Monday, December 27, 2010

பதிவுலகம் என்ன குப்பைத் தொட்டியா? (100வது பதிவு!)

இது என் நூறாவது பதிவு. இந்த பதிவை படிச்சுட்டு "இனிமே இவன் பக்கமே வரக்கூடாதுடா யப்பா"னு நீங்க போனா கூட பரவால்ல. ஆனா சொல்லனும்னு நினைச்சதை சொல்லி முடிச்சிர்றேன்.

மூணு வருசமா இதுவரைக்கும் 100 பதிவுதான் போட்ருக்கேன். நம்மகிட்ட எதை யார் திருடினாலும் மனசு சமாதானம் ஆயிரும். ஆனால் நம்ம படைப்புகளை யாராச்சும் திருடுறப்ப மனசு தரும் குடைச்சலுக்கு அளவே இல்ல. என்னுடைய 'எட்டு வயது எனக்கு' என்ற ஈழம் பற்றிய ஒரு கவிதையை மாலைமலரில் என் அனுமதியின்றி வெளியிட்டிருந்தாங்க. இன்னொரு தளத்தில் இதே மாதிரி வந்திருந்துச்சு. இரண்டுக்குமே விளக்கம் கேட்டு மெயில் அனுப்புனேன்! மாலை மலர் ரியாக்ஷனே காட்டல. அந்த இன்னொரு தளம் உடனே அந்த கவிதைய என் பெயர்ல மாத்தி மன்னிப்பும் கேட்டார்கள். அப்போ மைக்ரோசாஃப்ட்ல இருந்ததுனால எனக்கு பிளாகில் செலவிட நேரமும் அவ்வளவா இல்லை. ஆனால் நிறைய எழுதும் எண்ணம் இருந்துட்டே இருந்துச்சு.

(இடைச்செருகல்: திருட்டுன்னவுடன ஞாபகம் வருது. குறிப்பிட்ட பதிவர் ஒருத்தர் பிரபல பதிவர் ஒருத்தரோட பிளாகில் இருந்து அப்படியே ஒரு ஆங்கில பட விமர்சனத்தை சுட்டு பாக்யாவில் வெளியிட்டிருந்தார். அதுக்கு இன்னும் உருப்படியான விளக்கம் எதும் கொடுக்கல. திருட்டுக்கு எப்படி விளக்கம் கொடுக்க முடியும்! ஆனா இப்போ சமீபத்துல பிரபலமாகிவரும் அவரோட பிளாக் பார்த்தப்பதான் அவரு ஏன் திருடுனாருனு தெரிஞ்சுச்சு. அவரா அந்த விமர்சனத்த எழுதியிருந்தா அதை ஒண்ணாங்கிளாஸ் பையன் 'ரஃப் நோட்'ல கூட வெளியிட்டிருக்க முடியாது! இவரை பத்தி இன்னொரு மேட்டர் இருக்கு. நான் அந்த பிரபல பதிவரை கொஞ்சம் ஓவரா விமர்சனம் பண்ணப்ப இங்க வந்து "நீங்க நடத்துங்க தல"னு சொல்லிபுட்டு அங்க போயி "அவனுங்க கடக்குறானுங்க நாயிங்க"னு சொல்லிருந்தாரு நம்ம தல! இழந்த மதிப்பை மீட்டெடுக்குறாராமாம்!)

சரி அத விடுங்க. பிளாக்ல வேற என்னதான்டா எழுதித் தொலைக்கிறதுனு யோசிச்சேன். அப்போதான் ஒரு நண்பர் தமிழ்மணம், தமிலிஷ் போன்ற தளங்களை பத்தி சொன்னாரு. போயி பார்த்தேன். சில தலைப்புகளை "பரிந்துரைப்பில்" வச்சிருந்தாங்க. தொடர்ந்து பல நாட்களாக கவனிச்சதுல அர்த்தமற்ற மொக்கை பதிவுகளே நிறைய இருந்துச்சு. மேலும் நான் பெர்சனலா அருமையான கட்டுரைனு நினைச்ச எத்தனையோ கட்டுரைகளும், கதைகளும், சினிமா விமர்சனங்களும் தமிழ்மணத்திலும், இண்ட்லியிலும் அடியில் ஒதுங்கி, ஒடுங்கி, நசுங்கி, பிரபலப்படுத்தப் படாம பரிந்துரைக்கப்படாம கிடந்துச்சு.

