Monday, January 24, 2011

சிறுத்தை-விக்ரமார்க்குடு! விமர்சனம் மாதிரி!

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தெலுங்குல 'விக்ரமார்க்குடு' படம் நானும் சிவாவும் டிவிடில பார்த்தோம். அப்போ சிவா சொன்னான், "தமிழ்ல இந்தப் படத்தை அஜீத் வச்சு எடுத்தா செமையா இருக்கும் மச்சி. என்ன மாதிரி ஒரு திரைக்கதைடா இது! இதுமாதிரிலாம் ஏன் மச்சி தமிழ்ல எடுக்க மாட்டேங்குறாய்ங்க?"னு. நான் சொன்னேன், "சும்மா இரு மச்சி. அஜீத்தை வச்சு எடுத்தா நமக்கே இந்தப் படம் புடிக்காம போயிரும். நிறைய வீர வசனம் எல்லாம் பேசனும். அந்தாளு பேசுனா அது 'வீர'வசனம் மாதிரி இருக்காது 'வேற'வசனம் மாதிரிதான் இருக்கும்"னு! அதும் கரக்ட்டுதான்னு அப்பவே கொஞ்சம் பட்டுச்சு.

அதுக்கப்புறம் நானும், சிவாவும் தீவிர 'ரவிதேஜா' ரசிகர்களா மாறிட்டோம்! கொஞ்ச நாள் கழிச்சு விக்ரமார்க்குடு ரீமேக்ல கார்த்தியப் போட்டிருக்காய்ங்கனு தெரிஞ்சு ரொம்ப ஃபீல் பண்ணோம் ரெண்டு பேரும்! அதுக்கு காரணம் அந்தாளு, சென்னை, பெங்களூர், டெல்லினு எந்தப் படத்துல எங்கப் பொறந்தாலும் மதுரை தமிழ்லயே பேசித் தொலைப்பாரேனு! 
 
ஆனா இப்போ படம் பார்த்தா, தாறுமாறா இருக்கு! எனக்குத் தெரிஞ்சு கார்த்தியோட முதல் உருப்படியான படம் இதான்! ரெண்டு கதாப்பாத்திரங்கள்லயும் பின்னிருக்காரு! ஒருவழியா 'பருத்திவீரன்' ஹேங்ஓவர் போயிருச்சு போல!

வில்லன்கள் எல்லாம் தெலுகு வாசனை தான்! விக்ரமார்க்குடுல வில்லன்கள் எல்லாம் ராஜஸ்தான். இதுல ஆந்திரா! ஆனா இயக்குனர் புத்திசாலினு, "மக்களின் புரிதலுக்காக ஆந்திராவில் தமிழ் பேசுவது போல காட்டப்பட்டுள்ளது"னு முதல்ல போட்ட ஸ்லைடுலயே நிரூபிச்சுட்டாரு! அப்புறம் படம் ரணகளம்! சந்தானம் வழக்கம் போல தாறுமாறு! பிரம்மானந்தம் தெலுங்குல கலக்கிருப்பாரு! உத்தமபுத்திரன்ல விவேக், பிரம்மானந்தம் கதாப்பாத்திரத்தை கேவலப் படுத்துன மாதிரி ஆயிருமோனு நினைச்சேன்! ஆனா சந்தானம் சூப்பர்! தானைத்தலைவர் கவுண்டமணிக்கு அப்புறம் கலாய்க்கிறதுக்கு இந்தாளுதான்!

சில இடத்துல 'ரத்தினவேல் பாண்டியன்'னை விட 'விக்ரம் ரத்தோட்' பரவால்லன்னும், 'ராக்கெட் ராஜா'வை விட 'அத்திலி சத்திபாபு' பரவால்லன்னும் தோணுச்சு! அது என் 'ரவி தேஜா' ஹேங்ஓவரா கூட இருக்கலாம்! ஆனாலும் கார்த்தி செம நடிப்பு படத்துல! தமிழ்ல ரொம்ப நாள் கழிச்சு நல்ல ஆக்ஷன் படம்! இதுல ஒன்னு சூர்யா நடிச்சிருக்கனும். அவரைவிட்டா கார்த்தி தான். தமிழ்ல நடிக்க வேற ஹீரோவே இல்ல!
ஆனா என்ன... தமன்னாவைப் பார்த்து வழக்கம் போல ஸ்டமக் அப்சட் ஆகி வாமிட் வந்துருச்சு.. அதும் நிறைய குளோஸ் அப் வேற! மத்தபடி படம் சூப்பர்!

11 comments:

Chitra said...

ரொம்பவே வித்தியாசமா விமர்சனம் எழுதி இருக்கீங்க....

ராஜகோபால் said...

டாக்டர் விஜய் கலாய்பது புடிக்கும் என்றால் இங்கு வரவும்

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_28.html

Philosophy Prabhakaran said...

உங்களுடைய ரசனை பொதுவான ரசனைக்கு அப்படியே உல்டாவாக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது... அதுவும் தமன்னாவைப் பார்த்தால் வாமிட் வரும்னு சொன்ன மொத ஆள் நீங்கதான்...

yeskha said...

அதென்னவோ தெரியவில்லை.. தெலுங்குப்படம் பார்க்கும் தமிழர்கள் எல்லோருக்கும் ரவி தேஜாவை பிடிக்கிறது. ஆளு ஒரு மார்க்கமாத்தான் இருப்பாப்பல.. இருந்தாலும் நைஸ்..

ம.தி.சுதா said...

ஆகவுரையே திரையின் முகத்தை அருமையாகக் காட்டி விட்டீர்கள்..

Azar said...

By the by who is that Siva machi??!!!

பாலா said...

ரவிதேஜாவின் திருட்டு முழி கார்த்திக்கு வராது. இருந்தாலும் தன்னளவில் நன்றாக செய்திருக்கிறார். நன்றி :)

Madurai pandi said...

எனக்கும் ரவி தேஜாவை பிடித்து தொலைகிறது...

முத்துசிவா said...

@Mr.Azar:

Its me.......

chakravarthy said...

அட என்னங்க சொதப்பிட்டீங்கலே....

Anonymous said...

thamanna comment superbbbbbbbbb

Related Posts Plugin for WordPress, Blogger...