Wednesday, January 12, 2011

சீமானுக்கும், தமிழ் தேசியத்திற்கும் எட்டு காத தூரம்!

நாம் எதிர்பார்த்தது எதிர்பார்த்த நேரத்திற்கும் முன்பாகவே நடந்துவிட்டது. என்ன ஒரே ஒரு திருப்பம் என்றால் சீமான் வைகோவை சந்தித்து 'இதை' அறிவிப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால் இருவரும் சேர்ந்து அளித்த பேட்டி கொஞ்சம் கூட ஆச்சரியமளிப்பதாகவோ, அல்லது அதிர்ச்சியளிப்பதாகவோ இல்லை. இந்த நிகழ்வு தமிழக மக்களான நமக்கு மிகச் சாதாரணமானது.  ஒவ்வொரு தேர்ததிலும் நடக்கும் சந்தர்ப்பவாதங்களுக்காக, தங்களின் இருத்தலுக்காக, தங்கள் கட்சிகளை நிலைநிறுத்திக் கொள்வதற்காக நடக்கும் ராமதாஸிசம், வைக்கோயிசம், திருமாவளவனிசத்தில் இப்போது சீமானிஸமும் சேர்ந்துள்ளது.

சீமானைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையில், தன்னை ஒரு மாற்று சக்தியாக மக்களிடம் பிரகடனப் படுத்திக்கொள்ளும் ஒருவர், சந்தர்ப்பவாதத்தையும், மேடையலங்காரப் பேச்சுக்களையுமே பேசி வந்த காரணத்தால் எனக்கேற்பட்ட ஆற்றாமையையும், அதிர்ச்சியையுமே வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் அந்தக் கட்டுரைக்கு நான் வைத்த முற்றுப்புள்ளியின் போதே சீமான் ஒரு போராளி, புரட்சியாளர், தமிழ் தேசியவாதி என்ற நம்பிக்கைக்கும் சேர்த்தே வைத்தேன். (ஏன் சீமான் தமிழ் தேசியவாதி ஆகமுடியாது எனச் சொல்கிறேன் என்பது இந்தக்  கட்டுரையின் முடிவில் புரியும்) அதனாலேயே எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தாத சலனம் தராத, சீமானின் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை விமர்சிப்பது தேவையில்லாதது என்றே தோன்றுகிறது. சீமானின் இந்த நிலைப்பாட்டை நாம் விமர்சித்தால் அது ராமதாஸ், வைகோ, வளவன் போன்றோரை விமர்சிப்பது எந்தளவு விரயமாகுமோ, வீணாகுமோ அந்த அளவு வீண் தான்.

ஆனாலும் இந்தக் கட்டுரைக்கான காரணம் மிகவும் வீரியமானது. சீமான் சொல்கிறார் "யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதை விடவும் யார் ஆட்சிக்கு வரக் கூடாது" என்பதுதான் முக்கியம் என்கிறார், அதிமுக கூட்டணியில் ஐந்தாண்டுகளாக அங்கம் வகிக்கும் வைகோவை வைத்துக்கொண்டே. அதாவது அந்த வரியில், தனக்கு வேறு வழி கிடையாது என்பதை ஒப்புக்கொள்கிறார். சீமானின் ஆதரவாளர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப எடுக்கப்பட்ட முடிவு இது. வைகோவும், சீமானும் தனித்து நின்றாலோ ஆட்சி அமைக்க முடியாது. அதனால் தங்கள் எதிரியின் மிகப்பெரும் எதிரியுடன் கூட்டு சேர்கிறார்கள், இதில் என்ன தவறு என சீமானின் முடிவை வழிமொழிகிறார்கள்.  


இதில் நாம் ஒன்றை தெளிவாகக் கவனிக்க வேண்டும். அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, வைகோவும் சரி, வளவனும் சரி. அரசியல்வாதிகளாக அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. மாற்றங்களை விரும்பிய புரட்சியாளர்களாவே வந்து, பின் இந்திய அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டு, ஆட்சியாளர்கள் அமைத்து வைத்திருக்கும் அரசியல் சூழ்நிலைகளுக்குப் பழகிப் பழகி, கூட்டணி சந்தர்ப்பங்களை தொக்கிப் பிடித்து, தங்கள் இருத்தலை நிலைநாட்டிக்கொள்ளப் பழகிக்கொண்டு, அரசியல்வாதிகளாகிப் போனவர்கள். கள்ளத்தோணியில் சென்று பிரபாகரனைப் பார்க்கும் அளவிற்கு இன உணர்வுடன் இருந்த, இப்போதும் இருக்கும் வைகோவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புரட்சியாளராய் இல்லாமல், ஒரு சாதாராண சக்தியில்லாத அரசியல்வாதியாகவே நிறுத்தி வைத்திருப்பது அவரது இந்த அரசியல்வாதி முகம் தான். 