பின் நேரம் கிடைச்சவுடன அப்பப்போ எழுத ஆரம்பிச்சேன். என் சமூக, அரசியல் கட்டுரைகளை விட, என் சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரைகளே அதிகமாக வாசிக்கப்பட்டு வந்தது. ஆனா தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி தெரிந்த பலர் அதை பெரும் குறையா சொல்லிட்டிருந்தாங்க. இன்னமும் எதாச்சும் எதிர்வாதம் பண்ணா "சினிமா பத்தி எழுதுறவனுக்கு என்ன அக்கறை"ங்குறாங்க!  நான் என்னமோ சினிமாக்காக பிரத்யேகமா 'behindwoods' நடத்துற மாதிரி! எனக்குமே காலைல பேப்பர்ல "ஈழத்தில் இத்தனை பேர் சாவு"னு செய்தி படிச்சிட்டு கம்ப்யூட்டர்ல அஜித் பத்தியும் விஜய் பத்தியும் எழுதுறது அறுவெருப்பா தோணுச்சு அப்பப்போ. சினிமாவை குறைச்சுகிட்டேன்.

இனிதான் முக்கியமான மேட்டர்! சில நாட்களுக்கு முன்பு என் ஜூனியர் ஒருத்தன் என்னையும் என் நண்பனையும் பார்த்து "அண்ணே நான் தமிழே வாசிக்க மாட்டேன். நீங்க தொடர்ந்து மெயில் அனுப்பிட்டே இருந்தீங்களா நானும் என்னதானு பார்ப்போம்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன். என் ஃபிரண்ட்சுக்கும் அதை ஃபார்வர்ட் பண்றேன்"னு சொன்னான். நானும் என் நண்பனும் எங்கள் பதிவுகளை மட்டுமல்லாமல் இணையத்தில் விரவிக்கிடந்த எத்தனையோ நல்ல, மேலே நான் சொல்லிய "நசுக்கிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட" நல்ல பதிவுகளை எல்லாருக்கும் மெயில் அனுப்பிட்டிருந்தோம். ஆனா அது இப்படி கூட வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கல. ஒரு விளையாட்டுத்தனமா, ஆங்கிலம் மட்டுமே படிக்க சுலபமானதுன்ற கருத்தோட இருந்த பையன கூட உக்காந்து தமிழ் படிக்கவச்சதுல நிறைய சந்தோஷம் எனக்கு.
ஏன்னா பெரும்பான்மையான சின்ன பசங்களும், என் சகவயது நண்பர்களும் "தமிழ் எழுத்துக்கூட்டிப் படிக்க முடியல. கடுப்பா இருக்கு"னு என்கிட்ட சொல்லிருக்காங்க. அப்படிப்பட்ட இரண்டு மூன்று பேரை என் மெயில்களும், பிளாகும், தமிழையும் விரும்பிப் படிக்க கூடியவர்களா மாற்றி இருந்தது. இந்த ஒரு சம்பவம் தான் பொழுதுபோக்கா மட்டுமே நாங்க நினைச்சிருந்த 'பிளாக்'கை கொஞ்சம் சீரியசான விஷயமா நினைக்க வச்சுச்சு. இது பெரிய பத்திரிக்கைகளுக்கு நிகரான பொதுஜன ஊடகம்னு தெரிய வந்துச்சு.

ஆனாலும் நல்ல பதிவுகள் மக்களை சென்று சேரும் அளவானது, மொக்கை பதிவுகளின் அளவுக்கு இல்லை.

 
"உனக்கென்னாடா? மூடிட்டு போக வேண்டியதான? நீ என்ன கூகிள் ஓனரா?"னு கேக்காதீங்க. சொல்றேன். திரட்டிகளில் போய் பார்த்தா தமிழ் பதிவுலகின் கேரக்டரை எடுத்துக்காட்டும் முகமாக இந்த மாதிரி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் மேலே நிக்கிது.

