Sunday, January 16, 2011

காவலன்.- தி தாறுமாறு ஃபிலிம்

வழக்கமா விஜய்யோட எந்தப் படத்தப் பார்த்துட்டு வீட்டுக்குப் போனாலும் நம்ம மேல நமக்கே பாவமா இருக்கும். ஆனா இந்தப் படத்தைப் பார்த்தா விஜய் மேல பாவமா இருக்கு! என் கூட ஒரு உயிர் நண்பன் இருக்கான். அவன் தான் வலுக்கட்டாயமா முதல் நாளே என்னை எல்லா விஜய் படத்துக்கும் கூட்டிட்டுப் போறவன்! வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற வெற்றிப் படங்களை வரிசையா பாத்த எங்களோட வெற்றிக்கூட்டணி காவலன்லயும் தொடர்ந்துச்சு!

எடுத்தவுடன பாங்காக்ல நடக்குற ஒரு குத்துச் சண்டைல Gloves கூட போடாம நம்ம விஜய் ஜெயிக்கிறாரு. அப்புறம் பல வருசம் கழிச்சு அசின்னு ஒரு ஹீரோயினிய காமிச்சாங்க. ஆத்தாடி! பக்கத்துல பாத்தா பத்து நாளைக்கு சோறு தின்ன முடியாது! கருமம் கருமம்! ராஜ்கிரண் வழக்கமா என்ன பண்ணுவாரோ அதைத்தான் இதுலயும் பண்ணாரு. வேட்டிய தூக்கிக் கட்டிட்டு எட்டி எட்டி மிதிச்சாரு.

படம் ஓடிகிட்டிருக்கப்ப அப்பப்ப என் மூஞ்சியப் பார்த்தான் என் நண்பன். நான் முறைக்கிறதைப் பார்த்துட்டு "மச்சி நீ வேணா தூங்குடா நான் இன்டர்வெல்ல எழுப்புறேன்"னு சொன்னான். ரொம்ப பாவமா இருந்துச்சு! நானும் தூங்கிட்டேன். திடீர்னு செம சவுண்டு தியேட்டர்ல. என்னமோ சூப்பர் சீன் போல அதான் எல்லாரும் கை தட்டுறாங்கனு நினைச்சு எந்திரிச்சு பாத்தா மக்கள் எல்லாம் இன்டெர்வல் வந்த சந்தோசத்துல கை தட்டிருக்காங்க. அப்புறம் நாங்களும் எந்திரிச்சு போயி பஃப்ஸ் சாப்ட்டு வந்தோம். ஆனா திருப்பி உள்ள போக பயமா இருந்துச்சு. மனச திடப்படுத்திட்டு ஒருவழியா போயிட்டோம்! மிச்சப் படத்த ரொம்ப கஷ்டப்பட்டு பாத்து முடிச்சோம். ஆனா கடைசில விஜய் ஒரு விக் வச்சுகிட்டு வருவாரு பாருங்க சும்மா தியேட்டரே அதிர்ந்துச்சு! இந்த சென்சார் போர்ட் 'U' சான்றிதழ் தந்திருக்க கூடாது! "அய்யயோ ஏன்மா இந்த அங்கிள் தலை இப்படி இருக்கு?"னு கேட்டு சின்னப் புள்ளைங்கள்ளாம் பயந்துருச்சுங்க!
எல்லா தடவையும் நான் தான் தட்டுத்தடுமாறி தியேட்டரை விட்டு வெளிய வருவேன். இந்த தடவ என் நண்பன் அப்படி வந்தான்.
"மன்னிச்சிரு மச்சி. நானும் விஜய் ஒரு நல்ல படமாச்சும் நடிச்சுருவாருன்னு நம்பி ஒவ்வொரு படமா பாக்குறேன்.. ஆனா இவன்.... இது ஆவுறதில்ல மச்சி. இனிமே ஓசில திருட்டு டிவிடி கிடைச்சா கூட பாக்கக் கூடாதுடா"னு சொன்னான் என் நண்பன்! ஒருவழியா மாத்தி மாத்தி ஆறுதல் சொல்லிகிட்டே வீட்டுக்கு வந்தோம்! போன தடவை விநியோகஸ்தர்கள் தான் பணத்தை திரும்ப கேட்டாங்க, இந்தத் தடவ படம் பார்த்த மக்களே திருப்பிக்கேட்டாலும் ஆச்சரியம் இல்ல!


