Thursday, January 27, 2011

அதிமுக கூட்டணித் தலைவர்கள் பேட்டி (நேரடி ஒளிபரப்பு)

(கோமானும், சீக்கோவும் தோளில் கைபோட்டபடி ஸ்டூடியோவுக்குள் உள்ளே நுழைகிறார்கள். காமிராவைப் பார்த்தவுடன் கோமான் கத்துகிறார்)

கோமான்: எங்கே சிங்களவன்? எங்கே சிங்களவன்?

சீக்கோ: (முணுமுணுக்கிறார்) தம்பி இது ஸ்டூடியோப்பா! இங்கல்லாம் இருக்க மாட்டாங்க.

கோமான்: (ரகசியமாக சீக்கோவிடம்) அது தெரிஞ்சு தானே இங்கே கத்துறேன்! (பின் மீண்டும் சத்தமாக)எங்கே சிங்களவன் எங்கே சிங்களவன்?

பேட்டி எடுப்பவர்: சார் சார். கூல் டவுன். இது டிவி ஸ்டூடியோ. இங்க எவ்ளோ கத்துனாலும் 'பூஜா' வர மாட்டாங்க.

கோமான்: (மனதிற்குள்) பயபுள்ள... ஆஃப் பண்டான்யா... தெளிவா இருக்கானே!!

சீக்கோ: என் தம்பி கோமானுடன் பேட்டி அளிப்பது மகிழ்ச்சி. இப்படித்தான் ஃபிரன்ச்சு புரட்சியின் போது ஈராக்கிலே பேட்டி கொடுத்தானே ஒரு மன்னன்.. அவன்...

பேட்டி எடுப்பவர்: சார் சார். இருங்க சார். இன்னும் காமிரா ஆன் பண்ணல. (ஒளிப்பதிவை ஆரம்பிக்க சொல்லிவிட்டு) கோமான் ஐயாவுக்கு வணக்கம். இப்போ தமிழகத்துல உங்கள் அரசியல் நிலை என்ன?

கோமான்: தமிழகமா? அரசியலா? அது வந்து..... அது... ஓ..அதுவா.. (கடகடவென ஒப்பிக்கிறார்) எங்கள் தமிழ் உறவுகளே.... பிரபாகரன் என் தலைவர்.. மார்க்ஸ் என் ஆசிரியர். எம்.ஜி.ஆர், நம் நாம் தமிழர் இயக்கத்தின் மலையாள தலைவர். முத்துராமலிங்கம் நம் இனத் தலைவர். நான் நாம் தமிழரின் ஒரே தலைவர். இதுதான் என் அரசியல் நிலை உறவுகளே...... இருங்க இருங்க... ஆஅங்.. பெரியார் என் வழிகாட்டி. இதான் என் நிலை!

சீக்கோ: (மனதிற்குள் முனகுகிறார்) நல்லவேளை ரஜினி, கமலையாச்சும் விட்டாரே!

பே.எ: ஐயா சீக்கோவுக்கு வணக்கம். ஏன் திடீரென கோமானுடன் கூட்டணி?

சீக்கோ: (வாய்க்குள் முனகுகிறார்) "வேற எவன் என் கூடச் சேருவான்?".  (பின் சத்தமாக) 1469யிலே ஐரோப்பாவில் மக்கள் கொல்லை நோயால் பாதிக்கப்பட்ட போது எழுந்தான் ஒரு மாவீரன். அவனாகத்தான் நான் கோமானைப் பார்க்கிறேன். எதிரிகளை அழிக்கும் சூலாயிதம் அவர். வேலாயுதம் அவர்.

பே.எ: அ.தி.மு.க தலைவிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்த விஷயம் தெரியுமா?

சீக்கோ: கண்டிப்பாக தெரியும். நேற்று போயஸ் கார்டனில் பல மணி நேரம் வாட்ச்மேன் ரூமில் காத்திருந்து அவரைப் பார்த்துவிட்டேன். ஹ்ம்ம்ம்... அஞ்சு வருசத்துக்கு முன்னாடி போன தேர்தல் அப்ப பார்த்தது! ஒரு சுத்து மெலிஞ்சுட்டாரு.(பெருமூச்சு விடுகிறார்)

பே.எ: யாரு? வாட்ச்மேனா?

சீக்கோ: இல்லை தம்பி. அம்மையாரை! அவரிடம் விஷயத்தை சொன்னபோது "அதுக்கு என்ன இப்ப?" எனக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அவர் பல அலுவல்களை தள்ளி வைத்துவிட்டு என்னை சந்தித்தது ஐந்தாண்டுகளாக எப்போதும் இல்லாத அளவிற்கு எங்கள் கூட்டணி பலமாக இருப்பதையே காட்டுகிறது! 

பே.எ: (கோமானிடம்)அம்மையார், பிரபாகரனை தூக்கில் போடவேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஆயிற்றே. அவருக்கு எப்படி ஆதரவு தருகிறீர்கள்?