ஒரு போராளி அரசியல்வாதியாகவோ அல்லது ஒரு அரசியல்வாதி போராளியாகவோ என்றுமே இருக்க முடியாது. ஒருநாட்டின் போராளி என்பவன் எப்போதும் அந்நாட்டின் அரசாங்கத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் எதிர்ப்பவனாகவே இருப்பான். சேகுவேரா, கேஸ்ட்ரோ, பிரபாகரன், பெரியார் என வரலாறு சொல்லும் போராளிகள் அனைவருமே இப்படியாகப் போராடியவர்கள் தான். கேஸ்ட்ரோ தனது புரட்சியில் ஜெயித்து, ஆட்சியமைத்து, அரசியல்வாதி ஆனபின், சேகுவேரா தனக்கு அளிக்கப்பட்ட மந்திரி பதவியை உதறி, கேஸ்ட்ரோவை விட்டுவிலகி மீண்டும் புரட்சிக்குப் போன செயலும் நமக்கு இதையே உணர்த்துகிறது.

அரசியல்வாதிகள் எப்போதுமே அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அந்நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காகவே இருப்பவர்கள். அரசியல்வாதியால் தான் சார்ந்திருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தைத் தாண்டி ஏதுமே செய்ய இயலாது. அவ்வப்போது அதில் ஓட்டை போட்டு சுயநலத்துக்காக ஏதேனும் செய்துகொள்வார்களேயன்றி 'புரட்சி' என்பதெல்லாம் கனவுக்கும் அப்பாற்பட்டது அவர்களுக்கு! சுயாட்சிக் கொள்கையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு பயந்து கைவிட்ட அண்ணாவில் இருந்து, கலைஞர் முதல் வைகோ வரை இப்படியாகப்பட்ட அரசியல்வாதிகள் தான்! அப்படியிருக்க சீமான் என்ற அரசியல்வாதி எப்படி புரட்சியாளராக, போராளியாக இருக்க முடியும்?

இதை சீமானை புரட்சியாளர், போராளியென இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் சில இளைஞர்கள், சீமான் என்ற தனிநபரின் மேல் அவர்கள் வைத்துள்ள பற்றை சிறிது தள்ளிவைத்துவிட்டு கொஞ்சமேனும் யோசித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

பிரபாகரனைப் பிடித்துத் தூக்கிலிட வேண்டுமென சட்டசபையில் தீர்மானமே இயற்றிய ஒரு ஈழவிரோதியை எப்படி இன்று ஆதரிக்க முடிகிறது? கலைஞர் விடுதலைப்புலிகள் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு இரங்கற்பா இயற்றியபோது, அந்தக் காரணத்துக்காக அவர் ஆட்சியைக் கலைக்க வேண்டுமென கூக்குரலிட்ட ஜெயலலிதாவை இப்போது ஆதரிக்க எப்படி முடிகிறது? இப்படிக் கேட்டால், 'சூழ்நிலை' என பதில் வரக்கூடும். ஒப்புக்கொள்கிறேன். காங்கிரசை தோற்கடிக்க வேண்டுமானால் பலமான தோழன் தேவை. அதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழி வாங்கமுற்படுகிறார். 'அதிமுகவை ஆதரிக்க பயந்தால் நான் எப்படி புரட்சியாளன்?' எனச் சொல்கிறார் சீமான். இதுவா புரட்சி? இதுவா போராட்ட குணம்? இதுதான் போராளிக்கு அழகா? இதையா பெரியாரும், மார்க்சும், பிரபாகரனும் போதித்தார்கள்?

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையின் போதே ''ராசாவை வெளியேற்ற திமுக தடையாய் இருந்தால், உடனடியாக காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க நான் தயார்'' என அவசரக்குடுக்கையாய் அறிக்கை கொடுத்த ஜெயலலிதா காங்கிரசின் கண்ணசைப்பிற்காக காத்திருக்கிறார் என்பதைக் கண்டுப்பிடிக்கத் தேவையான சாதாரண அரசியல் அறிவு கூடவா இல்லை சீமானுக்கு? இல்லை, தெரிந்தேதான் செய்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்!

