Wednesday, December 15, 2010

டயரிக் குறிப்புகள்

சில நேரத்துல பல சீரியசான விஷயங்கள் கூட ரொம்ப சாதாரணமா நகைச்சுவையா முடிஞ்சிருது,. ஒருவேளை அது அந்த விஷயத்துல சம்பந்தப்பட்டவங்க அதை எப்படி எடுத்துக்குறாங்கன்றத பொறுத்து இருக்குனு நினைக்கிறேன்..

காதல் தோல்விக்காக தற்கொலை செய்துகிட்ட நண்பனும் எனக்கு உண்டு. காதல் தோல்விக்காக காதலியை பழி வாங்கிய நண்பன் கூட உண்டு. ஆனா இது ரெண்டுலயுமே சேராம சைலண்டா இருக்க நண்பன் ஒருத்தனும் எனக்கு இருக்கான். என் உயிர் நண்பன்!! அது காதல்தானானு என்னால சொல்ல முடில. ஆனா காதல்னு தான இப்போ எல்லாத்தையுமே சொல்றாங்க, அதுனால இதையும் அப்படி சேத்துக்குவோம்.

இப்போலாம் காதலிக்க பொண்ணு கிடைக்கிற மாதிரி ஈசியான விஷயம் கிடையாது. அப்படி ஈசியா என் நண்பனுக்கு ஒரு ஃபிகரோட பழக்கம் கிடைச்சுச்சு. இதுல ஒரு பிரச்சினை என்னனா சின்ன வயசுல இருந்து பெண்களோட கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத பசங்க, ஒரு பொண்ணோட பழக்கம் கிடைச்சவுடன கண்டிப்பா காதல்ல விழுந்துருவாங்க. இவனும் அப்படிதான். ஸ்கூல்ல ஒரு பொண்ணை நிமிர்ந்து பார்த்தது கூட கிடையாது.. அதுனால அந்த பொண்ணு கொஞ்சம் உசுப்பி விட்டவுடன தலைவரு டக்குனு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. என்கிட்ட சொன்னப்போ நான் அந்த பொண்ணோட ஆர்குட் அக்கவுண்ட் பார்த்தேன். ஏடாகூடமா இருந்துச்சு. ஆனா இவன் கிட்ட சொன்னா இவனுக்கு புரியிற நிலைமை தாண்டி போயிருச்சு! அதுனால சரி மகனே நீயா பட்டு திருந்தி வானு விட்டுட்டேன்!!

ஒரு மாதம் அவளுடன் சராமாரியான தொலைபேசி காதலுக்கு அப்புறம் தலைவரு எனக்கு கால் பண்ணாரு. 

அவள பாக்க மதுரைல இருந்து திருச்சிக்கு பைக்ல 1.5மணி நேரத்துல போயிருக்காரு அண்ணே. (திருச்சி போக குறைந்தபட்சம் 2.5 மணி நேரமாவது ஆகும்.) அங்க போயி அவளப் பார்த்து வெக்கப்படுறதெல்லாம் முடிச்சிட்டு சினிமாக்கு போகலாமுனு முடிவு பண்ணிருக்காங்க.  மிச்சத்த அவன் வாயாலயே கேளுங்க, 

"பைக்லயே நேத்து படத்துக்கு போனேன்டா அவ கூட. டிக்கெட் கொடுக்குறவரைக்கும் loungeல உக்காந்திருந்தோம். அப்போ அவ ஹேண்ட் பேக பார்த்தா பத்து பதினைஞ்சு சிம்கார்டு வச்சிருக்கா மச்சி. ஆனா நான் எப்பவும் பேசுறப்பலாம் "உனக்காக தான் நான் ஃபோனே வச்சிருக்கேன். வேற யாருகூடயும் பேச மாட்டேன்"னு சொல்லுவா. அதுனால "என்ன இப்படி சொன்னியே அப்புறம் எதுக்கு இத்தன சிம்னு கேட்டதுக்கு காலேஜ்ல ஃபிரீயா கொடுத்தாங்க அப்படி இப்படினு என்னென்னமோ உளறுனா மச்சி. சரினு விட்டுட்டேன். அப்புறம் பார்த்தா பத்து செகண்டுக்கு ஒரு தடவ கால் வந்துகிட்டே இருக்கு அவளுக்கு. முணமுணமுணனு முணங்குறா ஃபோன்ல. அப்புறம் தியேட்டர் குள்ள போனா லைட் ஆஃப் பண்ணவுடன என்னை முத்தம் கொடுக்க சொன்னா. எனக்கு வெக்கமாவும் பயமாவும் இருந்துச்சு. அவ டக்குனு முத்தம் கொடுத்துட்டா மச்சி.  எப்படா படம்,முடியும்னு வெயிட் பண்ணி அலறியடிச்சுட்டு ஓடி வந்துட்டேன்டா. அப்புறம் அவளும் கால் பண்ணல நானும் பண்ணல" 

எனக்கு செம சிரிப்பு. ஏன்னா அவ ஆர்குட் புரொஃபைல் பாக்குறப்பையே அவளப் பத்தி ஓரளவுக்கு இப்படிதான் நினைச்சு வச்சிருந்தேன். "மச்சி அவ ஆளு இல்லடா. ஐட்டம்"னு சொல்லி சிரிச்சுட்டு சாயங்காலம் அவனைப் பார்த்து தேத்துறதுக்குள்ள செம காமடியா ஆயிருச்சு.