சென்ற வார பிரபல பதிவுகளை பாருங்க "நமீதா வீட்டு கிச்சன், நமீதா பார்த்த மச்சான்ஸ், விஜய் வீட்டு கும்மி" இதான். அரசியல் கட்டுரைகள் கிட்டத்தட்ட எல்லாமே நோண்டி நோண்டி எடுத்தால் தான் வரும். மக்களும் ஓட்டுக்களை வாரி வழங்குறதுனால நல்ல பதிவுகள் எல்லாமே cloud ஆயிருச்சு!

இதை நான் காழ்ப்புணர்ச்சியோட சொல்லல. ஆனா அப்படி சொல்றதாகத்தான் நிறைய பேர் நினைப்பீங்க. ஆனா உண்மை அது இல்ல. என் பதிவுகளைப் படிங்க. எனக்கு யாரு மேலையும் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் இல்லைனு புரியும்.

ஆனா சில நேரத்துல சில பதிவர்களைப் பார்த்து பொறாமை பட்டிருக்கேன். சீமானின் நாம் தமிழர் இயக்கத்த நான் விமர்சிச்சு எழுதுன அதே நேரத்தில, அதை பலர் பாராட்டிய அதே நேரத்தில, அதே விஷயத்த பத்தி நண்பர் ஸ்டாலின் குரு எழுதியிருந்தாரு. நமக்கு ஏன் இப்படி அழகான, மிகவும் நாகரீகமான அணுகுமுறை தோணலனு வருத்தப்பட்டேன். சீமான் மீதான அவரது பார்வைய ஒவ்வொரு விஷயமா அடுக்கி, காரணத்தோட அழகாக, செவிட்டுல அறைஞ்சா மாதிரி எழுதியிருந்தாரு. அதைப் படித்தபோது என் கட்டுரை எனக்கே குப்பையாகத் தெரிஞ்சுச்சு. அதை அவருகிட்டயே சொன்னேன். அவரின் அந்தக் கட்டுரை இண்ட்லி, தமிழ்மணங்களில் புதைந்து போனதை நான் சொல்லித்தான் தெரியனுமா? மக்கள் மனதில் மிகப்பெரிய சந்தர்ப்ப அரசியலின் புரிதலை உண்டு பண்ணியிருக்கக்கூடிய கட்டுரை அது. ஆனா வழக்கம் போல் vote இல்லாம அடங்கி, ஒடுங்கி, நசுங்கி எங்கேயோ புதைஞ்சு போச்சு!  

நான்  எழுதுன 'அருந்ததி ராயும், தேசிய போதை மருந்தும்' கட்டுரையை பல எழுத்தாளர்களே தனிப்பட்ட முறையில் பாராட்டியிருந்தார்கள். என்னைப் பொறுத்து என் எழுத்தில் ஒரு உருப்படியான கட்டுரை அதுதான். ஆனால் எத்தனை பேர் படிச்சாங்க தெரியுமா? 220 பேர்! இண்ட்லியில் 9 ஓட்டு! தமிழ்மணத்தில் அது காணப்படவே இல்லை!

இன்னொரு முக்கியமான விஷயம் நான் சமீபத்துல கவனிச்சது. இங்க யாருமே பதிவுகளுக்கு ஓட்டு போடுறதில்ல. பதிவர்களுக்கு ஓட்டு போடுறாங்க! அதாவது விஜய், அஜீத் எவ்வளவு கேவலமா நடிச்சாலும் "படம் சூப்பர்"னு சொல்ற அவங்களோட தீவிர ரசிகர்கள் மாதிரி. நான் எழுதுன  "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்"- அலறிய ராகுல் காந்தி" கட்டுரைக்கு 4000ஹிட்ஸ் மேல வந்தும், FBல எண்ணிலடங்கா 'லைக்' மற்றும் பாராட்டுக்கள் வந்தும் இண்ட்லில அதுக்கு 8 வோட்டுதான் விழுந்துச்சு. அதுல ஒன்னு என்னோடது! எனக்கு புரியவே இல்ல. அப்புறம்தான் ஒருத்தர் மேட்டரை சொன்னாரு! என் வலைதளத்துல கமெண்ட்டோ, voteஓ போட்டா அவர எதிர்கட்சிக்காரன்னு சொல்றாங்களாம்! என்னை புறக்கணிக்கிறாங்களாம்! :-) நான் வேணா அடுத்து template மாத்துறப்ப இண்ட்லி வாக்கு பட்டைய எடுத்துர்றேன். எல்லாரும் படிச்சீங்கன்னா மட்டும் போதும்!

