Friday, January 7, 2011

கேப்டனுக்கு என்ன டேலன்ட் இல்ல? ஏன் முதல்வராகக் கூடாது அவரு?

   கண்டிப்பா சொல்றேன். சத்தியமா சொல்றேன். கேப்டன் விஜயகாந்த் தான் அடுத்த முதல்வர். ஏன்னா நேத்துதான் நான் விருதகிரிங்குற படத்தைப் பார்த்தேன். படமில்லை அது. ஒவ்வொரு தமி'ல'னுக்கும் பாடம். ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் தெரிஞ்சுக்க வேண்டிய வழிமுறை. IPS ட்ரெயினிங் ஒரு இந்திய போலீசு அதிகாரிக்கு எவ்வளவு கத்துக்கொடுக்குமோ அதை விட 67.4% அதிகமா விருதகிரி கத்துக்கொடுக்கும். 

எடுத்தவுடன ஸ்காட்லாண்டு யார்டு தலமையகம்ல வச்சாரு பாருங்க ஒரு ஷாட்டு. அதிர்ச்சியாயிட்டேன். ஸ்காட்லாண்டு பிரதமரைக் கொல்ல திட்டம் போடுறாங்க அந்த நாட்டு தீவிரவாதிகள். ஆனா அவய்ங்க நல்ல நேரம், நம்ம கேப்டன் அங்க ட்ரெயினிங்காக போயிருக்காரு. Sow thay aare gaalling Gap10 paar helb.  நம்ம இந்தியாவுல.. ஏன் இந்த worldலயே 'அந்த' மாதிரி காரை வச்சுருக்க ஒரே போலிசு கேப்டன் தான். ஜன்னல் இல்ல. கதவு இல்ல. ஒன்னுமே இல்ல. அந்த காரை அவரு ஓட்டுறதைப் பார்த்துட்டு "என்னப்பா ஸ்டெப்னிய தூக்கி ட்ரைவர் சீட்ல வச்சிருக்காங்க?"னு ஒருத்தர் கேட்க, இல்லை இல்லை அவருதான் எங்க ஹீரோ கேப்டன்னு அவரை நம்ப வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே அய்ய்யயய்யய்யய்யோ!!! அதை திண்டுக்கல் ரோட்ல ஓட்டிட்டு நம்ம கேப்டன்  வருவாரு பாருங்க, அதைப் பாக்க கோடி கண்ணு வேணும். என்னடா ஸ்காட்லாண்டுனாய்ங்களே குப்பைமேட்டைக் காமிக்கிறாய்ங்களேனு பாத்தா செலவைக் குறைக்க நம்ம கேப்டன் நாலு ஆங்கிலோஇந்தியர்களையும் நாலு டாக்சியும் வாடகைக்கு புடிச்சு, நம்ம திருப்பத்தூர்-காரைக்குடி ரோட்டுலயே சூட்டிங் எடுத்துட்டாரு.

ஸ்காட்லாண்டு போலீசுனால யாரு தீவிரவாதினு கண்டு புடிக்க முடில. அப்போ நம்ம கேப்டன் வந்து 'i wil gum in gorrect dime 'ங்குறாரு. அப்புறம் நம்ம கேப்டன் நாலு நிமிசம் எதையோ உத்து உத்து பாத்து "waid. i gaav doubd"னு சொல்லிட்டு தீவிரவாதிய கண்டுபுடிச்சுர்றாரு. அப்புறம் ஓடுற தீவிரவாதிய புடிக்க கிளம்புற ஆங்கிலோஇந்தியர்களை "staab. i will sow hov தமில்நாடு police will gatch dhiep"னு சொல்லிட்டு தலைதெறிக்க ஓடி அடி அடினு அடிச்சு தீவிரவாதிகளையெல்லாம் புடிச்சுர்றாரு.
அய்யா... கேப்டன் தீவிரவாதிகளை புடிச்சுட்டாரே படம் முடிஞ்சுருச்சுனு பாத்தா, அதான்யா அறிமுக காட்சியே!!  (ஏன் கேப்டன் நீங்க டெல்லிக்கு போனீங்க, காஷ்மீர் போனீங்க, பாகிஸ்தான் கூட போனீங்க, நாங்க பொறுத்துகிட்டோம். ஆனா  ஸ்காட்லாண்டு போனதை எங்களாலயே பொறுத்துக்க முடியலையே அந்த நாட்டுக்காரன் எவ்ளோ ஃபீல் பண்னிருப்பான்!! )

அப்புறம் இந்தியா வர்றாரு. போலிசு வேலைய தவிர எல்லா வேலையும் பாக்குறாரு. நம்ம தல ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி. எல்லாரும் புகழ்ந்துகிட்டே இருக்காங்க. கேப்டன் ஏப்பம் விடப் போனாக் கூட "புயல் அடிக்கப் போகுது ஓடுங்க"னு கத்துறாங்க. அடிக்கப் போனா திடீர்னு ஒருத்தன் "சிங்கம் சிலிர்ர்கிறப்ப பக்கத்துல நிக்க கூடாது வாங்க தள்ளி நிப்போம்"ங்குறான்! இது மாதிரி அனல் பறக்கும் காட்சிகள் நிறைய உண்டு.

