Thursday, December 30, 2010

தமிழடிமைகளாய் இருந்து சீமானடிமையாய் மாறியவைகளுக்கு..

நேற்று நான் எழுதிய சீமானின் கட்டுரை சீமானின் மீதான விமர்சனமாக பலரால் பார்க்கப்பட்டாலும், சில அடிமைகள் அதை தாக்குதலாகத்தான் மாற்ற முற்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் அந்த தாக்குதலை நிரூபிக்க எனது அந்த கட்டுரையில் இருந்தே மேற்கோள்கள் காட்டியிருந்தால் கூட சபையில் அது எடுபட்டிருக்கும். ஆனால் நான் திமுக ஆதரவாளன் தான் என்றும், சாதிப்பற்றே காரணம் என்றும் புதிதாய் ஒரு தாக்குதலை அரம்பித்திருக்கிறார்கள் இந்த கருத்தற்ற அடிமையாய் இருப்பதில் கருமமே கண்ணாகக் கொண்ட அடிமைகள். இவைகளை செருப்பில் ஒட்டிய கழிவாக ஊதாசீனப்படுத்திச் செல்லவே எனக்கு விருப்பம் என்றாலும் அடிமைக் கூட்டத்தில் முதுகெலும்புள்ள பிராணி ஒன்றாயினும் இருக்கும் என்ற சின்னஞ்சிறிய நம்பிக்கை இருப்பதால் விளக்கம் கொடுக்க கடமைப் பட்டவனாய் இருக்கிறேன்.

முதலில் திமுகவையும் அவர் குடும்பத்தையும் நான் எந்தப் பதிவிலும் தாங்கிப் பிடிக்கவில்லை. ஈழப்போரில் திமுகவின் துரோகம் தங்களை பாதித்ததாக சில அடிமைகள் எப்படிச் சொல்கின்றனவோ அதற்கு மேல் என்னை பாதித்தது. இது என்னைப் புரிந்தவர்க்குத் தெரியும். இருப்பினும் நான் எழுதியுள்ள கட்டுரைகளின் வரிகளில் இருந்தே சில மேற்கோள்களைக் காட்டுகின்றேன், மேலும் நான் திமுக அனுதாபியா இல்லையா என்பதை இன்னும் கொஞ்சமே கொஞ்சம் முதுகெலும்புள்ளதாய் நான் நம்பும் சிலர் முடிவு செய்துகொள்ளட்டும்.

தமிழ்தேசியத்திற்கு எதிராவன் எழுதும் கட்டுரையா இவைகள்? படித்துப் பார்த்து அறிவுள்ளவன் உறைக்கட்டும். எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன்.

அருந்ததி ராயும், தேசிய போதை மருந்தும்
http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_31.html
நடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோகன்?
http://ilavarasanr.blogspot.com/2010/12/blog-post_09.html

மேற்கண்ட கட்டுரைகளை நான் எழுதிய போது பல்லிளித்து பாராட்டிய தமிழ் தேசியவாதிகளுக்கு சீமானை விமர்சித்தவுடன் நான் தமிழ் தேசிய விரோதியாம்!

"உண்மை என்னவெனில் குறைந்த மதிப்பில் விற்க 60000கோடி ரூபாய் கையூட்டு பெறப்பட்டிருக்கிறது. அந்த மகா தொகையானது சோனியாகாந்தி (அவரது இரு சகோதரிகள்), ராசா மற்றும் தி.மு.க என மூன்று பங்குகளாக பங்கு பிரிக்கப்பட்டு முறையே 60%, 10%, 30% என பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது."

"'இளைஞன்' பட விழாவில் கருணாநிதி, "ஒருவனே எப்படி 176000கோடி ஊழல் செய்ய முடியும்" என சொன்னதன் உள்ளர்த்தம் காங்கிரசுக்கான மறைமுக மிரட்டல் தான்."

