Thursday, December 23, 2010

"நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்"- அலறிய ராகுல் காந்தி

பீகார்ல எதோ காங்கிரசு பிச்சை எடுத்து பொழைச்சிட்டு இருந்துச்சு. அதை பிச்சை கூட எடுக்கவுடாம அன்ட்ராயிரக் கழட்டி ஊரைவிட்டு விரட்டுனவரு நம்ம காங்கிரசோட வருங்கால தூணு. அதுனால இப்போ எந்த ஊருக்கு போனாலும் காங்கிரஸ் தலைவரு எல்லாம் வீட்டுல ஆமை புகுந்துட்ட மாதிரி பதறுறாங்களாம். ஒருத்தர் ராகுல் வந்துட்டு போன தொகுதிய கழுவி ஓமம் வளர்த்ததா கூட தகவல்!! நம்மாளு பார்த்தாரு.. தக்காளி இனிமே காங்கிரசே இல்லாத ஊருக்கு தான்டா டூர் போனும்னு முடிவு பண்ணி நேரா தமிழ்நாட்டுக்கு வந்துட்டாரு!

"தொண்டர்களே நான் எப்படி காங்கிரசை முன்னேத்த போறென்னா.. மச்சி நீ கேளேன்.. மச்சி நீ கேளேன்"னு சொல்றப்ப "போடா.. சுடுதண்ணிய மூஞ்சில புச்சி ஊத்திருவேன்"னு எல்லாரும் சொல்லிட்டாங்களாம். அப்புறம் கடைசில நிறைய காமெடி பீஸ் அப்புறம் ஆர்.கே.செல்வமணி, ராமநாராயணன் மற்றும் கவர்ச்சிக்காக நடிகை ராதாவோட மகள், இதுங்க கிட்ட போய் "டேய் வான்டட்டா வந்து காங்கிரச முன்னேத்த வந்திருக்கேன்டா நானும் ரவுடிதான்டா நம்புங்கடா. நார்த் இண்டியால ஃபார்ம் ஆயிட்டேன்டா"னு கெஞ்சி கதறி பேசிருக்கு. தமிழக இளைஞர் காங்கிரஸ்ல ஒருத்தரு தமிழக முதலமைச்சர் ஆவாராம். ஜோசியம் சொல்லிட்டு போயிருக்கு இந்த 'நார்த் இட்டாலியன் நாய் சேகர்!' சும்மாவே முதியோர் காங்கிரஸ்ல "நான் தான் ஃபர்ஸ்ட்.. நீதான் ஃபர்ஸ்ட்"னு அடிச்சுக்குவாய்ங்க. இதுல இந்த மென்டல் வேற இப்படி கிளப்பி விட்டுட்டு போயிருக்கு! இனிமே இளைஞர் காங்கிரசும் அடிச்சுகிட்டு நாறப் போறாய்ங்க.

இன்னொரு காமடி, "விலைவாசியை பத்தி கவலைப்பட வேண்டாமாம். அதை மத்திய அரசும், மாநில அரசும், பிரதமரும் பார்த்துக்குவாராம். ஏம்பா ராகூலு தமிழகத்தோட வருங்கால முதலமைச்சர்களுக்கு விலைவாசி பத்தி அக்கறை இருக்காதாப்பா? 


ஒரு காங்கிரஸ் தொண்டன் வேற "நீங்க ஏன் காமராஜர் பொறுப்பை ஏற்க கூடாது?"னு தண்ணிய போட்டு நகைச்சுவை உணர்வோட கிண்டல் பண்ணிருக்கான். இந்தாளுக்கு குஷியாயிருச்சு. "நான் அப்படி காமராசர் பொறுப்பை எடுக்கனும்னா நான் தமிழ் கத்துருக்கனும்"னு சொல்லிருக்காரு! டேய் டகால்டி.. நீ இப்ப மட்டும் என்னத்த கத்துகிட்டுடா அரசியலுக்கு வந்த? ஏதோ தமிழ் கத்துகிட்டா மட்டும் இவரு காமராசர் ஆகி கிழிச்சிருவாரு! வெங்காயம் 80 ரூபாய் விக்கிது கிட்னா நாயிக்கு ஆட்சிக்கு வரனுமாம்! ஆசைய பாரு!