எப்போது இந்திய தேசியத்திற்கு உட்பட்ட, இந்தியத் தேர்தலுக்கு உட்பட்ட, இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல்வாதி ஆனாரோ அப்போதே சீமான் 'தமிழ் தேசியம்' பேசும் தகுதியை இழந்துவிட்டார். வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டை இடிக்கக் கனவு காண்பதைப் போல்தான் இதுவும். ஒன்று உயிர் போகும். இல்லையேல் கனவு போகும். சீமான் என்ன உயிரையா விடுவார்? கனவைதான் விட்டிருக்கிறார்! மற்ற யாவரையும் போல!   எப்போது இந்திய அரசியலமைப்புக்கு தன்னை உட்படுத்திக்கொண்டாரோ அப்போதே தமிழ் தேசியத்தை 'இந்திய இறையாண்மை'க்காக எதிர்க்கும் பெரும்பான்மையின் வரிசையில் சேர்ந்துவிட்டார் என்றே அர்த்தம்! மேடையில் என்னதான் அவர் முழங்கினாலும், உண்மை இதுதானே!

இப்போது சீமானும் தான் ஒரு மிகச்சாதாரண, மக்களுக்கு மிகவும் பழக்கப்பட்டுப் போன, எந்த மாற்றத்தையுமே தர திராணி இல்லாத தனது இருத்தலை மட்டுமே நோக்கிப் பயனப்படும் ஒரு அரசியல்வாதிதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒரு புரட்சியாளராக ஆக எத்தனித்து, புரட்டு பேசும் சாதாரண அரசியல்வாதி எண்ணிக்கை தமிழகத்தில் ஒன்று அதிகரித்திருக்கிறது. அவ்வளவே!

வருங்கால இந்திய-தமிழக 'ச.ம.உ' சீமானிடம் ஒரே ஒரு விண்ணப்பம். தயவுகூர்ந்து உங்கள் அரசியலில் இருந்து 'புரட்சி','போராளி' போன்ற வார்த்தைகளையெல்லாம் எடுத்து விடுங்கள். உங்களை நாங்கள், புரட்சிக்காரன், போராளி என்றெல்லாம் அழைத்தால், தங்கள் இலக்கிற்கு தடையாய் நின்ற எதையும் அடித்து உடைத்து தூள் தூள் ஆக்கி புரட்சி செய்த பெரியாரையும், சேகுவேராவையும், கேஸ்ட்ரோவையும் நாங்கள் என்னவெனச் சொல்வது?

(சென்றமுறை போல என் குடும்பத்தை, சாதியை எல்லாம் திட்டாமல், குறைந்தபட்சம் என்னை மட்டுமே திட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!)

29 comments:

சாந்திபாபு said...

ஓர் அ அ அ அ ஆ பதிவு
அடக்கமான அழகான அற்புதமான அட்டகாசமான ஆழமான

Melwin said...

குடும்பத்தை, சாதியை பற்றி திட்டுகிறவன் மூடன். அருவருக்கத்தகுந்த பிறவி. கைக்கூலி.

நல்ல பதிவு. தீர்க்கமான வார்த்தைகள். தொடரட்டும் உங்கள் பணி.

மெல்வின், முகநூல் தி.மு.க முகவர்கள் இயக்கம்

கலையரசன் said...

Super article.
ஈழத்தையும் தங்கள் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தும் இன்னொருவர். அவ்வளவு தான்...

THOPPITHOPPI said...

(சென்றமுறை போல என் குடும்பத்தை, சாதியை எல்லாம் திட்டாமல், குறைந்தபட்சம் என்னை மட்டுமே திட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!)
///////////////////////////////////

இதில் திட்டுவதற்கு என்ன இருக்கு உண்மையை எழுதும்போது.

படிக்கதெரியாதவனுக்கு குறைக்கூற மட்டுமே எழுத தெரியும்.

karunanidhi said...

அருமையான பதிவு அசோக்.
//சாதியை எல்லாம் திட்டாமல்//
இதை பதிய வேண்டிய அவசியமில்லைஎன்றே நினைக்கிறேன்.
"சாதியை திட்டாமல் கொஞ்சுவாங்கலோன்னு" கேட்க வாய்ப்புண்டு. :)

Prakash said...

Can expect below shall happen in due course,

1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

But the question is,

BY WHOM DMK to be defeated?

Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

அஞ்சா சிங்கம் said...

