Sunday, December 19, 2010

ட்ரான் (ஆங்கிலம் TRON) விமர்சனம்

ஒரு விஞ்ஞானி அவர் தயாரித்த வீடியோ கேம்குள்ள மாட்டிக்கிறாரு. 21 வருஷம் கழிச்சு விஞ்ஞானியின் மகன் போய் அப்பாவ பாக்குறாரு. காப்பாத்துனா கூட பரவால்ல. சும்மா பாக்குறாரு. அப்போ அந்த வீடியோ கேம்ல அப்பாவோட இளமை உருவத்துல அப்பாவால் படைக்கப்பட்ட ஒரு programm சேட்டை பண்ணிட்டிருக்கு. அதை அழிச்சு அப்பாவும் மகனும் வெளிய வர்றாங்களா என்பதுதான் கதை. 
28 வருஷத்துக்கு அப்புறம் என்ன கருமத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எடுக்கனும்? நம்ம ஊருல சண்டை படம் ஓடுனா வரிசையா சண்டை படமா வரும். காதல் படம் ஓடுனா வரிசையா காதல் படமா வரும். இப்போ நம்ம ஊருல தாடி-கைலி ட்ரெண்ட் இருக்க மாதிரி ஆலிவுட்ல 3D மோகம் தலைவிரித்தாடுது. போன வருஷம் Boltங்குற அருமையான படத்த 3Dல மாற்றி திரையரங்குகள்ல போட்டு தலை வலிக்க வச்சாய்ங்க. இப்போ வந்திருக்க ட்ரான் அதே ரகம் தான். கண்ணாடி போடு பாத்தாலும் படம் முழுக்க முழுக்க 2Dஆகத்தான் தெரியுது.

சரி படம் நல்லா இருந்தாலாவது சகிச்சுகிட்டு பார்க்கலாம். இந்த படம் மாதிரி ஒரு கேவலமான படத்தை நான் சமீபத்துல பார்த்ததில்ல. கடைசியா நான் ஆங்கிலத்துல பார்த்த கேவலமான படம் 'Watchmen'.  ஆனா ட்ரான் அதையெல்லாம் தூக்கி சாப்ட்ருச்சு. 62 வயது Jeff Bridgesஅ 30 வயது மாதிரி Live Action technologyல காமிச்சிருக்காங்க. பொதுவாகவே ஒரு படத்த முழுக்க முழுக்க அனிமேட்டர்களை வைத்து அனிமேஷனில் எடுப்பதற்கும், நடிகர்களின் உடல்மொழியை பதிவு செய்து அதை கேரக்டர்களுக்குள் புகுத்தி (Live Action) நடிக்க வைப்பதற்கும் பயங்கர வித்தியாசம் இருக்கும். அதாவது லைவ் ஆக்ஷனில் நடிப்பு மிகவும் செயற்கையா இருக்கும். இந்த படத்திலும் அப்படித்தான். ஆனால் போக போக இன்னும் நேர்த்தி ஆகலாம். அப்படி ஆனா நம்ம ரஜினி 'பில்லா'ல இருந்த மாதிரி தோற்றத்துடன் கடைசி வரைக்கும் டூயட் பாட வாய்ப்பு இருக்கு. 

சண்டை காட்சிகள், ஆயுதங்கள் எல்லாமே முழுக்க முழுக்க Starwars, Matrix போன்ற படங்களின் காப்பி. ஒரு நிமிடம் கூட படத்தோட ஒன்ற முடியல. மிகவும் செயற்கைத்தனமான கிறுக்குத்தனமான படம். அப்பப்போ இப்படி ஆலிவுட்டுக்கு பைத்தியம் புடிச்சுரும். அப்படி புடிச்ச மிக பயங்கரமான பைத்தியம்தான் ட்ரான். நடிப்பு, வசனம், திரைக்கதை என ஒரு விஷயத்தில் கூட தேறவில்லை படம். படுதோல்வியே அடைகிறது. TRON உலகின் வடிவமைப்பு முதலில் கொஞ்சம் ஈர்த்தாலும் போக போக வாந்தி வரும் அளவுக்கு ஓவர் டோஸ். நம்மூரில பரோட்டா கடைகளில் பச்சை ட்யூப் லைட் போட்டிருப்பார்களே, படம் முழுக்க அப்படித்தான் இருக்கிறது.தயவு செஞ்சு பார்த்துறாதீங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

10 comments:

philosophy prabhakaran said...

கேவலமா இருக்குன்னு சொல்றீங்க... ஆனா நீங்க முதல் பத்தியில விவரிச்சிருக்குற கதையை பார்க்கும்போது நல்லா இருக்கும்னு தோணுது...

இரா.இளவரசன் said...

@prabakaran
கதை நல்லாருக்கா?? இதே கதைக்களம் கொண்ட கதைகள் ஆங்கிலத்துல ஏராளம். ஒருவேளை கதை நல்லாருக்குனே வச்சுகிட்டா கூட இந்தப் படம் மாதிரி திரைக்கதை நான் பார்த்ததே இல்ல. மகாமோசம். என்ன நம்பலேனா படம் பாருங்க!! :-)

Prasanna Rajan said...