சரி சுருக்கமா கதைய சொல்றேன் கேளுங்க. முதல்ல ஒரு சண்டை. அப்புறம் தான் ரெண்டாவது சண்டை. அதுக்கப்புறம் ஒரு பாட்டு. அதுக்கப்புறம்தாங்க மூணாவது சண்டை. ஆனா அதுக்கு அப்புறம் எதிர்பார்க்கமா வரும் பாருங்க ஒரு பாட்டு அதுக்கு அப்புறம் தாங்க நாலவது சண்டை. அப்புறம் இடைவேளை. அப்புறம் ஒரு பாட்டு. அப்புறம் கடைசில தாங்க ஒரு சண்டை. அதுக்கப்புறம் ரொம்ப கடைசில 'விக்' வச்ச 'திகில்' காட்சி! அருமையான கதை! வசீகரா படத்தையும், புன்னகை பூவே படத்தையும் சாகடிச்சு போஸ்ட்மார்ட்டம் பண்ணா காவலன் படம் மாதிரி தான் ரிப்போர்ட் கிடைக்கும்! 

26 comments:

ramalingam said...

விஜய் படத்தில் இவ்வளவு அருமையான கதையா. உடனே பார்க்க வேண்டும்.

sriram said...

awsome machi.... hilarious review....

Anonymous said...

Neeyellam padam parkave laayakku illa. Un taste ku ini film review eludhadha. Avalavu kevalamana taste unaku.Please go and see some good Psychiatrist.

Anonymous said...

I think you have seen the film alone but you said that you have watch the movie with your friend. Do not write wrong review. Many peoples write this is the feel good movie. I also watched the movie. It's a good one.If you write like this, no one will visit your blog.

Anonymous said...

super review

Anonymous said...

yenya thappu thappu thappa review kodukkura... pudikkalaina veetla paduthu toongalam nee...

ஆகாயமனிதன்.. said...

//முதல்க் கோணல் முற்றிலும் கோணல்...
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
'பொன்னியின் செல்வன்'
கதை வசனம் - கலைஞர்
நடிப்பு - ரஜினி
ஆசையைச் சொன்னவர்
(சமீபத்திய பேட்டி)
இடம்-சன் டிவி தயாரித்த இயக்குனர் சங்கம் 40ம் ஆண்டு விழா//

புரியலையா ?

வால்பையன் said...

ஆச்சர்யமா இருக்கு, இந்த படத்தில் கதையெல்லாம் இருக்கா!?

Anonymous said...

எங்க தளபதி விஜயை மலையாளி சித்திக் நாய் ஏமாற்றிவிட்டான்
ரசிகர் நாங்கள் ரசிக்கும் படம் தரமால் மலையாள நாய்கள் ரசிக்கும் கதையை தந்து ஏமாற்றி விட்டான்
அடுத்த படம் வேலாயுதம் வரட்டும் உங்கள் வாயை மூட வைப்போம்

நல்ல கதை வரும் எங்கள் தளபதிக்கு சிறுத்தை மாதிரி ஒரு மாட்டமலா போகும்

தோல்விகள் எங்கள் தளபதிக்கு புதுசு இல்லை

சதுக்க பூதம் said...

நல்ல நகைச்சுவையான விமர்சனம்.

Anonymous said...

hello , mind your word , lastday most ofthe says very good , vijay rocks

shiva said...

innum konja nalaikku cinema ila irukalaam appadaaa so no politics now laterrr

☀நான் ஆதவன்☀ said...