ஊருக்குள்ள எல்லாரும் சனி ஞாயிறுனா முன்னால கறி எடுப்பாய்ங்க. இப்பலாம் கூடைய தூக்கிட்டு போய் வெங்காயம் வாங்கி வெங்காய சாம்பார் வைக்கிறாய்ங்கடா. பார்க்கவே பாவமா இருக்கு! கேட்டா இப்போ அதான் ஸ்பெஷலாம். கல்யாண மறுவீடு ஃப்ங்ஷன்ல 'தயிர் வெங்காயம்' வைக்கலேனு சம்பந்தி வீட்டுக்குள்ல அடிதடி வருதுடா. இதெல்லாம் அடுக்குமாடா? ஆனா இந்த மாதிரி சப்ப மேட்டரெல்லாம் பிரதமர் பார்த்து கிழிச்சுருவாராம். நம்ம காங்கிரசு ஆட்சிக்கு வர்றத மட்டுமே சிந்திச்சுகிட்டு உக்காந்திருக்கனுமாம்! அடேய் கோவிந்தசாமி, அந்தாளு பிரதமருங்குறதே அந்தாளுக்கு கொடியேத்துறப்ப மட்டும் தான் ஞாபகம் வரும். ஒபாமா "வேர் இஸ் தி பாத்ரூம் Mr.சிங்? (where is the bathroom Mr.Singh?)"னு கேட்டதுக்கு கூட "ஐ மஸ்ட் கன்சல்ட் சோனியாஜி. கொஞ்ச நேரம் அடக்கிக்கங்க"னு சொன்னவரு அந்தாளு! வெங்காயத்த பத்தி அந்த சர்தார்ஜிக்கு எங்கடா தெரிய போகுது? டேய் யப்பா ராகூலு நீ உங்க ஆத்தாவ மிஞ்சிருவடா சாமி!

சரி. நீ அதெல்லாம் விடு ராகுல் மச்சி. நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆயிருவோம். இளைஞர் காங்கிரசுல நாளைக்கே தமிழ்கத்தின் முதல் உறுப்பினரா பதிஞ்சுர்றேன். ஆனா அதுக்கு நீ என்கிட்ட ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்லனும். என்னத்துக்கு மச்சி நடிகை ராதா மகளை கட்சி மீட்டிங்குக்கு கூப்ட? சரி. அதைக் கூட நான் மன்னிச்சுருவேன். நாப்பது வயசுல கல்யாணம் ஆகாம இருக்க வயசு கோலாறு. கேர்ள் ஃபிரண்டு வேற் ஸ்பெயின்ல இருக்கு.. ரொம்ப டிஸ்டன்சு ஓகே! ராமநாராயணனையும், செல்வமணியையும் எதுக்கு கூப்ட? தமிழக காங்கிரசுக்கும் இவய்ங்களுக்கும் என்னடா சம்பந்தம்? அதுவுமில்லாம "அறிவுஜீவிகளுடன் ராகூல் உரையாடினார்"னு நியூஸ் கொடுக்க வுட்ருக்க? அறிவுஜீவினா என்ன தெரியுமா? உன்ன வச்சு காமடி பண்ணிருக்காய்ங்கடா எங்கூரு இளைஞர்கள்!