மேட்டருக்கு வர்றேன். தீவிர ஃபேன் ஃபாலோயிங் கொண்ட பதிவர்கள் சிலரே பிரபல பதிவர்களா இருக்காங்க. ஆனால் இந்த லிஸ்ட்டில் 1000 ஃபாலோயர்கள் கொண்ட 'வால்பையன்' போன்றவங்களை சேக்க முடியாது! அவர்களையெல்லாம் விமர்சிக்கும் தகுதி கூட எனக்கு கிடையாது. ஏன்னா பிளாக்கை மிகச்சரியாக உபயோகிப்பவர்களில் அவர் ஒருவர்.  இன்னொருத்தரு பேரு மறந்துட்டேன். மிக அழகா ஃபோட்டோஷாப் பாடங்களை தமிழ்ல எழுதுறாரு. அருமையான முயற்சி அது. காமம் சார்ந்த உளவியல், உடலியல் பற்றி டாக்டர்.ஷாலினி அருமையான வலை ஒன்றை நடத்தி வருகிறார். ஆனா அந்தப் பக்கமே யாரும் போறதில்ல போல. அவங்க பதிவுக்கு கமண்ட்ஸ் கூட இல்ல! அப்புறம் மதி.சுதா. மிக குறுகிய காலத்துல பிரபலமானாரு. அருமையான செய்தி எழுத்தாளர் அவர். Informative. இதையெல்லாம் என் வாசிப்பு வரிசைல சேர்த்துருக்கேன். இன்னும் நிறைய நல்ல பிரபல பதிவர்கள் இருக்காங்க. டக்குனு ஞாபகம் வரல. குறிப்பிடாமல் விட்டதுக்கு மன்னிச்சுருங்க.

பதிவுலகம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். புத்தகங்களை கையில் எடுத்து, ஒவ்வொரு பக்கமாக பிரித்து பொறுமையா படிக்க முடியாத 99% மக்களிடம் மிகச்சரியா, நேரா போயி சேர்ந்து, அவங்க மூளைல உக்கார சக்தி வாய்ந்த ஊடகம். இதில் யாருக்கும் என்னவேணா எழுத உரிமை இருக்கு. யாரும் யாரையும் கேள்வி கேட்கும் உரிமை கிடையாது. நான் இதுவரைக்கும் செஞ்ச விமர்சனங்கள் கூட அதிகப்பிரசங்கித் தனம்னு அப்பப்போ தோணுது. ஆனாலும் எல்லாருக்கும் கொஞ்சமாச்சும் சமூகப் பொறுப்புணர்வு வேணும்னு நினைக்கிறேன். முக்கியமா பதிவுலகத்துல.

ஏன்னா, ஆங்கிலம் எப்படி அறிவுசார் (widely read to gain knowledge) மொழியா நம் இளைஞர்களால் பார்க்கப்படுதோ, தமிழையும் அவர்கள் அப்படிப் பார்த்தால் தான் தமிழ் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அதை விட்டுட்டு எப்ப பார்த்தாலும் "நமீதா கிச்சன், த்ரிஷா பாத்ரூம், அனுஷ்காவுக்கு பானிபூரி என்றால் பிடிக்கும், என் வீட்டு கழிப்பறையில் எவ்வளவு '####' தண்ணி வரல"னு எழுதுற பதிவுகளை மட்டுமே பிரபலப்படுத்துனா பதிவுலகத்தையும், தமிழ் இணைய ஊடகத்தையும் பெரும்பாலான இளைஞர்கள் குப்பைத் தொட்டியாகத்தான் பார்ப்பாங்க. எழுத்தை ஆதரிக்க வேண்டுமேயொழிய எழுதுபவர்களை என்னைக்கும் ஆதரிக்ககூடாது. அது மக்களை ஆட்டுமந்தைகளா மாற்றும் தன்மை உடையது. எழுதுறவங்களுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் ஆகுறதுனால தான் சில பேரு என்ன எழுதுனாலும் பிரபலம் ஆயிருது! விஜய் படத்துக்கு பெரிய ஓப்பனிங் இருக்க மாதிரி! என் எழுத்தை ஆதரிக்காமல் என்னை ஆதரிக்க ஆரம்பிச்சாங்கன்னா நாளைக்கு நான் மடத்தனமா ஏதாச்சும் எழுதுனா அதை எதிர்க்கும் திராணி படிக்கிறவங்களுக்கு போயிரும். பதிவுக்கு ஓட்டு போடுங்க. தானாவே நல்ல பதிவுகள் மேலேயும் தேவையற்ற பதிவுகள் கீழேயும் போயிரும்! ரொம்ப பெரிய பதிவா ஆயிருச்சு! பொறுமையா படிச்சதுக்கு நன்றி!