அப்புறம் பாவம் ஒரு குட்டி வில்லன் வர்றாரு. அந்தாளு வில்லனா இல்ல தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளரானே தெரில. விஜயகாந்தை புகழ்ந்துட்டே இருக்காரு. அப்புறம் 'hee aaljo arrejted'. சரி படம் முடிஞ்சுருச்சுனு பார்த்தா, அப்புறம் தான் ஒரு புது படமே ஆரம்பிக்குது. அந்தப் படம் பேரு 'Taken'குற அருமையான ஆங்கிலப் படம்! ஆனா இங்க நம்ம விருதகிரினு தான் சொல்லனும்!

விஜயகாந்துக்கு வேண்டிய பொண்ணை கடத்திருவாங்க. அப்போ விஜயகாந்து அந்த முகம் தெரியாத வில்லன்கிட்ட பேசுவாரு பாருங்க ஒரு வசனம் அப்படியே புல்லரிச்சுப் போயிரும்! Takenல வர்ற இந்த காட்சி உலகப்புகழ் பெற்றது. ஆனா அதை எவ்வ்வ்வ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வ்வ்வளவு கேவலப்படுத்தி 'நான் தான் உலகின் ஒரே போலீசு'னு ஆணித்தரமா சொல்றாரு கேப்10.

வசனத்தை கவனிங்க "டேய் உனக்கெ என்னடா வேணும்? ராணுவ ரகசியமா? இந்திய இறையாண்மையா? இந்திய அமைதிய குலைக்கனுமா?" உன் தீவிரவாதத் இங்க வளக்கனுமா? ஏய் என்ன பரேடுக்கு போற சாதாரண போலீசு இல்லடா.. நான் INDARNASANAL போலீசுக்கே பரேடு எடுத்தவன்டா.. டேய் நான் விருதகிரிடா.. பஞ்ச பூதங்களோட மொத்த உருவம்டா (இது மட்டும் பஞ்சபூதங்களுக்கு தெரிஞ்சுச்சு அஞ்சும் சேர்ந்து தற்கொலை பண்ணிக்கும்) "னு ஓட்டல் சர்வர் மாதிரி ஐட்டத்தை அடுக்கிட்டே போறாரு! அந்த பக்கத்துல இருந்து சவுண்டே இல்ல. நான் நினைக்கிறேன் வில்லன் எப்பவோ லைனை கட் பண்ணிட்டான் போல. இவரப் பார்த்தா பாவமா இருந்துச்சு.

இப்பதான் இடைவேளை வருது. இதுக்கப்புறமும் புள்ள படத்தைப் பார்த்தா பெருவியாதி எதும் வந்துருமோனு பயந்து எங்க அப்பத்தா என்னை உள்ள போயி படுக்கச் சொல்லிருச்சு.
"புள்ளைய இந்த பாடு படுத்திபுட்டானே. சண்டாளன் ஓட்டு கேட்டு வரட்டும். ஓட ஓட விரட்டுறேன்"னு ரொம்ப நேரம் கேப்10யை திட்டிட்டு இருச்சு.

ஆனா இந்தப் படம் எனக்கு இருந்த ரெண்டு பெரிய சந்தேகங்களை தீர்த்து வச்சுச்சு. உலகத்தரம்னா என்னனு ரொம்ப நாளா புரில. இந்தப்படம் ஆரம்பிச்ச பத்து நிமிசத்துலயே நல்லா புரிஞ்சு போச்சு. இந்தப் படத்த அப்படியே ஆங்கிலத்துல ரீலீஸ் பண்ணலாம். ஆனா என்ன வெள்ளைக்காரன் எல்லாம் "தமிலர்கள் ரொம்ப திறமையானவங்கப்பா.. அனிமல்சை எல்லாம் ட்ரெயின் பண்ணி ஆங்கிலம் பேச வச்சிருக்காங்களே"னு மூக்குல விரல வச்சிருப்பாங்க!

இன்னொன்னு விஜயகாந்த் தான் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்'னு போட்டப்ப நான் கூட "தலைவர் வேற யாரயோ போட்டு எடுத்துட்டு பொய் சொல்றாருப்பா"னு நினைச்சேன்!
சத்தியமா இல்லீங்க. அந்தாளு பொய் சொல்லல. அவரேதான் இயக்கியிருக்காரு. படத்தைப் பார்த்தா ஒவ்வொரு காட்சியும் அதை நம்ம காதுல சொல்லிகிட்டே இருக்கும்! அவரு நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.