எங்கூரு அரசியல்வாதிங்க பரவால்ல போலயே! உன் அரசியல் உணர்வு, காங்கிரச முன்னேற்றனும்ங்குற வெறி எல்லாம் என்ன புல்லரிக்க வைக்கிது மச்சி. இப்படியே அடுத்த தடவ வர்றப்ப தமன்னா, இலியானா, த்ரிஷா, ஏ.எல்.அழகப்பன், ஆஸ்கார் ரவிச்சந்திரன், இந்த மாதிரி அரசியல் செல்வாக்கு உள்ள ஆட்களா உள்ள இழுத்துட்டீனா காங்கிரஸ் முன்னேறிரும். அப்புறமா நம்ம ஜாலியா அப்பன் இத்தாலிக்காரிய கூட்டிட்டு ஓடுன மாதிரி உன் கேர்ள்ஃபிரண்டு இருக்குற ஸ்பெயினுக்கு போயி அந்த வெள்ளைக்காரிய கூட்டியாந்து 'கானியா வாந்தி'னு பேரு மாத்திறலாம். அப்புறம் வழக்கம் போல காங்கிரஸ் கிழம் எல்லாம் அதுகளுக்குள்ள அடிச்சுகிட்டு 'கானியா' கிட்ட கட்சிய கொடுத்துருங்க. அப்புறம் தமிழ்நாட்டு இளைஞர் காங்கிரசை முன்னேத்த உன் மகன் வருவான். எங்களுக்கும் ஜாலியா டைம் பாஸ் ஆகும்.

ஆனா மகனே உங்க குடும்பத்துக்கு காந்தினு பேரு இருக்குறது மட்டும் மகாத்மா காந்திக்கு தெரிஞ்சுச்சு, தடியாலயே உங்கள அடிச்சு போட்டுட்டு கரண்ட் கம்பிய புடிச்சு தொங்கிருவாரு. ஆனா அவரு தொங்குறப்ப கிரகம் தமிழ்நாட்டுல தொங்குனாருன்னா மின்வெட்டு டைமிங் சொல்லனும். பாவம் அவரு தொங்குற நேரத்துல கரண்ட் இல்லேனா (dissappoint)டிஸ்சப்பாயிண்ட் ஆகி (dispose)டிஸ்போஸ் ஆக முடியாம போயிரும்!

இப்பலாம் மனுஷன் சிரிச்சே சாகனும்னாலோ அல்லது குடிச்ச விஷத்தை வாந்தியெடுக்கனும்னாலோ ஒரே வழிதான். உங்க மீட்டிங்குக்கு வந்தா போதும்! ஆனா சும்மா சொல்லகூடாதுடா. SMSல மட்டுமே காமடி பண்ணிட்டு இருந்த ஒரு சர்தார்ஜிய கூப்பிட்டு நிஜத்துலயே காமடி பண்ண வச்சுட்டீங்களேடா! அந்தாளும் "ஐயாம் பாவம் ஐயாம் பாவம்"ங்குறாரு, விட மாட்றீங்களேடா! 

அது என்ன.. ஆங்.. ஊழல ஒழிப்பீங்களா? முதல்ல கொள்ளையடிச்ச காசை எங்கடா ஒளிப்பீங்க? அதை ஒளிக்கனும்னா பாகிஸ்தானை வாடகைக்கு எடுக்கனுமேடா! ஆனா ரொம்ப தைரியம்டா உங்களுக்கு. கூச்சப்படாம எப்படிடா ஊழலை ஒழிப்போமுங்குறீங்க. சிரிப்பு வரலையா அப்டி சொல்றப்ப? "நல்லா படிப்பேன் இனிமேலுனு" ஸ்கூல் படிக்கும்போது எங்க சார்ட பொய் சொல்றப்ப கூட சிரிப்பு வந்துச்சேடா எனக்கு. ஆனா கூச்சப்படாம சிரிக்காம ஊழலை ஒழிப்போம்னு உங்காத்தா சொல்லுது பாரு, அங்க நிக்குதுடா உங்க குடும்பம்!

சரி ராகுலு. அதெல்லாம் விடு. என்னமோ பண்ணித்தொலை. இன்னும் காங்கிரசு ஆட்சில இருக்க மாநிலத்துக்கெல்லாம் போயி அங்க இருக்க எதிர்கட்சி தலைவர்களுக்கு உதவி பண்ற வேலை உனக்கு இருக்கு! ஆனா மவனே இனிமே நீ தமிழ்நாட்டுக்கு மட்டும் வந்தீனா, என் நிலம், வீடு, காரு, பைக்கு, ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, எல்லாத்தையும் வித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி காங்கிரசு ஆபீசை கொளுத்தி புடுவேன் ஆமா! கேசு கூட வராது! ஏன்னா அங்க ஆள் இருந்தாதானே!!!

55 comments:

ம.தி.சுதா said...