19 comments:

Thekkikattan|தெகா said...

பெருசுதான் பதிவு! இருந்தாலும் பயனுள்ள பதிவுதான். நீங்க அசராம தொடர்ந்து எழுதுங்க. எத்தனை பதிவுகள் இத்தனை வருஷத்திலங்கிறது முக்கியமில்ல, அதில எத்தனை தேவையான, உண்மையான ‘சரக்கோட’ இருந்திச்சிங்கிறதுதான் முக்கியமான விசயமா இருக்கணும்.

நான் அஞ்சு வருஷத்திற்கே 200 பதிவோ என்னவோதான். :-) அதிலும் கூட்டி, கழிச்சு பார்த்தா ஒரு 100 உருப்படியானது தேரினாலே பெருசு.

ஸ்டாலின் குருவோட பதிவிற்கு இணைப்பு கொடுத்திருக்கலாம்.

வாழ்த்துக்கள்!

இரா.இளவரசன் said...

adhaithaan naanum theditrukken! :-) commentla epdiyum naalaikulla koduthurren! வாழ்த்துக்களுக்கு நன்றி.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

http://stalinguru.blogspot.com/

சி.பி.செந்தில்குமார் said...

போட்டுத்தாக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>> அவரா அந்த விமர்சனத்த எழுதியிருந்தா அதை ஒண்ணாங்கிளாஸ் பையன் 'ரஃப் நோட்'ல கூட வெளியிட்டிருக்க முடியாது!

haa haa uNmaithaan ஹா ஹா உண்மைதான்

சேட்டைக்காரன் said...

இது போல அவ்வப்போது யாராவது பூனைக்கு மணி கட்ட முயற்சிக்கிறார்கள்; நானும் வாசித்துவிட்டு, என் வழி மொக்கை வழியென்று போய்க்கொண்டிருக்கிறேன். நேற்று, இதே போல ஒரு பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்தையே ஏறக்குறைய இங்கும் எழுத விருப்பம்:

நீங்கள் யாருக்காக வலைப்பூ எழுதுகிறீர்கள்? வாசகர்களுக்காக என்றால், அவர்கள் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஏன் வரமாட்டேன் என்கிறார்கள் என்று வருந்துவதில் பயனில்லை.

உங்களுக்காக எழுதுகிறீர்கள் என்றால், எதுவும் உங்களை பாதிக்க விடக் கூடாது. உங்களுக்கு எது சரியோ, எது இயல்போ அதை எழுதிக்கொண்டே போக வேண்டும்.

நல்ல பதிவைப் படிக்க ஆளில்லை என்கிற ஆதங்கம் சரிதான். ஆனால், நல்ல பதிவு என்பதன் பொருள், வாசகர்களால், அவரவர் ரசனைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது. எழுதுகிறவர்களின் பொழிப்புரையை வாசகர்கள் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!

நன்றி!

இரா.இளவரசன் said...

@உலவு
ஸ்டாலின் குரு வலை சுட்டி கொடுத்ததுக்கு நன்றி.

இரா.இளவரசன் said...

