Wednesday, December 8, 2010

ராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்

அரசு உயரதிகாரிகளையும், சில நேரங்களில் கீழ்மட்ட அதிகாரிகளையும் மட்டுமே வழக்கமாக வதைத்தெடுக்கும் CAG எனப்படும் Comptroller And Autitor Generalயின் அறிக்கைகள், 2G அலை ஒதுக்கீடு பிரச்சினையில் முதலில் இருந்தே ஒரு முக்கியமான பங்காற்றி வந்திருக்கிறது. இந்தப் பங்கானது பல நேரங்களில் ஊடகங்களில் திரித்துக் கூறப்பட்டும், ஊடகங்களுக்கோ அல்லது ஏனைய பிற அரசியல்வாதிகளுக்கோ வேண்டிய வகையில் உருமாற்றம் செய்து கூறப்பட்டோ வந்திருக்கிறதேயொழிய, நேரடியாக, CAG அறிக்கை என்றால் என்னவென்றோ, அந்த அறிக்கை 2G அலைக்கற்றை விஷயத்தில் என்ன பங்காற்றியது என்றோ தெளிவாக கூறப்பட்டதாய் நினைவில்லை.

முதலில் CAG (Comptroller And Auditor General) என்றால் யார்? இவரது வேலை என்ன? அதாவது இந்த CAG எனப்படும் உயர் அதிகாரி இந்திய அரசின் கணக்குப் பிள்ளை. இந்திய அரசுக்காக வேலை செய்பவரேயொழிய, இந்திய அரசின் அதிகாரிகளுக்காக வேலை செய்யமாட்டார்(செய்யகூடாது). இந்திய அரசு வெற்றிகரமாகவும், வேகமாகவும், பொருளாதார பலத்தோடு முன்னேறவும் உதவக் கூடிய வகையில் இந்திய அரசின், மாநில அரசுகளின் அலுவலகங்கள், போக்குவரத்து துறைகள், அஞ்சல் துறை, என அரசு சம்பந்தப்பட்ட, அரசின் பணம் புழங்கும் அத்தனை அலுவலகங்களின் கணக்கையும் கண்காணிக்க வேண்டிய கடமை இந்த CAGயின் முக்கியமான கடமையாகும். இப்படிக் கண்காணிக்கும் போதுதான் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக CAG அறிக்கை வெளியிட்டுள்ளது. 'வெளியிட்டுள்ளது' என நாம் குறிப்பிடும் போதெல்லாம், அரசின் ராஜாங்க ரகசியங்களில் ஒன்றானதாக கருதப்படும் இந்த CAG அறிக்கை ஊடகங்களால் திருட்டுத்தனமாக கைப்பற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதே நேரம் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது என்றாலும் கூட, அந்த அறிக்கை பொய்யானது என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. உண்மையான ஆவணமான அது திருட்டுத்தனமாக கைப்பற்றப்பட்டு அல்லது பிற அரசியல்வாதிகளால் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது!

          இந்த CAG ஆனது நஷ்டக்கணக்குகளையும், லாபக்கணக்குகளையும் ஒரு இயந்திரம் போல தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தின் படி வகுத்து அறிக்கை வெளியிடுவதேயன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாது. இதைப் பற்றி BSNL உயர் அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது CAGயின் கணக்கில் சிலமுறை ஏற்படும் சிக்கல்களைச் சொன்னார். அதாவது ஒரு BSNL அலுவலகம் குத்துமதிப்பாக ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 1000 தொலைபேசி இணைப்புகள் கொடுக்கவேண்டிய தேவையிருக்கும் என கணக்கிட்டு 1000 தொலைபேசிகளை 1000ரூபாய்க்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். ஆனால் எதிர்பார்த்தபடி 1000 இணைப்புகள் தேவைப்படாத பட்சத்தில், 500 மட்டுமே விற்கிறது எனில், அந்த மாதத்தின் CAG அறிக்கையில் அரசுக்கு தொலைபேசித்துறை அதிகாரிகளால் 500ரூபாய் நட்டம் என கணக்கு இருக்கும். அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்பர். அல்லது மீதமுள்ள 500 தொலைபேசி இணைப்பையும் கொடுத்த பிறகு இந்த சிக்கல் தீரும். இன்னொரு சந்தர்ப்பத்தைப் பார்ப்போம்.