கோமான்: அப்படியா சொன்னாரு? எப்ப? எப்ப? (சீக்கோ குறுக்கிட்டு கோமான் காதில் ஏதோ சொல்கிறார். பின் கோமான் தொடர்கிறார்) சொன்னால் சொல்லட்டுமே. அது போன வாரம் நான் சொல்றது இந்த வாரம். கலைஞரை பழி வாங்கத்தான் இந்த முடிவு!

சீக்கோ: (மனதிற்குள்) அடப்பாவி! இதென்ன விஜயகாந்த் படமாய்யா? இடைவேளைக்கு அப்புறம் பழி வாங்க! நமக்கு மேல இருக்கானே!!! (பின் சத்தமாக) தம்பி சொல்வது சரி. இப்படித்தான் ஒருமுறை நெப்போலியன் போனாபார்ட் ரஷ்யாவில் இட்லி சாப்பிட்ட போது...

பே.எ: (குறுக்கிட்டு சீக்கோவிடம்) சார்.சார்.. போன'பார்ட்' இருக்கட்டும் சார்! இந்த'பார்ட்'க்கு வாங்க! உங்க கட்சியில் இருந்தது ஆறு பேர். எல்.ஜி, செ.ரா, ஆர்.சுந்தர்ராஜன், கலைப்புலி தாணு, நீங்கள் மற்றும் நாஞ்சில் சம்பத். இதுல நாலு பேரு ஏற்கனவே போயிட்டாங்க. கட்சில ரெண்டு பேரா இருக்குறது போர் அடிக்கலையா?

சீக்கோ: அதை ஏன் தம்பி கேக்குறீங்க? செம போர் அடிக்குது. வாட்ச்மேனை உள்ள கூப்பிட்டு சீட்டு விளையாடிகிட்டிருக்கோம்!

பே.எ: ஆனால் உங்க வாட்ச்மேன் "தாயகத்துல தனியா இருக்க பயமா இருக்கு. அதுனால ராஜினாமா பண்ண போறேன்"னு பேட்டி கொடுத்திருக்காரே!

சீக்கோ: அப்படியா சொன்னான்? இனத்துரோகி! ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். மதிமுக கொள்கைக் கழகம். அதில் இருந்து சீக்கோவே வெளியில் போனாலும் கூட அது வீறுநடை போடும்!

பே.எ: (அதிர்ச்சியுடன்) சார். அது நீங்கதான் சார்!

சீக்கோ: அய்யயோ. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு ஃப்லோல சொல்லிட்டேன்! அயாம் வெரி சாரி!

(பா.தாண்டியன் உள்ளே நுழைகிறார். சீக்கோவைப் பார்த்தவுடன் முகத்தில் தயக்கம் தெரிகிறது)

சீக்கோ: வாங்க வாங்க! யோசிக்காதீங்க! நம்ம எல்லாம் இந்த தேர்தல்ல இப்ப ஒரே கூட்டணி தான். தம்பி கோமான் கூட வந்திருக்காரு.    

பா.தா: வணக்கம். அது... அடிக்கடி கூட்டணி மார்றோமா, மைண்ட் கன்ஃப்யூஸ் ஆயிருது! நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் காரணம்.... அது.... காரணம்.... கா..... ஹ்ம்ம்..... 

பே.எ: சரி வரலேனா விடுங்க. ஈழம் பற்றிய உங்கள் கருத்து என்ன? 

பா.தா: எங்கள் கருத்து என்ன என்று கேட்பதற்காகத்தான் கடந்த ஐந்து வருடங்களாக தலைவி ஜெயலலிதாவை சந்திக்கக் அப்பாயிண்ட்மென்ட் கேட்டோம். இன்றுதான் கிடைத்தது. கம்யூனிஸ்ட்டுகள் கேட்கும் ஒன்றுபட்ட இலங்கை அமைய அவர் ஆவன செய்வார்.

பே.எ: ஆனால் உங்கள் கூட்டணியில் உள்ள கோமான், தனி ஈழம் அமைப்பேன் என்கிறாரே!

பா.தாண்டியன்: அவரு ஆயிரம் சொல்லுவாரு! அதுல பாதிய அவரே மறந்துருவாரு! ஜெயலலிதா கூடதான் 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வாங்க. இதுக்கு போயி அலட்டிக்கலாமா?'னு பேட்டி கொடுத்தாங்க! நாங்க அதெல்லாம் மறக்கலையா? அட வாங்க பாஸ்.....

கோமான்: (திடீரென கோமான் காமிராவைப் பார்த்து கத்துகிறார்) நான் உங்க கூட்டணினு எப்ப சொன்னேன்? நான் அந்த கூட்டணி இல்லனுதான் சொன்னேன்! அதுக்காக நான் 'இந்த' கூட்டணியா?