:))))))))

பதிவுலகில் பாபு said...

நல்ல நகைச்சுவையான விமர்சன.. உண்மையிலயே பாவம் விஜய்..

Anonymous said...

Singam, Siruthai varisayil aduthu Vijay nadikka irupathu....
"Veri Naai" - enra maga action movie...


-- comedy ku .. tension aagathinga...

balasubramanian said...

Simply superb! I enjoyed a lot and really couldn't stop laughing, while reading it. You must be a person with good sense of humor, i can tell you..

Cheers,
Bala

padma said...

வணக்கம்
உங்கள மாதிரி theatre போய்ட்டு படம் பாக்காம தூங்கினேன் நு வேற பெருமையா சொல்லி இஷ்டத்துக்கு விமர்சனம் செய்ற விமர்சகர்களால தன்னுடைய இடத்தை தக்க வைச்சுக்க தன் மசாலா பாணியில் இருந்து வேற திரை களம் அமைசுகிட்டு நடிச்சாலும் முன்ன வந்தா முட்டுவேன் பின்ன வந்த உதைப்பேன் நு மாட்டு பொங்கல் அனைக்கு விமர்சனம் போட்டேங்க பாருங்க உண்மைலேயே நடிகர் விஜய நினைத்தா பாவமாத்தான் இருக்கு..

ஓவரு directors கும் ஓவரு ஸ்டைல் siddiq அவரோட பாணியிலே திரைகதை கொடுத்து இருக்காரு. .படத்துக்கு தேவையான அளவு ஹாஸ்யம்,காதல், செண்டிமெண்ட்ஸ் ,சண்டைனு சரி விகிததிலத்தான் இருக்கு..அக்மார்க் தமிழ் பட ரயில் முடிவு போல இல்லாம கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வித்யாசமாத்தான் இருக்கு.. .இந்த படத்தில ரியலிஸ்டிக் விஜய் பாக்கலாம் ,ரசிக்கலாம் ..நீங்க சொன்ன சண்டை பாட்டு இதெலாம் எதுமே இல்லேன்னா அப்புறம் ஆர்ட் பிலிம் range ku ஆயிடும் ..தேவை இல்லாத பாடல்கள் ரெண்டு திநிக்கபற்றுக்கு அது வேனா தவிர்த்து இருக்கலாம். உங்கள மாதிரி ரசிகர்கள் மனம் உடையகூடதுனுதன் ரெண்டாவது ஹீரயொனே அழகா தேர்வு செஞ்சு இருகன்களே அவங்கள ரசிக்கலையா!!!படம் சூப் ஹிட் இல்லை ஆனால் ஒரு முறையேனும் பாக்கலாம்..

///////வசீகரா படத்தையும், புன்னகை பூவே படத்தையும் சாகடிச்சு போஸ்ட்மார்ட்டம் பண்ணா காவலன் படம் மாதிரி தான் ரிப்போர்ட் கிடைக்கும்!/////.நீங்க சொன்ன ரெண்டு படமும் நான் பாத்ததில்ல ஆனா ஒரு விசயம் பிடிக்கலேன்னு கண்ணோட்டதில என்ன குத்தம் சொல்லலாம்னு மட்டும் ஒரு விசயம் பாத்தாலும் அப்டித்தான் இருக்கும்.உங்க வலை பதிவுகள் உங்கள் எழுத்துகள் ரசிக்க ரசிகர்கள் நேரிய இருகாங்க நீங்க சொல்ற கருத்துக்கள் உண்மை நு உங்கள் எண்ணங்களை மதிக்ரவங்க இருக்கறப்ப நியாயமான ஒரு விமர்சனம் மட்டுமே நீங்க தந்திருக்கணும் ஆனா நீங்க நிஜமாவே தாறுமாறா எழுதி இருக்கீங்க இஷ்டத்துக்கு. அதே படிச்சுட்டு விஜய் யோட மசாலா வரிசைகளில் இதும் ஒன்று நு படம் பாகமலே ஒரு 100 பேராவது ஓரம் கட்டிடுவாங்க தன்னுடைய பாணிய மாத்திமுயற்சி செய்த விஜயின் முயற்சி தோல்வி ஆகிடும்..உடனே என்னை விஜய் ரசிகையனு .
கேட்டுடாதீங்க சத்தியமா இல்லை..முடிந்தால் வேட்டைகாரனுக்கு நான் குடுத்த review என் ப்ளாக் ல பாருங்க.