மேற்கண்ட வரிகள் நான் "ராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்"  என்ற கட்டுரையில் எழுதியவை. இதெல்லாம் இந்த கூனர்களுக்கு உறைக்காமல் போனதெப்படி? இதெல்லாம் திமுகக்காரன் எழுதுவதா? சாதிப்பற்றா? நான் சொல்லவா சீமான் பசும்பொன்னில் மாலையிட்டதால் உங்களுக்கெல்லாம் சாதிப்பற்றி பீறியடித்து சீமானின் காலை நக்குகிறீர்கள் என்று?

சொல்லமாட்டேன்! நீங்கள் எவ்வளவு தரக்குறைவாய் என்னை விமர்சித்தாலும் சொல்லமாட்டேன். என் நெஞ்சில் இன்னும் நீங்கள் உணர்வுக்காகவே சீமானுடன் நிற்பதாக நம்பிக் கொண்டிருக்கிறேன். மக்களின் ஆரவாரங்களைப் பார்த்து வெட்கப்படும், அகமகிழும் ஒரு 'applause addicted' தலைவனை விடுதலை வீரன் என தயவு செய்து சொல்லாதீர்கள். வேறு எவன் சொல்வதை விடவும் ஒரு காலத்தில் எனக்குள் இனப்பற்றை ஊட்டிய சிலர் சொல்வது மிகவும் வலிக்கிறது. ஆனால் உங்கள் மீதான என் நம்பிக்கையை என் மீது நீங்கள் வைக்கும் கருத்தற்ற மோதல்களிலும், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மூலமும் சிதைக்கிறீர்கள்.

இதுவரை என் கட்டுரைக்கு ஒரு கருத்துடன் கூடிய பதிலை உங்களால் தர முடிந்ததா? நான் திமுக காரன் என்ற இழிவிமர்சனத்தைத் தவிர உங்களால் என்ன சொல்ல முடிந்தது?
சீமான் மீது நான் விமர்சனம் வைத்தால் நான் திமுக காரன். அவன் வைத்தால் அவன் கம்யூனிஸ்ட். இவன் வைத்தால் இவன் தமுஎச. அவர் வைத்தால் அவர் காங்கிரஸ். இவர் வைத்தால் இவர் பிஜேபி. செவ்வாய் கிரத்தில் இருந்து வரச்சொல்லவா? அடச்சீ! இவ்வளவுதானா 'நாம் தமிழர் இயக்கம்'? "நாம் தமிழர் நாம் தமிழர்" என மேடைக்கு மேடை தொண்டை புடைக்க முழங்கும் வீரர்கள் மத்தியில் கருத்துடன் பேச ஒரு தமிழன் கூடவா மிச்சமில்லை?

உங்களைப் போன்றவர்களால் வீழ்ந்த எம் தமிழினத்துக்கு  விடிவு என்று கனவிலும் நினையாதீர்கள். அது அந்த மாவீரர்களின் சமாதியில் எச்சில் துப்புவதற்கு சமம். மூன்றாம் தர அரசியலை உங்கள் தலைவன் கையிலெடுத்து, கைத்தட்டுக்காகவும், வாழ்க கோஷத்துக்காகவும் பேச ஆரம்பித்து பல காலம் ஆயிற்று. ராகுலை சந்தித்தி கால் நக்கிய விஜய்யை மானமுள்ள தமிழன் என உங்கள் தலைவன் சொல்லும்போது மூடிட்டு கேக்க நான் என்ன முதுகெலும்பில்லாதவனா?

எனக்கு அடிமைப் புத்தி கிடையாது. கருணாநிதி என்றாலும், ஜெயலலிதா என்றாலும், சீமான் என்றாலும் நான் விமர்சனம் செய்யத்தான் செய்வேன். தப்பெனத் தெரிந்தால் மன்னிப்புக் கேட்கும் மனப்பக்குவமும் எனக்குண்டு. உங்களில் ஒரு தமிழன், ஒரே ஒரு தமிழன் மிச்சமிருந்தால் என்னுடன் கருத்து ரீதியான மோதலுக்கு வாருங்கள். இல்லை மூடிக்கொண்டு விசிலடிக்கப் போங்கள். இங்கு வரத் தகுதியில்லை. என் கட்டுரை சேருவோரைப் போய்ச் சேரும்.