சீக்கோ: அடப்பாவி. நீதானய்யா பத்து நிமிஷத்துக்கு முன்னாடி சொன்ன! (மனதிற்குள்) அய்யயோ..குண்டை தூக்கி போடுறானே. அந்தம்மா என்னை கொன்னே புடுமே! பேட் வர்ட்ஸ்ல பஜனை வேற பண்ணுமே! (கண்ணீர் முட்டுகிறது)

பே.எ: சரி. அதை விடுங்க. தேர்தல் பேச்சுவார்த்தை, இடப்பங்கிடூ எல்லாம் முடிஞ்சுச்சா?

சீக்கோ: (அவசரமாக) ஹ்ம்ம்... அதெல்லாம் திருப்தியா முடிஞ்சுருச்சு! இனிமே 11 மாசம் மட்டும் தான் ஜெயலலிதா கொடநாட்டுல தங்குவாங்க. மிச்சம் இருக்க ஒர்ர்ர்ர்ர்ர்ரு மாசம் ஃபுல்ல்ல்லா நானும், பா.தாண்டியனும், கோமானும் தங்குவோம்! புரட்சித்தலைவி எங்கள் மனம் குளிர வைத்து விட்டார்!

(நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் நுழைகிறார். இடுப்பில் மூன்று பெல்டு தலையில் ஒரு கண்ணாடி, சட்டையில் ரெண்டு கண்ணாடிகளுடன் கம்பீரமாக இருக்கிறார்.)

பே.எ: (பதட்டமாக) ஹேய் யாருப்பா இது? பலூன் விக்கிறவனை உள்ள விட்டது!?? வெளிய போ... வெளிய போ...!

கார்த்திக்: ஹேய் வாட் இஷ் திஷ்? ஐயாம் கார்த்திக். மாஸ் லீடர் ஆஃப் நாடாளும் மக்கள் கட்ஷி! ஐ வான்ட் ஒன் வீக் இன் கொடநாடு. நைஸ் கிளைமேட்.. ஹேய்.. ஹே... ஹெலோ.... ஐ ஆல்சோ இன் கூட்டணி... யூ ஃபர்கெட்டா??

(பா.தாண்டியன், சீக்கோ, கோமான் ஆகியோர் தெறித்து ஓடுகிறார்கள். பேட்டி எடுப்பவர் முழித்தபடியே நிற்கிறார். "தடங்களுக்கு வருந்துகிறோம்" ஸ்லைடு காட்டப்படுகிறது!) 

9 comments:

சேட்டைக்காரன் said...

//ஹ்ம்ம்ம்... அஞ்சு வருசத்துக்கு முன்னாடி போன தேர்தல் அப்ப பார்த்தது! ஒரு சுத்து மெலிஞ்சுட்டாரு.(பெருமூச்சு விடுகிறார்)

பே.எ: யாரு? வாட்ச்மேனா?//

சிரிச்சு மாளலே சாமீ! :-)))))

Chitra said...

கார்த்திக்: ஹேய் வாட் இஷ் திஷ்? ஐயாம் கார்த்திக். மாஸ் லீடர் ஆஃப் நாடாளும் மக்கள் கட்ஷி! ஐ வான்ட் ஒன் வீக் இன் கொடநாடு. நைஸ் கிளைமேட்.. ஹேய்.. ஹே... ஹெலோ.... ஐ ஆல்சோ இன் கூட்டணி... யூ ஃபர்கெட்டா??

...ultimate!

Anonymous said...

இன்னும் கூட்டணியில் இருப்பதாக நம்பப்படும் மாமிஸ்ட் கம்யூனிஸ்ட்‍டையெல்லாம் கணக்கில சேர்க்கலயா?

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

எம்.ஜி.ஆர், நம் நாம் தமிழர் இயக்கத்தின் மலையாள தலைவர்//

ROFL

முத்துசிவா said...

ஹி ஹி.. தாறு மாறு.... அடுத்த முதல்வர் கார்த்திய ஏன் கிண்டல் பண்றீங்க..

ஹே...அவ்... யூ.... நீங்க ஹ்ம்ம்.. தப்பு பண்ணீட்டீங்க... அவ்... உங்கள நான்.. ஹ்ம்ம்... கோர்ட்ல மீட் பண்றீன்... அவ்...

raja said...

இதை அப்படியே ஒரு பிரதி எடுத்து அந்த அரசியல் நோய்கிருமிகளுக்கு அனுப்புங்க.. ஒரு அயோக்கிய புன்னகையோடு கள்ள மௌனம் காட்டுவார்கள்.

தங்கராசு நாகேந்திரன் said...

அருமைங்கோ கலக்கிட்டிங்க

Anonymous said...

இந்த வைகோ லாம் ஒரு மனுஷன்... shit...!

Anonymous said...

Idhaiyum konjam podalame,

top 10 comedy scenes,

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU&feature=player_embedded

Related Posts Plugin for WordPress, Blogger...