நான் உங்க விமர்சனத்துக்கு குடுத்த ரெவிஎவ் வெச்சு தமிழ் நாட்டு பொண்ணுகளே ரசனை கெட்டதுங்க நு ஒட்டு மொத்த பொண்ணுகளையும் statusla சொல்லிடாதீங்க yenna உங்கள போல ஹோலிவூட் மட்டுமே தான் அருமை உலக தரம் வாய்ந்தது நு சொல்றவங்க heart லாம் hurt ஆகிடும் .

Nobody is perfectionist in todays tumultuous lifestyle world..ought not we be 100%perfectionist???but we have to imbibe and indiscriminate the good values of others at any cost of situation that will lead to the more or less perfectionist attitude person..

நன்றி

Anonymous said...

Kavalan’ is no doubt a different Vijay film. Yet, it is no different movie for it has got nothing big to offer but for Vijay’s terrific screen presence coupled with his neat performance and an emotional climax that comes with a twist.

Take away Vijay and Vadivelu (who provides relief in a few scenes), ‘Kavalan’ could make you squirm on seats, courtesy an outdated script and age-old style of narration. A few compromises to the original version (Malayalam hit ‘Bodyguard’) to suit the image of Vijay too fails to work big time.

In other words, ‘Kavalan’ could be a classic example of how a potent knot could be diluted in the name of making it a ‘commercially viable’ product. One good sign is that Vijay coming forward to be part of a project which doesn’t portray him as a demigod.

Coming to the story, Bhoominathan (Vijay), a carefree youngster, is made by his father (‘Nizhalgal’ Ravi) to join the household of Muthuramalingam (Rajkiran), a don-turned-do gooder in a village near Madurai, as a bodyguard.

As there is a threat to the life of Muthuramalingam’s daughter Meera (Asin), he asks Bhoominathan to accompany her to the college and provide security cover. As Meera feels Bhoominathan’s presence as a disturbance, she plays a prank on him, despite a warning from her friend Maadhu (Mithra Kurian).

Slowly, Meera falls for the charm and good heart of Bhoominathan and all hell breaks loose when Muthuramalingam, who never allows anyone deceive him, comes to know about this. What follows is a dragging climax, which however is emotional and touching.

Vijay is the real one-man army who saves the film to a great extent. It is his charm and performance that work big time in ‘Kavalan’. Asin is good but her much talked about chemistry with Vijay (in ‘Sivakasi’ and ‘Pokkiri’) is missing.

Vadivelu as Amavasai provides comic relief on very few occasions. Mithra Kurian, Rajkiran, Roja, KK, M S Bhaskar and ‘Pithamagan’ Mahadevan have performed well, but only have little scope as it is Vijay’s show all the way.

Vidyasagar is back with ‘Kavalan’ and his background score is good. So are a couple of songs. Cinematography by Ekambaram and editing by Gowri Shankar add value to the end product.

The script has many loopholes for there are many unanswered questions. One good example is that why ‘Pithamagan’ Mahadevan, who challenges to kill Asin at any cost, vanishes all of a sudden.

Siddique is a director with a magic touch in Malayalam. And in Tamil too, we have enjoyed his movies, especially ‘Friends’ with the same Vijay. However, as far as ‘Kavalan’ is concerned, we have to conclude the review with a dialogue oft-repeated by Vadivelu in the film- ‘Avarey confuse aayitaaru pola irukku…’ this is the review from indiaglitz, which is always accurate

துளசி கோபால் said...