தமிழன் ஈழத்தை வைத்து அரசியல் நடத்துவது போதாது என்று இவரும் வந்திட்டார்..

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

Anonymous said...

கலக்கல் நண்பரே! இதைப்படித்த நானும் என் நண்பரும் சிரித்து முடிக்கவே ரொம்ப நேரம் ஆகியது...

நன்றி: tamilkural.in

அருண்பிரபு said...

இந்தப் பதிவு சற்றே வசவுகள் விரவியிருந்தாலும் ஒரு உரிஜினல் உள்ளக்குமுறல் இருப்பது தெரிகிறது. இதை நான் தமிழ்ஹிந்து தளத்தில் பின்னூட்டத்தில் தந்துள்ளேன். பலர் படித்து இன்புறட்டும்.

இரா.இளவரசன் said...

@arun prabhu
தயவு செய்து எங்கெல்லாம் லின்க் கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் போடுங்க. ஒரு கொடூர மனம் படைத்தவன் கூட தன் அப்பனையோ அம்மாவையோ கொன்னவன பழி வாங்க நினைச்சா கொலை செஞ்சவனை மட்டும் தான் கொல்லுவான். ஆனா பழி வாங்குறதுக்காக ஒட்டுமொத்தமா ஒரு இனத்தையே கொலை செய்த குடும்பத்தை எங்கயாச்சும் கேள்வி பட்டிருக்கோமா?? இந்தியாவில் உண்டு!

கக்கு - மாணிக்கம் said...

ஒவ்வொருவரின் உள்ளகுமுரலை நையாண்டியாக சற்று உறைகுபடியும் சொல்லிய விதம் சிறப்பு .
political satire with a great agony and anguish.
என் பக்கத்தில் இணைப்பும் கொடுத்துவிட்டேன் கேட்காமல்.

இரா.இளவரசன் said...

@மாணிக்கம்
கேட்கவே வேணாம் தல. இந்த மாதிரி கட்டுரைகளுக்கு ஹிட்ஸ் வராமல், மொக்கை சினிமா கட்டுரைகளுக்கு மட்டுமே வருகிறதே என்ற வருத்தம் எனக்கு எப்பவும் உண்டு. தாராளமாய் பகிருங்கள்.

வலைச்சரம் said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

ம.தி.சுதா said...

வலைச்சர பதிவருக்கு எனது வாழ்த்துக்கள்...

karthi said...

ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, /////
லந்துக்கு அளவே இல்லையா தலைவ
இந்தகட்டுரைய மட்டும் காங்கிரஸ் கட்சி ஆபிஸ் நோட்டிஸ் போர்ட் மாட்டி வைங்க
அவன்னவன் நாண்டுகிட்டு சாகட்டும்

Anonymous said...

maraimalai u s a,nantru ,nanri.

விஜி said...

:))

palPalani said...

இங்கே கமெண்டு போட்டா நான் எதிர் கட்சிக்காரனாக பார்க்கப்படுகிறேன்!

எல் கே said...

இளவரசன்.. நல்லா எழுதி இருக்கீங்க . யாரும் வருவதில்லை என்றுக் கவலை கொள்ள வேண்டாம். கமென்ட் வராவிட்டாலும் ஹிட்சில் பாருங்கள் விசிட்டர்ஸ் இருக்கும்

இரா.இளவரசன் said...

@எல்.கே
இல்லை எல்.கே. ஈசன் விமர்சனத்துக்கு 1300 ஹிட்ஸ். அருந்ததிராய் கட்டுரைக்கு 210 ஹிட்ஸ்! அப்போதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு! அதான் அப்படி சொன்னேன்.

இரா.இளவரசன் said...

