Tuesday, January 4, 2011

எனக்கு புடிச்ச ஃபேஸ்புக் அப்டேட்ஸ் (பகுதி 1)
இதெல்லாம் எனக்கு புடிச்ச அப்டேட்ஸ்! சும்மா எல்லாத்தையும் நோட்பேடில் சேமித்து வச்சேன்! இப்போ அதுல ஒரு பத்து மட்டும் பொழுதுபோகாம blogல போடுறேன்! :-)

1)இன்னைக்கு நியூ இயர்னு பக்கத்து வீட்ல வெங்காய பஜ்ஜி செஞ்சு சாப்டாங்கப்பா.. அதை எந்த நாயோ போட்டு கொடுத்ருச்சு! அவங்க வீட்ல அதுனால வருமான வரித்துறை ரெய்டு! கணக்குல வராத வெங்காயத்தையெல்லாம் பறிமுதல் பண்ணிட்டு போயிட்டாங்க. பாவம்.. :-(

2)மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைக்க மத்திய அரசு அதிரடி முடிவு. இன்று ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய்.

3)இந்திய அரசியல்வாதிகளா... யாருக்கு ஓட்டுப் போடுறதுன்னு சத்தியமா தெரிலடா சாமி! எந்த நாட்டு குடிமகனுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது! பேசாம நானே சுயேச்சையா நின்னு எனக்கே ஓட்டு போட்டுக்கலாம்னு இருக்கேன்!

4)ஏய்ய்ய்ய்... பொம்பளை புள்ளைங்களுக்கு கமெண்ட் போடுறத விட்டுட்டு ஒரு கை புடி... நாட்டை முன்னேத்துவோம்!!!

5)மன்மதன் அம்புனு ஒரு நல்ல ஆங்கிலப் படம் பார்த்தேன். ஏன் நடூல நடூல தமிழ் வசனமா வந்து எரிச்சல கிளப்புதுனு தெரில. அடுத்த தடவை இயக்குனர் அந்த தவறை சரி செஞ்சா நல்லது!

6)பொண்ணுங்க ஆல்பத்துல இருக்குற comments பாக்குறப்ப தான் பசங்க எவ்ளோ மொக்கைனு தெரியுது!! நெஞ்சு வலிக்குது! இந்த ஆண்கள் சமுதாயம் முன்னேறவே முன்னேறாது! :-(

7)வாழ்க்கைனா என்ன தெரியுமா? நான் என் கப் டீ குடிக்கிறேன். நீங்க உங்க கப் டீ குடிக்கிறீங்க. ரெண்டும் ஒரே மாதிரி இருக்கா? இல்லேல்ல... அவ்ளோதான் பாஸ் வாழ்க்கை...!

8)நீயா நானாவில் 'பெண்ணியவாதிகள் VS குடும்பவாதிகள்' பார்த்தேன். தலைப்புலயே பெண்ணியவாதிகள் யாரும் குடும்ப வாழ்க்கைல ஈடுபட முடியாதுனு சொல்றாங்களே.. இதுக்கு பெண்ணிய வாதிகள் ஒன்னுமே சொல்லல. ஒருவேளை அதைத்தான் அவங்களும் விரும்புறாங்களோ???!!!

9)எல்லாருமே ஒரே நேரத்துல தூங்குறது நாட்டுக்கு நல்லதில்ல. நீங்க முழிச்சிருந்து நாட்டை பாத்துக்கங்க. நான் தூங்குறேன்.

10)சீன தத்துவ மேதை கன்ஃபூசியஸ் என்ன சொல்லிருக்காருனா "நீ ஒன்னும் ஊருக்கு அட்வைஸ் பண்ணி கிழிக்க வேணாம். எல்லாமே தர்ற இயற்கையே பேசாமதான இருக்கு. அதுனால நீ மூடிகிட்டு இரு"னு சொல்லிருக்காரு. இனிமே அப்படிதான் இருக்க போறேன்.


-மிச்சத்த அப்புறம் போடுறேன்! :-)


.

5 comments:

இனியவன் said...

நல்ல கருத்தான நகைச்சுவை.

Samudra said...

:):)பகிர்வுக்கு நன்றி..

சி.பி.செந்தில்குமார் said...

good comedy. y dont u attach in tamilmanam.?

Nagasubramanian said...

//சீன தத்துவ மேதை கன்ஃபூசியஸ் என்ன சொல்லிருக்காருனா "நீ ஒன்னும் ஊருக்கு அட்வைஸ் பண்ணி கிழிக்க வேணாம். எல்லாமே தர்ற இயற்கையே பேசாமதான இருக்கு. அதுனால நீ மூடிகிட்டு இரு"னு சொல்லிருக்காரு. இனிமே அப்படிதான் இருக்க போறேன்.//
super appu!

Philosophy Prabhakaran said...

// பொண்ணுங்க ஆல்பத்துல இருக்குற comments பாக்குறப்ப தான் பசங்க எவ்ளோ மொக்கைனு தெரியுது!! நெஞ்சு வலிக்குது! இந்த ஆண்கள் சமுதாயம் முன்னேறவே முன்னேறாது! :-( //

எல்லாமே சூப்பர்... இருப்பினும் என்னுடைய பேவரிட் இதுதான்...

Related Posts Plugin for WordPress, Blogger...