Tuesday, December 21, 2010

சிறந்த பத்து தமிழ் நகைச்சுவைப் படங்கள்.

என்னால் முடிந்தவரை பலரிடம் கருத்து கேட்டு தொகுத்திருக்கிறேன். காதலிக்க நேரமில்லை போன்ற classic திரைப்படங்களை சமகால படங்களுடன் இணைக்க எனக்கு மனமில்லை. அதனால் தனியாக classic list என கீழே பதிந்திருக்கிறேன். மேலும் எனதி தனிப்பட்ட விருப்பங்களுக்கே முக்கியத்துவன் கொடுத்து நான் தொகுத்த வரிசை இது. மாற்றுகருத்து இருந்தால் commentயில் தெரிவியுங்கள்.

10 சகாதேவன் மகாதேவன்(1988)

ராமநாரயணன் இயக்கத்தில் எஸ்.வி.சேகரும், மோகனும் நடித்த படம். பலமுறை பார்த்தாலும் சலிக்காத படமிது. மோகநெஸ்.வி.சேகரின் காமிகல் sense படம் நெடுகிலும் பட்டையக் கிளப்பும். எஸ்.எஸ்.சந்திரன் அப்போதைய எ.ம்.ஜி.ஆர் ஆட்சியை கண்டபடி கலாய்த்திருப்பார். முழுக்க முழுக்க சிரிப்பு படம்.

காட்சி:
ஆட்டோவுக்க பணம் கொடுக்க எஸ்.வி.சேகரின் பேண்ட் பாக்கட்டை மோகன் பார்க்கும் போது,
மோகன்: உன் பர்ஸை அடிச்சுட்டாங்கடா. ஜட்டி தெரியுது. டான்டக்ஸா?
எஸ்.வி.சேகர்: நான் எப்பவுமே சுடர்மணி தான் உபயோகிப்பேன்.
மோகன்: சுடர்மணி கோச்சுக்க மாட்டாரா?
ஆட்டோக்காரர்: கசுமாலங்களா.. காசக் கொடுங்கடா...!!

9 ஆஹா என்ன பொருத்தம்

மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தமிழ் நகைச்சுவை படமென்றால் அது இதுதான். ராம்கியும், தல கவுண்டரும் நடித்த கொடூர காமெடி படம் இது. தல பிச்சு உதறிருப்பாரு. குஞ்சு கவுண்டர்-பஞ்சு கவுண்டர்னு படமே செம காமடி. இந்தப் படம் பார்த்தவங்களுக்கு தெரியும். பார்க்காதவங்க கண்டிப்பா KTVல போடுறப்ப பார்த்துருங்க.
காட்சி:
ராம்கியும், கவுண்டரும் சிவன் பார்வதி வேஷம் போட்டு செந்திலை ஏமாற்றும் போது,
செந்தில்: என்ன? பார்வதி குரல் கரகரனு இருக்கு?
கவுண்டர்: கண்ட தண்ணில அபிஷேகம் பண்றானுகளா.. அதான் throat infection.. டேய் நோண்டி நோண்டி கேள்வி கேட்டினா என் வீட்டுக்காரர வுட்டு சூலாயிதத்தால குத்த வுட்டுருவேன்.
ராம்கி: பாரூரூரூரூ
கவுண்டர்: சாரி டார்லிங்!

8உனக்காக எல்லாம் உனக்காக

தல, கார்த்திக், சுந்தர்.சி. இதைப் பத்தி சொல்லவே தேவையில்ல! தலைவர் ரணகளம்.

"ஐயாம் குண்டலகேசி தர்ட் ஸ்டாண்டர்ட் அவ்வையார் ஆரம்பபாடசாலை!!"

7இன்று போய் நாளை வா

பாக்கியராஜ் படங்கள் அனைத்துமே நகைச்சுவைதானெனினும் இது ரொம்ம்ம்ம்ப ஓவர். "ஏக் கிசான் ரகுதாத்தா"வ மறக்க முடியுமா?


6 அவ்வை சண்முகி
கமல் நகைச்சுவைப் படங்களிலேயே சிறந்தது இதான். எல்லாரும் கமலையே பாராட்டினாலும் எனக்கென்னவோ இந்தப் படத்துல ரொம்ப புடிச்சது நாசரையும், டெல்லி கணேஷையும் தான். பட்டையக்கிளப்பிருப்பாங்க.5உள்ளத்தை அள்ளித்தா
சுந்தர்.சி யின் நகைச்சுவை உணர்வுக்கு சரியான சான்றி இந்தப் படம். சபாஷ் மீனாவில் இருந்து சில காட்சிகள் சுடப்பட்டிருந்தாலும் execution அட்டகாசம். எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத படம் இது. தலயின் top performance. இந்த வீடியோ பாருங்க,


