Sunday, January 2, 2011

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடலாமா பாஸ்?

சென்ற வருடம் ஆர்குட்ல ஒரு status message பார்த்தேன். "ஆங்கிலேய அப்பன் ஆத்தாளுக்குப் பொறந்த ஆங்கிலேயெ தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்"னு. அப்படியே சிலுசிலுனு புல்லரிச்சுப் போச்சு! என்னடா இது இப்படி ஒரு தமிழுணர்வா? அமெரிக்கால வேலை பார்த்து, டாலர்ல சம்பலம் வாங்கி, பேண்ட் சட்டை போட்டு.. அட.. முக்கியமான மேட்டர் மறந்துட்டேன் பாருங்க. கிரகம் நம போடுற ஜட்டி கூட வெள்ளைக்காரன் கண்டுபுடிச்சதுதான். இதெல்லாம் போட்டுகிட்டு அவருக்கு என்ன ஒரு தமிழ்ப் பற்று பாருங்க. அட போன வருஷம் தான் இப்படி, இந்த வருஷம் தமிழ் பற்று கொஞ்சம் அடங்கியிருக்கும்னு நினைச்சா மறுபடியும் அதே status message இந்த வருஷமும்!

மொத்தத்துல ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடக் கூடாது அப்படித்தானே! அட அதெப்டிப்பா முடியும்? தெரிஞ்சோ தெரியாமலோ ஏகப்பட்ட மனுஷ வாழ்க்கையை அன்றாடம் உபயோகப்படுத்தக்கூடிய கண்டுபுடிப்பையெல்லாம் பண்ணி வச்சு நம்ம தலைல கட்டிட்டும் போயிட்டானே!  உதாரணமா இப்போ இந்த ஸ்டேடஸ் மெசேஜ் போட்ருக்க தமிழ் பற்றாளரைக் கூப்பிட்டு "அண்ணே போய் கம்ப்யூட்டர் வாங்கிட்டு வாங்கண்ணே"னு அனுப்புறோம்னு வைங்க. அவரு கடைக்கு போயி அழகா "தம்பி சூடா ஒரு கணிணி கொடுப்பா"னு கேட்டுப்புடுவாரு! ஆனா கணிணில R.A.M -R.A.M னு ஒரு மேட்டர் இருக்கு! அதை எப்படிக் கேப்பாரு? அப்ப அவருக்கும் ஆங்கிலேய அப்பன் ஆத்தாவா?

நம்ம அன்றாட வாழ்க்கைல பயன்படுத்துற எதையும் நம்ம கண்டுபுடிக்கவும் இல்ல. ஆனா பேச்சு மட்டும் பெரிய வக்கணையா பேசுனா என அர்த்தம்? ரஷ்யா, சீனா, ஃபிரன்சு எல்லா நாட்லயும் எல்லாமே அவன் அவன் மொழில தான் எல்லா அறிவியல் சாதனங்களையும் அழைக்கிறாங்க. ஏன்னா பல கண்டுபிடுப்புகள் அவங்க நாட்ல நடந்திருக்கு. நம்மூர்ல வெள்ளைக்காரன் கண்டுபுடிச்ச காருக்கு 'மகிழுந்து'னு பேரு வச்சுருக்கான் நம்மாளு. சரி. 'Gear' க்கு என்னனு சொல்றது? 'மகிழுந்து'னு சொல்றதே தப்பு. கார்ல போற எல்லாருமே மகிழ்ச்சியாதான் போறானா? இப்படி தமிழை முன்னேத்துறேன் பேர்வழினு எதையாவது அரைகுறையா பேரை வச்சுட்டா தமிழ் முன்னேறிருமாக்கும்!   

நம்மூர்ல கட்டுமரம்னு ஒன்னு இருக்கு. தமிழன் கண்டுபுடிச்ச கடல் வாகனம் அது. அந்த வாகனம் வெள்ளைக்காரன் ஊருல இல்ல. அவன் நினைச்சிருந்தா அதுக்கு "wood boat", "log boat"னு எதையாவது வச்சிருக்கலாம். ஆனா வைக்கல. என்ன செஞ்சான் தெரியுமா? 'Catmaran'னு வச்சான். தன் மொழில இல்லாத சொற்களை தத்தெடுக்குற பாங்கு இருக்குறதுனாலதான் அந்த மொழி நிலைச்சு நிக்கிது! அதை விட்டுட்டு மொக்கை போட்டுட்டு இருந்தா ஒரு கட்டத்துல தேக்க நிலை ஏற்பட்டுரும். அதை நடக்காம பார்த்துக்குறது தமிழறிஞர்கள் பொறுப்பு. நண்பன்னு கூப்பிடாம பாதி பேரு ஃபிரண்டுனு சொல்றான். தயிர் சோறுனு கேக்க வெக்கப்பட்டு curd riceங்குறான். இதெல்லாம் மாத்துறதை விட்டுபுட்டு எதையெதையோ செஞ்சா என்ன அர்த்தம்?

ஆங்கிலப் புத்தாண்டை நான் கொண்டாட மாட்டேன்"னு நாகரீகமா எத்தனையோ பேர் சொல்லிட்டுதான் இருக்காங்க. அது அவங்க இஷ்டம். நல்ல விஷயம். உணர்வோட இருக்காங்க. அவங்களோட விருப்பமும் கொள்கையும் அடுத்தவன பாதிக்கல. ஆனா ஆங்கிலப் புத்தாண்ட கொண்டாடுனீனா நீ ஆங்கில அப்பனுக்கு பொறந்தவன்னு சொல்றது தமிழ்ப் பற்றா? இதான் தமிழர் பண்பாடா? அசிங்கமால்ல இருக்கு! இதைப் பாக்குற மற்ற மொழிக்காரன் தமிழனை காட்டுமிராண்டினுல நினைப்பான்!  

சரி. இப்படி எத்தனையோ விஷயங்கள்ல ஆங்கிலம் இப்போ தமிழனுக்கு உதவியா இருக்கு. இது உண்மை. மறுக்கவே முடியாது. அதை வெறுக்குற மாதிரி நடிக்கிற தமிழர்களை விடுங்க. நம்ம கொஞ்சம் யோசிச்சு பார்ப்போம்!

"அதெல்லாம் சரி. இப்போ ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடலாமா வேணாமா பாஸ்?"
"நீ பாஸ்னு சொன்னதே ஆங்கிலம் தான்டா லூசு!"

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!


3 comments:

Lakshmi said...

ஆங்கில புத்தாண்டு கொண்டாடுரோமோ இல்லியோ அதை இங்கிலீஷில் சொல்லாம புத்தாண்டுவாழ்துக்கள்னு தமிழ்ல வாழ்த்திக்கரோமே அந்த வகேல திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.

அஞ்சா சிங்கம் said...

பிரமாதம் நல்லா இருக்கு ....................

Nagasubramanian said...

//அதெல்லாம் சரி. இப்போ ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடலாமா வேணாமா பாஸ்?"
"நீ பாஸ்னு சொன்னதே ஆங்கிலம் தான்டா லூசு//
nice counter.

Related Posts Plugin for WordPress, Blogger...