் பண்ணிட்டோம்னா பொத்துட்டு வரும் பாருங்க கோவமும் ஆத்திரமும்! அப்பதான் மொத்தமா "இணையத்துல எழுதுறவன்லாம் மயிரு"ன்ற ரேஞ்சுல கத்துவாங்க!
சமீபத்துல 'நாம் தமிழர்' பத்தி விமர்சனம் பண்ணப்பதான் இதோட உச்சகட்ட கொடுமை நடந்துச்சு! "இணையத்துல உக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துக்கு வா"னு ஒரு ஆளு அமெரிக்கால உக்காந்துட்டு கூப்பிடுறாரு முகநூல்ல! இந்தாளோட களத்துக்கு விசா, டிக்கெட் எல்லாம் எடுத்து நான் போகவாம்!!! அன்னைக்கு காலைலயே சீமான் ஒரு அறிக்கை கொடுக்குறாரு "தமிழ்நாடு மீனவர்களுக்காக இணையத்தில் குரல் கொடுங்க"னு! சீமான் என்ன முட்டாளா? இணையத்துல குரல் கொடுத்தா கேக்குதுனு தெரிஞ்சுதான அவரு அறிக்கை கொடுக்குறாரு இப்படி! என்கிட்ட சொன்னதை அவருகிட்டயும் சொல்ல வேண்டியதானே! "அண்ணே அண்ணே இணையம் எல்லாம் வேஸ்ட்டுண்ணே. நம்ம டைரக்ட்டா களத்துக்கு போவோம்"னு!  

இன்னொருத்தரு பெங்களூருல இருந்துகிட்டு "சீமானை விமர்சிப்பவர்கள் களத்துக்கு வாங்க"னு அவரு வலைல பதிவு போடுறாரு! செம காமடி! ஏன் எங்களை எதிர்த்து களத்துல போராட வேண்டியதானே? எதுக்கு பதிவு போடனும்?

இணையத்துல அரசியல் எழுதுறது சாதாரண விஷயம் இல்லை! சமீபகாலமா உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருப்பது இணையம். அமெரிக்கா, பெங்களூருனு வசதியா உக்காந்துகிட்டு என்ன வேணா, எவனை வேணா பேசலாம். "களம் களம்"ன்றாங்களே, இதுவரைக்கும் என்ன கிழிச்சாங்க? முத்துக்குமாரை அரசியல் ஆக்குனாங்க. ஓட்டுக் கட்சிகளுக்கு காவடி தூக்குறாங்க? இதுவரைக்கும் சரியான அரசியல் மாற்று மக்களுக்கு கொடுக்க முடில. களத்துல என்ன பண்ணி கிழிச்சாங்க இவங்க? நீங்க முதல்ல உள்ளூருக்கு வாங்க! அப்புறம் இணையத்துல எழுதுறவனை களத்துக்கு கூப்பிடலாம்! எழுத்தால் ஏற்படாத அரசியல் மாற்றம் போர்களால் கூட ஏற்படாது! நன்றி!
14 comments:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

//எழுத்தால் ஏற்படாத அரசியல் மாற்றம் போர்களால் கூட ஏற்படாது//

செம பஞ்ச் வாத்யாரே.

"சுக்க சிராதோ கோடி மெதள்ளு கதுலுதாயி"

ஒரு துளி மையால் கோடி மூளைகள் நகரும்

கீப் இட் அப்!

கக்கு - மாணிக்கம் said...

just ignore them!

இரா.இளவரசன் said...

@மாணிக்கம்
ignore பண்ணிட்டேன். ஆனால் இது போல ஏறக்குறைய எல்லாருமே ஒரு கட்டத்தை சந்தித்திருப்போம். அதற்கான ஒட்டுமொத்த பதிலாய் ஒரு பதிவை எழுதனும்னு நினைச்சேன்! எழுதிட்டேன்! :-)

Philosophy Prabhakaran said...

உங்களை இந்தமாதிரி களத்துக்கு வான்னு கூப்பிட்டாரே, அவரோட ப்ரோபைல் செக் பண்ணி பார்த்த மெயில் ஐடி, போன் நம்பர் எதுவும் இருக்காது... ங்கொய்யால எல்லாம் டக்கால்டி...

! சிவகுமார் ! said...

சவுக்கடி!