@சேட்டைக்காரன்.
ஆமா தல. பேசாம FB noteslaயும், மற்ற இணையதளங்களுக்கும் மட்டுமே எழுதி அனுப்பிட்டு பேசாம இருக்கலாம்னு நினைக்கிறேன்.

Myusen said...

To stop blog theft, or content theft please read this article..

http://ww5.pondicherryblog.com/2010/12/what-do-you-do-when-someone-steals-your-content/

இரா.இளவரசன் said...

@mysen

சூப்பர் பதிவு நண்பா... அருமை..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சரியா சொல்லி இருக்கீங்க அன்பரே.

வோட்டு மொய் வைக்கற மாதிரி.. நம்ம மொய் வச்சா நமக்கு வரும். அதனால் அதப்பத்தி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள் (என்னைப் போல ;) )

முத்துசிவா said...

வாழ்த்துக்கள் மச்சி...:)

@சேட்டைக்காரன்:

//நீங்கள் யாருக்காக வலைப்பூ எழுதுகிறீர்கள்? வாசகர்களுக்காக என்றால், அவர்கள் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஏன் வரமாட்டேன் என்கிறார்கள் என்று வருந்துவதில் பயனில்லை.

உங்களுக்காக எழுதுகிறீர்கள் என்றால், எதுவும் உங்களை பாதிக்க விடக் கூடாது. உங்களுக்கு எது சரியோ, எது இயல்போ அதை எழுதிக்கொண்டே போக வேண்டும்.//

நானும் இத தான் தலைவா சொன்னேன் இவருட்ட...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

சமூக அக்கறை இல்லாத தனிழனின் மீதான் கோபம எனக்கு புரிகிறது. போராளி கலைபிரியா தொடர்பான கட்டுரையான
"ஒலியாகி.. ஒளியாகி.. இசையாகி.. அவள் காற்றாகினாள்!"

பகர்ந்த போது.. என் நண்பன் கூறினான் "olliyele therivadhu thevadhaya

enna da thambi kavithai ellam". பதிலுக்கு அவனிடம் எடுத்துக் கூற வைக்கும் தெம்பு கூட எனக்கில்லை.தமிழனுக்கு சினிமா சினிமா சினிமா தன்.

தற்போது தோழர் தமிழச்சி/ கலையரசன் ஆகியோரது பதிவுகளை தொடர்ச்சியாகவும்... செங்கொடி மற்றும் பாமரன் ஆகியோர்களை அவ்வப்போதும் படித்துவருகிறேன். உங்கள் அரசியல் கட்டுரைகள் மிகவும் சிறப்பு. விடாமல் படிக்கிறேன். வாழ்த்துக்கள்.

மழையோன் said...

வாழ்த்துக்கள் இளவரசன்!

தொடர்ந்து உங்கள் வலைப்பூவை படித்து வருகிறேன்.

-ஜெனார்த்தனன்

Azar said...

வாழ்த்துக்கள் நண்பா.. தியாகம் தான் உன்னை உயர்த்தும்!

ரஹீம் கஸாலி said...

இன்னொரு முக்கியமான விஷயம் நான் சமீபத்துல கவனிச்சது. இங்க யாருமே பதிவுகளுக்கு ஓட்டு போடுறதில்ல. பதிவர்களுக்கு ஓட்டு போடுறாங்க! ////
நூறு சதவீதம் சரி....நான் பதிவுலகிற்கு வந்த நேரத்தில் நிறைய பதிவு போட்டேன். தமிழ்மணம்,இன்ட்லி போன்ற வற்றில் என் ஓட்டை தவிர கூடுதலாக ஓன்று அல்லது இரண்டு வோட்டுதான் கிடைத்தது. இப்போது நானும் ஓரளவிற்கு பதிவுல வெளிச்சத்திற்கு வந்த பின்பு அதே பதிவுகளை மீள்பதிவு செய்தேன். இப்போது மிகப்பெரிய ஹிட்சும், வோட்டுக்களும் கிடைத்தது.

இரா.இளவரசன் said...

@ரஹிம்
இதைச் சொல்ல பெரிய மனது வேண்டும் நண்பா. நன்றி

மதுரை பாண்டி said...

anaithum unmaiye!!!!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் தல :)

Related Posts Plugin for WordPress, Blogger...