இங்கே கமெண்டு போட்டா நான் எதிர் கட்சிக்காரனாக பார்க்கப்படுகிறேன்!//
நீங்கள் ஏதோ பதிவுலகம் சம்பந்தமாக சொல்கிறீர்கள்னு நினைக்கிறேன்.
அப்படி இல்லையென்றால் ஒன்று சொல்லிகொள்கிறேன் , எதிர்கட்சி அந்தகட்சி இந்தகட்சி எல்லாம் இல்ல. எல்லாருமே காங்கிரசுக்கு எதிரான கட்சியா இருந்தாதான் நாடு உருப்படும். நல்ல பதிவுகளை பதிவுலக சுயநலத்துக்காக சிலர் முடக்குவது போல கேவலமான செயல் கிடையாது. மேலும் அப்படி செய்பவர்களின் ஆட்டு மூளைக்கான சரக்கு என் பதிவுகளில் இருக்காது. அதற்கு வேறு பல இடங்கள் உண்டு. :-)

குடுகுடுப்பை said...

சிரிச்சு மாளலை. மனதில் உள்ளதை அப்படியே எழுத துணிச்சல் வேண்டும்.உங்கள் துணிச்சல் அசாத்தியமானது.

raja said...

ABSOLUTELY CLASSIC... ILAVARASAN. HATS OFF... இவன் நம்மள வச்சி காமெடி பண்ணுறான்.. நம் பிள்ளைகளின் கறியை தின்ற இந்த பொறம்போக்கு... (ஈழத்தில்) இதை விட ஒரு சிறந்த கட்டுரையை நீங்கள் இனி எழுதிவிடுவீர்களா எனும் சந்தேகம் கூட எனக்கு வந்துவிட்டது. அட்டகாசமான செருப்படி.. இந்த கட்டுரையை தமிழ் நாடு முழுவதும் பிரதி எடுத்து கொடுக்கலாம்.. உங்களை போன்றவர்கள் எனது நம்பிக்கை ஒன்று.

Anonymous said...

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள். மானமுள்ள தமிழர்கள் அனைவரின் உள்ளத்தில் உள்ளதை அப்படியே பிரதிபலித்திருக்கிறது.

மிக அருமை .. வாழ்த்துக்கள்.

இலங்கையில் முள்வேளிக்குள் தவிக்கும் தமிழர்களின் உரிமையை மீட்டெடுப்பது பற்றி வேறு தில்லி சென்றவுடன் சிந்திப்பேன் என்று காமடி பண்ணியிருக்கிறான்.

krubha said...

//இனிமே நீ தமிழ்நாட்டுக்கு மட்டும் வந்தீனா, என் நிலம், வீடு, காரு, பைக்கு, ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, எல்லாத்தையும் வித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி காங்கிரசு ஆபீசை கொளுத்தி புடுவேன் ஆமா! //

Super Punch

மதுரை பாண்டி said...

// என் நிலம், வீடு, காரு, பைக்கு, ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, எல்லாத்தையும் வித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி காங்கிரசு ஆபீசை கொளுத்தி புடுவேன் ஆமா! கேசு கூட வராது!

Finishing romba nalla irukku!!!!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ha ha ha........

இரா.இளவரசன் said...

@குடுகுடுப்பை
நன்றி.

இரா.இளவரசன் said...

@ராஜா
ஆமா. காங்கிரசை இனி 40 வருடம் அல்ல, 400 வருஷத்துக்கு தலையே தூக்க விடாத அளவுக்கு அடிக்கனும். தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இந்த ஈனர்கள் செய்த துரோகம் போல உலக வரலாற்றிலேயே எதுவும் கிடையாது. இந்த கட்டுரையை முடிந்த அளவு பகிருங்கள்.

இரா.இளவரசன் said...

@kruba
hehe!

வரதராஜலு .பூ said...

செம போடுங்க. நீங்க சொன்னது எதுவுமே தப்பேயில்லை.

இந்தாளு என்னா மயித்த புடுங்கிட்டாருன்னு யுனிவர்சிட்டி-ல எல்லாம் போயி கலந்துரையாடுகிறார்னே தெரியலை. இந்த கொடுமைய பத்தி நீங்க சொல்லவேயில்லையே?

//@ இரா.இளவரசன் said...