 வாழ்க்கைல முதல் முதல்ல பேசுன, பழகுன பொண்ணே ஐட்டம்னு தெரிஞ்சவுடன அந்த குழந்தை பையன் மனசு எவ்வளோ பாடுபட்டிருக்கும்! ஆனா அவனும் அதை அப்புறம் சீரியசா எடுத்துக்கல. "நல்லவேளை மச்சி. இப்பவே தெரிஞ்சுருச்சு. அவளை கல்யாணம் பண்ணி தொலைச்சிருந்தா ஃபர்ஸ்ட் நைட்ல ஃபோன் வந்திருக்குனு எந்திரிச்சு வெளிய போயிருப்பா"னு சொல்லி சிரிச்சான்! 

இன்னொரு நாள், "மாப்ள சொந்த வீடு வாங்குவனு நினைச்சேன் இப்படி வாடகை வீடாயிருச்சேடா"னு சொன்னேன் அவன்கிட்ட,
அதுக்கு அவன் "வாடகை வீடுன்னாதான் பரவாயில்லையே மாப்ள. அது ஓட்டல்"டான்னான்!! 

அப்படியே நாளாக நாளாக அவனோட காதல் தோல்வி காமடியா மாறிருச்சு! நாளைக்கு அவன் மனைவிகிட்ட சொன்னா கூட இது சிரிப்பாதான் இருக்கும். இப்படி எத்தனையோ விஷயம் வாழ்க்கைல கொட்டி கிடக்கு. ஆனா அதுல உள்ள நகைச்சுவைய நாம தெரியாமலே மறந்துறோம் இல்லேனா கண்டுக்காம விட்டுர்றோம். அதை எடுத்து நம்மகிட்ட கொடுக்க நண்பர்களும் நகைச்சுவை உணர்வும்  தேவை!  இப்படி என்னுடைய மற்றும் ஏராளமான நண்பர்களோட டயரிக் குறிப்புகள் நிறைய நகைச்சுவையுடனும், கொஞ்சம் சோகத்துடனும், நிறைய நிறைய நட்புடனும் கொட்டிக் கிடக்கு! இன்னும் சொல்லுவேன்! படிங்க!

(இதை நான் பிளாக்ல போடப் போறேன் மச்சினு சொன்னதுக்கு "போடு போடு. நாலு பய திருந்துனா சரி. ஆனா மாப்ள என் பேரைப் போட்றாதடா"ன்னான்!!)

7 comments:

நாஞ்சில் மனோ said...

நல்லா சூப்பரா இருக்கு...

புலிகுட்டி said...

புதிதாய் காதலிக்க போகும் பசங்களுக்கு ரொம்ப உபயோகமாய் இருக்கும்.

அரசன் said...

போட்டு தாக்குங்க

Chitra said...

:-))

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

யூ ஆர் எ டேஞ்சரஸ் ஃபேலோ... உன் கிட்ட பேசறதுக்கு முன்னாடி பத்து தடவை யோசிக்கணும் இளா.

இத விட பல்பு வாங்கி ஊரே கை தட்டி சிரிச்ச கதை நம்முளுது.... இனி வாயை திறக்க மாட்டனே. ;)

மதுரை பாண்டி said...

//என்னை முத்தம் கொடுக்க சொன்னா. எனக்கு வெக்கமாவும் பயமாவும் இருந்துச்சு..

ha ha ha... avan avan eppada light off pannuvannu kaathuttu irukanga....

///அந்த குழந்தை பையன் மனசு எவ்வளோ பாடுபட்டிருக்கும்!

unmailaye kulandhi dhan....

இரா.இளவரசன் said...

@பிரதீப்
இத விட பல்பு வாங்கி ஊரே கை தட்டி சிரிச்ச கதை நம்முளுது.... இனி வாயை திறக்க மாட்டனே. ;)////

ஹிஹிஹி! அதான் தெரியுமே! கொஞ்சம் கற்பனைய கலந்து கொடுத்துட்டா போவுது! :-)

Related Posts Plugin for WordPress, Blogger...