உடனே படத்தைப் பார்த்தே 'தீர்க்கணும்' என்றஆவலைத் தூண்டி விட்டுட்டீங்க!!!!!

சண்டிகரில் தி. சிடி கிடைக்கணுமேன்னு பதைபதைப்பா இருக்கு :-)))

பி.கு: எங்க வீட்டு DVD ப்ளேயர் எந்தப்படம் போட்டாலும் நோ டிஸ்க் ன்னு சொல்லிரும்!

Sriakila said...

Super story!

ha...ha...

naveenraj555 said...

Boss padam paakama ipdi vimarsanam podadhinga,if possible go and watch it,
vijay pidikalainu padam paakama ipadi bittu padam oota kudadhu.. :P

The film if good worth watching.no sound,no flying fights.

இரா.இளவரசன் said...

@அனைவருக்கும்
சில பேரு ரொம்ப தப்பா புரிஞ்சுக்குறீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நல்லபடம்- கெட்டபடம் தான். மசாலா படம் நல்லா இருந்தாலும் அது நல்ல படம் தான். உதாரணம் போக்கிரி.

ஆனா காவலன்ல மட்டமான திரைக்கதை. மட்டமான பழமையான மலையாள காட்சி அமைப்புகள். மொக்கை காமடி(வடிவேலு தவிர்த்து) இதான் மிதமிஞ்சி நிக்குது. விஜய்யும் அசினும் பூங்காவில் பேசும் அந்தக் காட்சியில் விஜய் மிக அழகாக நடித்திருந்தார். படம் முழுக்க விஜய்யை வழக்கத்துக்கு மாறாக ரசிக்க முடிந்தது.(கிளைமாக்ஸ் தவிர்த்து). ஆனாலும் இயக்குனரும், கதையும் விஜய்யின் subtle actingஐ misuse செய்திருக்கிறார்கள் என்பதே நிஜம். புன்னகைப்பூவே, வசீகரா பார்க்காமல் என் விமர்சனத்தை அணுகுவதே தவறு. அதைச் செய்துவிட்டு என் விமர்சனத்தை விமர்சித்திருக்கலாம். நன்றி.

Anonymous said...

கலக்கல் விமர்சனம். அதுவும் அந்த கடைசி வரி 'இது வரை விநியோகஸ்தர்கள் தான்
பணத்தை கேட்டார்கள்,இனிமேல் ரசிகர்களும் கேட்பார்கள்' ...சூப்பர். பொங்கல்
படங்களில் ஆடுகளம் தான் சூப்பர் ஹிட். ராம்.

Jayadev Das said...

//ஆனா திருப்பி உள்ள போக பயமா இருந்துச்சு.// படம் பார்க்காம தூங்கினதுக்கே இப்படி ஆயிட்டீங்களா, படத்த பார்த்திருந்தா என்ன ஆயிருக்குமோ!!
//வசீகரா படத்தையும், புன்னகை பூவே படத்தையும் சாகடிச்சு போஸ்ட்மார்ட்டம் பண்ணா காவலன் படம் மாதிரி தான் ரிப்போர்ட் கிடைக்கும்!// ஹா...ஹா...ஹா...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//எந்திரிச்சு பாத்தா மக்கள் எல்லாம் இன்டெர்வல் வந்த சந்தோசத்துல கை தட்டிருக்காங்க//

Is this true or you making it up?

PARTHI said...

HELLO.

ungalukku padam pidikalaya vijaya pidikalaya?(nan vijay rasigan illa)
ungaluku cofee pidikathuna kudi kathiga sir, kudikira allukitta poi ithu visamnu sollathinga..
rasika niraiya iruku atha rasinga..
kurai sollanumnu nenaichu kuraiya thedi kandu pidichi pottu oru ARASIYAL pannathinga sir.
by
Parthi

Related Posts Plugin for WordPress, Blogger...