(சென்றமுறை போல என் குடும்பத்தை, சாதியை எல்லாம் திட்டாமல், குறைந்தபட்சம் என்னை மட்டுமே திட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!)......./////////

நிச்சயம் யாரும் திட்ட முடியாது .......காரணம் மிக நல்ல பதிவு..........

Tamil said...

நீங்க இதுவரைக்கும் உருப்படியா ஏதாவது செய்திருக்கிறீங்களா?

இரா.இளவரசன் said...

நீங்க இதுவரைக்கும் உருப்படியா ஏதாவது செய்திருக்கிறீங்களா?//
உருப்படியா செஞ்சிருக்கேனானு தெரில. ஆனா கெடுதி ஒன்னும் சத்தியமா பண்ணல! :-)

raja said...

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத்தெரியாதவன் கோழை. அப்படிபட்டவர்களே ஜாதி எனும் இன்னபிற இத்யாதிகளை துணைக்கு அழைக்கிறான். எப்பொழுதும் போல இந்த கட்டுரையிலும் உண்மையொலி பட்டொளி விசிப்பறக்கிறது. நம் அரசியல்வாதிகள் அனைவரும் சுயநலத்தின் முழுஉருவங்களே. மூச்சுபுடைக்க கத்தி முஷ்டிஉயர்த்தி பேசும் பொழுதே நீங்கள் அடையாளம் காண தவறவிட்டிர்கள் போல...மக்கள் விடுதலை மக்கள் நலன் என்பதன் முழு அர்த்தத்தை நீங்கள் steven soderbergh இயக்கிய CHE கிடைத்தால் பாருங்கள்.. அப்படியான விஷயங்கள் துயரமானது,கடினமானது என்பது விளக்கமால் புரியும்.தொடர்ந்து எழுதுங்கள் நண்பனே. அறம் எப்பொழுதும் உங்களை காக்கும். நன்றி.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

புரட்சி தளபதி, புரட்சி தலைவலி, புரட்சி இட்லி, புரட்சி போண்டா எல்லாம் தமிழில் பார்த்த பிறகு... அந்த வார்த்தைக்கு உரிய வீரியமே போய்விட்டது.
"போராளி" என்ற வார்த்தை இப்போது இவர்களால் நாசமானது தான் மிச்சம்.

//அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, வைகோவும் சரி, வளவனும் சரி. அரசியல்வாதிகளாக அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. மாற்றங்களை விரும்பிய புரட்சியாளர்களாவே வந்து, பின்.... //
மிகச்சரி... ஆனால் இவரிடம் ஆரம்பமே சரியில்லை.

Chitra said...

விரிவான அலசல்!

Denzil said...

கை குடுங்க பாஸ்! சீமான் அவர் உண்டாக்கி வைச்சிருக்கிற பிம்பத்துக்கு ஏன் தகுதியானவர் இல்லைங்கிறதுக்கு மிகச் சரியான விளக்கங்கள் உங்களோடது. சீமானை இன்னும் நம்பிக்கிட்டு இருக்கவங்களுக்கு விடை சொல்ல முடியாத கேள்விகள் கேட்டிருக்கீங்க. (இந்த அலசல் உங்கள் பதிவுகள் பற்றிய என் பார்வையை மாத்தியிருக்கு!)

manivannan said...

அரசியல் சேற்றில் இறங்காத ஆயிரக்கணக்கான தமிழின உணர்வாளர்களும், போராளிகளும் தமிழ்நாட்டில் இருந்தும் தமிழினப்படுகொலையைத் தடுக்க முடிந்த்தா?ஆனால் பதவியை தூக்கியெறிய கருநானிதி தயாராக இருந்தால் தமிழினப்படுகொலையை நிச்சயம் நிறுத்தியிருக்க முடியும்.சீமான் நீர்த்துப்போவாரா, மாட்டாரா என்பதை காலம்தான் சொல்லும்.ஆனாலும் அரசியல் சேற்றில் இறங்கி அதிகாரத்தைக்கைப்பற்றும் அவருடைய முயற்சி வரவேற்கத்தக்கதே!மிக மோசமான யுத்தச்சூழ்நிலையிலும் தாயகத்துக்குச் சென்று திரும்பிய சீமானின் உணர்வை புலம்பெயர்ந்த எம்போன்றவர்களால் கொச்சைப்படுத்த முடியாது.

manivannan said...