@arun prabhu
தயவு செய்து எங்கெல்லாம் லின்க் கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் போடுங்க. ஒரு கொடூர மனம் படைத்தவன் கூட தன் அப்பனையோ அம்மாவையோ கொன்னவன பழி வாங்க நினைச்சா கொலை செஞ்சவனை மட்டும் தான் கொல்லுவான். ஆனா பழி வாங்குறதுக்காக ஒட்டுமொத்தமா ஒரு இனத்தையே கொலை செய்த குடும்பத்தை எங்கயாச்சும் கேள்வி பட்டிருக்கோமா?? இந்தியாவில் உண்டு!//

:(

Azar said...

Seen in hotel menu:
Mutton biryani (without Onion):Rs.120
Mutton biryani (with Onion):Rs.220.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமை நண்பரே... இவர் ராகுல் காந்தி இல்லை ராகுல் கான்..ஆகவே இனிமே ராகுல்கான் என்றே கூப்புடுங்க இந்த ...............

மாணவன் said...

//சரி ராகுலு. அதெல்லாம் விடு. என்னமோ பண்ணித்தொலை. இன்னும் காங்கிரசு ஆட்சில இருக்க மாநிலத்துக்கெல்லாம் போயி அங்க இருக்க எதிர்கட்சி தலைவர்களுக்கு உதவி பண்ற வேலை உனக்கு இருக்கு! ஆனா மவனே இனிமே நீ தமிழ்நாட்டுக்கு மட்டும் வந்தீனா, என் நிலம், வீடு, காரு, பைக்கு, ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, எல்லாத்தையும் வித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி காங்கிரசு ஆபீசை கொளுத்தி புடுவேன் ஆமா! கேசு கூட வராது! ஏன்னா அங்க ஆள் இருந்தாதானே//

நச்சுன்னு இருக்கு தல

தொடர்ந்து கலக்குங்க.....

இரா.இளவரசன் said...

@azar
உண்மைலயா மச்சி?

இரா.இளவரசன் said...

@வரதராஜலு .பூ
நன்றி சார். நிஜத்தில் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஹிட்லர் நடத்திய கொலைகள் கூட இனவெறி சம்பத்தப்பட்டது. சோனியாகாந்தி என்ற தனிப்பட்ட ஒருத்தியின் பழிவெறிக்காக ஒரு இனமே சின்னாபின்னமான கதை எங்காவது உண்டா?

இரா.இளவரசன் said...

@மாணவன்
நன்றிப்பா. தயவுசெய்து இந்தப் பதிவை பகிருங்கள்.

கோவி.கண்ணன் said...

பிரிச்சு மேஞ்சிருக்கிங்க

சரண் said...

வருங்கால "பீ"ரதமர் ராகுல் கான் வாழ்க ..........!!!!!!

சரண் said...

வருங்கால "பீ"ரதமர் ராகுல் கான் வாழ்க ..........

siwa said...

நண்பன் இளவரசு, உங்க கருதுகள், சிந்திக்கும் விதம், சம வயது தோழர் என்ற முறையில் எனக்கு உங்கள் எழுத்துக்களை ரொம்ப பிடிக்கும்.
'நடுநிலை' என்ற கட்டுரைல நீங்க சொல்லி இருக்கிற கருத்துக்கும், இந்த எழுத்தும் கொஞ்சம் முரணாக இருக்குது...
"எதிர்கட்சி அந்தகட்சி இந்தகட்சி எல்லாம் இல்ல. எல்லாருமே காங்கிரசுக்கு எதிரான கட்சியா இருந்தாதான் நாடு உருப்படும். "
நான் காங்கிரஸ் ஆள் இன்னு நினைக்க வேணாம், ஐரோப்பா ல இருந்து கிட்டு இந்திய ல நடுகிற கொடுமைகளை எல்லாம் பார்த்தும்-கேட்டும், தட்டி கேக்க திரணி இல்லாத ஒரு தமிழன்:(

யுவன் பிரபாகரன் said...

என் நிலம், வீடு, காரு, பைக்கு, ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, எல்லாத்தையும் வித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி காங்கிரசு ஆபீசை கொளுத்தி புடுவேன் ஆமா! கேசு கூட வராது! ஏன்னா அங்க ஆள் இருந்தாதானே!!! ////////

எரிக்கவே மொதல்லா காங்கிரசு ஆபிஸ் இருந்தாத்தானே ....