இதே அதிகாரிகள் 500 தொலைபேசி இணைப்புகள் தான் விற்கும் என யூகித்து 500 தொலைபேசிகளை 500ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் 1000 பேர் தொலைபேசி வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள். 500பேருக்கு மட்டும் தொலைபேசியை கொடுத்துவிட்டு 500பேரை பொறுமை காக்க சொல்கிறது தொலைபேசி துறை. அந்த மாதத்தின் CAG கணக்கு அறிக்கையில் "அதிகாரிகளால்  அரசுக்கு 500ரூபாய் நட்டம் என இருக்கும். இதுதான் CAG செயல்படும் நடைமுறை. இதுதான் 2G அலை ஒதுக்கீட்டிலும் நடந்துள்ளது.
1999ல் இன்கமிங் கால் ஒரு நிமிடத்திற்கு 3ரூபாய், அவுட்கோயிங் கால் ஒருநிமிடத்திற்கு 7ரூபாய். இப்போது இன்கமிங் கால் இலவசம், அவுட்கோயிங் ஒரு நிமிடத்திற்கு 1ரூபாய். ஆனால் CAG அறிக்கை 1999ல் எந்த மதிப்புக்கு அலைவரிசை ஒத்துக்கப்பட்டதோ அந்த மதிப்புடன் இப்போது வழங்கப்பட்ட மதிப்பை ஒப்பிட்டு 176000கோடி நட்டக் கணக்கு காட்டியுள்ளது. CAG குறிப்பிட்டபடி 176000கோடி ரூபாய் குறைத்து விற்கப்பட்டுள்ளது என்றே வைத்துக்கொள்வோம். சுப்பிரமணியசாமி மீண்டும் மீண்டும் சொல்வது போல், இந்த 176000கோடி ரூபாய் என்பது பேப்பரில் எழுதப்பட்ட மதிப்பேயொழிய நிஜத்தில் ரூபாய்கள் அல்ல. This money exists only in the papers but not in real. ஊடகங்களின் தவறான செய்திகளால், மக்கள் ராசாவிடம் 176000கோடி பணம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

"ரிலையன்ஸை பற்றி எந்த செய்தியும் வெளியிடமுடியவில்லை, வெளியிட்டால் அம்பானி விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்" என செய்தித்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நபர் தொலைபேசியில் சொன்னதைக் கேட்டோம்! இதைவிட நம் ஊடகங்களின் so called நடுநிலையை வெளிச்சம் போட வேறு உதாரணம் இல்லை!


உண்மை என்னவெனில் குறைந்த மதிப்பில் விற்க 60000கோடி ரூபாய் கையூட்டு பெறப்பட்டிருக்கிறது. அந்த மகா தொகையானது சோனியாகாந்தி (அவரது இரு சகோதரிகள்), ராசா மற்றும் தி.மு.க என மூன்று பங்குகளாக பங்கு பிரிக்கப்பட்டு முறையே 60%, 10%, 30% என பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. (அமெரிக்க CIA உளவாளி சு.சாமியின் இந்த கூற்று முற்றிலும் உண்மை என்றுதான் படுகிறது). ஆனால் நேற்றுவரை சோனியா ஏதோ நேர்மையின் இத்தாலிய பதிப்பு போல ஊடகங்கள் செய்தி பரப்பிய மர்மமும், ராசா மட்டுமே தனிமனிதனாக (one man show) ஆக இந்த மாபெரும் முறைகேட்டை செய்ததைப் போலவும் செய்தி வெளியிட்டு வந்ததற்கான காரணம் முழுக்க முழுக்க காங்கிரஸ் தன் தவறை மறைக்க செய்த சதி என்பது உறுதியாகிறது. காமன்வெல்த் ஊழல் முதற்கொண்டு காங்கிரசின் பல அசிங்கங்களை 2G மூடிவிடும், மறைத்துவிடும், மறக்கடித்துவிடும் என்ற காங்கிரசின் கணக்கு அட்சரம் பிசகாமல் ஊடகங்களால் நிறைவேற்றப்பட்டது. 'இளைஞன்' பட விழாவில் கருணாநிதி, "ஒருவனே எப்படி 176000கோடி ஊழல் செய்ய முடியும்" என சொன்னதன் உள்ளர்த்தம் காங்கிரசுக்கான மறைமுக மிரட்டல் தான்.
இந்தியர்களின் பணத்தை இந்தியர்கள் கொள்ளையடித்த காலம் போய் ராசா, கல்மாடி, கலைஞர் மற்றும் அடுத்து ஆதரிக்க தயாராக இருக்கும் ஜெயலலிதா போன்ற 'மிக நல்லவர்களின்' தயவால் இப்போது இத்தாலியர்கள் கொள்ளையடிக்கும் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்து ராகூல் எதோ ஸ்பானிய பெண்ணை காதலிக்கிறாராம். அருமை. ராஜீவால் இத்தாலி பேசிய இந்தியப் பணம் கூடிய விரைவில் ராகூல் காந்தியால் ஸ்பானிஷும் பேசப் போகிறது. நேரு குடும்பத்தால் உலகம் சுற்றும் இந்தியப் பணம்.  



.


 ..