4சதிலீலாவதி
உச்ச இடத்தில் இருந்தும் ஒரு படத்தில் காமெடியனாக நடிக்கும் தைரியம் கமலைத் தவிர வேறு எவருக்குமே வராது. அவரது கோவைத் தமிழைப் பாருங்கள். சரளாவே தோற்திருப்பார்.3 மணல் கயிறு
நாடகத்தை இவ்வளவு அழகான காமெடிப் படமாக மாற்ற விசுவால் மட்டுமே முடியும். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் தெரியும் இது ஏன் இந்த பதிவில் இடம்பெற்றிருக்கிறது என்று.  பார்க்காதவர்கள் கண்டிப்பாய் பாருங்கள். 39 ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி கிடைக்கிறது.1 மற்றும் 2  

இந்த இடத்துக்கு மட்டும் என்னால் தீர்மானிக்கவே முடியல. ஆண்பாவம் மற்றும் தில்லுமுல்லுவை விட சிறந்த சமகால நகைச்சுவைப் படங்கள் கிடையவே கிடையாது. ரஜினியையும் தேங்காய் சீனிவாசனையும் முழுதாய் தில்லுமுல்லுவில் ரசிக்க வைத்ததற்கு வசனகர்த்தா விசு கூட பெரிய காரணம்.
ஆண்பாவம் பற்றி சொல்லவே வேண்டாம். முதல் படத்திலேயே உச்சாணிக்கு சென்ற பாண்டியராஜனின் ரணகள காமெடி.

ஆண்பாவம்


தில்லுமுல்லு


பழைய படங்களில் காமெடினா முதலில் வருவது காதலிக்க நேரமில்லை தான். இப்போது வரும் ஆள்மாறாட்ட காமெடிகளுக்கெல்லாம் தாத்தா அந்த படம். சபாபதி, சபாஷ்மீனா, பலே பாண்டியா, காசேதான் கடவுளடாவையும் கண்டிப்பாய் சேர்க்க வேண்டும். சமகால படங்களை விட பலமடங்கு timing comedyயில் சிறந்து விளங்கிய படங்கள்.  

தொகுப்பை பற்றிய கருத்தை comentயில் கூறுங்கள்.


.

13 comments:

ம.தி.சுதா said...

எனக்க இதில் தில்லு முல்லு, அவ்வை சண்மகியும் ரொம்ப்ப பிடிக்கும் இத்துடன் இதிலுள்ள 3 படம் நான் பார்க்கவே இல்லை...

எங்கே நம்ம ஓடைப்பக்கம் காணல..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

இரா.இளவரசன் said...

@மதி சுதா
காலேல அந்த யாழ் தயாரிப்பாளர் பதிவு படிச்சேன் நண்பா. எனக்கு சாரம் புரியல. :-)

மதுரை பாண்டி said...

michel madhana kaamarajan

mettukudi

enaku piditha matra comedy padangal..

யூர்கன் க்ருகியர் said...

தமாசு ..தமாசு ...


வொய் நோ விஜய் படம் இன் யுவர் லிஸ்ட்?

முத்துசிவா said...

ஹி ஹி... மேட்டுக்குடிய விட்டுடியே மச்சி...:)தல அதுல தன் உச்ச கட்ட கலக்கல்

இரா.இளவரசன் said...

மேட்டுக்குடி படம் கொஞ்சம் சீரியஸ் தீம் உள்ள படம். அதில் காமடி ட்ராக் தான் கவுண்டமணி. அது முழுநீள நகைச்சுவைப் படமல்ல. அதான் விட்டுட்டேன்! :-)

chandru2110 said...

என்னோட மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க. நானும் ரெண்டுக்கும் முதலிடத்தை சொல்லுறேன். இது எல்லாத்தையும் பலே பாண்டியா முந்திடும்.

Archu said...

super post thalaivaa. kalakunga.

Veera said...

kadhala kadhalannu oru padam irukke Boss... adha vida oru comedy moviea??

Anand said...

நல்ல தொகுப்பு !
சிங்காரவேலன், மைக்கேல் மதன காமராஜன் படங்களும் நல்ல நகைச்சுவை படங்கள்

Shyam said...

vasool raja,pancha thanthiram,mettukudi,michael madhana kamarajan,singaravelan, irattai roja(ramki,oorvasi) others i cant recollect there's another one ramki movie, where hi mother don't like female infant so they swap the baby with vivek...

Shyam said...

vasool raja,pancha thanthiram,mettukudi,michael madhana kamarajan,singaravelan, irattai roja(ramki,oorvasi) others i cant recollect there's another one ramki & kushboo movie, where vadivukarasi don't like female infant so they swap the baby with vivek...

Bala Krishnan said...

Micheal madhana kamarajan ah vitutingalay boss

Related Posts Plugin for WordPress, Blogger...