அரசியல் சேற்றில் இறங்காத ஆயிரக்கணக்கான தமிழின உணர்வாளர்களும், போராளிகளும் தமிழ்நாட்டில் இருந்தும் தமிழினப்படுகொலையைத் தடுக்க முடிந்த்தா?ஆனால் பதவியை தூக்கியெறிய கருநானிதி தயாராக இருந்தால் தமிழினப்படுகொலையை நிச்சயம் நிறுத்தியிருக்க முடியும்.சீமான் நீர்த்துப்போவாரா, மாட்டாரா என்பதை காலம்தான் சொல்லும்.ஆனாலும் அரசியல் சேற்றில் இறங்கி அதிகாரத்தைக்கைப்பற்றும் அவருடைய முயற்சி வரவேற்கத்தக்கதே!மிக மோசமான யுத்தச்சூழ்நிலையிலும் தாயகத்துக்குச் சென்று திரும்பிய சீமானின் உணர்வை புலம்பெயர்ந்த எம்போன்றவர்களால் கொச்சைப்படுத்த முடியாது.

daniel surender said...

மதவாதிகளையும் இனவாதிகளையும் மாற்றமுடியாது. சீமான் போன்ற சந்தர்ப்பவாதிகளையும் மாற்றமுடியாது.சீமான் மீது பற்றுக் கொண்டவர்கள் எல்லாம் ஒரு முட்டாள். மனித மிருகங்களைஎல்லாம் கடவுள் என்று நம்பும் இந்தியனுக்கு சீமான் ஒரு போராளி. என்னைப் போன்ற தமிழனுக்கு சீமான் ஒரு கோமாளி.இவன் போன்ற ஒருசில குள்ளநரிகளால் தான் தமிழனுக்கு அவலம்.உணர்ட்சிபூர்வமாக பேசும் ஒருவனிடம் அறிவுபூர்வமாக செயற்படமுடியாது.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

எனக்கு சீமானின் மேல் வைகோ, சீமான் மேல் அபிமானம் இருந்தாலும், உங்களின் கருத்தாழம் சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க வேண்டிய விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றிகள் பல..
அன்புடன்
நவநீ

veera said...

உலக உத்தமர் அண்ணன் அசோக் அவர்களே ஆகாத மாமியா கைப்பட்டா குத்தம் கால்ப்பட்டா குத்தம்... என்னமோ போங்க... எதையாவது சும்மா நேரம் கிடைக்கும்போது ஜாலியா எழுதுவது ஹிஹி ஹி... உங்கள் எழுத்தில் ஒரு நகைச்சுவை உள்ளது ஆனால் நாணயம் இல்லை என்பது உங்களுக்கே தெரியும்... மீண்டும் மீனவர் படுகொலை? கார் அது போல் நெஞ்சு கொண்ட கருணாநிதி மீண்டும் கடிதமாம், தந்தியாம், ஐந்து இலச்சம் பணமாம், ஒருவருக்கு வேலையாம், என்ன நகைச்சுவை. இந்த பிழைப்புக்கு நடுத்தெருவுல நாண்டுக்குட்டு கருணாநிதி தூக்கு போட்டு சாகலாம். உலக உத்தமர் அண்ணன் அசோக் அவர்களே கருணாநிதியின் கடிதம் குறித்தும் , தந்தி குறித்தும் உங்கள் பதில் என்ன? நீங்கள் யாருக்கு கடிதம் எளுதபோகிறீர்கள் மஹிந்த இராசபக்செவிற்கா? இல்லை கருணாநிதிக்கா? வெங்காய விலை குறித்து குளிர்சாதன அறையில் கும்மாளம் போடும் சிங் உள்ளிட்ட அவர் சகாக்களுக்கா? யாருக்கு ? இதை எல்லாம் தட்டிகேட்டால் சீமானுக்கு சிறையாம்? இல்லாத தேசியத்திற்கு பாதுகாப்பாம் ? கருணாநிதி என்கிற கொடுமையான இரத்த வெறிபிடித்த இன துரோகியிடம் இருந்து மாநிலம் பயனுற வாழ்வதற்கு எதையும் செய்வோம் உலக உத்தமர் அண்ணன் அசோக் அவர்களே... நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் கருணாநிதியின் இந்த இரத்த வெறிப்பிடித்த செயலை கண்டிக்க திராணி இருந்தால் எழுதுங்கள் இல்லாவிட்டால், நீங்களும் ...

veera said...