தமிழ் வினை said...

இன்னுமா இப்படியெல்லாம் சொல்றாங்க ? இணையத்தில் எழுதித்தான் இரண்டு அரபு நாடுகள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன. பாராட்டி எழுதும்போதும் இதே இணையத்தில்தான் எழுதறாங்க, விமர்சனம் செய்யும்போது மட்டும்தான் இது இணையம்னு தெரியுதா என்ன ? களத்தில் அதிமுக வை ஆதரிப்பதை விட இணையத்தில் எழுதுவது எவ்வகையில் குறைந்தது ?

Jayaprakashvel said...

அருமையான பதிவு நண்பரே. இது மாதிரி பலரும் உதார் விடுகிறார்கள். உங்கள் வாதம் ரசிக்கும் படியாகவும் சரியாகவும் இருந்தது. எழுதவும் செயல்படவும் எழுதிசெயல்படவும் என பலவாறாக ஆட்கள் உள்ள்னர். யாரும் குறை சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை.

உமாபதி said...

nalla pathivu.
Punch nuch

இக்பால் செல்வன் said...

நான் சமீபத்தில் படித்தப் பதிவுகளிலேயே மிகவும் நல்லப் பதிவு இது தான். நிச்சயமாக சொலவேன் ! எவன் ஒருவன் எதையும் தாண்டி எதையும் விமர்சிக்க முன்வருவானோ ! அவன் தான் மாற்றத்துக்கான பிள்ளையார் சுழி ! அனைவரும் மாற்றம் மாற்றம் என்று சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள், ஆனால் என்ன மாற்றம் வேண்டும், எப்படி வேண்டும், எங்கே வேண்டும் என சொல்லி இருக்கானா சொல்லுங்க?

களத்துக்கு வா களத்துக்கு வா என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எது களம் ? விவசாயம் பண்ணுவனுக்கு வயல் களமாகும், எழுதுபவனுக்கு அந்த எழுத்துத் தானுங்க களம்.

பிறகு ! நம் நாட்டில் உள்ள நல்ல பழக்கமே ! ஒருவருக்கு ஒரு status வந்தப் பின அவரை விமர்சிக்கக் கூடாதாம், என்னக் கொடுமை இது? விமர்சிக்கக் கூடாது என்றால், விமர்சிக்க இடம் கொடாது அவர் பணியாற்றி இருக்க வேண்டும்.

பதிவர்களை விமர்சிப்பதில் தவறில்லை, ஆனால் பலகீனமான நம் தமிழர்கள் விமர்சனத்தை sportive ஆக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மனபலம் பெறாதவர். ஒருவன் விமர்சித்தால் அவனைக் கழுவறுக்கத் தான் நினைப்பார்கள்.

வெளிநாடுகளில் இருந்து கூக்குரல் இட்டாலும் ( நான் உட்பட ) உள்நாட்டில் உள்ளவன் நினைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மாற்றம் வரும்.

மாற்றம் என்பதன் அளவுக் கோலை தீர்மானிப்பதில் இணையக் கிறுக்கர்களாகிய நமக்கும் ஒரு சிறு பங்கேனும் உண்டு, காரணம் பலகீனமான சமுதாயத்தின் இணைய பிம்பங்கள் தானே நாமும்,

தொடர்ந்து எழுதுங்கள் !!! விமர்சனம் செய்வது ஆரோக்கியமாகவும், நியாயப்பூர்வமாகவும், மக்களின் குரலின் எதிரொலியாகவும் இருக்கக் கடவ. இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

வாழ்த்துக்கள் !!!

சி.பி.செந்தில்குமார் said...

GOOD POST.. COOL DOWN THALA

Jayadev Das said...

என்னது, உங்க பிழைக்கு மணிரத்னம் படம் மாதிரி இருட்டா இருக்கு, கொஞ்சம் நல்ல டெம்ப்ளேட் போடுங்களேன்?

இரா.இளவரசன் said...

@அனைவருக்கும்

நன்றி! யாராச்சும் உங்ககிட்ட same dialog கொடுத்தா நம்மகிட்ட கூட்டிட்டு வாங்க! :-)

jaisankar jaganathan said...

arumai

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்ல பதிவு...தொடருட்டும்..

Related Posts Plugin for WordPress, Blogger...