இந்த மாதிரி ரெண்டு படம். இல்ல வேணாம். இந்தப் படத்தையே எல்லாரும் ரெண்டு தடவ பார்த்தா போதும் கேப்10 அரசியல் வாழ்க்கை பிரமாதமா இருக்கும். 3020 வரைக்கும் அவரை யாரும் தமிழக அரசியல்ல இருந்து அசைச்சுக்க முடியாது. தயவு செய்து பாருங்க. நல்ல படம். இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு கொடுத்தாதான் கேப்10 மாதிரி இளம் நடிகர்கள், இளம் இயக்குனர்களுக்கு ஊக்கமா இருக்கும். நல்ல படங்கள் தமி'ல்'ல வரும்! எனக்கு லேசா தலை சுத்துது நான் அப்போலோல ஒரு கம்ப்ளீட் செக்கப் பண்ணிட்டு நெக்ஸ்டு மீட் பண்றேன். 


(Dhis is dedigated do my prend pradeep. hee only dold mee do ride aboud virudhagiri.)

16 comments:

ShivChinna said...

இந்த மாதிரி படங்கள பாக்குறதே தப்பு இதுக்கு விமர்சனம் வேறயா!?!?

Anyhow very funny & interesting to read this article.. nice creation... :-)

sakthistudycentre.blogspot.com said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

http://www.sakthistudycentre.blogspot.com/

பாலா said...

//வெள்ளைக்காரன் எல்லாம் "தமிலர்கள் ரொம்ப திறமையானவங்கப்பா.. அனிமல்சை எல்லாம் ட்ரெயின் பண்ணி ஆங்கிலம் பேச வச்சிருக்காங்களே"னு மூக்குல விரல வச்சிருப்பாங்க!

ஹா ஹா ஹா ..


தலைவரே படத்துல அந்த அல்பேனியாகாரன் வீட்டுக்கு போயி பேசுர சீன் ரொம்ப காமெடி. கிளைமாக்ஸ்ல வில்லன் பேசுவாறு பாருங்க(சாப்ட்வேர், கல்பனா சாவ்லா, நோபல் பிரைசுனு) அநேகமா ஸ்கூல் படிக்குற புள்ளை பேச்சு போட்டிக்கு எழுதி வச்சிருந்த பேப்பர கேப்டன் லவட்டிட்டு வந்துட்டருண்ணு நினைக்கிறேன்.

மதுரை பாண்டி said...

Very funny review!!!

அஞ்சா சிங்கம் said...

கொடுமை .............. கொடுமைன்னு .........தேட்டருக்கு போனா
அங்க ஒரு கொடுமை இங்குலீசு பாடம் எடுத்துச்சாம்........
காத்து கருப்பு அடிச்சிட போகுது எங்கிட்ட ஒரு தாயத்து இருக்கு வேணுமா ..........

முத்துசிவா said...

he he...

"Mr.Asok everythingggg sud be in our kantrol

hey hey... do wat i say

vijaykanth rocks

Nagasubramanian said...

//"தமிலர்கள் ரொம்ப திறமையானவங்கப்பா.. அனிமல்சை எல்லாம் ட்ரெயின் பண்ணி ஆங்கிலம் பேச வச்சிருக்காங்களே"னு மூக்குல விரல வச்சிருப்பாங்க!//
Superuuuuuu!

ROYALSATHISHA said...

நீங்க சொல்றதெல்லாம் உண்மையா !!

உண்மையில நல்ல விமர்சனம்

நல்லவேளை இந்த கொடுமை எல்லாம் பார்க்க நான் சென்னையில் இல்ல

என்ன கொடுமை சரவணன் சார் !

keep it up

raja said...

தனியாக வீட்டில் இருந்ததால் சிரித்த சத்தம் கேட்டு பக்கத்துவீட்டுக்காரர் எட்டிப்பார்த்தார்... நண்பனே இந்த கட்டுரையை கேப்டன் படிச்சிட்டு உயிரோட இருந்தாருனா.. நிச்சியம் உங்களோட சேர்த்து(விருதகிரி பார்த்து நீங்களும் சாதாரண ஆளு இல்ல) அவரையும் லேப்ல வச்சி உடம்ப கூறு போட்டு சோதனை செய்யலாம்.

Philosophy Prabhakaran said...

இந்த படத்தை நீங்க டி.வி.டியில தான் பார்த்திருக்கீங்கன்னு தெரியுது...

இரா.இளவரசன் said...

இந்த படத்தை நீங்க டி.வி.டியில தான் பார்த்திருக்கீங்கன்னு தெரியுது.//
haha.. download panni paathennn :-)

♠புதுவை சிவா♠ said...

கேப்10னின் அடுத்த படம் "செவ்கிரி" - செவ்வாய் கிரக மக்களை தீவிரவாதிகளிடம் காப்பற்றும் பறக்கும் தட்டு சண்டை காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும்.

Thekkikattan|தெகா said...

:))) poor fellow! விட்டுடுங்க...

மூன்றாம் கோணம் said...

super tamash! romba arumaiya ezuthiyirujjinga!

Ilanchezhian said...

annae CAPDAN villain veetla "yechi kaapi" kudipaarey athan highlight

chezhiyan....r said...

super!!!!!!!!!vayiru pain aagi pocchu!!!!!!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...