10 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

அரசியலா.. எஸ்கேப்... என்ன இருந்தாலும் இந்த காங்கிரஸ் ஆட்சியை ஒருக்கால் கவுக்கவேணும் என்றொரு ஆசை இருக்கிறது...

Jeganathan said...

Sariyaaga vizhlakinaaai nanba!

R.K.Guru said...

///நேரு குடும்பத்தால் உலகம் சுற்றும் இந்தியப் பணம்./// கடைசி வரி இந்திய உழலுக்கு ரொம்ப பொருத்தம்...படிப்பவருக்கு விழிப்பான பதிவு...பதிவில் உள்ளவர்கள் படித்தால் கொள்ளியில போற பதிவு...

ரொம்ப அருமை....

Nagasubramaniyam said...

Inga ukkandhu pesa than mudiyum. Vera onnum mudiyathu. Dats our condition now. And u ve clearly written about media which should take that work. :P

Shiva jacksparrow said...

இங்க பாருங்க அசோக் யுனிடெக் ,ஸ்வான் ரெண்டு கம்பெனிகள் தான் வாங்கிய உரிமத்திற்கான மதிப்பு சுமார் 1600 கோடி ஆனால் அந்த உரிமை மிக குறைவாக ராசவிடமிருந்து மிக குறைவாக வாங்கப்பட்டுள்ளது ...i mean minimum 26000 கொடிக்காச்ஹும் விற்கப்ப...ட்டு இருக்க வேண்டும் ஆனால் எனக்கு தெரிந்த இந்த இரு நிறுவனங்களுமே தங்கள் உரிமையை ஷேர் மார்க்கெட்டில் சேவையை தொடங்கமலய்யே விட்ட்று விட்டன இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்ட்டம் மேலே குறிப்பிட்ட தொகை (26000 crore) ...இவர்கள் நோகாமல் நொங்கு தின்னது போல இன்னும் சில நிருவனகளும் இந்த களத்தில் குதித்து தனக்கான லாபத்தை மென்று விழுங்கியுள்ளது ,,,swaan நிறுவனம் டாட்டா கு சொந்தமானது unitech தெரியல தேடிக்கிட்டு இருக்கேன் ........தயவு செஞ்சு தமிழ் நாட்டுல வேற ஆட்சி மாற்றம் தேவ நீங்க உண்மைய வேலக்குறேன் சமையல் செஞ்ச குண்டான வேலக்குறேன்நு குட்டைய கொழப்பி விட்டுராதிங்க நம்மாளுங்க அரகொறைய புரிஞ்சுக்கிட்டலும் தி.மு.க மேல இப்போதான் கொஞ்சம் வெறியில இருக்கனுங்க ..

இரா.இளவரசன் said...

@shiva
மீண்டும் மீண்டும் மீண்டும் அதே தவறு... உங்களுக்கு எதிரி யார்? ஊழலா? தி.மு.க வா?!!! மூன்றாவதாய் ஒரு சக்தியை உருவாக்கவோ ஆதரிக்கவோ விளையவேண்டுமேயொழிய மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுத்து ஊழல் செய்ய வைப்பது மடமையிலும் மடமை!

Shiva said...

எனக்கும் தி.மு.க க்கும் என்ன வாய்க்கா தகராறா அட ஏன் சார் நீங்க வேற ? புதுசா எவனாவது ஒருத்தன் வரமாட்டனா? பீகார் ,குஜராத் மாதிரி என் தமிழகமும் திருந்தி தொலையாதா? , குடும்ப ஆட்சி ஒழியாதா?, என் மக்களின் கல்வி தரம் உயராத எனும் ஆதங்கத்தில் சொல்லி கொண்டிருக்கிறேன் சார் ,,வந்த விஜயகாந்தையும் உருப்படியா விட மாற்றனுங்க இந்த மக்களுக்கு எப்போதான் புத்தி வரும்நு தெரியலையே ....

இரா.இளவரசன் said...

ஒரு உதாரணம் சொல்றேன். ராசா விவகாரம் பெரிதாக கிளம்பிய போது உடனே காங்கிரசுக்கு வலிய போய் ஆதரவு தெரிவித்த ஜெயாவின் ஜெயா டிவியில், இப்போது மன்மோகனை தா.பாண்டியனும், ரஃபி பெர்னாடும் தினமும் கேவலமாக அர்ச்சித்துக்கொண்டிருக்கிறார்கள். :-) நம் சாபக்கேடே "கூட்டணி ஆட்சி" மற்றும் பல கட்சிகள், மற்றும் சரியான மாற்று இல்லாமல் இருப்பது! இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம் கெட்ட மக்கள்.

Rajkumar Palaniswamy said...

முதலில் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி முறை ஒழிய வேண்டும் . அதன் பின் ஊழல் தன்னாலேயே ஒழியும். சுயாட்சி மலர வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...