Sunday, December 5, 2010

தமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி!! -பகுதி1


இன்று முகநூலில் ஒரு பஞ்சாபி பாட்டை, 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் இசையமைப்பாளர் சிற்பி காப்பி அடித்ததை பற்றி கதைத்துக் கொண்டிருக்கையில் பல காப்பியடிக்கப்பட்ட தமிழ் பாடல்கள் சிக்கின. இது போதாதென்று நண்பர் சொக்கலிங்கம் சிவகுமார் பல பாடல்களை அனுப்பியிருந்தார். நானும் என் தம்பியும் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம்! இங்கே பகிர்கிறேன். ஒரே பகுதியாக அத்தனை பாடல்களையும் தர முடியாததால் (இடம் இல்லாததால்) பகுதி பகுதியாக பகிர்கிறேன்.


காப்பிய தலைவர் சிற்பி:
பல இசையமைப்பாளர்கள் காப்பி அடிப்பார்கள். ஆனால் காப்பியமைப்பாளர் என்று ஒருத்தர் இருந்தார் என்றால் அது நம் தல சிற்பி தான். அவர் இசையமைத்த படங்களில் பாடல்கள் பயங்கர வெற்றி பெற்றது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் தான். அந்தப் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் காப்பி!!!

1) அழகிய லைலா
2)மாமா நீ வாம்மா


3)சிட்டு சிட்டுகுருவி


4)அடி அனார்க்கலி5)ஐ லவ் யூ லவ் யூ

 

இந்திய திரையுலக வரலாற்றில், ஒரு படத்தின் ஒரு பாடலை கூட சொந்தமாக இசையமைக்காமல், காப்பி மட்டுமே அடித்து ஹிட்டாக்கிய ஒரே இசையமைப்பாளர் சிற்பி மட்டும்தான். அதுனால்தானோ என்னவோ அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை!ஏ.ஆர்.ரகுமான்:
எந்த விதத்திலும் இவரை காப்பி என்ற வகையறாவில் சேர்க்கவே முடியாது. வெகு சில பாடல்கள் இசை மட்டும் மற்றவர்களின் பாடல்களில் எடுத்துள்ளாரே தவிர்த்து ராகம் முழுதாக அவருடையதுதான். Inspiration என்பதற்கு சரியான உதாரணம் ஏ.ஆர்.ஆர் மட்டும்தான். அதைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். 

1)ஹலோ மிஸ்டர் (இருவர்)
இந்த பாடலில் வரும் முதல் சில நொடி பியானோ இசை மட்டும் கீழுள்ள பாடலில் இருந்து அப்படியே எடுத்தது. பாடலின் இசை genuinely A.R.Rehman's.

2)தில்லானா (முத்து):
பாடலின் ஆரம்பத்தை கேளுங்கள். அப்படியே டிட்டோ! ஆனால் தில்லான தில்லானா பாடலின் ராகம் ஏ.ஆர்.ரகுமானின் கைவண்ணம்.தேவா & எஸ்.ஏராஜ்குமார்:
ஒரு பாடலை ஒரு இசையமைப்பாளர் காப்பி அடிக்கலாம். ஆனால் ஒரே பாடலை இரண்டு இசையமைப்பாளர்கள் போட்டி போட்டு அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்த கதை இங்கு. துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் 'என் அன்பே' பாடலும், கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் வரும் 'சலோமியா' பாடலும் கீழுள்ள பாடலின் xerox காப்பி!!!!
இப்படியெல்லாம் இவர்கள் காப்பி அடித்திருந்தாலும் இவர்களை அனைவரின் பாடல்களுக்கும் நாம் ரசிகர்கள் தான். உலக தரத்தில் பல பாடல்களை கொடுக்குமளவிற்கு இவர்களுக்கு திறமை இருப்பதையும் மறுக்க முடியாது. இது முழுக்க முழுக்க ஒரு வேடிக்கையான பதிவேயொழிய இசையமைப்பாளர்களை தாழ்த்தவோ, இகழவோ செய்யும் முயற்சி அல்ல. இந்த பதிவில் இது போதும்! ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் இன்னும் சில உண்டு. மற்றும் இளையராஜா முதற்கொண்டு யுவன் வரை ஒரு லிஸ்ட் இருக்கிறது  பிரியா படத்தில் வரும் அக்கறைச் சீமை அழகினிலே என்ற எனக்கு மிகவும் பிடித்த பாடலின் தொடக்கம் ஒரு அப்பட்டமான காப்பி! அடுத்த பதிவில்.
                                                                                                                                    -தொடரும்

10 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

அருமை அருமை அடுத்தது எப்போ...

ம.தி.சுதா said...

ஏங்க இண்ட்லியில் இணைக்கலியா...

இரா.இளவரசன் said...

@mathi.sutha
தலைவா நீங்க எந்திரன் சிட்டிய விட ஸ்பீடு. இணைப்பதற்கும் படித்துவிட்டு "இணைக்கலையா?"னு கேட்டுபுட்டீங்களே!!! இணைச்சாச்சு நண்பா!! அடுத்த பதிவு நாளை!

Shankar said...

Deva about his source... :P
http://www.youtube.com/watch?v=HqyEMQL9tK8&feature=related

Shankar said...

http://www.youtube.com/watch?v=n6oC7aKsxY0&feature=related

Chitra said...

இந்திய திரையுலக வரலாற்றில், ஒரு படத்தின் ஒரு பாடலை கூட சொந்தமாக இசையமைக்காமல், காப்பி மட்டுமே அடித்து ஹிட்டாக்கிய ஒரே இசையமைப்பாளர் சிற்பி மட்டும்தான். அதுனால்தானோ என்னவோ அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை!


..... அடங் கொக்க மக்கா!

Sudheskumar said...

pl continue this
this is very very interesting
also as u said this is not for lowering the music directors
many of them are genius only
so pl continue

sudhes
kuwait
(native : tamilnadu)

தெய்வசுகந்தி said...

interesting!

நாதன் said...

யாரு தான் காப்பி பண்ணல எல்லாரும் ஒரிஜினலா மியூசிக் போட ஆரம்பிச்சா ஆஸ்கர் விருது எதுக்கு இத்தன வருஷத்துல ஒன்னே ஒன்னு மட்டும் வாங்கிருக்கோம். அது மட்டுமா அப்படி ஒரிஜினல் லா பண்ணுனா ஒரே வர்ஷதுல ஒரு மியூசிக் டைரக்டர் பத்து படம் பண்ண முடியுமா. நாம ஆஹா ஓஹோ னு சொல்ற எல்லாருமே காபி அடிச்சி பெரிய ஆள் ஆனவங்கதான். அவங்களுக்கு நன்றி தான் சொல்லணும் நம்மளுக்கு புரியாதத புரியிற மாதிரி கஷ்டப்பட்டு தேடி எடுத்து தாராங்க.

......கோழி குருடா இருந்தா என்ன கொலம்பு ருசியா இருக்குல ........

Related Posts Plugin for WordPress, Blogger...