உலக உத்தமர் அண்ணன் அசோக் அவர்களே நாங்கள் ஜெயலலிதா என்கிற என் இன எதிரியை தங்கத்தட்டில் வைத்து சீராட்டி, பாராட்டி , பால்குடுக்க போவதில்லை, கருணாநிதியை வீழ்த்த ஜெயலலிதாவை அம்பாக எய்துகிறோம் . ஜெயலலிதாவை ஒன்றும் நாங்கள் உலக உத்தமர் என்று சொல்லவில்லை, ஜெயலலிதாவாவது பிரபாகரனை தூக்கில் இடவேண்டும் என்றார், ஆனால் இந்த கருணாநிதி, என் இனத்துரோகி கருணாநிதி, இரத்த வெறிபிடித்த கருணாநிதி.........? நீங்கள் அறியா மடந்தையாக இருப்பீர் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை உலக உத்தமர் அண்ணன் அசோக் அவர்களே...

veera said...

சரி சீமான் உணர்ச்சிவசப்படுகிறார், அறிவு வசப்பட்ட அறிவாளிகளே நீங்கள் இத்தனை ஆண்டுகளாய் என்ன சாதிச்சி புடுங்குநீங்க... இனிமே நீங்க என்ன புடுங்கப்போரீங்கனு பார்போம்...

kanthasamy said...
This comment has been removed by the author.
kanthasamy said...

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_14.html

Pradeep said...

Good Article sir!!!!

Meena said...

muyalukku moondru kaal yendru yevanum sonnaal....aamam yendru thalai yaatinaal neengal nallvar ...illayel ippadi yellam thittuvar...but u dont stop ...u are creating awareness in young minds and helping them to see things in different perspectives...let nothing stops u ...wish u all the best

meena

Senthilvasan said...

அசோக்!
மிகச்சரியான பார்வை! பாராட்டுக்கள்!!
உங்களை திட்டுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள் !
ஒருவன் கொடுப்பதை நாம் வாங்கினால் தான் அது நமக்கு ...நாம் புறந்தள்ளினால் அந்த வசைகள் யாவையும் அவருக்கே ! உங்களுக்கில்லை !!
இது நமது தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கும் ஒரு பெரிய துர்பழக்கம் ! கருத்தில் வாதாட வக்கில்லாமல் வசை பாடுவது!
அவர்கள் வசை பாடுவது உங்களை கண்டு அல்ல அது அவர்கள் தலைமை மேல் உள்ள கோபம்!

Anburaja K said...

Reply @

அதே சட்ட மன்றத்தில் கருணாநிதி, பிரபாகரனை பிடித்தால் மரியாதையுடன் நடத்த வேண்டும்’னு சொன்னத வசதியா மறந்திட்டீங்களோ! அதுக்கு என்ன உள் அர்த்தம்??

ஒன்னு நிச்சயம். ஈழ எதிரி ஜெயலலிதா. ஆனா! ஈழ துரோகி கருணா(நிதி).

எதிரியை நேருக்கு நேர் நின்று வீழ்த்தலாம்! ஆனா துரோகியை உடனே... அதை செய்ய விடுங்கள்

itgopithas said...

@anburaja k neekal sonnathu 100 vitham unmai

Anonymous said...

சீமான்! உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் நீங்கள் செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :
1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து ...கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிரின்களோ அந்த ஜெயா.
2.she joined with Subramaniam swami and dissolved KARUNANIDHI's govt for LTTE support. what did the tamilnadu people do in the next election? did they bring karunanidhi back?
3. she even made the politics so worst? before her when MGR was a CM, any common issues like tamil/cauvery/mullai issue mostly karunanidhi supported MGR. but once this lady come to power, she made a point never join with karunanidhi in any issue. that split the whole tamilnadu. and from 1989 we cannot fight anything unitely. i remember MGR called a bandh for ltte support against jayawardane, the whole tamilnadu stood together irrespective of party. but this lady spoiled everything. now you want to support her.
3. just few months back, in spectrum issue she openly announced that she can give support to congress govt.
few days back she made communist to wait, bcoz she tried her best to make alliance with congress. what is your answer for this?
4.Vijayakanthuku EVKS லட்டு ஊடுன போது, முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பான, அவனும் கடைசிவரை காங்கிரஸ் வுடன் கூட்டு வைக்க தானே துடித்தான். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினன, ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தன? அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணி தான் ஆகனுமா?
5. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய்
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.
6. JAYA தான் மீண்டும் வரணும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டாள் தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அளித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது neengal நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள்.
இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.
7. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர் கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.

VJR said...

வாவ், அருமையான ஒரு பாய்ச்சல். பதில் சொல்லட்டும் போலிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...