நையாண்டி நைனா said...

தல டாப் தலே.


எப்பா யாராவது வந்து இதை அன்னை.... சாரி... சரி... அண்ணன் ராகுலுக்கு மொழி பெயர்த்து சொல்லுங்க...

Thennavan said...

//எதிர்கட்சி அந்தகட்சி இந்தகட்சி எல்லாம் இல்ல. எல்லாருமே காங்கிரசுக்கு எதிரான கட்சியா இருந்தாதான் நாடு உருப்படும்.//

1000 % TRUE

அ.வெற்றிவேல் said...

இளவரசன்.. அருமை நண்பரே.அற்புதமான கட்டுரை.. முதல் முதலாக உங்கள் தளம் வந்தேன்.. அட்டகாசம் போங்கள்..ஒவ்வொரு தமிழ் ரத்தம் ஒடும் தமிழனும் இப்படித் தான் நினைக்கிறான்..வாழ்த்துகள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

ராகுல் சில உண்மைகள் பற்றி நான் முன்பே எழுதி இருக்கேன்... முடிந்தால் படித்து பாருங்கள்!!!

Azar said...

அட இதாவது பரவாஇல்ல மச்சி... வெங்கைய சட்னி வைடானு சொன்னா, "என்ன வசதியா?" னு வெறப்பா கேக்றான் டா அந்த கடைக்காரன்.

பாலகுமார் said...

kalakkal post boss.

- இரவீ - said...

அருமை நண்பரே..

jaisankar jaganathan said...

//தயவு செய்து எங்கெல்லாம் லின்க் கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் போடுங்க. ஒரு கொடூர மனம் படைத்தவன் கூட தன் அப்பனையோ அம்மாவையோ கொன்னவன பழி வாங்க நினைச்சா கொலை செஞ்சவனை மட்டும் தான் கொல்லுவான். ஆனா பழி வாங்குறதுக்காக ஒட்டுமொத்தமா ஒரு இனத்தையே கொலை செய்த குடும்பத்தை எங்கயாச்சும் கேள்வி பட்டிருக்கோமா?? இந்தியாவில் உண்டு!
//

அருமை தல

ponmalar said...

parthu pesu thambi...

இரா.இளவரசன் said...

@ponmalar!
சரிண்ணே.. இனிமே பார்த்து பேசுறேன். நன்றி.

இரா.இளவரசன் said...

@கோவி கண்ணன்.
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க போல!:-) நன்றி சார்.

இரா.இளவரசன் said...

'நடுநிலை' என்ற கட்டுரைல நீங்க சொல்லி இருக்கிற கருத்துக்கும், இந்த எழுத்தும் கொஞ்சம் முரணாக இருக்குது...////

@Siwa
எனக்கு நீங்க என்ன அர்த்தத்துல சொல்றீங்கனு புரில. கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா புரிஞ்சுக்குவேன். படித்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி தோழர்.

இரா.இளவரசன் said...

@நையாண்டி நைனா, தென்னவன்
மிக்க நன்றி.

இரா.இளவரசன் said...

@அ.வெற்றிவேல்
ரொம்ப நன்றி தோழர். நீங்கள் சொல்வது கண்டிப்பாக உண்மை.

இரா.இளவரசன் said...

@பாலகுமார், இரவீ, ஜெய்சங்கர்

நன்றி..

Anonymous said...

சஞ்சய்காந்தி எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்.

Anonymous said...

//ஆனா மகனே உங்க குடும்பத்துக்கு காந்தினு பேரு இருக்குறது மட்டும் மகாத்மா காந்திக்கு தெரிஞ்சுச்சு, தடியாலயே உங்கள அடிச்சு போட்டுட்டு கரண்ட் கம்பிய புடிச்சு தொங்கிருவாரு. //

மாட்டார். ஏன்னாக்க அந்தப் பெயரை பரிந்துரைத்ததே அவருதான்.

Sowmiya said...

paavam.. vadivelu feel paana poorar.. avar photo va pottadhuku..

r.elan said...

arumai!arumai!you have written feelings of real tamil people.

Related Posts Plugin for WordPress, Blogger...