(இது ஒரு தரம் தாழ்ந்த கட்டுரை என்றே படுகிறதெனக்கு. "பேயுடன் மோதும் போது நீ பேயாக மாறக்கூடும்" என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு.  இந்தப் பேய்களுடன் இதுதான் கடைசி மோதல். இனி இப்படிப்பட்ட கோபத்துடனான தரம் தாழ்ந்த கட்டுரைகளை நான் எழுதப்போவதில்லை. நன்றி)

6 comments:

கல்வெட்டு said...

இதென்னா சீமான் மாதமா? இப்போதுதான் தேவியர் இல்லம் ஜோதிஜியின் பதிவில் ஒரு பெரிய உரையாடல் முடிந்தது.

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html


அதற்குமுன் பலர் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு.

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1611‌

சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?
http://periyaryouth.blogspot.com/2009/11/blog-post.html

சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’
http://sugunadiwakar.blogspot.com/2009/11/blog-post.html

**

சீமான் குறித்த விசயங்களில் மூன்று தரப்பு உண்டு.

1. சீமானும் சராசரி அரசியல்வாதிதான் என்பவர்கள் (அல்லது இவரும் இப்படிப்போனாரே என்று நம்பி ஏமாந்தவர்கள்)

2. அவரை கடவுளாகமட்டும் பார்ப்பவர்கள்( எந்தவிதமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவர்கள்.)

3. தமிழன் ஒழிய வேண்டும் என்று பார்க்கும் மத அடையாளங்களை முன்னிறுத்துபவர்கள். (தமிழ் இனம் தாண்டி தங்களது மதங்களை முன்னிருத்தும் சனாதன பார்ப்பன மற்றும் இஸ்லாம் , பெளத்தமதவாதிகள்.)

பிராபாகரனுக்கும் இப்படி கடவுள்‍ பக்தர் ரேஞ்சி சிலர் இருந்தார்கள். நல்லது நடக்காத என்று உண்மையான அக்கறையோடு விமர்சித்தவர்களும் உண்டு.அடியோடு வெறுத்தவர்களும் உண்டு.
.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

சீமான் குறித்த மற்றும் சில பதிவுகள் :

சீமானே பதில் சொல்லுங்கள்
http://thoppithoppi.blogspot.com/2010/12/blog-post_2806.html
http://thoppithoppi.blogspot.com/2010/12/30122010.html

சீமானே பதில் சொல்லுங்கள்- எதிர்வினை
http://araikirukkan.blogspot.com/2010/12/blog-post.html

அடித்து நொறுக்குங்கள் போலி இந்தியாவை
http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_30.html

சினிமாக்காரனுங்க அரசியலுக்கு வராதிங்க!!!
http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_499.html

சீமான் விலைக்குத் தானே விற்றார்..
http://shanthibabu.blogspot.com/2010/12/blog-post_29.html

ஜோதிஜி said...

நன்றி கல்வெட்டு

தேவியர் இல்லம் தொடங்கி வைத்த கலாச்சாரம் முடிந்து இப்போது சீமான் வாரம்.

இரவு வானம் said...

nitharsanam, wish you happy new year sir

தாராபுரத்தான் said...

கடைசி வரிகளில் நீங்கள் என்ன உணர்வுடன் எழுதினீர்களோ அதே உணர்வுடன் சீமான் பேசுகிறார்..நாம் எல்லோரும் தமிழர்கள்தானே.

இரா.இளவரசன் said...

கடைசி வரிகளில் நீங்கள் என்ன உணர்வுடன் எழுதினீர்களோ அதே உணர்வுடன் சீமான் பேசுகிறார்..நாம் எல்லோரும் தமிழர்கள்தானே.//

நல்லாதான் பேசுறாரு. ஆனால் மாற்றி பேசுறாரு! :-(

Related Posts Plugin for WordPress, Blogger...