சத்தியமாக உங்கள் விமர்சனம் போஸ்டர் பார்த்து கதை சொன்னது போல் தான் இருக்கிறது. திரைக்கதை சொதப்பல் தான், அதை ஒத்து கொள்கிறேன். ஆனால், விஷுவல்களில் அதிகமாக உழைத்திருக்கிறார்கள். 28 வருடங்கள் கழித்து ஒரு சீக்வல் எடுக்க காரணம், இந்த படத்திற்கான தொழில்நுட்பத்தை 'அவதார்' சாத்தியமாக்கி இருக்கிறது.

மேலும் இதன் முதல் பாகம், பாக்ஸ் ஆஃபிஸில் சறுக்கினாலும் உலகம் முழுக்க உள்ள தகவல் தொழில்நுட்பவியலாள்ர்களால் ஒரு வகை Cult Phenomenon அடைந்தது. மேலும் நீங்ள் இந்த படத்தை 'பைலட்' த்யேட்டர் தமிழ் டப்பிங்கில் பார்த்திருப்பீர்களோ என்ற சந்தேகமும் வருகிறது...

இரா.இளவரசன் said...

@prasanna rajan
அவதாருடன் இந்த குப்பையை தயவு செய்து ஒப்பிடாதீர்கள். மேலும் திரைக்கதை சரியாக இல்லாமல் என்ன விஷுவல்ஸ் பண்ணாலும் நல்ல படம்னு எந்த criticஉம் சொல்ல மாட்டாங்க. முதல் படம் பாராட்டப்பட்டால் இரண்டாவதும் பாராட்டப்படனும்னு சொல்றது என்ன நியாயம்? ஆரம்பத்தில் பிரம்மாண்டமாய் தெரியும் விஷுவல்ஸ் போக போக சலிப்பது உண்மை. நீங்களும் என் விமர்சனத்தை தலைப்பை மட்டும் படித்து பதிலளிப்பதைப் போல் உள்ளது!!! :-)

Prasanna Rajan said...

//
சண்டை காட்சிகள், ஆயுதங்கள் எல்லாமே முழுக்க முழுக்க Starwars, Matrix போன்ற படங்களின் காப்பி.
//

ஜார்ஜ் லுகாஸின் 'ஸ்கைவாக்கர் ஸ்டூடியோ'வில் தான் இந்த படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் அனைத்து அனிமேஷன் வேலைகளும் நடந்தது. லூகாஸே ஒன்றும் சொல்லாத போது நமக்கு என்ன வந்தது?

அதே சமயம் உங்கள் விமர்சனத்தை முழுவதும் படித்து விட்டு தான் அந்த பின்னூட்டத்தை இட்டேன். 'அவதார்' ஒன்றும் திரைப்பட ஆக்கத்தின் உச்சகட்டம் அல்ல. அவதாரின் மூலம் இந்த படத்திற்கான தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கியிருக்கிறது என்று தான் சொன்னேன். நீங்களும் பின்னூட்டத்தை படித்து விட்டு எதிர்வினை ஆற்றுங்கள்...

இரா.இளவரசன் said...

@பிரசன்னா
:-) சரி நேரா மேட்டருக்கு வாங்க. படம் நல்லாருக்கா நல்லா இல்லையா?

Prasanna Rajan said...

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இந்த திரைப்படத்தை ஐமேக்ஸ் 3டியில் பார்த்ததும் ஒரு காரணம். Daft Punk'இன் எலக்ட்ரானிக் பிண்ணனி இசையை நல்ல த்யேட்டர்களில் தான் உணர முடியும்...

இரா.இளவரசன் said...

பின்ணணி இசையை நன்றாக இருந்தது. ஆனால் விஷுவல்ஸையும், இசையையும் தாண்டி ஒரு படத்தை நல்ல படமாக்க ஆயிரம் அத்தியாவசிய விஷயங்கள் உள்ளன. எனது இந்த வலையை பாருங்கள்.
http://readthemovies.blogspot.com/

ரியோ said...

நேற்றுதான் படம் பார்த்தேன். மிக மோசமான அனுபவம். :(

Anonymous said...

என்னடா உங்களுக்கு வேற வேலைகள் இல்லையடா.. இங்கவா ஒரு படம் எடுக்குறதுக்கு எவ்வளவு கஷ்டம் என்று உனக்கு தெரியுமா? நீ என்னடா என்றால் வாய்கிழிய பேசுவிங்க......... முதல்லா ஒண்ணு தெரிந்துக்க உனக்கு படம் பிடிக்கலையா பிடிக்கலா என்று சொல்லிட்டு போ.... அதவிட்டுட்டு தேவையில்லாம எதையும் பேசாத....

Related Posts Plugin for WordPress, Blogger...