Monday, January 24, 2011

நாங்கள் தமிழர்கள்..

நாங்கள் தமிழர்கள்...

நீங்கள் பெட்ரோல்
விலையைக் கூட்டினீர்கள்
நாங்கள் நடக்கப் பழகினோம்...!

நீங்கள் வெங்காய
விலையைக் கூட்டினீர்கள்
நாங்கள் பத்தியம் பழகினோம்...!

இப்போது,
மீனவன் உயிரின்
விலையைக் கூட்டியிருக்கிறீர்கள்
நாங்கள் சாகவும் பழகிக்கொள்வோம்!

ஏனெனில்
நாங்கள் தமிழர்கள்..!

19 comments:

பாலா said...

முகத்தில் அறைகிறது :(

Nagasubramanian said...

//இப்போது,
மீனவன் உயிரின்
விலையைக் கூட்டியிருக்கிறீர்கள்
நாங்கள் சாகவும் பழகிக்கொள்வோம்!

ஏனெனில்
நாங்கள் தமிழர்கள்..!//
உண்மைங்க ,,,

somanathan said...

arumai

Chitra said...

மனதை உலுக்கும் படமும் கருத்தும்.

A.சிவசங்கர் said...

அங்கேயே இப்படி என்றால் இலங்கையில் இருக்கும் நாங்கள் எப்படி எல்லாம் சொல்ல வேண்டும்

உமாபதி said...

paleer.
Polar

இரா.இளவரசன் said...

அங்கேயே இப்படி என்றால் இலங்கையில் இருக்கும் நாங்கள் எப்படி எல்லாம் சொல்ல வேண்டும்///

அநாதைகளா இருக்கிறீர்கள் நீங்கள். ஆதரவற்று இருக்கிறோம் நாங்கள்.!

கந்தசாமி. said...

சாவு என்பதே
எங்கள் வாழ்வாக..

இரவு வானம் said...

செருப்பால் அடித்தது போல இருக்கிறது, உண்மை சுடுகிறது ....:-(

Madurai pandi said...

செவிட்டால் அறையும் கவிதை!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

raja said...

இப்படி கவிதையும் பின்னூட்டமும் இடுவதை விட..(என்னையும் சேர்த்துதான்) சத்தியமுர்த்திபவனை முற்றுகையிட்டு கைதான அந்த 20 இளைஞர்கள் மேலானவர்கள்.

இரா.இளவரசன் said...

இப்படி கவிதையும் பின்னூட்டமும் இடுவதை விட..(என்னையும் சேர்த்துதான்) சத்தியமுர்த்திபவனை முற்றுகையிட்டு கைதான அந்த 20 இளைஞர்கள் மேலானவர்கள்.///

முதல் வகை களத்தில் போராடும் போராளிகள். இரண்டாவது வகை கவிதைகளாலும், கட்டுரைகளாலும் மக்கள் மனதில் குறைந்தபட்ச உணர்ச்சியையாவது விதைப்பவர்கள். மூன்றாவது வகை மிகவும் ஆபத்தான வகை! உங்கள் வகை!

raja said...

நாம் எத்தனை நாளாக மக்கள் மனதில் உணர்ச்சிகளை மட்டும் விதைப்பது.. உணர்ச்சி ஒன்றிருந்தால் நீங்கள் சிறுத்தை விமர்சனம் எழுத எப்படி துணிந்தீர்கள்.முன்றாவது வகையான நான் உதவி இயக்குநராக ஈழத்தமிழர் விஷயத்திற்காக போராடி வடபழனி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யபட்டுள்ளது.. இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

இரா.இளவரசன் said...

இதையல்லாவா நீங்கள் முதலில் சொல்லியிருக்கனும்? மக்களிடம் உணர்ச்சி கொஞ்சமேனும் இருக்கிறதா? இல்லாததை பிரகு எப்படிதான் விதைப்பது? அவன் அவன் தனக்கு கிடைத்த வகையில் தன் போராட்டத்தை வெளிப்படுத்துகிறான். சுய-இருத்தல் என்று ஒன்று உண்டு.

raja said...

என்ன செய்யலாம் இதற்காக எனும் புத்தகத்திற்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்திருக்கிறேன். நீங்கள் கோடீஸ்வர சிவக்குமாரின் பிள்ளைகளுக்கு காசை கொண்டு கொடுத்து விட்டு என்னை ஆபத்தானவர்கள் என்று சொல்கிறீர்கள். என்ன நியாயம் நண்பனே...?

இரா.இளவரசன் said...

உதவி இயக்குனராய் இருப்பது என்ன விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட செயலா? நீங்கள் தியேட்டரில் படம் பார்த்ததே இல்லையா? உதவி இயக்குனர் வேலைக்காக சக கலைஞனோடு சினிமாவை கலந்தாய்ந்ததே இல்லையா?

raja said...

நீங்கள் கலாய்ப்பதை ரசித்து தான் உங்கள் வலைமனையை விருப்பமாக வைத்திருக்கிறேன். மன்னிக்கவும் நீங்கள் என்னிடம் வாதம் புரிந்து என்னை அவமானப்படுத்தவேண்டும் எனும் கோபம் மட்டுமே உங்களிடம் இருக்கிறது. எனது பின்னுட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.(ராகுல் காந்தி பற்றி நீங்கள் எழுதியதை ரசித்தும் சிந்தனையின் ஈர்ப்பிலும் உங்கள் எழுத்தை தொடங்கினேன்.அங்கிருந்துதான் எனது பின்னூட்டம் தொடங்கியது.)

இரா.இளவரசன் said...

எழுதியதை ரசித்தும் சிந்தனையின் ஈர்ப்பிலும் உங்கள் எழுத்தை தொடங்கினேன்.அங்கிருந்துதான் எனது பின்னூட்டம் தொடங்கியது.)///

இதைத்தான் நண்பா நான் கவிதையிலும் செய்திருக்கிறேன்! உங்களைப் போன்ரவர்களுக்கு களத்துக்கு செல்ல முடிகிறது! என்னைப் போன்றவர்களுக்கு ஆற்றாமையும், ஒன்றும் களத்தில் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கமும் இருப்பதாலேயே கவிதையாய் எழுதியிருக்கிறேன்! என் பின்னூட்டத்தில் கோபம் இருந்திருந்தால் மன்னியுங்கள்.

raja said...

உற்ற நண்பனிடமும் ஒத்த சிந்தனையாளனிடமும் மன்னிப்பு தேவையில்லை நண்பனே. மன்னிப்பு கேட்டதின் வழியே .. உங்களை பார்த்து பொறாமைப்படவைத்துவிட்டீர்கள். தொடர்ந்து சந்திப்போம்.

Related Posts Plugin for WordPress, Blogger...